Wednesday, August 4, 2010

ஹஜ் ஒருங்கிணைப்பின் உன்னதம்

ஹஜ் ஒருங்கிணைப்பின் உன்னதம்

கடந்த ஆண்டு நான் எங்கள் பள்ளிவாசலின் நிர்வாகிகள் சிலரோடு ஹஜ்ஜுக்கு சென்றிருந்தேன். அப்போது நணபர்கள் சிலர் சேர்ந்து ஒரு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்திருந்த்னர். அந்நிகழ்ச்சியில் பேசிய ஒரு நண்பர் ஒரு செய்தி சொன்னார். அது ஒரு மகத்தான செய்தி.

ஹஜ்ஜு முழுக்க அந்தச் செய்தி என் நினைவில் நிழலாடிக் கொண்டே இருந்தது. ஹஜ்ஜில் கண்ட இட்மெல்லாம் அந்தக் கருத்து ஒரு ஸ்க்ரோலிங் செய்தி போல திரும்பத் திரும்ப ஓடுவது போல நான் உணர்ந்தேன்.

அந்தக் கருத்துக்கு சொந்தக்காரர் யார் என்று கேட்டால் ஆச்சரியப் படுவீர்கள். அடால் ஹிட்லர். மேற்கத்திய ஊடகங்கள் மிககெட்டவராக அடையாளம் காட்டட்படுகிற இரண்டாம் உலக யுத்தத்திற்கு காரணமான சாட்சாத அதே ஹிட்லர் தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி அடால்ப் ஹிட்லர் கூறயுள்ளதாக நண்பர் சொன்ன முழு வாசகம் என் நினைவில் இல்லை. என்னும் அதில் பிரதான மாக இருந்த கருத்து.

“முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு மகத்தான ஒருங்கிணைப்பாளர். அவரது ஒருங்கிணைப்பின் சாதனைக்கு மிகப் பெரிய உதாரணம் அவருக்குப் பின்னால் ஒரு ஒருங்கிணைப்பாளரின் தேவையில்லாமலே ஒரு அமைப்பு வெற்றி நடை போடுகிறது.”

நண்பர் சொல்லிக்கொண்டு போன வேகத்தில் இந்தக் கருத்தை எத்தனை பேர் கவனத்தில் கொண்டிருந்தார்களோ தெரியாது. ஆனால அவர் சொல்லச் சொல்லவே என்னுள் இது பசை போட்டு உட்காந்ந்து கொண்டது.

மனிதர்களில் சாதனையாளர்கள் பலர் இருக்கலாம். அவர்களது சாதனைகளும் பெரிதாக இருக்கலாம். ஆனால் அவர்களில் “ஆர்கணைசிங் கெப்பாசிட்டி” என்பப்டும் ஒருங்கிணைப்புத் திறன் கொண்ட மனிதர்களை காண்பது மிக அரிது. நாலு பேரை ஒருங்கிணைத்து ஒரு காரியத்தை செய்து அந்த நாலு பேரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிற திறன் எல்லா சாத்னையாளர்களுக்கும் வாய்த்துவிடுவதில்லை.
சிலர் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள்.ஆனால், அவர்களால் நாலு பேர்களோடு சேர்ந்திருப்பதே சிரம்மாமக இருக்கும். இன்றைய உலகின் மிக மரியாதையான் விருதாக கருதப்ப்டுகிற நோபல் பரிசை வழங்குவதற்காக தனது சொத்துக்களை தானமளித்த ‘ஆல்பிரட் நோபல்’ டைன்மைட், ஜெலட்டின், செய்றகை பட்டு, செய்றகை ரப்பர், போன்ற பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கினார். ஆனால் கடைசிவ்ரை அவர் யாரோடும் அனுகி இருக்காமல் தனிமையில் வாழ்ந்தார். திருமணம் கூட செய்து கொள்ளவில்லை.

சிலர் நான்கு பேரை கவர்கிற ஆற்றல் கொண்டிருப்பார்கள் ஆனால் அந்த நாலு பேரை நிர்வகிக்கிற சக்தியோ அவர்களை வைத்துக்கொண்டு ஒரு அரிய காரிய்த்தை செய்து முடிக்கிற ஆற்றலோ குறைந்த பட்சம் தனது ஆதரவாளர்களை ஒரு உயர்ந்த நிலைக்கு உயர்த்திச் செல்கிற திறனோ அவர்களுக்கு இருக்காது.

இத்தகையோரது சாதனைகள் மதிப்பிற்குரியவையாக இருந்தாலும் அவை பிரம்மாண்டமானவையாகவோ வரலாற்றை வாழ வைப்பதாகவே அல்லது ஒரு புதிய வரலாற்றை உருவாக்குவதாக்வோ இருக்காது. காலத்தால் அது முறிய்டிக்கப் படும். அல்லது விஞ்சப்ப்டும்.

என்வே தான் சாதனையாளர்கள் மத்தியில் “ஆர்கணைசிங் கெபாசிட்டி” ஒருங்கிணைப்புத் திறன் என்பது மிக மதிப்பாகவும் கவர்ச்சியாகவும் கவனிக்க்ப் படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் ஜெர்மனியர்களை ஒன்றிணைத்து மிக வலிமையாக வழி நடத்திச் சென்ற அடால்ப் ஹிட்லரரின் பார்வையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அந்தப் பெரும் சாதனை பிரதானமாக தென்பட்டிருக்கிறது.

உலக வரலாறு பெருமானார் (ஸல்) அவர்களைப் போன்ற ஒரு ஒருங்கிணைபுச் சாதனையாளரைப் பார்த்ததில்லை.

No comments: