Monday, July 28, 2014

எல்லோரும் கொண்டாடுவோம்



பாய்! ரம்ஜானுக்கு துணி எடுத்தாச்சா?” “இந்த ரம்ஜானுக்கும் எங்களுக்கு பிரியாணி கிடைக்குமா?” “ரம்ஜான் ஹல்வா கிலோ ரூ 100” என்பது போன்ற சொல்லாடல்கள் நம் காதுகளை தடவும் நேரம் இது.

ரமலான் என்ற அரபுச்சொல்லே நமது வழக்கில் ரம்ஜான் ஆகிவிட்டது. முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் ரம்ஜான் என்று குறிப்பிடுவது முஸ்லிம்களின் ஈதுல் பித்ர் பெருநாளை. முஸ்லிம்கள் ரம்ஜான் என்று சொல்வதோ பெருநாளுக்கு முந்தைய ஒரு மாத காலத்தை. உண்மையில் ரம்ஜான் என்பது பெருநாளுக்கு முந்தைய நாளோடு முடிவடைகிற மாதத்தின் பெயரே தவிர பெருநாளின் பெயரல்ல.

இஸ்லாமிய மாதங்களின் வரிசையில் ஒன்பதாவதாக வருகிறது ரம்ஜான் மாதம். அம்மாதத்தில் இறைவனுக்காக நோன்பு நோற்கிற முஸ்லிம்கள், மாதம் முழுக்க பகல் பொழுதுகளில் உண்ணுவதையும் பருகுவதையும் மனைவியோடு உறவு கொள்வதையும் தவிர்த்து விடுகிறார்கள். தண்ணீர், மருந்து, வெற்றிலை, சிகரெட் உட்பட எதையும் உட்கொள்வதில்லை.

இஸ்லாமிய நோன்பு உடல்ரீதியான சில கட்டுப்பாடுகளை மட்டுமல்லாது உணர்வு ரீதியாகவும் சில கட்டுப்படுகளையும் கொணடது.  நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் சொன்னார்கள் : “யார் தவறான பேச்சுக்களை, தவறான செயல்களை விடவில்லை அவர் பட்டடினி கிடப்பதில் தாகித்திருப்பதில் இறைவனுக்கு எந்த தேவையும் இலலை.(புகாரி) “உஙகளில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாராவது ஒருவர் அவரை ஏசினாலோ அல்லது சண்டைக்கு இழுத்தாலோ நான் நோன்பாளி என்று சொல்லி அவா ஒதுங்கிக் கொள்ளட்டும். (புகாரி) இவ்வாறு ஒரு மாத நோன்பை கடைபிடித்து முடித்ததின் மகிழ்ச்சியில் 10 வது மாதமான  ஷவ்வால் மாத்தின் முதல் நாளை பெருநாளாக முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்கள்.

இப்பெருநாளின் சமயப் பெயர் ஈதுல் பித்ர் என்பது.  ஈத் என்றால் பெருநாள் என்றும், பித்ர் என்றால்நிறுத்துதல்என்றும் பொருள். ஒரு மாதகாலமாக கடைபிடித்து வந்த நோன்பு அன்றுடன் நிறுத்தப் படுவதால் இப்பெயர் வழங்கப் பட்டது. பெருநாளன்று முஸ்லிம்களில் ஓரளவு வச்தி படைத்தவர்கள் ஒவ்வொருவரும் அவருக்காகவும், அவரது கட்டுப்பாட்டில் இருக்கிற குடும்பத்தினருக்காகவும் தலைக்கு 2 ½ கிலோ வீதம் கணக்கிட்டு அரிசி அல்லது அதற்குரிய தொகையை தர்மமாக ஏழைகளுக்கு வழங்க வேண்டும். அதையும் பெருநாள் தொழுகைக்கு முன்னதாகவே வழங்கிவிட வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிட்டிருக்கிறது. அந்த தர்மமும் இதை ஒட்டியேசதகதுல் பித்ர்” “பித்ரா தர்மம்என்று அழைக்கப் படுகிறது.  ஈதுல் பித்ர்எனும் சொல் தமிழ் வழக்கில் ஈகைத் திருநாள் என்றும் நோன்புப் பெருநாள் என்றும்  குறிப்பிடப்படுகிறது.

இந்த ஆண்டு செப்டம்பர் 30 அக்டோபர் 1 ஆகிய தேதிகளில்  உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் நோன்பு பெருநாளை கொண்டாடுகிறார்கள்.

மத்தியக்கிழக்கில் 12 நாடுகளிலும், ஆப்ரிக்காவில்  25 நாடுகளிலும், மத்திய ஆசியாவில் - உஸ்பெககிஸ்தான், தஜ்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான்,கிர்கிஸ்தான், கஜகிஸ்தான், ஆஜர் பைஜான் ஆகிய நாடுகளிலும்,  தென்கிழக்கு ஆசியாவில்  இந்தோனேஷியா- மலேஷியா,ஆகிய நாடுகளிலும்,  தெற்காசியாவில் பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்த்தான்   ஆகிய நாடுகளிலும்   முஸ்லிம்கள்  பெரும்பான்மைமையினராக உள்ளனர். சுமார் 60  நாடுகளில்  பெரும்பான்மைமையினராக உள்ள முஸ்லிம்கள் சுமார் 150 நாடுகளில் சிறுபான்மையினராக உள்ளனர். இந்தியாவில் 15 கோடி முஸ்லிம்களும் சீனாவில் 11 கோடி முஸ்லிம்களும் சிறுபாமையினராக உள்ளனர்.தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 5.5 சதவீதம் என்ற கணக்கில் சுமார் 40 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.இவ்வாறு உலகம் முழுவதிலும் பரவி வாழ்கிற  சுமார் 180 கோடி முஸ்லிம்கள் இன்றைய மகிழ்ச்சியில் இணைகிறார்கள். அந்த வகையில் உலகின்  மிகப் பெரிய விஷேச தினமாக ஈதுல் பித்ர் பெருநாள் இருக்கிறது.

ஒரு சர்வதேச பெருநாள் உலகம் முழுவதிலும் ஒரே நாளில் அமையாமல் இரண்டு மூன்று நாட்களாக பிரிந்து போகிறதே ஏன். சவூதியில் முதல் நாள் என்றால் அடுத்த நாள் இந்தியாவில் பெருநாள் கொண்டாடப் படுவது எதனால்? பெருநாள்  என்றைக்கு  என்பது முதல் நாள் இரவு வரை ஒரு புதிராக இருப்பது அவசியந்தானா? என்ற கேள்விகள் இந்தச் சமய்த்தில் பிரதானமாக எழுகிறது. இதற்கான பதில் சாதரணமானது. தர்க்க விவாதங்களுக்கு தேவையற்றது. எல்லா வகையிலும் எளிதாக இருக்கிற இஸ்லாத்தின் இயல்புக்கு பொருத்தமானது.  பிறை பார்த்து நோன்பு வையுங்கள் பிறையப் பார்த்து பெருநாளை கொண்டாடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அது போல ஒரு மாதம் என்பது 29 நாட்களாகவும் இருக்கக் கூடும் என்று நபிகள் நாய்கம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபிகள் நாயகத்தின் இந்த உத்திரவுக்கு கட்டுப்படுவதில் உலகின் அத்தனை கண்டங்களில் வாழ்கிற முஸ்லிம்களும்  இத்தனை நூற்றாண்டுகளாக ஒன்று பட்டு நின்றார்கள். இப்போதும் நிற்கிறார்கள். ஒரு மாதத்தின் 29 நாளில் பிறை தெரிகிறதா என்று பார்க்கிறார்கள். பிறை தென்பட்டால் அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாளாகிறது. பிறை தென்படாவிட்டல் முந்தைய மாதத்தை 30 நாட்களுடையதாக கருதிக் கொள்கிறார்கள். அதற்கடுத்த நாள் பிறை பார்க்க வேண்டிய தேவை இல்லாமலே புதிய மாதத்தின் முதல் நாளாகிவிடுகிறது. முப்பதுக்கு மேல் நாட்கள் இஸ்லாமிய மாதத்தில் இல்லை.

பிறை தென்படுவது நாட்டுக்கு நாடு மாறு படும். ஊருக்கு ஊர் தொழுகை நேரம் மாறுபடுவது போல. ஒரு நாட்டில் பிறை பார்க்கப் பட்டது தொலைவில் உள்ள மற்றொரு நாட்டில் தாக்கம் செலுத்தும் என்றால் அமெரிக்கர்கள் பிறை பார்க்கிற நேரத்தில் இந்தோனேஷியக் காரர்களுக்கு காலை 9 மணியாகி இருக்கும்.  அதில் குழப்பமே மிஞ்சும். இந்தச் சூழலில் முந்தைய மாதத்தின் 29 நாளில் பிறை தெரிந்தால் பெருநாள் கொண்டாடுங்கள் என்ற வார்த்தையில் இருக்கிற வழிகாட்டுதல் எல்லோருக்கும் எல்லா காலத்திலும் பொருந்தக் கூடியது. பின்பற்றுவதற்கு எளியது. ஆஸ்திரேலியாவில் வாழ்பவரும் அமோசான் காடுகளில் வசிப்பவரும் ஒரு எஸ்.எம்.எஸின் உத்வி கூட இல்லாமல் உரிய நாளில் பெருநாளை கொண்டாட முடியும்.  இதில் உலகளாவிய ஒருமைப் பாடு என்ற கண்ணோட்டத்தை கொடுத்து குழப்பத்தை ஏற்படுத்தும் எண்ணம்  இஸ்லாத்திற்கு இல்லை. ஒரு பெருநாளை கொண்டாடுவதில் அல்ல. நபிகள் நாயகத்தின் கருத்துக்கு கட்டுப் படுவதில் சமுதாயம் ஒன்று பட்டிருக்கிற்தா என்பது தான் முக்கியம்.  இதுவே நூற்றண்டுகளாக இஸ்லாம் உல்கிற்கு சொல்லி வருகிற தத்துவம்.

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தகவல் தொழில் நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சியடைந்த கால கட்டத்தில் உலகம் முழுவதும் ஒரே நாள் பெருநாள் என்ற மயக்கம் சில கல்வியாளர்களுக்கு ஏற்பட்டது. அது சிந்தனைய தேவையற்ற விதத்தில் செலவு செய்யும் ஒரு முயற்சி என்பது பின்னர்தான் அவர்களுக்கு தெரியவந்தது. ஒரு வகையில் அதில் கூட ஒரு நன்மை விளைந்தது. இத்தைகைய முயற்சி தேவையற்றது. இதைவிடுத்து இஸ்லாம் காட்டும் எளிய வழிமுறையையே கடைபிடிக்குமாறு முஸ்லிம் உலகிற்கு அவர்கள் அறிவுறுத்தினர்.

முஸ்லிமகளின் பிறையை ஒன்று படுத்துவது குறித்து இது வரை ஏழு சர்வதேச மாநாடுகள் நடை பெற்றிருக்கிறது. அவற்றில் பிரதானமானது 1966 ம் ஆண்டு அக்டோபரில் கெய்ரோவில் நடைபெற்ற பிறை ஒருங்கிணைப்பு 3ம்  மாநாடு. அல் அஸ்ஹர் பல்கலை கழகத்தின் இஸ்லாமிய ஆய்வுத்துறை நடத்திய அம்மாநாடு பல் வேறுபட்ட பிரச்சினைக்ளை ஆராய்ந்து ஒரு முடிவை தராமல் முடிந்து போனது. தொடர்ந்து குவைத் நாட்டின் இஸ்லாமிய விவாகரதுறை அமைச்சரகம் 1973 ம் ஆண்டு மார்ச் மாத்தில் நான்காவது சர்வதேச மாநாட்டை நடத்தியது. 1978 ம் ஆண்டு இஸ்தான்பூலில் ஒரு மாநாடு கூட்டப் பட்டது.1985 ம் ஆண்டு மக்காவில் ஒருங்கிணைக்கப் பட்ட ஹிஜ்ரி கால நிர்ணய அமைப்பின் சார்பில் ஒரு சுற்று கூட்டம் நடத்தப் பட்டது. 6 வது சர்வதேச மாநாடு மொரோக்கோ நாட்டின் பாரம்பரியம் மிக்க பாஸ் நகரத்தில் 1986 ஜனவரியில் கூட்டப் பட்டது. இம்மாநாடுகள் அனைத்தின் முக்கிய நோக்கம் அரபி மாதத்தின் முதல் தேதியை ஒன்றாக ஆக்குவதன் மூலம் இஸ்லாமிய ஒருமைப் பாட்டடை நிலை நிறுத்த வேண்டும் என்பதாகவே இருந்தது. இதுவிசய்த்தில் இஸ்லாத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் குறை படுத்த முயற்சிப் போரின் வாயையும் அடைத்து விட வேண்டும் என்பது இம்மாடுளின் மற்றொரு லட்சியமாக இருந்தது. ஆனால் இம்மாடுகள் எதிலும் அதில் கல்ந்து கொண்ட முஸ்லிம் நாடுகளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லல. இறுதியில் மக்காவில் இஸ்லாமிய சட்ட வாரியம் கூட்டிய ஏழாம் மாநாட்டில் “இஸ்லாமிய உலகில் பெருநாளையும் முதல் பிறையையும் ஒன்று படுத்துமாறு அழைப்பு விடுக்கத் தேவையில்லை என்ற முடிவு வெளியிடப் பட்டது. ( லா ஹாஜத இலத் தஃவதி லி தவ்ஹீதில் அஹில்லதி வல் அஃயாதி பில் ஆலமில் இஸ்லாமி) இம்முடிவிற்கான காரணம். இஸ்லாமிய சட்டம் பிறை பார்க்க வேண்டும் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி கூறியிருப்பதே என்று அத்தீர்மாணம் வரையறுத்தது. பெருநாளை ஒருமைப் படுத்த முயற்சி மேற்கொண்ட பலரும் நினைப்பது போல சமூகத்தின் ஒற்றுமைக்கு இதற்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும் அத்தீர்மாணம் கூறியது. பிறை பற்றிய முடிவுகளை அறிவிக்கும் உரிமையை இஸ்லாமிய நாடுகளில் இருக்கிற பத்வா வழங்கும் அமைப்புக்களிடமும் காழிகளிடமும் விட்டு விடுவது என்று அத்தீர்மாணம் தெளிவாக வரையறுத்தது. இறுதியாக முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ்வின் வேதத்திற்கும் பெருமானாரின் வார்த்தைகளுக்கும் கட்டுப் படுவதில் ஒன்றிணைந்து இருப்பது தான் அவர்கள்து ஒற்றுமைக்கு பொறுப் பேற்கும் என்று அம்மாநாடு அறிவுறுத்தியது.

நபிமொழிக் கலை வல்லுனர் ஸ்ஹீஹ் முஸ்லிமின் விரிவுரையாளருமான இமாம் நவ்வியின் ஒரு உறுதியான ஆய்வு முடிவை இறுதியாக அக்கல்வியாளர்கள் முன்வைத்தனர். “லி குல்லி பலதின் ரூயதுஹு “ ஒவ்வொரு ஊரும் அது பிறை பார்த்து நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்து கொள்ளவேண்டும் என்பதே நபிமொழிகளின் கருத்து என்று அவர் கூறுகிறார். (islamway.com)

இந்தக் காரணங்களால் தான் பெருநாள் நாட்டுக்கு நாடு வேறு படுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற வார்த்தைக்கு ஒரு புதிய அர்த்தத்தை பெர்நாள் கொண்டாட்டங்கள் தருகின்றன. வெவ்வேறு நாட்களில் பெருநாளை கொண்டாடுகிற முஸ்லிம்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தைக்கு கட்டுப் படுதல் என்ற விசய்த்தில் ஒன்று படுகிறார்கள்.

நாடுகள், அதிகார பிரிவுகளுக்கு ஏற்ப பெருநாட்களின் தினத்தை தீர்மாணிக்கின்றன.  எனினும் ஒரே அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் ஒன்று பட்டே பெருநாளை கொண்டாடுகிறார்கள். தமிழகததை பொறுத்த மட்டில் அரசு தலைமை காஜியின் அறிவிப்பிற்கேற்ப பெருநாள் கொண்டாடப் படுகிறது. இந்த ஒரு விசயத்திலாவது ஒன்றுபடுவதர்கு தமிழக முஸ்லிம்களுக்கு கிடைத்திருக்கிற ஒரு அருளான வாய்ப்பு இது. ஆனாலும்  சமுகத்தில் அஜீரண சக்திகளாக இருக்கிற ஒரு சில நக்ஸலீய குழுக்கள் மட்டுமே உள்ளூருக்குள் குழப்பததை ஏற்படுத்தி விளம்பரங்காண முந்திக் கொள்கிறார்கள். முஸ்லிம்களுக்கு ஒருநாள் முன்னதாக பெருநாள் கொண்டாடுகின்றனர். 

முஸ்லிம் நாடுகள் அனைத்திலும் ரமாலானியப் பிறை ஒன்றாக இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்கிற எகிப்தின் தலைமை முப்தீ டாக்டர் அலீ ஜுமா, முஸ்லிம்கள் அவர்கள் வாழ்கிற ஊரின் பிறை முடிவிற்கேற்பவே நேன்பை தொடர்வோ விடவோ செய்ய வேண்டும். உலக அளவில் ஒன்று படுவதாக சொல்லிக் கொண்டு உள்ளுரளவில் முஸ்லிம்கள் மேலும் பிளவு பட்டுவிடக் கூடாது என்று எச்சரிக்கிறார். (அஷ்ஷர்குல் அவ்ஸத் – நாளிதழ் )

பெருநாள் என்பது மகிழ்ச்சியடைவும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வதற்கும் உரிய நாளாக இஸ்லாம் கருதுகிறது. அதனால் அன்றைய தினத்தை சேர்வாகவோ சோகமாகவோ முஸ்லிம்கள் எவரும் கழிக்க்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.  அன்றைய தினத்தில் நோன்பு நோற்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது. நோன்புப் பெருநாள் அன்றும் ஹஜ்ஜுப் பெருநாள் அன்றும் நோன்பு நோற்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என ஸஃது பின் மாலிக் (ரலி) கூறுகிறர். (புகாரி 1992)

இன்றைய இந்திய குறிப்பாக தமிழக முஸ்லிம்களின் பெருநாட்களோ, புதிய ஆடை, தொழுகை, பியரியாணிச் சாப்பாடு ஆகிய விசயங்களோடு முடிந்து விடுகிறது. பெருநான் தினம் என்பது மதியத்திற்கு பிறகு வெறுமையானதாக உறக்கத்திற்குரியதாக மாறிவிட்டது. சமுதாயத்தில் கொஞ்ச நஞ்சமாக மீதியிருந்த கலாச்சார நடவடிக்கைகள் கூட தூய இஸ்லாமிய வாதம் பேசுவோரால் கானாமல் போனது. அதனால் ஒட்டு மொத்தமாக பார்;க்கையில் தமிழ் முஸ்லிம்களின் பெருநாள் என்பது வறட்சியானதாக காட்சி யளிக்கிறது.  இந்தப் போக்கு தொடர்ந்தால் முஸ்லிம் சமுதயாத்தில் உற்சாகத்தையுமு; மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதற்கு  வாய்ப்புக்ளே இல்லை என்ற ஒரு தோற்றம் ஏற்பட வாய்ப்புண்டு;.

பெருமமனார் (ஸல்)அவர்கள் இப்படிப்பட்ட வறண்ட சூழ்நிலையை விரும்புபவர்களாக இருக்கவிலலை. விளையாடுங்கள். மனமகிழ்ச்சியான வேலைகளில் ஏடுபடுங்கள் உங்களது மார்க்கம் இறுக்கமானது என்ற தேற்றம் ஏற்படுவதை நான் வெறுக்கிறேன் என்று பெருமானாhர் (ஸல்) அவர்கள் கூறிpனார்கள். (மஆரிபுல் குரான்)

பெருநாள் மகிழ்ச்சிக்குரிய நாள் எனும் போது அன்றைய தினத்iதில் மகிழ்ச்சிக்கும் உற்சாகத்திற்கும் உரிய ஆக்ககரமான பல நிகழ்ச்சிகள் நடைபெறுவதை  மார்க்கம் வரவேற்கிறது. இஸ்லாத்தில் பெருநாள் எப்படி வந்தது என்ற வரலாற்றுச் செய்தியை தேடிப் பார்த்தால் இந்த வரவேற்பின் வாசகத்தை அதில் காண முடியும். நபித்தோழர் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது மக்கள் (நைரோஸ் மெஹர்ஜான என்ற) இரண்டு நாட்களில் விளையாடிக் களிப்பவர்களாக இருந்தனர். இந்த நாளில் என்ன விசேஷம் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இது அறியமைக் காலத்தது பழக்கம் என்று மக்கள் பதிலளித்த போது பெருமானார் (ஸல்) அவர்கள், இந்த நாட்களுக்கு பதிலாக வேறு இரண்டு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு மாற்றித் தந்துள்ளான் என்று கூறினார்கள்.(நூல் அபூதாவூத்  959 )  

விஷேச நாட்கள் என்று அறியாமைக் காலத்து மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்த நாட்கள் சூரியனின் சுழற்றசியையும் பருவச் சூழ்நிலையையும் மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. அதற்கு மாற்றாக இஸ்லாம் தேர்வு செய்த நாட்கள் பக்தியின் வழியிலும் மகிழ்ச்சியின் வழியிலும் மிகவும் பொருத்தமானதாக அமைந்தது. ஒரு மாத கால நோன்பை நிறைவு செ;யத மகிழ்ச்சியை நோன்புப் பெருhளின் வழியாகவும் புனித ஹஜ்ஜுக் கடமையை ஹாஜிகள் நிறைவேற்றி முடித்ததின் மகிஜ்ச்சியை ஹஜ்ஜுப் பெருநாளின் விழயாகவும் வெளிப்படுத்துகிற தகுந்த சூழலை இஸ்லாமின் இந்த ஏற்பாடு உண்டு பண்ணிவிட்டது.

பெருநாள் என்பது மகிழ்ந்து களிப்புறுவதற்கான நாள் என்ற மூலச்செய்தியை இந்த நபிமொழியின் வழியே நாம் பெற்றுக் கொள்ளத் தவறக்கூடாது. பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தில் இஸ்லாமிய பெருநாட்களின் எப்படி இருந்தன என்பதை பார்த்தாலும் இந்த உண்மையயை அறியலாம்.

ஒரு பொருநாளன்று மதீனத்துச் சிறுமிகள் அவர்களுடைய பழைய நினைவுகளை போற்றுகிற பாடல் ஒன்றை தப் அடித்து பாடிக் கொண்டிருந்தனர். பெருமானார் (ஸல்)அவர்கள் தனது படுக்கையில் படுத்திருந்தார்கள்.  அவ்வழியே வந்த அபூபக்கர் சித்தீக் (ரலீ) அவர்கள் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டிலேயே சாத்தானிய சங்கீதமா என்று சத்தமிட்டு அந்த சிறுமிகளை விரட்டினார்கள். அப்போது அவரை தடுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தோழரே! அவர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் பாடட்டும். ஒவ்வொரு சமுதாயத்திற்கும ஒரு திருநாள் இருப்பது போல இது நம்முடைய பெருநாள் என்று கூறினார்கள். (புகாரி 950)

மனம் மகிழ்ச்சியில் திழைக்கிற போது உதடுகளில் பாடல்கள் ஊற்றெடுப்பது வழக்கம். அது உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தரக்கூடியது. குதூகலத்தை ஏற்படுத்தக் கூடியது. குதூகலத்திற்காகவோ உணர்வூட்டுவதற்காகவோ பாடல்கள் பாடுவதை இஸ்லாம் தடை செய்ய வில்லை. மக்கா வெற்றியின் போது நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ரவாஹா சில பாடல்களை பாடினார். உமர் (ரலி) அவர்கள் அதை தடுத்தார். அப்போதும் பெருமானார் (ஸல்) அவர்கள், தோழரே!அவரை விடுங்கள் அவர் பாடட்டு;ம். அந்தப் பாடல்கள் அம்பை விட வேகமாக செல்லும் ஆற்றல் பெற்றவை என்றார்கள்.   

சில இசைக் கருவிகளுக்கு இஸ்லாம் தடை சொல்லியிருக்கிறது என்றாலும்  கவிதைகளுக்கும் பாடல்கள் பாடுவதற்கும் எந்தத் தடையுமில்லை. கவிதைகளும் பாடல்களுககும் இஸ்லாமிய கோட்டுபாடகளை மீறிவிடாதவாறு இருக்கவேண்டும். அபாசமும்; அருவெறுப்பும் கொண்டதாக இருக்கக் கூடாது என்பது மட்டுமே கவனிக்கத் தக்கது.  

பெருநாளன்று அர்த்தமுள்ள வீர விளையாட்டக்கள் நடைபெறுவதையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஆதரித்தார்கள். ஒரு பெருநாள் அன்று மஸ்ஜிதுன்னபவி பள்ளிவாசலின் முற்றத்தில் அபீசீனியாவிலிருந்து வந்த ஈட்டி எறிவதில் தேர்ச்சி பெற்ற வீரர்கள் தங்களது வீர தீர சாகசங்களை செய்து காட்டிக் கொண்டிருந்தார்கள என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறா. (முஸ்லிம் 1480)

பெருமனார் (ஸல்) அவர்கள் மக்களை உற்சாகப்படுத்துவதற்காககவும், பயிற்சிக்காககவும் ஒட்டகங்களுக்கு பநதயம் வைத்துள்ளளார்கள். அதே போல குதிரைகளுக்கும் பந்தயம் வைத்தார்கள். ஹிஜ்ரீ 6 ம் ஆண்டில் இந்தப் பந்தயங்கள் தொடங்கின.

நபி (ஸல்) அவர்கள் மெலிய வைக்கப் பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரை களை ஹப்யா எனுமிடத்திலிருந்து சனிய்யத்துல் வதா எனும் மலைக் குன்று வரை (ஓட்டப்; பந்தயத்தில்) ஓடச் செய் தார்கள் என்று அறிவிக்கிற  இப்னு உமர் (ரலி) அவர்கள்,  பயிற்சி யளிக்கப்படாத குதிரைகளை சனிய்யத் துல் வதாவிலிருந்து பனூ ஸுரைக் பள்ளிவாசல் வரை ஓடச் செய்தார்கள். நானும்; (என் குதிரையுடன்) பந்தயத்தில கலந்து கொண்டென் என்கிறார். (புகாரி 2868 )

இந்த நபி மொழியை அறிவிக்கிற அறிவிப்பாளர் சுப்யான் சவ்ரீ (ரஹ்) , ஹப்யாவுக்கும் சனிய்யத்துல் வதாவுக்கும் இடையே ஐந்து அல்லது ஆறு மைல்கள் தூரம் இருக்கும்.  சனிய்யத்துல் வதாவுக்கும் பனூ ஸுரைக் பள்ளிவாசலுக்கும் இடையே ஒரு மைல் தூரம் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

நபிகள் நாயகத்தின் துணை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிற மற்றொரு செய்தி சுவையானது. “ஓரு பயணத்தில் நான் பெருமானோரோடிருந்த போது அவர்களை ஓட்டப் பந்தயத்திற்கு வரும்படி அழைத்தேன். சம்மதித்தார்கள். நான் வேகமாக ஓடி பெருமானாரை முந்திவிட்டேன். பினனர் ஒரு சமயமும் அவர்களை ஒட்டப்பந்தயத்திற்கு அழைத்தேன். அப்பொது என் உடம்பில் சதை போட்டிருந்தது அந்த முறை பெருமானார் (ஸல்) அவர்கள் என்னை முந்தி ஜெயித்து விட்டு அதற்கு இது சரியாகிவிட்டது என்று சொன்னார்கள் . (அபூதாவூத் 2214) 

வாழ்வின் இனிமையும் மகிழ்ச்சியும் நிறைந்த பொழுதுகளை ரசிக்கத்தக்க அனுபவங்களாக ஆக்கிக் கொள்வதற்கான அனுமதியைiயும் செயல் முறைகளை யும் பெருமானார் (ஸல்) அவர்கள் ஏராளமாக விட்டு;ச் சென்றுள்ளார்கள். சமுதயம் அவ்வப்போது அந்த இனிய அனுபவங்களை தவற விட்டு விடுகிறது. அத்தகைய சந்தர்ப்பங்களில் நபித்தோழர்கள் அம்மக்களை உற்சாகப்படுத்துகிற பணியை செய்துள்ளார்கள். அவ்ர்களுக்கு பெருமானாரின் காலத்து நடைமுறைகளை நினைவூட்டியுள்ளார்கள்.

இயாழ் பின் அம்ர் அல் அஸஅரீ என்ற நபித்தோழர், அன்பார் என்ற ஊருக்கு சென்ற போது அங்குள்ள மக்கள் பெருநாள் தினத்தன்று எந்த விளையாட்டிலும் ஈடுபடாமல் இருப்பதை பார்த்தது விட்டு ஆச்சரியத்தோடு 'பெருமானார் (ஸல்) அவர்களது முன்னிலையில் தப் அடித்து பாடல்கள் பாடப்பட்டது போன்றும் விளையாட்டுக்கள் நடந்தது போன்றும் நீங்கள் ஏன் செய்வதில்லை என்று கேட்டார்.  (இப்னு மாஜா 1292)

இந்த நபிமொழிகள் தந்த உத்வேகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நான் பணியாற்றுகிற பள்ளிவாசலில் நோன்புப் பெருநாள அன்று மதரஸா மாணவர்களுக்காக கபடி போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. (மாணவிகளுக்கும் வேறு சில போட்டிகள் நடந்தன) சிறுவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள். அதைப் பாhத்த இளைஞர்களுக்கும் ஆர்வம் பிறந்தது. இதைப் பார்த்த நடுத்தர வயதுடையவர்களுக்கும் ஆர்வம் பிறந்தது. அனைத்து தரப்பினருக்கும் போட்டி நடந்தது. அனைவரும் உற்சாகத்தோடு கலந்து கொண்டார்கள். தொழுகை நேரத்தக்கு தொழுகை நடந்தது. பிரச்சினை எதுவும் ஏற்படாதவாறு பாhத்துக் கொள்ள ஜமாத்தின் பொறுப்பாளர்கள் அங்கே குழமியிருந்தனர். இஷா தொழுகைகபு;பிறகு பரிசுகள் வழங்கப்பட்டன.

எத்தகைய உற்சகத்தையும் மலர்ச்சியையும் தருவதற்காகக பெருநாட்கள் வழங்க்கப்பட்டனவோ அந்த நோக்கம் நிறைவேற  இத்தகைய மனமகிழ் செயல்பாடுகள் அனைத்துப் பகுதிகளிலும் நடத்தப்பட வேண்டும். ஆலிம்களும் ஜமாத்துகளின் பொறுப்பாளர்களும் அதில் ஆர்வம் காட்ட வேண்டும். இந்த சமுதயம் இறுக்கமானது என்ற எண்ணத்தை கலைய அது உதவும். மகிழ்ச்சியைiயும் உற்சாகத்தையும் வெளிப்படுத்த மார்க்கம் அனுமதித்துள்ள பல வழிமுறைகள் உலகுகு; வெளிப்பட அது துணை செய்யும். தாய் மண்ணின் வாசணையோடு இஸ்லாமிய கலையும் கலாச்சாரமும் மலர்ச்சியடைய அது வழிவகுக்கும்.

எங்களு}ரில் பொன்விழாக் கண்ட முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கத்தினர் பல ஆண்டுகளாக பெருநாள் அன்று மாலையில்  தேடுதல் வேட்டை இஸ்லாமிய வினாவிடை பாங்குப் போட்டி பாட்டுப் Nபுhட்டி அறிவுத்திறன் போட்டிகள் பலவற்றை சிறப்பாக நடத்தி வருகின்றனர். பாட்டுப் போட்டிக்கு பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் மக்கள் வந்து கலந்து கொள்வார்கள். மக்கள் ஆர்வததோடு அந்த நிகழ்ச்சியல் பங்கேற்பதை பார்க்கையில் அந்த இளைப்பாறுதல் அந்த மகிழ்ச்சி   அவர்களுக்கு எவ்வளவு தேவையாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது. இந்த ஆண்டும் அந்தப் போட்டிகள் இறைவன் அருளால் தொடர இருக்கின்றன. பாட்டுப் போட்டிக்கு என்னையும் அழைத்திருக்கிறார்கள். நான் உற்சாகமாக சம்மதித்திருக்கிறேன். குயில்களின் சபையில் காகத்திற்கு என்ன வேலை என்று கேட்டு விடாதீர்கள்.  நான் நடுவராக இருக்கப் போகிறேன்.

அனைவ்ருக்கும் இனிய ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்! ஈத் முபாரக்!!