Saturday, July 26, 2008

நூலாய்வு: இஸ்லாம் மிகச் சுருக்கமான அறிமுகம்

நூலாய்வு : அபத்தமான அறிமுகம்

நூல் : இஸ்லாம் மிகச் சுருக்கமான அறிமுகம்
மூலம் : மலிஸ் ரூத்வென்
மொழிபெயர்ப்பு : சிங்கராயர்
பக் : 202
விலை : ரூ 90
வெளியீடு : அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை. புத்தாநத்தம்,621310

அமெரிகாவிலுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலை கழக அச்சகம், 1997 ல் ஆங்கிலத்தில் வெளியிட்டு ஒலிவடிவமாக (audio book) வும் வெளிவந்துள்ள Islam A Short introduction என்ற நூலின் தமிழாக்கம் இது.

பல மாதங்களுக்கு முன்னாள் சமநிலைச் சமுதாயம் அலுவலகத்திலிருந்து மதிப்புரைக்கு அனுப்பப் பட்ட இந்நூலின் ஆரம்ப சில பக்கங்களை வாசித்த போது மொழி பெயர்ர்பின் மீது ஏற்பட்ட எரிச்சல் காரணமாக, “நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்ற பெயரில் ரொம்பத்தான் அக்கிரமம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்” என்று முனகிக் கொண்டே புத்தகத்தை மூடி வைத்து விட்டேன்.

“இஸ்லாம் ஒரு அறிமுகம்” என்ற தலைப்பின் ஈர்ப்பின் காரணமாக பல மாதங்களுக்குப் பின் மீண்டும் இந்நூலை எடுத்து வாசித்த போது அதிர்ச்சியடைந்தேன். ஆக்ஸ்போர்ட் அச்சகம் பிரசுரித்தது என்ற ஜிகினா போர்த்தப் பட்டு வெளிவந்துள்ள, கிருத்துவ இன்மாச்சரியம் கொண்ட, பொய்யான பல தகவல்களை கொண்ட ஒரு குப்பையான ஆய்வு இது.

இஸ்லாமை விளங்கிக் கொள்வதற்கு அல்ல. இஸ்லாம் குறித்த மேற்குலகின் எண்ண்வோட்டத்தை விளங்கிக் கொள்வதற்கே இந்நூல் உதவுகிறது. இஸ்லாத்தை விமர்சிக்க விரும்பிய எழுத்தாளர் மிகத் தந்திர்மாக அதற்கு இஸ்லாம் ஒரு சிறு அறிமுகம் என்றுபெயர் வைத்து இஸ்லாமை சிதைத்து சித்தரிக்கிறார். இஸ்லாமின் பெயரை பயன்படுத்தி கிருத்துவத்தை நிறுவ முயலும் கயமையான புத்திசாலித்தினம் நூல் நெடுக பரவி இருக்கிறது.

தமிழ் வாசகர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப் படுத்துவதற்காக அடையாளம் பதிப்பகம் இந்த நூலை தமிழாக்கம் செய்து பிரசுரித்திருப்பது அதுவும் அரசு நிதியுதவியுடன் பிரசுரித்திருப்பது அதிர்ச்சியூட்டும் ஒரு ஆச்சரியம். இந்த நூலை தமிழாக்கம் செய்து விட்டு அடையாளம் அடிக்ககிற தம்பட்டம் அருவருப்பானது மட்டுமல்ல பின் நவீனத்துவ போர்வை போர்த்திய அறியாமையும் கூட.

நூலில் பக்கத்துக்கு பக்கம் அபத்தங்க்ளின் தொகுப்பு. விரிவஞ்சியும் மொழியாக்கத்தில் காணப் படும் இருண்மை காரணமாகவும் சிலதை மட்டும் இங்கு தருகிறேன்.

மக்கா வெற்றியின் போது சிலைகளை அப்புற்ப்படுத்திய முஹம்மது (ஸல் அவர்கள் “இயேசு மேரி ஆகிய இரண்டு உருவங்களை மட்டும் விட்டு வைக்கிறார்”. (பக் – 53)

(ஹிரா குகையில் பெருமானார் தங்கியிருந்தத விசயத்தில்).சிரியாவுக்கு அவர் சென்ற பயணங்களில் சந்தித்த கிருஸ்துவ துறவிகளின் தூய நடைமுறைகளை கடைபிடித்திருப்பாரா என்பதில் அறிஞர்கள் கருத்து வேறுபடுகின்றனர்.


பிற்காலத் தலைமுறையின் மதிப்பீடுகளும் அபிலாஷைகளும் ஏற்றப் பட்டதுமான அவரது (பெருமானார் )மாதிரி உருவம், வாய்மொழி வழியாகவும் ஹதீஸ் இலக்கியம் வழியாகவும் பரப்பப் பட்டது. அது கிறிஸ்து அல்லது புத்தர் அளவுக்கு ஆற்றல் வாய்ந்த பண்பாட்டு சமய பிம்பம்.

“முஸ்லிம்காகவும் இருந்து கொண்டு நாத்திகராவும் இருப்பதில் எந்தத் முரண்பாடும் இல்ல” ஆனால் “கிருத்துவ நாத்திகம்” பெரும்பாலான மக்களுக்கு முரணான பதமாகவே ஒலிக்கிறது.”

“பதினெட்டு வயது ஆயிஷாவின் மடியில் எதிர்பாராத விதமாக (முஹம்மது) உயிர் துறக்கிறார்”.

“இஸ்லாம் முஸ்லிம் என்ற சொற்கள் எல்லா இடத்திலும் சர்ச்சக்குரிய களங்களாகவே இருக்கின்றன”
“முஹம்மதின் நம்பிக்கைகுரிய மனைவியான கதீஜா” 152

“ஆயிஷாவுக்கும் இறைத்தூதரின் ஒரு தோழரான அபூஹூரைரவுக்குமிடையே தனிப்பட்ட முறையில் நிலவிய கொந்தளிப்பு” பக் : 153

கருத்துக்கள் ஒரு புறம் இருண்மையும் கருமையும் கொண்டதாக இருக்கிற தென்றால் தமிழ் மொழியாக்கம் பற்றி சொல்லவே வேண்டாம், சாமாண்ய வாசகனை மிரட்டுகிற மொழியாக்கம்.. இந்தப் புத்தகத்தை நீங்கள்முழுமையாக புரிந்து கொண்டால் உங்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கலாம்.

மொழியாக்கத்தில் காணப்படும் இருண்மையும் தவறுகளும் ஒரு கட்டத்தில் புத்தகத்தை தூக்கி வீசிவிடத் தூண்டுகின்ற. உதாரணத்திற்கு “ஹதீஸ் மர்பூஃ” என்பது இறைத்தூதர் மேல் ஏற்றிக் கூறப் பட்ட ஹதீஸ் என்று மொழியாக்கப் பட்டுள்ளது. (பக்:100 )

கண்டிக்கப் பட வேண்டிய ஒரு தொகுப்பு தமிழ் பேசும் முஸ்லிம்கள் கவனிக்காமல் இருப்பதனால் கடைகளில் இன்னும் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கிறது.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்திங்கு சேர்த்திடுவீர் என்று பாரதி பாடியது இது போன்ற குப்பைகளை கொண்டுவந்து கொட்டுவதற்கல்ல.

இந்நூல் மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்பதற்கான “அடையாள”மா?

வல்லம் மாநாடு: பிரிவினைவாதிகளின் தெருக்கூத்து

ஜகாத் விசயத்தில் இஸ்லாத்திற்கு எதிராக கருத்துச் சொன்னதன் மூலம் முர்ததாகிவிட்டவகள் (இஸ்லாமிய மறுப்பாளர்கள்) தவ்ஹீத் மாநாடு நடத்தப் போவதாக அறிவிப்புக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இது பி.ஜே.பியினர் அம்பேதகர் விழா கொண்டாடுவது போன்றது. அம்பேத்கர் பிறந்த நாள் அன்று இந்துத்துவா சக்திகள் தாய் மதம் திரும்பும் நிக்ழ்சியை நடத்துவது எப்படி அம்பேதக்ரின் முகத்தில் கரியை பூசும் முய்றியோ அது போல தவ்ஹீத் என்ற சொல்லின் மீது தார் பூசும் முயற்சியே இந்த மாநாடு. உண்மையில் தமிழகத்தின் அரசியல் அரங்கில் தமது குழுவை நிலை நிறுத்திக் கொள்ளவும் வசூலுக்கான பரந்துபட்ட ஒரு வழியாகவுமே இம்மாநாடு நடைபெறுகிறது.

இந்தக் கொள்கையுடையவர்களை திருமண்ம் செய்து கொள்ளக் கூடாது. முஸ்லிம்களின் கப்ரிஸ்தானில் அடக்கம் செய்யப் படுவதற்கு அவர்கள் அருகதை யுடையவர்களும் அல்ல என்ற அறிவிப்பு வெகு சீக்கிரம் உலக அளவில் உரத்து ஒலிக்ப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரப் பட்டுக் கொண்டிருக்கிற சூழலில் எராளமான பொருட் செலவில் விளம்பர மாநாட்டுக்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த விளம்பரங்களின் வேகமும் மோகமும் மட்டுமே இது சாத்தானிய கும்பல் என்பதற்கு சான்றளிக்க போதுமானது. முஸ்லிம்களின் சம்யக் கூட்ட்ங்கள் எதற்கும் இப்படி ஒரு செலவு செய்யப்பட்டதில்லை. தூய சமயவாதத்திற்கு இந்த விளம்பரங்களும் ஆர்ப்பாட்டமும் எந்த வகையில் பொருத்தமானது என்பதை எண்ணி மக்கள் வியக்கின்றனர். இவ்வளவு பணம் இவர்களுக்கு எப்படி கிடைக்கிறது என்று அப்பாவித்தனமாக சிலர் கேட்கின்றனர். ஹவாலா மோசடிகள் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அனுமதிக்கப் பட்டது என்று ரகசிய அனுமதி வழங்கியற்காக கிடைத்த பரிசுப்பணம் விளையாடுகிறது என்று அவர்களுடைய முன்னாள் ஆதரவாளர்கள் கிசிகிசுக்கிறார்கள்.

இந்தக் கூட்டம் நடக்குமா? அல்லது இமாநாட்டுக்கு அழைப்பு விடுத்து கோவையில் அவர்களுடைய தலைவர் பேசுவதாக விளம்பரப் படுத்தப் பட்ட கூட்டம் சட்ட ஒழுங்கு பிரச்சினை காணமாக ரத்து செய்யப் பட்டது போல இதுவும் ரத்து செய்யப் படுமா என்ற கேள்விக்கு நடுவில் இந்தக் கூட்டத்தின் தன்மை குறித்து சில விபரங்களை தமிழகம் அறிந்து கொள்வது நல்லது

இவர்கள் உணமையில் கலககக் காரர்கள். எங்களது பகுதியில் ஒருவர் இறந்து போனார். அவரது பிள்ளைகள் போலி தவ்ஹீதி குரூப்பின் குட்டித்தலைவர்கள். நான் நினைத்தேன். இவனுக! இந்த குரூப்பில் புடிவாதமானவனுக! இந்த ஜனாஸைவை சுப்ஹான மௌலூதும் முஹ்யித்தீன் மௌலூதும் ஒதுகிற பள்ளிவாசலுக்கு கொண்டு வரமாட்டங்க! பக்கத்துல அவங்க இடம் பலது இருக்கு அங்க கொண்டு போயிடுவாங்க! சிர்க்(?) தளங்களுக்கு கொண்டு வருவதற்கு அவர்கள்து தூய வாதம் இடம் கொடுக்காது. நாம் எப்படி அவங்க இடத்துக்கு போக, ஏன் திரும்பிக் கூட பார்க்க விரும்பற்தில்லையோ அது போலத் தானே இவங்களுக்கும் மானம் ரோஷமெல்லாம் இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் ஜனாஸா எங்களது பகுதியிலுள்ள சுன்னத் ஜாமத் பள்ளிக்கு வந்தது. அங்கு வந்து வீம்பு செய்யத்தவற வில்லை. “நாங்க தான் தொழ வைப்போம்” என்றனர். ஒரு தொழுகையாளி உரத்துச் சொன்னார். அட கருமம் புடிச்சவனுங்களா! அமைதியா இருக்கிற ஜமாத்துல கலகம் பன்ன வந்துட்டீங்களா? என்றார். மக்கள்தான் எவ்வள்வு துல்லியமாக கருத்துக் கொண்டிருக்கிறார்கள்?

ஒரு கலகக் கூட்டம் வண்ணமயமான விளம்பரங்களால் தனது செல்வாக்கில் ஏற்பட்ட கறைகளை கழுவிட மேற்கொள்ளும் முயற்சியே இந்தத் தெருக்கூத்து.

உண்மையில் ம்ர்யாதைப் பட்ட ஒரு விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்ளத்தகுந்த எந்த நபர்களும் அம்மாநாட்டோடு சம்பந்தப் படவில்லை. அருவருப் பூட்டும் குற்றப் பின்னணியுடையவர்கள் மட்டுமே ஒன்று கூடி நடத்து கிற கூட்டம் அது.

இம்மாநாடு குறித்த எதிர் விவாதங்கள் இணைய உலகில் ஏரளமாக நடக்கிறது. அவர்களது முன்னாள் ஆதரவாளர்கள் பலரும் திரு பிஜே அன் கோவினரை தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்க்கின்றனர். அங்கு பயன்படுத்தப் படும் சொற்பிரயோகங்களும் வெளிப்படுத்தப் படும் உண்மைகளும் அச்சில் ஏற்றத்தகுந்தவை அல்ல. அதை எல்லாம் படித்துப் பார்க்கிற போது அதில் உள்ள கால் வாசி விசயங்கள் உண்மையாக இருந்தால் கூட இத்தைகைய அருவருப்பூட்டும் சக்திகள் எப்படி வெட்க மில்லாமல் மாநாடு நடத்த திட்டமிட முடிகிறது என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது. சுதந்திரப் போராட்ட காலத்தில் எப்படி பிரிட்டிஷ் காரர்களின் கைக்கூலிகளாக இருந்தவர்கள் மிர்ஸா குலாம் காதியானியை ஆதரித்தார்களோ அது போல, சமய சமூக தேசிய ஒழுங்குகளுக்கு கட்டுப்பட மறுக்கிற ஒரு கூட்டம் இவர்களைச் சார்ந்து நிற்கிறது. அந்தக் கூட்டத்திற்கு ஒரு குண்டாயிச மனப்பான்மை போதுமானதாக இருக்கிறது. அந்தக் கூட்டத்திற்கு யூதர்களைப் போல வளைத்து வளைத்துப் பேசும் நாவுகள் போதுமானதாக இருக்கிறது, அந்தக் கூட்டத்திற்கு குயுக்தியும் பரிகாசமும் போதுமானதாக இருக்கிறது. அந்தக் கூட்டத்திற்கு குரானும் சுன்னாவும் கலகக் கொடிகளாக இருப்பது போதுமானதாக இருக்கிறது. அந்தக் கூட்டத்திற்கு பொய்மையும் வாய்வீச்சும் போதுமானதாக இருக்கிறது. அந்தக் கூட்டத்திற்கு ஸாமிரிய்யின் வழித்தோன்றல்களளின் வழிகாட்டுதல் போதுமானதாக இருக்கிறது. கன்றுக் குட்டி சிலையை வண்ங்கும்படி யூதர்களை திசைதிருப்பிவிட்டு எனக்கு சரி என்று பட்டது அதனால் செய்தேன் என்ற ஒற்றைச் சொல்லில் ஸாமிரி கழன்று கொன்றது போல எங்களது அன்றைய ஆய்வு அப்படி இருந்தது? இன்றை ஆய்வு இப்படி என்று சொல்லி சமூகத்தையும் தேசத்தையும் பிளப்பதை சரி காண்பது இவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது.

இந்த இரண்டு வார்த்தக்ளுக்கு இடையே ஊட்டப்பட்ட வெறியால் நிகழ்ந்து விட்ட வரலாற்று சோகங்கள சாமாண்யமானதா? கல்யான வீடுகளிலிருந்து கல்லறைவரை சமுதாயத்தில்வெறி பிடித்துத் தொடர்ந்த சண்டைகள் சச்சர்வுகள் எத்தனை? துண்டாடப் பட்ட முஸ்லிம் ஜமாத்துக்கள் எத்தனை? வழக்குகள் எத்தனை? வம்புகள் எத்தனை? விப்ரீதங்கள் எத்தனை? கொடுமைகள் எத்தனை? கொள்ளைகள் எத்தனை? அத்தனையையும் மொத்தமாக மறைத்து விட்டு அறிவியல் அரங்கு ஆட்டுக்கல் அரங்கு என்று கதைவிட்டுக் கொண்டு வருகிறார்கள்.

சும்மா இருக்கிற இடத்தில் சச்சரைவை சல்னத்தை உருவாக்கி விட்டு அதை சமூக சீர்த்திருத்தம் என்று பேசி அதற்காக பலப்பிர்யோக வழிமுறைகளை தூண்டிவிட்டு இளைஞ்ர்களை முரட்டு குணம் கொண்டவ்ர்களாக்கி, அதன் விளைவாக சமூகத்தில் வொரும்பத்தகாத பல செயல்கள் ஏற்பட்டு பன்னூற்றுக் கணக்கான இளைஞர்களை சிறைக் கூடத்திற்கு அனுப்பி அவர்களது வாழ்வை இருளச் செய்த பிறகு இப்போது மீண்டும் ஒரு தலைமுறைய அதற்காக தயார் செய்வதற்காக மாநாடு ந்டத்துகிறார்கள்,

இந்தக் கூடாரத்தில் இப்போது கூட்டு சேர்ந்த்திருக்கிற பலரும் தமது சொந்த ஊருக்க்குள் தலை காட்ட் முட்யாதபடி ஓடி ஒளிந்து கொண்டிருந்தவர்கள். பல்வேறுபட்ட வழக்குகளில் அப்பாவி இளைஞர்களை சிக்கவைத்து விட்டு தண்டனைகளிலிருந்து வஞ்சமாக தப்பித்துக் கொண்டவ்ர்கள். இவர்களுக்கு இப்போது அரசியல் செல்வாக்குக்காக மாநாடு தேவையானதாக இருக்கலாம், அப்பாவித்தனாமாக இத்தனைக்குப் பிறகும் இவர்களைப் ஆட்டுமந்தை கூட்டத்தைவிட மோசமாக பின்பற்றுபவர்கள் ஒரு சிறைக் கூட எதிர்காலம் அல்லது சீரழிந்த கொள்கைகஈன் கூடாரம் தங்களுக்கு தேவையா என யோசித்துக் கொள்ள வேண்டும், இவர்களோடு இப்போது தொடர்பு கொண்டிருப்பவர்கள் இவர்களுடன் முன்னாள் தொடர்பு கொண்டவ்ர்களுக்கு நேர்ந்த கதியை ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துப் பார்த்துக் கொள்வது அவர்களுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.

இக்கூட்டத்திற்கு அழைப்பு திரு பீ ஜே, கோவையில் விடுத்து பேசுவதாக இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது எதனால்.? அதன் பின்னன்ணியில் உள்ள ஊருக்குத் தெரிந்த ரகசியம் என்ன? தம் வாழ்வைச் சீரழித்த சண்டாளன் என்று நகரிலுள்ள இளைஞர்கள் பலர் அவர் மீது கொதிப்படைந்திருப்பது எதனால்? என்பதை ஆழ அகழ்ந்து யோசித்துப் பார்க்கிற பொறுப்பு தமிழகத்தினுடையது. தமிழக முஸ்லிம்களுடையது, தமிழக முஸ்லிம் இளைஞர்கள்ளுடையது. தமிழக காவல் துறையினுடயது, தமிழக முதல்வருடையது, தமிழக முதல்வர் கலைஞர் பல சம்யத்திலும் முஸ்லிம் சமூகத்த்தில் உருவான தவறான மனிதர்களுக்கே உற்சாமளித்திருக்கிறார். அந்தச் சருகுதல் இந்தக் குற்றவாளிக் கூட்டளிகள் விசயத்திலும் நடந்துவிடக் கூடாது.

‘திருவாளர் பிரச்சினையின்’ இன்னொரு வாயாக எங்களுரில் ஒரு இளைஞர் இருந்தார். தனது கல்லூரிக்கால வாழ்வையும் அதற்குப் பிந்தைய பல் ஆண்டுக்ளையும், திரு பி.ஜே வுக்காக தொலைத்தவர். சில ஆண்டுகளாக கண்ணில் படாத அவர் திடீரென ஒரு நாள் என் வீட்டுக்கு வந்தார். முகவரி மாறி வந்துவிட்டாரா என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது. என் சந்தேகத்தை போக்கி விட்டு ஒரு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தார். வலி மிகுந்த அந்த ஒப்புதல் வாக்கு மூலத்தை இந்த ஏஜென்ஸிகளிடம் ஏமாறுவதற்கு தயாராகிற எந்த இளைஞனும் யோசித்துக் கொள்ளட்டும். அந்த இளைனின் வாக்கு மூலத்தை நான் என் வார்த்தைகளில் தருகிறேன்,

“ரேடியோ நிகழ்சிகளை தொகுத்து தருபர்களை ஆர் ஜே ரேடியோ ஜாக்கி என்பார்கள். தொலைக்காட்சி தொகுப்பாளர்களை வீடியோ ஜாக்கி என்பார்கள். என்னைப் பொறுத்தவரை பீ ஜே என்றால் பிரச்சினை ஜாக்கி என்று நான் உணர்ந்து வெளியே வந்துவிட்டேன். இதில் ஈடுபட்டதால் என மனது அமைதியை இழந்த்தது, ஒரு கட்டத்தில் நான் வேசமணிந்த நடிகனாகவே இருந்தேன், வாழ்கையின் மகிழ்சி நிம்மதியை தொலைந்தேன். பிரச்சினை சச்சரவுகலை தேடி ஒடுவதே என் பிழைப்பாக இருந்தது. நாங்கள் விளையாட்டாக பேசி வைத்துக் கொண்டு சச்சரவுகளை உருவாக்கினோம். இளமையின் தொடக்க காலத்தில் ஒரு தவ்றான மனிதனை பின் தொடர்ததால் நான் என் தரத்திற்கு கீழான பல் வேலைகளை செய்ய நேர்ந்த்து தவ்ஹீத் என்ற பலமான போவயின் இஸ்லாமின் நாகரீகங்கள் முரணான – துணிந்து பொய் பேசுவது, பொய்யான தகவல்களை உண்மையாக பிரச்சாரம் செய்வது அத்தனையையும் செய்தொம் சுன்னத் ஜமாத் உலாமாக்களை தரம் தாழ்த்துவது மட்டுமே எங்கள் குறியாக இருந்தத்து. அவர்களை மூக்குடையச் செய்வதற்காக எந்தக் காரியத்தையும் செய்யத்த்யாரக இருந்தோம். ஒரு பள்ளிவாசலுக்கு கூரை வேய்ந்து கொண்டிருந்த ஒரு முஸ்லியாரை உம்மாவுக்கு உடம்பு சரியில்லை ஓதிப்பார்க்க வரவேண்டும் என்று கூறி ஆட்டோவில் அழைத்துக் கொண்டுவந்து, எங்களது மர்க்கஸ் பள்ளிவாசலில் வைத்து நைய்ப் புடைத்தோம். அப்போதெல்லாம் நையப் புடைத்தோம் என்று சொல்வது எங்களுக்கு பெருமைக்குரிய விசயமாக இருந்தது. சப்பையை (தோள்பட்டையை) இறக்கினோம் என்று சொல்வது எங்களது சாதனையாக இருந்தது. முஸ்லியாருக்காக நியாயம் கேட்டு வந்தவ்ர்களை பட்டப் பகலில் நகரின் நெரிசல் மிகுந்த மையப்பகுதியில் கத்தியை காட்டி மிரட்டித் துரத்தினோம். இதை எல்லாம் இப்போது நினைத்தால் நான் கல்லுரி ப்டைப்பை முடித்திருந்தும் எப்படி தவ்ஹீதின் பெய்ரில் ஒரு அடியாளாக இருந்திருக்கிறேன் என்ப்தை எண்ணி கூனிக் குறுகிப் போய்விடுகிறேன். இப்போது நினைத்தாலும் இதயம் கனத்துப் போகிறது. தவ்ஹீதி என்ற பெயரில் நாங்கள் அடித்த கூத்துக்கள் நிறைய. விளையாட்டாய் நிகழ்த்திய அந்தக் கூத்துக்களுக்கு அப்பாவிகளும் அதீத புத்திசாலிகளாக தங்களை நினைத்துக் கொண்ட முட்டாள்களும் பெருமளவில் திரண்டார்கள். அது எங்களுக்கே ஆச்சரியத்தை கொடுத்தது. நாம் தான் உண்மையாளர்ளோ என்று நினைக்கும் அளவுக்கு அந்த ஆச்சரியம் வளர்ந்தது. ஆனால் நாம் அலட்சியமாகவல்லவா விளையாடிக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் எனக்குள் தோன்றிக் கொண்டிருந்தது. சன்னம் சன்னமாக எனக்குள் இருந்த மனசாட்சி அவர்களை விட்டு விலகிக் கொண்டிருந்தது. வெளிப்படையாக நான் தீவிர தவ்ஹீதியாக தெரிந்தாலும் நான் உள்ளுக்குள் ஒரு மாற்றத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தேன். பி.ஜே த.மு.மு.க வில் ஈடுபட்ட போது, ஒரு வழியாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொள்கை குழப்பங்களுக்கும் சமுதாய சச்சரவுகளுக்கும் முடிவு வந்துவிடும் என்று எதிர்பார்த்தேன், அவரும் தனது புதிய தலைமைக்குரிய வேஷத்தில் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல்களில் சென்று பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்றெல்லாம் அறிவுரைகளை மாற்றிக் கூறினார். ஆனால் பாழாய்ப் போன த.மு.மு.க.வினர் அவரது அதிகார ஆசைக்கு இடம் கொடுக்காமல் அவரை வெளியே அனுப்பி விட்டனர். அது பெரும் ஆபத்து, அவரால் சும்ம இருக்க முடியாது அவரை அண்டிப்பிழைத்துக் கொண்டிருப்பவர்களைப் பய்ன்படுத்தி மீண்டும் அவர் சமுதாய சச்சரவுகளுக்குத் தான் வ்ழியமைப்பார்.

நான் என் இந்த இடைக்கால வாழ்க்கை அனைத்த்தும் தவறானது என்பதை கொஞ்சம் கொஞ்சமாக நான் உணர்ந்து கொண்டேன். அதை ஊருக்கு சொல்வதற்காகவே எனது பாட்டனார் இற்ந்த போது அவருக்கு துஆ செய்வதற்காக நடத்தப் பட்ட 40 ம் நாள் பாதிஹாவை நான் முன்னிறு நடத்தினேன். இப்போது நான் நிம்மதியாக இருக்கிறேன். வேஷ்த்தை கலைத்த நிம்மதி எனக்கு ஏற்படிகிறது. பொய் வேடாதாரிகலளின் கூட்டத்திலிருந்து விலகி வந்து விட்டதில் வாழ்கை தெளிவாகவும் நேர்கொண்டதாகவும் இருக்கிறது. எனது இந்த மாற்றத்தை உங்களுக்குத் தெர்விக்கவும். உங்கள் வழியாக உலகறியச் செய்யவுமே உங்களிடம் வ்ந்தேன் ஆலிம்களிடம் உள்ள தயக்கமும் அவரைப் போல துணிந்து பேச தயங்குவதுமே அவரது வளர்ச்சிக்கு காரணங்கள் உங்களைப் போன்றவர்கள் இந்நிலையை மாற்ற உறுதியோடு செயல்பட வேண்டும் என்று அந்த இளைஞர் சொல்லி முடித்தார்.

2000 இல், மதுரை தமுக்கம் மைதானத்தில் ஒரு மாநாடு முன்னர் நடத்தப்பட்டது, அன்று இவருடன் இருந்தவர்களில் பலர் இந்த நண்பரைப் போலவே இவரின் வேஷம் விளங்கியதால் இவரை விட்டு விலகிச் சென்று விட்டனர்.அப்படி வில்கிச் சென்றவர்களை நீங்கள் ஒவ்வொரு ஊரிலும் பார்க்க முடியும்.அவர்களிடமிருந்து இது போல கதை கதையாக கேட்க முடியும்.

பெரும்பாலும் தொப்பி போட்ட படியே இருக்கும் ஒருவர், தொப்பி விசயத்தை வைத்து சமுதாயத்தை பிளந்தார் என்பது வேடிக்கையான ஒரு வேதனை. தொப்பி அவசியமற்றது தானே அதை ஏன் நீங்கள் பெரும்பாலும் அணிகிரீர்கள் என்று அவர்டைய ஆட்கள் அவரிடம் கேள்வி கேட்கவில்லை. ஆனால் தொப்பி போடுவதை தங்களது ம்ரபாக கொண்ட சுன்னத் ஜமாத்தினரின் பள்ளிவாசலுக்கு தொப்பி போடாமல் தொழவந்தனர். மக்களை ஆத்திரப் படுத்துவதற்காகவே இந்த நடவ்டிக்கை மேற்கொள்ளப் பட்டது. இந்த தொப்பியால் நடந்த பிரச்சினை கொஞ்சமா? நஞ்சமா? இத்தகைய ஒரு கும்பலால எங்கள் பகுதியில் நடைபெற்ற சண்டைகளும் தகறாறுகளும் ஏராளம். அத்தைகைய சந்தர்ப்பத்திலெல்லாம் முஷ்டியை மட்டுமல்ல சில சம்யத்தில் கத்தியையும் கூட உயர்த்திக் கொண்டு நின்றார் அவர்களின் குட்டித்தலைவர் ஒருவர். இப்போது அவர் பேச்சாளராக காசு பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் அவரது தலையிலும் தொப்பி ஒட்டிப் பிறந்த உறுப்பாக இனைந்திருக்கிறது, ஒரு காலத்தில் தொப்பிப் பிரச்சினக்காக ஊரையே ரகளைப் படுத்தினோமே என்பது நினைவில் கூட இல்லாதவ்ர் போல அவர் தொப்பியோடு உலா வருவதைப் பார்க்கையில் விளயாட்டுக்காக எத்தனி விப்ரீதங்களை அரங்கேற்றியிருக்கிறார்கள் என்பதை எண்ணி நெஞ்சம் பெருமுகிறது. அற்பமான செய்திகளை வைத்து எப்படி சமுதாயத்தை வஞ்சகமாக பிளந்தவர்கள் இவர்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு இது ஒரு சின்ன உதாரணம்.

முஸ்லிம்களின் பெருநாளை பிளந்தபோது, அதற்காக எத்தனை வாதங்களை எப்படி எல்லாம் அடுக்கடுக்காக வைத்தார்கள். அந்த ஆதர்ங்கள் மூலம் ஒரு குடும்பத்தில் தந்தையையும் மகனையும் தனித்தனியே பெருநாள் கொண்டாட வைத்த கொடுமை சமுதாயத்தில் எத்தனை வலிமிகுந்த கீறலை ஏற்படுத்தியது? மாபாவிகள்...சண்டாளர்கள்.. சதிகாரர்கள்.. எவ்வளவு எதார்த்தமாக அந்தப் பிளவிலிருந்து பின் வாங்கினார்கள்?. நாசமாய்ப் போன அந்த முந்தய ஆய்வுக்கும் பிந்தய ஆய்வுக்கும் இடையே எழுந்த் இடைவெளியை இனி எந்த தலைமுறையால் அடைக்க முடியும்? ஒரே குடும்பத்தில் ஒன்றாக மகிழ்ந்தும் ரசித்தும் கொண்டாடிய பெருநாட்களின் சந்தோஷ்த்தை தொலைத்து விட்டு சவக்கலையோடல்லவா இன்றைக்கு பல் குடும்பங்கள பெருநாட்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்

இந்தக் கட்டத்தில் அறிவு ஜீவிகளாகவும் சமூக அக்கறையுள்ளவர்களாகவும் தங்களைக் காட்டிக் கொண்ட சிலர் கூட ஜமாத்தினரை குறை பேசினரே தவிர ஏன் சமுதாயத்தின் ஒற்றுமை ஒரு அற்பக் காரியத்திற்காக குலைக்கிறீர்கள் என்று மறு தரப்பை பார்த்து கேள்வி கேட்க திராணியுற்றிருக்கவில்லை, இப்போதும் கூட சமுதாய ஒற்றுமை பேசுகிறோம் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு சிலர் முஸ்லிம்களையும் இந்த அமைப்பினரையும் இணைத்து காரியங்கள ஆற்ற முய்ற்சிக்கின்றனர். அது மல்லிகைப் பூக்களோடு அரளிப்பூவையும் சேர்த்து மாலைத் தொடுப்பதற்கு சம்மானது. அல்லது நல்ல பாலில் விஷத்தை கலப்பது பொன்றது. அப்படிப்பட்ட சந்தர்ப் பத்தை பயன்படுத்தி லாபம் பார்த்துக் கொள்வார்களே தவிர ஒரு போதும் அவர்கள் ஒற்றுமைக்கு உதவ மாட்டார்கள். முஸ்லிம் ஜமாத்துக்கள் எச்சரிகை அடைந்து கொள்ள வேண்டிய விசயம் இது. ஊர்ப்பிரச்சினை என்பதற்காக இவர்களை இணைத்துக் கொண்டால் அதனால் இவர்களுக்கு லாபம் கிடைக்கும் ஜமாத்துகளுக்கு நட்டமே ஏற்படும். இது எங்களூரில் எனக்கு கிடைத்த அனுபவம். இஸ்லாமிய வரலாற்றிலும் நான் கண்டுனர்ந்த தத்துவம்.

பள்ளிவாசலை, திருமண்த்தை, பெருநாளை, ஏன் இறுதி ஊர்வல்த்தை கூடப் பிரித்தவர்கள் அந்தப் பிரிவினையை நிலை நிறுத்துவதற்காக இளைஞ்ர்களைடையே வன்முறை குணத்தை விதைத்தவ்ர்கள். இப்போது மீண்டும், கூத்தடிக்க வருகிறார்கள். அந்தக் கூத்தாடிகளால் சமுதாயம் இன்னும் சில சிக்கல்களை சந்திக்காமல் இறைவன் பாதுகாக்கட்டும்.

Sunday, March 9, 2008

மெல்லத் திறந்தது கதவு.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ம் தேதி கோவை மாநகரின் மையப் பகுதியில் 167 ஏக்கர் பரப்பளவில் படர்ந்து கிடக்கிற மத்திய சிறைக் கூடத்தின் கதவுகள் மிக மெல்லத் திறந்தன. ஒன்பதரையாண்டுகளாக இன்று திறக்கும் அல்லது நாளை திறந்துவிடும் என்று பரிதவித்துக் கொண்டிருந்தவர்களின் ஏக்கப் பெருமூச்சுக்களுக்கும் ஏந்திய கரங்களுக்கும் ஒரு விடிவு பிறந்தது.
1998 பிப்ரவரி 14 ம் தேதி கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் கலவரங்களில் 58 பேர் இறந்தனா. 250பேர் காயமடைந்தனர். பலகோடி மதிப்பள்ள தனியார் மற்றும் பொதுச் சொத்தக்கள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 168 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சுமார் 60 வயதுடைய முஹம்மது தஸ்தகீர் முறையான சிகிட்சை தரப்படாதததால் இறந்துவிட்டார். மற்றொருவர் அரசுத்தரப்பு சாட்சியாக மாறிவிட்டார்.
அரசின் கொள்கை முடிவிற்கேற்ப தீலிரவாத சிறைக்கைதிகளை அடைப்பதற்காக தொடக்கத்தில் கோவை சேலம் மற்றும் திருச்சியில் உயர் பாதுகாப்பு கட்டித் தொகுதிகள் கட்டப்பட்டன. பின்னர் பெருகி வரும் தீவிரவாத சிறைக்கைதி களை கையாளவும் அவர்களைப்பிரித்து தனிமைப்படுத்தி வைப்பதற்கும் ஏதுவாக இத்தைகயை உயர் பாதுகாப்பு கட்டிட தொகுதி முறையை ஏனைய ஒன்பது மத்திய சிறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது என்று தமிழக சிறைத்துறை குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. அதனடிப்படையில் கோவை மத்திய சிறையில் உள்ள சில பகுதிகள் உயர் பாதகாப்புச் சிறைகளாக மாற்றப்பட்டன. 10 ம் நம்பர் பிளாக்கும் வால்மேடும் மருத்துவமனையின் ஒரு பகுதியும் உயர் பாதுகாப்பு சிறைகளாக மாற்றப்பட்டன. மின்வேலி பல அடுக்குப் பாதுகாப்பு தனி செக்யூரிட்டிகள் என பல அம்சங்கள் பாதுகாப்பு கட்டிடத் தெகுதிகளில் அமைக்கககப்ட்டுள்ளன. 10 ம்பிளாக்கிலிருந்து கால் கிலோ மீட்டர் தொலைவில் தீவு மாதிரி தனி காம்பவுண்டுக்குள் தனி செக்யூரிட்டியடன் 120 செல்களைக் கொண்டிருந்த வால்மேட்டில் தான் பெரும்பான்மையான குண்டுவெடிப்புக் கைதிகள் அடைக்கப்படடிருந்தனர். 10 ம் நம்பர் பிளாக்கில் சுமார் 20 பேரும் மருத்துவமனையில் சுமார் 30 பெரும் அடைக்ப்பட்டிருந்தனர்;.
குண்டு வெடிப்புக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 166 பேர் விசயத்தில் நீதி தேவதை முதன்முறையாய் திருவாய் மலர்ந்தருளினாள். இந்திய நீதி அமைப்பின் மிகிமிக மோசமான பாசிச போக்கின் கொடுமையான ஒரு வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வகை;கும் பணி அன்று தொடங்கியது.
166 நபர்களில் 158 பேர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிமன்றம் அவர்களில் 69 பேர் மீது கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், எஞ்சிய 84 பேருக்கும் கூட்டுச் சதியில் தொடர்பில்லை ஆனால் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்றும் கூறியது. ஒரு கால் ஊனமுற்ற நிலையில் சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு;க் கொண்டு 3390 நாட்கள் ஒரு பரேல் கூட வழங்கப்படாமல் சிறை வாசம் அனுபவித்த கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துன்னாஸர் மஃதனீ அன்று விடுதலை செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து 8 பேர் மீது எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி உருத்திராபதி கூறினார். முன்னரே ஜாமீன் பெற்றிருந்த மூன்று போரைத் தவிர்த்து மற்ற ஐவரும் அன்று மாலை விடுதலையாகி வெளியே வந்தார்கள்.
கலவரங்களின் போது ஒரு கல்லை எடுத்து வீசியதை கூட பெரும் குற்றமாக கருதி, வாலிபத்தின் வாசலில் நின்ற இளைஞர்களை 9 ஆண்டுகள் சிறையில் வைத்த இறுக்கமான ஒரு நீதிமன்றம், அடிப்படையான ஆதாரங்கள் எதுவும் சிறு அளவிலேனும் கூட இல்லதிருந்தால் ஒழிpய 8 நபர்களை விடுதலை செய்திருக்காது. இத்தகையவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் தலையாய நீதிஅமைப்பான உச்ச நீதிமன்றம் கூட ஒரு நியாயத்தை வழங்க முடியாத நிலையில் இருந்தது என்றால் ஒட்டு மொத்த நீதி அமைப்பின் மீது ஒரு வகை ஆயாசம் படர்வதை தவிர்க்க முடியவில்லை. இவர்களது ஜாமீன் மனுக்கள் உயர்நீதி மன்றத்தாலும் உச்சநீதிமன்றத்தாலும் எத்தனை முறை நிராகரிக்கப்பட்டன? அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக மீடியாக்களும் அரசியல் கட்சிகளும் அரங்கேற்றிய நாடகங்கள் எத்தனை? ஓரு நாகரீக சமுதயம் வெட்கித் தலைககுணிய வேண்டிய விசயங்கள் அல்லாவா அவை?
வக்கிரமான வாழ்கையையே தத்தவமாக கொண்ட இந்துத்தவா சக்திகள், அப்துல் நாஸர் மதானி நிரபராதி என்று அறிவிக்கப்ட்டதை அரசியல் காரணங்களுக்காக கொச்சைப்படுத்தினாலும் அவருடன் சேர்ந்து விடுவிக்கபட்ட கோவை லாலிரோட்டை சேர்ந்த நவுசாத், கரும்புக்கடையை சேர்ந்த சர்தார், குணியமுத்தூரைச் சேர்ந்த அப்துல் ஹமீது, சந்தராபுரத்தைச் சோந்த அக்கோஜி என்ற சிவக்குமார் கோழிக்கோட்டை சேர்ந்த அஸ்ரப், சுபேர், கொல்லத்தைச் சோந்த ஆர்மீ ராஜுஆகிய ஏழபேர் மீது அரசியலின் எந்த இழிபிறப்பு வார்ததையை பிரயோகிக்க முடியும்.? குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்ற ஒற்றை வார்த்தை அவாகளின் எதிர்கால வாழ்கையில் ஆயிரமாயிரம் மத்தாப்பூக்களை ஒளிரச் செய்தாலும், கடந்து போன ஒன்பதாண்டுகளின் கண்ணீர் வரலாற்றுக்கும் கவலைக்கும்; எந்த மருந்தை பூச முடியும்.
எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படாத சர்தாரின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் படித்துக் கூடப் பார்க்காமல் தள்ளுபடி செய்தது. வழககை தினசரி நடத்தி விரைந்து முடிக்குமாறு அறிவுரை சொல்லி திருப்பி அனுப்பிவிட்டது.
கோவையில் நடைபெற்ற முறையற்ற குண்டு வெடிப்புக்களுகாக இங்கு வாழந்த முஸ்லிம் சமூகம் தலைகுணிய நேர்ந்தது என்றால் இந்த நிராபாதிகளை அவர்களின் அனைத்து விதமான அபயக்குரல்;களையும் நெறித்து 9 ஆண்டகள் சிறைவைத்ததற்காக இந்த தேசத்தின் நீதியமைப்பும் அதை ஆட்டிப்படைக்கிற உளவுத்துறை சக்திகளும் அதை நிருவகிக்கிற அரசம் தலைகுணியத்தான் வேண்டும்.
இங்கிலாந்தில் கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த கார்விபத்தை சத்திதிட்டம் என்று இங்கிலாந்து அரசு கூறிய போது அதில் தொடாபுடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆஸதிரேலிய அரசு டகர்டர் ஹனீப் என்ற 27 வயது பெங்களூர்காரை கைது செய்தது. அவரை 27 நாள் தனிமைச் சிறையில் வைத்துவிட்டு பிறகு விடுதலை செய்தது. அப்பொது ஹனீபின் விடுதலையை வரவேற்ற அத்தனைபேரும் ஆஸ்திரேலிய நீதி அமைப்பை பாராட்டினார்கள். சட்த்தை பாதுகாக்கிற காவல் துறையால் நிகழந்துவிட்ட ஒரு தவறை உடனடியாக சரி செய்த அந்நாட்டின் நீதி அமைப்பு ஒரு தனி மனிதனின் மரியாதையை மட்டும் மீட்டுத்தரவில்லை ஒரு தேசத்தையே தலைநிமிரச் செய்தது.
செழிப்பாக சென்று கொண்டிருந்த தன் வாழ்கையை ஒரு சில மணிநேரத்தில் ஆஸ்திரேலிய அரசு குப்புறக்கவிழ்த்தி விட்டதை, டாக்டர் ஹனீப் கொடுமையான அனுபவமாக உணர்ந்தாலும் கூட அவர் மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கே திரும்பிச் செல்ல விரும்புகிறார். ஆந்நாடடின் நீதி அமப்பின் மீது அபரிமிதமான மரியாதை இருந்தால் தவிர இது சாத்தியமாகாது. ஐரோப்பிய சமுதாயம் தன்னை நாகரீக சமுதாயம் என்று சொல்லிக் கொள்வதில் ஏதோ ஒரு வகையில் நியாயமிருப்பதாகவே அன்று பார்வையாளர்கள் பலரும் கருதினார்கள்.
ஆனால் மதானி விசயத்திலும் அவருடன் விடுதலை செய்யப்பட்ட மற்ற ஏழு பேர் விசயத்திலும் அவர்களது விடுதலை ஆரவாரமாக வரவேற்கப்பட்ட அதே சமயத்தில் இந்த நாட்டின் உளவுத்றையின் கோர முகத்தை கண்டு மக்கள் முகம சுளித்தார்கள். அதற்கு துணைபோகிற நீதிமன்றங்களின் போக்கு விமர்ச்சிக்கப்பட்டது. அதை ஆதரித்தும் அனுசரிததும் சென்ற அரசுகளின் மரியாதை கிழித்துக் குதறப்பட்டது.
இந்த எட்டு பேரைத் தவிர சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு அதிகபட்டசமாக வழங்கப்படத்தகுந்த தண்டணைகாலத்தை ஏற்கெனவே அனுபவித்துவிட்ட சுமார் 84 பேரும் தொடாந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்கள்.
ஒன்பதாண்டு சிறைவசாம் அவர்களை பெரும்பாலும் மௌனிகளாக மாற்றியிருக்கிறது. சிறை சென்ற தொடக்க நாடகளில் நடந்த கொடுமைகள் சமூகத்தால் புறக்கணிக்கபட்ட சூழல் குடும்பத்தினருக்கு நேர்ந்த திடீர்ச் சிரமங்கள் அவர்களை கண்களை மூடி மீண்டும் ஒரு முறை அந்த வலியை நினைத்து துடிக்க வைக்கிறது. ஒரு நான்கு முறையேனும் அழாமல் தொடாந்து 10 நிமிடங்களுக்கு அவாகளிடம் பேச முடியாது. இவர்களில் பெரும்பாலானோர் சிறையை முதன்முறையாகப் பார்த்தவர்கள். தனித்தனியாக அடைக்கப்படுகிற செல்களைக் கொண்ட வால்மேடும், 10 ம்நம்பர் பிளாக்கும் சிறை மருத்துவமனையும் அவர்களை கதிகலங்கச் செய்தள்ளது. குடும்பத்திற்கேற்பட்ட சிரமங்கள் மனைவி குழந்தைகளை பிரிந்த வாழ்தல் சம்பாதித்து தருபவர்கள் யாரும் இன்றி குடும்பத்திற்கு நேர்ந்த அவலம் இவைஎல்லாம் இடைவெளி இல்லாமல் அவர்களை அழ வவைத்திருக்கிறது.
ஆரம்பத்தில் அழுது அழுது என் கண்ணீரே வற்றிவிட்டது. கடைசி சில ஆண்டுகளில் நான் அழவேண்டும் என்று நினைத்தால் கூட கண்ணீர் வராது. விடுதலையாகி வெளியே வந்து திறந்த வெளியில் கம்பிகளின் இடையூறு இல்லாமல் என் குடும்பத்தை பார்த்தபோது பலவருடங்களுக்குப்பிறகு ஆனந்தத்தால் என்களில் கண்ணீர் வந்தது என்று ஒருவர் சொன்னார்.
17 வயது பாஷா, அபுதாஹரிர் முதல் 60 வயது தஸ்தகீர் வரையிலும், திருமணமாகாத இளைஞர்கள், திருமணமாகி குழந்தைகள் உள்ளோh,;புதிதாக திருமணம் செய்தோர் என பலதரப்பட்டவர்களும் அவரவர் சூழ்நிலைக்கும் சிரமத்திற்கும் ஏற்ப அனுபவித்தி வேதனை கதைகள் அத்தனையும் அவ்வளவு எளிதில் சொல்லி முடியக் கூடியவை அல்ல.
சுமநிலைச்சமுதயாத்தின் வாசகர் ஒருவர் நான் சிறைக்குள் சென்ற போது என் முதல் குழந்தைக்கு ஒண்ணரைவயது இரண்டாவது குழந்தைக்கு ஆற வயது என்றார்.
சூரிய ஒளியை பார்க்காமல் ரெம்ப நாட்களாக இருந்தோம், ஆரம்பத்தில் ஏட்டு மாதங்கள் நான் வானத்தையே பார்க்க முடிந்ததில்லை என்று சொல்லிக் கொண்டு ஒரு நண்பர் பேசத் தொடங்கினார். அந்த வார்த்தை தந்த அதிர்ச்சியில் நானும் என்னோடிருந்த சிலரும் பேசச் சக்தியற்றவர்களானோம். அடைக்கப்ட்ட சிறைக்குள்ளேயே சிலருக்கு ஒரு வருடம் கழிந்திருக்கிறது. எப்போதாவது சவரம் செய்வதற்கு திறந்துவிடுவதை தவிர மற்ற நேரங்கள் முழவதும் அடைத்தே வைப்பார்களாம். மனித உரிமைகளை மதித்து நடந்து கொள்ளுங்கள் என்று யாராவது சற்று கோபமுற்று கேட்டுவிட்டால் அடிதான். ஆரம்பத்தில் திடீர் திடீர் என்று செல்களைத் திறந்த அடிப்பார்கள். என்ன ஏது என்று காரணம் புரியாது என்று ஒருவர் சொன்னார். ஆறுமாதம் வரைக்கும் திடீர் திடீர் என செல்களை திறந்து அடிப்பது தொடர்ந்திருக்கிறது.
சிறைக் கைதிகளுக்கு சாதாரணமாக தரப்பட வேண்டிய உரிமைகளும் சலுகைகளும் குண்டு வெடிப்புக் கiதிகளுக்கு மறுக்கப் பட்டுள்ளது. 1998 மார்ச் 3 ம்தேதி அனைத்து கைதிகளையும் வார்டர்கள் கூட்டமாக தாக்கியுள்ளனர். ஏதோ அராசங்கமே திட்மிட்டு நாள் குறித்து கொடுத்தது போல தமிழகத்தில் குண்டு வெடிப்பக் கiதிகள் சிறை வைக்கப்பட்டள்ள அனைத்து இடங்களிலும் இது நடந்துள்ளது. உச்ச கட்டமாக வேலூர் ஜெயலில் ஒருவருக்கு அவரது முதுகந்தண்டில் பலமான அடி விழுந்தத்தில் இன்று வரை பெல் அணிந்து நடமாட வேண்டிய நிலைக்கு ஆளாகியிரக்கிறார்.
இந்தத் தொல்லைக்ள குறித்து தெரிவிக்கவோ, நிவாரணம் பெறவோ போதிய வசத்திவாய்ப்புக்கள் எதுவும் அப்போது எங்களிடம் இருக்கவில்லை இந்த எங்களின் நிலைக்காக குரல் கொடுக்கவும் யாரும் முன்வரவில்லை என்று ஒருவர் கூறனார்.
பல மாதங்கள் எங்களில் பலர் குடும்பத்தினரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. முதன்முதலாக சென்னiயில் ஒரு பெண் என் மகனை காட்ட மறுக்கிறார்கள் என்று ரிட் மனுத் தாக்கல் செய்த பிறகு அவரை மட்டும் குடும்பத்தினர் சந்திக்க அனுமதித்தார்கள். பிற்காலங்களில் எங்களை குடும்பத்தினர் சந்திக்க அனுமதிக்கும் போது உள்ளே செமையாக அடித்து விட்டு குடும்பத்தாரிடம் எதையும் சொல்லக் கூடாது என்று எச்சரித்து அனுப்பிவிடுவார்கள். நாங்களும் இதை சொன்னால் குடும்பத்தினர் வேதனைப்படுவார்களே என்ற கவலையில் அவர்களிடம் இதை மறைத்து விடுவோம். குடும்பத்தினரைச் சந்திக்கும் போது உருதுவில் பேச் கூடாது என்று ஒவ்வொரு முறையும் எச்சரித்து அனுப்பப்படுவார்களாம்.
குண்டு வைத்தவர்கள் என்ற தாக்கமும் கோபமும் தொடக்கத்தில் மூன்று வருடங்களுக்கு சிறைக்காவலர்கள்,மருத்துவர்கள்,மற்ற கைதிகள் என அனைத்தது தரப்பினரிடமும் இருந்தள்ளது. கைது செய்யப்பட்ட எல்லோரையும் தீவிரவாதி என்ற கண்ணோட்த்திலேயே நடத்தியுள்ளனர். குண்டு வெடிச்சவனா நீ என்று என்று கேட்டுக் கேட்டுத் தொல்லை செய்துள்ளனர். மருத்துவத்திற்கு சென்றால் கையை தொட்டுக் கூடப் பார்க்காமல் திருப்பித்திருப்பி உள்ளே அனுப்பியயுள்ளனர். சில சந்தர்ப்பத்தில் மருத்துவர்களும் சேர்ந்து அடித்துள்ளார்கள். சிலரை நர்ஸுகள் கூட அடித்துள்ளனர்;. எனக்கு பைல்ஸ் இருந்தது என்று சொன்ன ஒருவர் நான் வேதனையோடு சென்றால் பேருக்கு சாதாரணமாக சில மாத்திரைகளை கொடுத்து அனுப்பிவிடுவார்கள். சரியான சிகிட்சை தரப்படவில்லை என்;றார். 60 வயதான தஸ்தகீருக்கு சரியான சிகிட்சை தரப்படவில்லை. அவரது வியாதி அதிகரித்தக் கொண்டே சென்றது. எல்லோருமாக சென்று பிரச்சினை செய்த பிறகே வெளியே கிசிட்கை;கு அனுப்பியுள்ளார்கள். அவரது வயிற்றிலிருந்து 18 லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. சிகிட்கை பலனின்றி அவர் இறந்தார். அவரது நோயின் தீவிரத்தன்மையை கவனிக்காமல் வெறும் கேஸ் டிரபிள் என்று சொல்லி அவரை பல முறை திருப்பியனுப்பியுள்ளார்கள். ஒரு கiதிக்கு வலிப்பு நோய் இருந்திருக்கிறது. அவருக்கான மருத்துவ உதவியும் மிகக் குறைவாகவே கிடைத்திருக்கிறது.
ஒருவருக்கு அக்குளில் ஒரு கட்டி வந்தததற்காக சிறைக்கைதிகள் போராடி வெளி மருத்துவமனையில் ஆபரேஷன் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதன்பிறகு அவருக்கு எய்ட்ஸ் நோய் தொற்றியுள்ளது. ஒருவருக்கு இப்படி எற்பட்டதுதெரிந்தவுடன் அனைத்து குண்டு வெடிப்புக் கiதிகளும் எய்ட்ஸ் பரிசாதனை செய்துள்ளனர். அல்லாஹ்வின் கிருபையால் மற்ற யாருக்கும் அந்தக் கொடுமை நிகழவில்லை.
திருமணமான புதிதில் மனைவியை பிரிந்த இளைஞனின் விரக தாபம் நாச10க்காக சொல்லப்பட்டாலும் அதில் வெளிப்படும் வேதனையின் ஆழம் எந்த அளவகளுக்குள்ளும் அடங்காதது. என் மனைவி என்னை பார்க்க வருவாள் கண்ணால் பார்க்க முடிந்த அவளை விரலால் தொடக் கூட முடியாது. இரண்டு பெருக்கும் இடையே சில மீட்டர் இடைவெளி இருந்தது.
குடும்பஸ்த்தர் ஒரவரின் பரிதவிப்பு வித்தியாசமானது. வாரத்திற்கு ஒரு மறை வீட்டிலிருந்து வருவார்கள். பழம் பிஸ்கட் கொண்டு வருவார்கள். சம்பாதித்து தரவேண்டிய நான் உளளே இருக்க என் பிள்ளைகள் சம்பாத்தியத்தில் இவைகளை நான் சாப்பிடுவதா என்ற எண்ணத்தில் இது போல் ஒன்னும் வாங்கி வர வேண்டாம் குழந்தைகளுக்கு எதுவும் வாங்கிட்டுப் போ என்று சொல்வேன். மனைவி பராவயில்லை நீங்க சாப்பிடுங்கள் என்று வலக்கட்டாமாக கொடுத்து விடு;ச் செலவாள். மாதத்திற்கு ஒரு முறை மாற்றி மாற்றி பையனும் பொன்னும் வருவார்கள் அவர்களை தூக்க முடியாது என்னும் அந்த வார்த்தைகளில் ஒரு தந்தையின் தவிப்பு தளும்பகிறது. மனைவி விடை பெற்றுச் செல்லும் போது முடிந்தால் அடுத்தவாரம் வா. கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்று சொல்லி அனுப்புவேன் என்று அவர் வெளிப்படையாக கூறுவதை கேட்கையில் ஒரு பெருமூச்சு பிறக்கிறது.
குடும்பத்தினர் வந்து பாhக்கவில்லையே என்று சிலர் மிகவும் வருத்த மடைந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் தயங்கிக் கொண்டு பாhக்க வராமல் இருந்தவர்கள் பிறகு வர ஆரம்பித்திருக்கிறார்கள். அலைச்சல், காவல் துறையின் கடுமையான செக்கப் அகியவற்றை தாண்டி காத்திருத்து அவர்களை சந்திக்க வேண்டியிருந்தது.அதில் ஒரு நாள் கழிந்துவிடும். யாராவது வந்து பாருங்கள் என்று கெஞ்ச வேண்டிய சூழலும் சிலருக்கு நேர்ந்திருக்கிறது.
சிறைவாசிகளில் 4 பேருக்கு சிiறியலிரக்கும் போதே திருமணம் நடந்தள்ளது. சில மணிநேர பரேலில் வந்த அவர்கள் திரமணத்தை முடிந்து கொண்டு திரம்பியுள்ளார்கள். சிறையில் கிடைக்கிற உயர் கல்வி கற்கும் வசதியை பயன் படுத்தி 5 பேர் முதகலை பட்டம் பெற்றிரக்கிறார்கள். 15 க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதியுள்ளார்கள்.
ஊங்களுக்கு எற்பட்ட சிரமங்கள் என்ன என்று கேட்டால். சொல்ல முடியாத சிரமங்கள் ஏராளம். அல்லாஹ்விடம் தான் அவற்றை சொல்ல முடியும் என்று சொன்ன அவர் அடுத்துச் சொன்ன வார்த்தைகள் தேவைனயின் உச்சம். இஸ்லாத்தில் அனுமதியிருந்திருந்தால் நான் தற்கொலை செய்திருப்பேன். அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து விட்டு பேசாமல் இருந்துவிட்டோன். 48 கிலோ குற்றப்பத்hகை கொடுத்தார்கள் அதை நான் தொடக் கூட இல்லை. குற்றம் செய்திருந்தால் தானே தொடனும்?
கைதிகள் சிறை வகை;கப்பட்ட இடத்திலிருந்து சிலரது குடும்பம் இரண்டே கிலோ மீட்டர் தொலைவில் வசித்தாலும் அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்க முடியாமல் போன சோகம் பலரை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்குள் என்னுடைய தந்தை இறந்திருக்கிறார். அவரை இறுதியகப் பார்க்க முடியவில்லை. அடுத்த நாள்தான் எனக்கு செய்தியே கிடைத்தது. சிறையில் என்னை அடிக்கடி சந்தித்து இன்னும் ஒரு மாத்தததில், இன்னும் மூன்று மாதத்தில் நீ விடுதலையாகிவிடுவாய் என்று எனக்கு ஆறதல் கூறி வந்த என் தாயையும் நான் சமீபத்தில் இழந்தேன். அப்பொது பரேலில் வர அனுமதி கிடைத்தது என்கிற அவர் சிறையிலிருந்து திரும்பியதும் நேரே தன் தாயாருடைய ஜியாரத்திற்கு சென்றுவிட்டே வீட்டிற்று சென்றிரக்கிறார். சுமார் 40 பேர் இந்நீண்ட சிறை வாசத்திற்கு இடையே தங்களத பெற்றோரை இழந்திரக்கிறார்கள். மற்ற சிலர் சகோதரன் தங்கையின் கணவர் போன்ற நெருங்கிய உறவுகளை இழந்திரக்கிறார்கள்.
குடும்ப வறுமை குழந்தைகள் படிப்புக்கு பீஸ் கட்ட இயலாமை சாப்பாடு இல்லாமை வீட்டுக்கு வாடகை தர முடியாமை மருத்துவ செலவுக்கு வழின்மை ஆகிய காரணங்களால் சிலர் விரக்தியின் உச்சகட்டத்திற்கு சென்றுள்ளனர்.
சிறைக் கைதி ஒருவருடைய மாமியார் வீட்டு வேலை செய்து தன்னுடைய மகளையும் அவருடைய இரண்டு குழந்தைகளையும் பக்கவாததில் விழுந்து கிட்க்கிற தன்னுடைய கனவனையும் கவனித்திரக்கிறார்.
வறுமையின் உச்சகட்டத்தில் இரண்டு கைதிகiளுடைய மனைவியர் அவர்களை விட்டு விலகிச் சென்று விட்டனர். ஓருவர் தன் மனைவிக்கு தலாக் கொடுத்துவிட்டார். மற்றொருவருடைய மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆந்த வழக்கு இழுத்துக் கொண்டு போகவே கணவர் வெளியே வந்தவுடன் இப்பொது தம்பதிகள் ஒன்று செர்ந்து விட்டனர். அல்லாஹ் அத்தம்பதிகளுக்கு அருட் செய்யட்டும்.
சுpறையில் கொடுத்த உணவை நான் பசிக்கு சாப்பிட்டேனே தவிர ருசித்து சாப்பிடவில்லை. அவர்கள் கொடுத்த கறி மீன் முட்டை எதையும் நான் தொடவில்லை என்கிறார் ஒருவர்.
குண்டு வெடிப்போடு எந்தத் தொடர்பும் இல்லாத 40 லிருந்து 50 பேர் மிகச்சிறிய குற்றங்களுக்காக கடும் தண்டனை அடைந்துள்ளனர். கலவரம் செய்தவர்கள்மீது கல்லெடுத்து விசயதற்காக சிலர் 9 ஆண்டு சிறை வாசம் அனுபவித்திருக்கிறார்கள்.
எந்த தகவலும் சொல்லப்படாமல் பிரதான குற்றம் சாட்டப்பட்டவர்களால் பயன்படுத்தப்பட்ட அப்பாவிகள் சிலர் மிகுந்த வேதனையளிக்கிற வகையில் இந்நிண்ட சிறை வாசத்தை அனுபவித்திரக்கிறார்கள். இந்த ஆளுகளெல்லாம் இந்த இயக்கத்தினர் என்று உங்களுக்குத் தெரியாதா? என் அவர்களோடு போனீர்;கள் என்று என்னைப்பார்த்து என் மனைவி கதறினாள். ஏன்னுடைய அப்பாவித்தனம் எனக்கு அப்போது தான் புரிந்தது என்று ஒருவர், எனக்கு தெரிந்தது முஸ்லிம்லீக், தி.மு.க, ஆ.தி.மு.க, ஜனதா ஆகிய கட்சிகள் தான். இந்த இயக்கங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்று சொன்னார். அவரை ஊடுறுவிப்பாhத்தால் அந்த வெகுளித்தனத்தனம் உண்மையானதாகவே படுகிறது. காவல் துறை என்னை சாட்சியாக வைத்திருக்கலாம். நான் முஸ்லிம் என்பதற்காக என்னையும் iகிதியாக்கிவிட்டார்கள். என்னை விசாரித்த என்னுடைய விவகாரங்களை நன்கு தெரிந்து கொண்ட விசாரனை அதிகாரிகள் என்னை விடுவித்து விடவதாகச் சொன்னார்கள். ஆனாலும் ஏனோ அப்படிச் செய்யவில்லை என்று சொன்ன அந்த சகோதரரின் இரண்டு மகன்களுடைய படிப்பு எட்டாம் வகுப்போடும் ஆறாம் வகுப்போடும் நின்றுபோனது. புடிப்பில் அதிக ஆர்வமுடைய அவர்கள் தாயைiயும் குடம்பத்தையும் காப்பாற்றுவதற்காக வேலைக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது என்று அவர் சொன்னார். அத்தா நீ ஏன் ஜெயிலக்குப் போனாய் ? அதனால் தானே நாங்கள் படிக்க முடியாமல் போயிற்று என்று பையன்கள் கேட்கிறார்கள் என்று சொல்லுகிற போது அவரது கண்கள் மட்டும் குளமாகவில்லை. அங்கிருந்த அனைவருக்கும் தான்.
அத்த வெளியே வந்தால் போடுவதற்கு புதிய சட்டை வேண்டும் என்று பத்தாம் வகுப்பு படிக்க வேண்டிய என் மகன் கொடுத்த புதிய சட்டை இது என்று காலைரை இழுத்துக் காட்டிய போது அவர் சிரித்தார். அங்கிருந்தோரால் சிரிக்க முடியவில்லை.
யாராவது உதவி செய்தார்களா என்று கேட்டேன். நான் ஜெயிலில் இருந்த போது இரண்டு முறை 500 ரூபாய் வீட்டிற்கு செலவுக்கு வழங்கினார்கள். என் மகளின் படிப்புச் செலவை கோயை சிறுபான்மை அறக்கட்டளை ஏற்றுக் கொண்டது. வெளியே வந்த பிறகு கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் 5000 ரூபாய் கொடுத்து என்றார். குடும்ப கௌரவம் கருதி அதை கூட வாங்க வேண்டாம் என்று தான் நான் நினைத்தேன்.மனைவயிடம் கேட்டேன் சரி வாங்குங்கள் என்றார். தயக்கத்துடன் வந்து வாங்கிக் கொண்டேன் என்று அவர் தொடர்ந்து கூறினார். த.மு.மு.க இயக்கத்தை சார்ந்தவர்கள் கன ஜோராக வந்து பேசினார்கள். எதையும் உருப்படியாகச் செய்யவில்லை என்றார்.
இவரைப்போலவே விடுதலையாகி வெளியே வந்த பலரும் த.மு.மு.க தங்களை வைத்து அரசியல் நடத்திவிட்டு தங்களைது பெற்றோரை அழுகிறவர்களாக படம்பிடித்து அதை காட்டி வசூல் செய்து விட்டு சும்மாவிட்டு விட்டது என்று குறிப்பிடுவதாக செய்திகள் தொடர்நது வருகின்றன. எங்களை வைத்து லாபமடைந்து கொண்டனர். ஆனால் எங்களை கவனிககவில்லை என்று பலரும் வெளிப்படைகவே பேசினார்கள்.
இதற்கிடையே கைதிகள் விடுதலை ஆவதற்கு ஓரிரு தினற்களுக்கு முன்னதாக கோவையின் பிரதான பளளிவாசல்களில் அனைத்து குண்டு வெடிப்பு சிறைவாசிகள் சார்பாகவும் ஒரு பிரசுரம் விநியோகிக்கப்பட்டிருந்தது. தங்களை வைத்து ஆதாயம் தேடி கட்சியை வளர்த்துக் கொண்ட த.மு.மு.க தங்களது விடுதலையை பயன்படுத்தி லாபம் அடைய முயறச்சதித்திருப்பதாக அதில் குற்றம் சாட்டப்பட்டிரந்தது. அதனால்தானோ எனனவோ ஆயிரம் ரூபாய் நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்கு 10 ஆயிரம் நோhட்டீஸ்கள் வால்போஸ்டர்கள் அச்சடித்து விளம்பரம் செய்து விடு;ம் த.மு.மு.க.விடுதலையான கைதிகள் விசயத்தில் வாய்முடி மௌனம் காக்கிறது. அதன் தலைவர் பேசுவதாக திட்மிட்டிருந்த பத்ரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
ஆனாலும் சிலர் எந்த இயக்கம் குறித்தும், தனிப்பட்டவர்கள் குறித்தும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. அனைத்து தரப்பினரின் துஆ வும் அனுசரனையும் இப்பொது தங்களுக்கும் இன்னும் உள்ளே இருக்கிற மற்ற சகோதரர்களுக்கும் தேவை என்ற எண்ணம் அவர்களுக்கு இருப்பதை உணாந்தேன்.
கைதானவர்களில் ஓரிருவருக்குத்தான் உறவுகக்hரர்கள் உடனிருந்திரக்கிறார்கள். மற்றவர்கள் மொழி மாநிலம் கடந்து கவலைகளைப் பரிமாறிக் கொள்வதில் சகோதரர்களாகியிருக்கிறார்கள். அதனால் தான் தாங்கள் விடுதiலாயிகிவிட்டாலும் கூட இன்னும் சிறையிலிருக்கிற நண்பர்களை நினைத்து உருகுகிறார்கள்.
வெளியே வந்த விட்டதில் மகிழ்தானா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்ற பதில் சிலரிடமிருந்து வருவது அதிர்ச்சியாக இருக்கிறது. உள்ளே இருக்கிற நண்பர்களை நினைத்துக் கொள்கிறார்கள் போலும். தொண்டை கரகத்து குரல் கம்மிக் கொள்கிறது. சிரமப்பட்டு தங்களது துக்கத்தை அடக்க முயற்சி செய்கிறார்கள். ஆனாலும் முடியவில்லை. திடகாத்திரமாக அந்த இளைஞனின் அந்த நேரத்து அவஸ்த்தையை கண்ணால் பார்ப்பதற்கு சங்கடப்பட்டு அனைவரும் பார்வைய தாழத்திக் கொண்டீடாம். கைதிகளில் 42 பெர் மீது பிரிவு எண் 302 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களில் ஒரவர் மீது 23 பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியிருக்கிறது. அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கத் தருவோம் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனாலும் தங்களுடன் சிறையில் வாடிய அவர்களுக்காக அந்த சகோதரன் அழவது இதயத்தை பிழிகிற நெகிழச்சியாக இருந்தது.
கைதிகளுக்குள்Nயும் அவ்வப்போது கைகலைப்பு, முனாபிக், முர்ரதத் என்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் நடந்தது உண்டு. சிறை வாசம் என்பத அப்படித்தான் கணவன் மனைவியாக இரந்தால் கூட மூன்று நாட்களில் அவர்களுக்குள் சண்டை வந்து விடும் என்று கூறிய ஒரு நண்பர் எப்படி இரப்பினும் மிக கடுமையாக குற்றம் சுமத்தப்படடிருப்பவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக இன்னும் வழக்கை இழுத்திருக்க முடியும் என்றாலும் சாதாரண குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாவதற்கு வசதியாக தம்தரப்பு வாதத்தை அவர்கள் விட்டுவிட்டார்கள் என்ற ஒரு செய்தியை சொன்னார். அரசாங்கமோ இயக்கங்களோ விரும்பியதாலோ அல்ல கைதிகளின் ஒத்துழைப்பினாலேயே சிறை வாசம் இந்த அளவில் முடிந்தது என்று அவர் கூறினாலும் மற்ற ஒரவர் சிலர் ஏற்படுத்திய தாமதத்தினால்தான் இவ்வளவு காலம் தாங்கள் சிறையிருக்க வேணடியிரந்தது இல்லை என்றால் சற்று முன்னதாக வந்திரக்கலாம் என்றும் இந்தக் கட்டத்தில் அனைவரும் ஒத்துழைப்புக் கொடுத்தது தங்களின் விடுதலைக்கு காரணமாக அமைந்தது என்று கூறினார்.
முந்தைய ஏழவருடங்களில் சமுதாயத்தின் உதவி எதுவும் கிடைக்கவில்லை என்று சொல்லும அவர்கள் ஆரம்ப கட்த்தில் வழக்குச் செலவுக்காக சிறையில் கிடைத்த உணவுகளை விற்று பணம் சேர்த்ததாக சொல்கிறார்கள்.
ஜெயலலதா ஆட்சியின் போது அடி நின்று விட்டது ஆனாலும் தொடாந்து நெரக்கடி இரந்து வந்தது என்கிறார்கள். சோதனைகைள் அடிக்கடி நடக்கும் குர்ஆனைத்தவிர உள்ள இஸ்லாமிய புத்தகங்கள் துணிமணிகளை எடுத்துச் சென்று விடுவார்கள்.
ஊள்ளே என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்ற கௌ;விக்கு பலருடைய பதில் நேரத்திற்கு தொழுதோம் இஸ்லாமைத் தெரிந்து கொண்டோம் என்பது தான். கைதிகளில் பெரும்பாலோர் குர்ஆன் ஓதக் கற்றிருக்கிறார்கள். சிலர் குர்;ஆன் மனனம் செய்திருக்கிறார்கள்;. ஓருசிலர் 5 ஜுஸ்வு வரை மனனம் செய்துள்ளார்கள். வேறு ஒரு வழக்கு சம்பந்தமாக கோவை சிiறியிலிருக்கும் ஒரு கைதி முழவதமாக குர்ஆனை மனனம் செய்தள்ளார். படிப்பதற்கு தினமனி தினமலர் தினத்தந்தி ஆகிய நாளிதழ்கள் வழங்கப்படடுள்ளன. ஒவ்வொரு பிளாக்கிற்கும் ஒரு தொலைக்காட்சி வைக்கப்பட்டிருக்கிறது. பொதிகை சானல் அதில் தெரியுமாம். சிலர் தான் அதைப் பார்க்க செல்வார்களாம் பலர் செல்ல மாட்டார்களாம். கிரிக்கெட் வாலிபால் கேரம் போர்டு ஆகிய விளையாட்டுக்களிலும் சில சமயம் ஈடுபடுவார்களாம்.
சமநிலைச்சமுதயத்தை விரும்பிப் படிப்பார்களாம். அதன் நடுநிலைப்போக்கு அவர்களுக்கு பிடித்திருந்திரக்கிறது. ஒரிருவருக்கு மட்டும் தான் அந்தப் பத்ரிகை வந்து கொண்டிருந்தது அது தொடாந்த படிக்கப்படும் ஆகையால் எங்களுக்கு அது கிடைக்காது என்று ஒருவர் சொன்னார். மதனியயுடைய பேட்டி வெளிவந்த இதழை சிறை நிர்வாகம் தர மறுத்துவிட்டது. நீதிபதியிடத்தில் முறையிட்டு வக்கீல்கள் மூலம் அந்தப்பக்கங்களை மட்டும் கிழித்துப் பெற்றோம் என்று சொல்கிற அவர்கள் இலங்கையிலிரந்து வெளிவரகிற அல்ஹஸனாத் மீள் பார்வை ஆகிய பதரிகைகளை வெகுவாக பாராட்டுகிறார்கள்.
தொழுகைக்கான ஜமாத்துகள் ஆங்காங்கே நடந்திருக்கிறது. ஜும்ஆ தொழுகை ஜமாத்தாக வால்மேட்டிலும் 10 ம்நம்பர் பிளாக்கிலுமாக இரு இடங்களில் நடந்திருக்கிறது. வால்மேட்டிற்கும் மருத்துவமனைக்கும் அதிக தூரம் இருந்ததால் மதனீ யுடன் சிலர் மருத்துவ மனையிலேயே தொழுது கொள்வார்களாம். லுஹர்(மதியம்), அஸர் (முன்மாலை) ஆகிய இரண்டு நேரத் தொழுகைகளை வெளியில் தொழும் அவர்கள் பஜர் (அதிகாலை) மஃரிப் (பின்மாலை) இஷா (இரவு) தொழுகைகைள செல்லுக்கள் இருந்தபடியே ஜமாத்தாக தொழுவார்கள் என்பதை அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது. தனித்தினயாக அடைக்கப்டடிருந்த செல்லுக்குள்ளே எப்படி ஜமாத்தாக தொழுவீர்கள் என்று கேட்டால். முதல் செல்லில் இருப்பவர் இமாமத் செய்வார். ஆவருடைய சப்தத்தை கேட்க முடிந்தவர்கள் அவரைப் பின்பற்றித் தொழுவார்கள் என்று பதில் கிடைத்தது. பயணத் தொழுகை அச்ச நேரத் தொழுகைகளை தெரிந்த எங்களுக்கு இந்த சிறைச்சாலைத் தொழுகை அச்சரியத்தை அளித்தது. ரமலான் மிகச் சிறப்பாக இருக்கும் என்று கூறிய பலரும் சிறை நிர்வாகம் அதற்கு தகுந்த எற்பாடுகளைச் செய்து தரும் என்று கூறினர். பெருநாள் தொழுiயை ஒன்றாக மகிழ்ச்சியாக தொழுவொம் எனறு கூறிய அவர்கள் இன்ஷா அல்லாஹ் அடுத்த பெருநாளுக்குள் நாம் விடுதiலாயகி குடும்பத்தோடு மகிழ்சியாக இருப்போம் என்ற எதிர்பார்ப்பு தான் எங்களை அந்தப் பெருநாட்களில் மகிழ்சிசயாக வைத்திருந்தது என்று கூறும் போது சிறைச்சாலைப் பெருநாள் என்ற ஒரு புதிய வபை; பெருநாளின் துக்கம் கலந்த மகிழ்சியை அவர்களுடைய முகங்களில் பார்க்க முடிந்தது. அப்பொது இடை மறித்த ஒரு நண்பர் சொன்னார். இவர்களுடைய ஒவ்வொரு நாளும் மே இப்படித்தான் பஜ்ர் தொழுகைக்கு எழுந்திருக்கும் பொது இன்று விடுதiலாகிவிடுவொம் என்ற ஆசையிலும் இஷா தொழுகிற பொது நாளை விடுதலையாகி விடுவொம் என்ற எதிர்பார்ப்பிலும் கழிந்திரக்கிறது என்று சொன்னார். அது தான் உண்மை. ஓன்பது கடுமையான ஆண்டுகளை இந்த தருணத்தை எதிர்பாhத்துத்தான் அவர்கள் கடத்தியிருக்கிறார்கள்.
முதானி மூன்று முறை பயான் செய்திரக்கிறார். பிறகு செய்ய வில்லை. அவர் பலருக்கும் உதவி இருக்கிறார். அவருடன் பேசுவது ஆறதல் அளிக்கும் என்பதால் பலரும் அவருடன் பேசச் செல்வார்களாம். ஒரு முறை அஅவரை சந்திக்க சென்ற ஒருவர் அவரிடம் உங்க வயசு என்ன எனறு கேட்டிருக்கிறார். எவ்வளவு இருக்கும் நிங்களே சொல்லுங்களேன் என்று அவர் திருப்பிச் கேட்டராம். 50 என்று பதிலளித்த நண்பரிடம் அது உங்க வயசு என் வயதைச் சொல்லங்கள் என்று கேட்டாரம். நாங்கள் எல்லோரும் அந்த 40 வயதுக்காரரைச் சுற்றி வாய்விட்டுச் சிரித்தோம் என்று ஒரு இனிய நினைவை அசை போhட்டார் ஒரு நண்பர்.
கடைசி ஒரு வருடமாக சிறையில் கைதிகள் அனைவரிடமும் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளப்பட்டதாக கூறும் அவர்கள் தற்போதைய ஜெயிலர் சிறைத்துறை டி ஐ ஜி ஆகியோரை நெகிழ்ச்சியோடு நினைவு கூறுகின்றனர்.
இது வரை ஜாமீனில் விடுதiலாகிp வெளியே வந்தள்ள 91 நபர்கள் அனைவருக்கும் அவாகள் மீத சுமத்தப்பட்டள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் கூட அதற்கான அதிகபட்ச தண்டனை காலத்தைவிட அதிகமாக அவர்கள் சிiறியல் இருந்து விட்டார்கள். ஆகவே இனி அவர்கள் முறறிலமாக அவர்கள் மீதான வழக்கு முடிக்கப்படுவதற்குத்தான் காததிரக்கிறார்கள். தங்களது வழக்கை கூட சட்ட உதவி மூலமே நடத்தியுள்ள காரணத்தால் தங்களது ஏழ்மை நிலை கருதி அபாராதம் எதுவும் விதிக்க வேண்டாம் என்று அவர்கள் நீதிபதியை கேட்டுக் கொண்டள்ளார்கள். அவர்களில் 98 சதவீதம் பேர் சதவீதம் பேர் இனி ஒரு நல்ல வாழ்கையை தேடிக் கொள்ள வேண்டும் என்கிற முயற்சியில் இருக்கிறார்கள். அதற்கு அரசு உதவும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
மிக முக்கியமாக நாம் எதிர்பார்த்தது போலவே குண்டுவெடிப்பு குறித்து அவர்களில் பெரும்பாலேர் அதிருப்தியில் இருக்கிறார்கள். தங்களிடையே அது குறித்து ஒரு விவாதம் நடந்தததாக கூறுகிற அவர்கள் அப்பாவிகள் பலியானது குறித்து கடும் வேதனை தங்களுக்கும் எற்பட்டது என்று கூறுகிறார்கள். இதன்வழியாக சமதாயத்தின் சுய மரியாதை காப்பாற்றப்பட்டது என்ற தப்பான எண்ணம் மக்களில் சிலருக்கு இருந்தது போல அவர்களில் சிலருக்கும் இருந்ததாக கூறினர். சிறைபட்டு விடுதலையானவர்களின் குடும்பத்தினரின் மனோ நிலை கதம்பமாக இருக்கிறது. தங்களைச் சார்ந்தவர் நீண்ட சிறைவசத்திலிருந்து விடுதலை பெற்று விட்டதில் மகிழ்ச்சி ஒரு புரம் இருந்தாலும் எதிர்காலத்தை பற்றிய அச்சம், தேவைகளின் பயமுறுத்தல், 23 வயதாகிவிட்ட மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும்;: எப்படிச் செய்வது என்ற மலைப்பு சிலரது பெற்றோர்களுக்கு எற்பட்டுள்ள பெரிய மருத்துவச் செலவு ஆகியவை அந்த மகிழ்ச்சியில் தடைக்கற்களை எற்படத்தியுள்ளது. நான்; இத்தனை நாள் துபாயில சம்பாதித்து விட்டு வந்தவனா என்ன? முழு மகிழ்ச்சி என்று சொல்வதற்கு என்ற ஒருவர் கேட்கிறார். அவர்களில் சிலருடைய மனதோரத்தில் குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்ட வலி இருந்து கொண்டிருக்கிறது. என் மனைவி குடும்ப நிகழ்சிகளில் கலந்து கொள்வதை கூட நிறுத்திக் கொண்டு விட்டாள் என்று ஒருவர் சொன்னார். தந்தையின் அரவனைப்புக் கிடைக்காமல் வளர்ந்த குழந்தைகளின் சோகம் எத்தகையது என்பதை சிறையிலிருந்து விடுதலையான மறநாள் திருவனந்தபுரத்தில் அப்துல் நாஸர் மதானி உணர்ச்சி பொங்க பேசிக் கொண்டிருந்த போது அவருக்கு அருகில் நின்று கொண்டு அவரது இளைய மகன் குலுங்கிக்குலுங்கி அழுது கொண்டிருந்த நெஞசை உலுக்கும் காட்சியை கண்ணால் கண்டவர்களுக்கு புதிதாக விளக்கத் தேவையிருக்காது. 91 பேர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டாலும் கூட குற்றம் சாட்டப்பட்ட 166 நபர்களில் 158 குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்ப்ட்டிருப்பது சிறைக்கiதிகiளிடையே கேபத்தை எற்படுத்தியிருக்கிறது. 250 பேரை பலி கொண்ட பம்பாய் குண்டுவெடிப்பு வழக்கில் 128 பேர் குற்றவாளிகள் என்று சொல்லப்பட்டாலும் நீதிபதி கோடே 28 நபர்களை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்திருக்கிறார். கோவை தனி நிதிமன்றம் இந்தப் பெரிய வழக்கில் 8 பேரை மட்டுமே விடுவித்து விட்டு 158 நபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிரப்பதாக கூறுவதும் சாமான்ய குற்றங்களுக்கான தண்டனை கடுமையாக இருப்பதும் சிறைவாசிகளிடையேயும் பொதப்பார்வையாளர்கள் பலரிடையேயும் ஒரு வகை அதிருப்தியையும் கோபத்தையும் எற்படுத்தியிரக்கிறது. வழக்கு அவ்வாறு பின்னப்பட்டுள்ளதே காரணம் என்று சட்டம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.
இந்த வழக்கில் சிறைக் கைதிகள் அவர்களது குடும்பம் எனபதற்கு அடுத்தபடியாக கோவை நகர மக்கள் என்ன நினை;க்கிறர்ள் என்பதும் ஒரு பிரதான அம்சமே. காரணம் சிறைக் கொடுமைக்கு நிகராக இல்லாவிட்டாலும் தவறே செய்யாமல் தண்டனை பெற்றவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் அனுபவித்த வெதனைகள், இடையீறுகள் இழப்க்கள் அவமானங்கள் அதிகம்.பல்லாண்டகளாக வாழந்த மஹல்லாவை காலிசெய்து விட்டுச் சென்றவர்கள்.வீடு வியாபாத்தை விட்டு சொந்த ஊரக்கு திரும்பிச் சென்றவர்கள். ஏழைகாளகிவிட்ட பணக்காரர்கள் தொழில் இழந்தவர்கள், வியாபாரத்தில் நொடிந்தவர்கள் என தொடரும் அந்தக் கஸ்டங்களும் பெரிதுதான். அதனாலேயே கூட என்னவோ சிறைவாசிகள் விசயத்தில் உலகம் முழவதிலும் வெளிப்பட்ட ஆதங்கத்தையும் ஆர்வத்தையும் கோவை மக்களிடையே பார்க்க முடியவில்லை. தங்களது குடும்பத்தில் அல்லது தங்களுக்கு வேண்டப்படட்டவர்களில் அல்லது தங்களது மஹல்லாவில் சிறை சென்றவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நினைத்து அவர்கள் அனுபவிக்கும் வேதனை கண்டு உள்ளுக்குள் கலங்கிய போதும் அதற்கான ஆறுதலையே அதரவையோ அவர்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. சுருக்கமாகச் சொல்வதானால் கோவை நகர முஸ்லிம்கள் குற்றம் சாட்டப்பட்டவ்களுக்கான தார்மீக கொள்கைப்பூர்வ அதரவை தெரிவிக்க வில்லை எனலாம்;. ஆயினும் விடுதலையாகி வந்தவர்களை தாயுள்ளத்தோடு ஆதரிக்கத் தயாரானார்கள். கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் விரைவாக செயல்பட்டு அவர்களுக்கு உடனடிகத் தேவைப்படகிற உதவிகளச் செய்திருக்கிறது. விடுதலையானவர்களி டமிருந்து சமுதாயம் என்ன எதிர்க்கிறது என்ற கேள்விக்கு ஐக்கிய ஜமாத்தின் பொதுச் செயலாளர் அப்துல் ஜப்பார் கூறிய வாhத்தைகள் மிக முக்கியமாக கவனிக்கத்தக்கவை. கடந்த காலத்தில் நடந்தது போன்ற தவறுகள் இனி ஒருபோரும் நடக்க சிறை மீண்டவர்கள் அனுமதிக்கக் கூடாது.
அவருடைய அந்தக்கருத்து சரியானது தான் என்பதை சிறை மீண்டோர் பலரும் வலியுறுத்திச் சொன்ன போது அதில் nளிப்பட்ட நல்ல மனமாற்றம் இந்த நகரத்திற்கு நல்ல காலம் பிறந்து விட்டது என இனி ஒரு குடுகுடுப்பை அடிக்கத் தேவை இல்லை என்பதை சொல்லாமல்சொல்லிற்று.
கடைசியாக சமநிலைச்சமதாயத்தின் தீவிர வாசகராக இருந்து விடுதலை பெற்ற சகோதரர் சொன்ன ஒரு வாhத்தை இந்தக கட்டுரைய நிறைவு செய்யப் பொருத்தமானது. கலிமா சொன்ன எவரும் இனி சிறைக்கூடம் செல்லக் கூடாது.

Saturday, January 12, 2008

பாகிஸ்தானின் லால் மஸ்ஜித் விவகாரம்; தீக்குள் விரலை வைத்தால்?

பெயர்ப் பொருத்தம் என்பது சில நேரங்களில்; எதிர்பாராத வகையில் அமைந்து விடும். பாகிஸ்தானியப் பள்ளிவாசல் லால் மஸ்ஜிது விசயத்திலும் அப்படித்தான் நடந்தவிட்டது. லால் மஸ்ஜித் என்றால் சிவப்புப் பள்ளிவாசல் என்று பொருள். பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திலள்ள லால் மஸ்ஜித் வளாகம், அதன் வெளிப்புற செந்நிறச் சுவர்களாலும் செந்நிரமான உள் அலங்காரத்தினாலும் சிவப்புப் பள்ளி என்று இது வரை அழைக்கப்பட்டு வந்தது. இப்போது அங்கு பயின்ற மாணவ மாணவிகளின் ரத்தத்தால் சிவப்பாகி தன் பெயருக்கு பொருத்தமான இன்னொரு காரணத்தையும் பெற்றுவிட்டது. கடந்த ஒரு மாத காலமாக என்ன நடக்கிறது பாகிஸ்தானில் ? என்று உலகம் விசனப்பட்டு பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சிக்கு சினிமா கிளைமாக்ஸ் போல காட்சிகள் அரங்கேறி முடிந்திருக்கின்றன. முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்ட மதரஸாவிலிருந்து அக்கல்லூரின் முதன்மை பொறுப்பாளரான அப்துல் அஜீஸ் காஜியை தப்பிக்கவைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோற்றுப் போய் புர்க்கா அணிந்த நிலையில அவர் ஒரு காவலரிடம்; பிடிபட்டார். அதே போல தன்னுடைய இரத்தம் பாகிஸ்தானில் இஸ்லாமிய புரட்சிக்கான முதல் டிடியாக அமையும் அமையும் என்று பேட்டியளித்த ஒர மணிநேரத்தில் அந்நிறுவனத்தின் இரண்டாவது பொறுப்பாளரான அப்துல் ரஷீத் காஸி மதரஸாவின் ஒரு தாள்வறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார். ஒரு புறம் மூங்கில் கம்புகள், இன்னொரு புறம் கலானிஷ்கோவ் ரக இயந்திரத் துப்பாக்கிகள் என ஆயுதந்தரிப்பதில் பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்திருந்த அக்கல்லூரியின் மாணவர்கள்,மாணவிகள் சுமார் 80 பேர் கொல்லப்பட்டார்கள். அவர்களில் பலரை வெளிநாட்டக்காரர்கள் என்று பாகிஸ்தானிய அரசு செல்கிறது. பாதுகாப்பு விரர்கள் பலரும் கூட பலியாகியிரக்கின்றனர். எல்லாவற்றையும் விட அதிகம் பலியானது பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர்ரபின் இமேஜும் மதரஸா என்ற ஒரு கண்ணியமான கல்வி அமைப்பின் இமேஜும் தான்.பாகிஸ்தான் என்ற ஒரு நாடு அமைந்த பிறகு உலக இஸ்லாமிய சமதாயத்திற்கு ஒரு சின்ன நன்மையவாவது ஏற்பட்டதோ இல்லை. நிறைய தீமைகள் அவப் பெயர்கள் ஏற்பட்டதுண்டு. அந்த கணக்கில் சமீpபத்தில் சேர்ந்துள்ள முயற்சிதான் லால் மஸ்ஜித் விவகாரம்.பார்வையாளர்கள் பலருக்கும் ஏகப்பட்ட கௌ;விகள் தோன்றின. ஒரு இஸ்லாமிய நாட்டில் பள்ளிவாசலின் மீது தாக்குதலா? மதரஸா மாணவர்கள் மீது தப்பாக்கி சூடா? ஆயிரக்கணக்கான பெண்களும் படிக்கிற ஒரு கல்லூரியின் மீது ராணுவ முற்றுகையா? என்ற கேள்விகள் ஒரு புறம் என்றால் கல்லூரியல் படிக்கிற மாணவர்களின் கைகளில் துப்பாக்கியா? புர்கா அணிந்த பெண்களின் மெல்லிய கைகiளில் உருண்டு திரண்ட நீளமான முங்கில் தடிகள் எதற்கு? ஒர நாட்டின் தலைநகரின் மையப்பகுதியில் அமைந்தள்ள ஒரு பெரிய பிரபலமான கல்லூரிக்குள் ஒரு தனி ராணுவமா? அது என்ன ரானுவப்ப பயிற்சிக் கல்லூரியா? என்ற கேள்விகள் மறுபுறம் எழந்தன. இந்தக்கேள்விக்கான பதிலை பெறுவதற்குமன் பாகிஸ்தனில் நிலவும் குழப்பமான சூழு;நிலையை புரிந்த கொள்வது அவசியம். ஆந்தச் சூழ்நிலையை புரிந்த கொண்டால் இதைவிட ஆச்சரியப்படத்தகுந்த பல அதிர்ச்சிகரமான விசயங்கள் அங்கு நடக்க வாய்ப்புள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். பாகிஸ்தான் அரசியல் ரீதயாக அரு ஒன்றுபட்ட தேசமாக இருந்தாலும் அங்குள்ள நான்கு மாநிலங்களில் சில இடங்களில் முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளவெண்டும்.குறிப்பாக எல்லைப்புறத்தில் இருக்கிற பழங்குடியினத்தவர் வாழும் பகுதிகளில் அரசாங்கத்தின் அதிகாரம் என்பது கிழித்துவீசப்பட்ட காகித குப்பைகளுக்கு சமமானது. பாகிஸ்தானை அட்சி செய்த அரசியல் தலைவர்கள் எவரும் அந்த தேசத்தை முழுமையாக ஒர சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்ட தேசமாக ஆக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ராணுவ மேலாதிக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதே அவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது. அடுத்து, நாட்டை சுரண்டு வதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. இதுவெல்லாம் கைவைக்க முடியாத, கை வைத்தால் தேவையற்ற பிரச்சினைகளுக்கு ஆளாக வேண்டியது வரும் என்று அவர்கள் கருதினார்கள். மக்களால் தேந்தெடுக்கப்பட்ட அரசுகளை விட அதிக காலம் அங்கு ஆட்சியில் இருந்த ராணுவத் தளபதிகளும் இது விசயத்தில் முயற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை. அவர்களோ தங்களுக்கு இஸ்லாமியத் தலைவர் என்ற ஒரு இமேஜை உருவாக்கி கொள்வதற்காக பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய அரசாங்கம் என்ற கோஷத்தை முன்வைத்துக் கொண்டனர். அதன் மூலம் தங்களுக்கு எதரான கிளர்ச்சிகள் உருவாககாதவாறு பார்த்துக் கொண்டார்ள். காஷ்மீர் பிரச்சினையும் அவர்களுக்கு கை கொடுத்தது. இஸ்லாமிய அரசு காஷ்மீர் மீட்பு என்ற இரண்டு பிரச்சினைகளை மட்டுமே பிரதான பிரச்சினைகளாக முன்வைத்து பாகிஸ்தானின் அனைத்து அடு;சியாளர்களும் செயல்பட்டதால் ஒரு சட்டத்தின் அடிப்படையிலான தேசத்தை வலுவாக கட்டமைக்க அவர்கள் தவறிவிட்டனர். இதனால் இஸ்லாமியச் சாயம் பூசிக்கொண்ட யார் வேண்டுமானாலும் சட்டததை கையில் எடுத்துக் கொள்கிற நிகழ்வு சாதாரணமாக அங்கு நிலவுகிறது. பாகிஸ்தானில் நிலவும் ஆயுதக்கலாச்சாரமும் அங்குள்ள முக்கியப் பிரச்சினையாகும். என்னிடம் பேசிய பலரும், ஆரபுக்கல்லுரி மாணவர்கள் எப்படி ஆயுதம் வைத்திரக்கலாம்? என்ற கேள்வியை கேட்டனர். பாகிஸ்தானின் சூழ்நிலைகளை தெரிந்த எவருக்கும் அது ஆச்சரியத்தை தராது. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு தடவை துபாயின் கராமா பகுதியிலிருந்து சூக் தகப் பகுதிக்கு பஸ்ஸில் பயணம் செய்த கொண்டிருந்தேன். அப்போது என் அருகே ஒரு பாகிஸ்தானி வந்த உட்கார்ந்தார். முன்பின் அறிமகமில்லாத எனக்கு அவர் சப்தமாக அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லி வந்த உட்கார்ந்ததில் ஒரு தோழமை உணர்வு எற்பட்டது. ஆதற்குப்பிறகு பாகிஸ்தானிய நிலவரங்களைப் பற்றி நான் அவரிடம் கேட்டேன். சப்தமாகவும் பெருமையாககுவும் அவர் பேசிக் கொண்டிருந்த விசயங்களைக் கேட்டு நான் பலமுறை அதிhhச்சியடைய நேர்ந்தது. என் வீட்டிலும் துப்பாக்கி இருக்கிறது எனறு அவர் சொன்னது அதில் ஒன்று. என்னுடைய எட்டு வயது மகனுக்கு துப்பாக்கி சுடத்தெரியும், என் மனைவிக்கும் நான் துப்பாக்கி சுடும் பயிற்சியளித்தேன் என்று சொன்ன அவர், ஏதவது பிரச்சினை என்றால் டுமீல் டுமில் தான் என கைகளைக் காட்டி சிரித்தபோது எனக்கு சிரிப்ப்தா அழவதா என்று தெரியவில்லை. பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் பல ஆயுதச் சந்தைகள் உண்டு என்பது ஏற்கெனவே உலகுக்கு தெரிந்த ரகசியம்தான். எனவே பாகிஸ்தானைப் பொறுத்தவரை துப்பாக்கி என்பது சாதாரணமானது. மாணவர்கள் துப்பாக்கி வதை;திருக்கிறார்களே ராணுவத்தைப் பார்த்தச் சுடுகிறார்களே என்றெல்லாம் ஆச்சரியப்படுவதற்கு அதில் ஒன்று மில்லை. பாகிஸ்தானை இப்படியொரு ஆயதச் சந்தைகளின் குப்பையாக கூடையாக மாற்றிய பெருமை அமெரிக்காவையே சாரும். பனிப்போர் காலத்தில் ரஷ்யாவை எதிர்ப்பதற்காக ஆயதக்கலாச்சாரத்தை பாகிஸ்தானுக்குள் உருவாக்கிய கர்த்தா அமெரிக்காதான். அது தான் இப்போதுள்ள பாகிஸ்தானின் முக்கியப் பிரச்சினையே.முந்தைய பாகிஸ்தானிய அரசுகள் அமெரிக்காவின் கட்டளைப்படி அப்பகானிஸ்தானில் ரஷ்யாவை எதிர்ப்பதற்காக பாகிஸ்தானிய சிவிலியன்களைப் பயன்படத்தினார்கள். அவர்களுக்கு அனைத்துவிதமான ஆயதங்களையும் வழங்கினார்கள். முஜாதீன் புனிதப் போராளிகள் என்று சொல்லி அழகு பார்த்தார்கள். அரசாங்கத்தில் மிகுந்த செவ்வாக்குச் செலுத்த அனுமதித் தார்கள். மதரஸாக்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் ஆயதப்பயிறசியும் ராணுவப் பயற்சியும் வழங்கினார். அப்பாவிப் பொதுமக்கள் இஸ்லாத்திற்காக ஆயுதந்தரித்hர்கள். அமெரிக்கா அதில் குளிர் காய்ந்து கொண்டிருந்தது. பனிப்போர் முடிந்த பிறகு ஏற்பட்ட சூழ்நிலையில் அமெரிகாக உள்ளிட்ட மேற்குலகின் பார்வை இஸ்லாத்திற்கு எதிராகவும் முஸ்லிம்தேசங்களின் வளத்தை கொள்ளைணத்து அவர்களை சிறுமைப்படுத்தும் நோக்கில் திரும்யியபோது பாகிஸ்தானிய அரசில் வாதிகளும் அரசாங்கமும் அமெரிக்க முதலாளிகளின் விருப்பத்திற்கேற்ப நடந்து கொண்டார்கள். மக்களால் அந்த மாற்றத்திற்கு திரும்ப முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் இஸ்லாத்தின் பேரால் திரட்டப்பட்டவர்கள். அதனால் அவர்கள் இஸ்லாத்தை காப்பதாக் கூறிக் கொண்டு அமெரிக்கவிற்கு எதிராக திரும்பினார்கள். ரஷ்யாவை நோக்கியிருந்த துப்பாக்கி களை அமெரிக்காவை நோக்கியும் உள்ளூரில் அமெரிக்காவின் பிரதிநிதியாக இருந்த அரசாங்கத்தை நோக்கியும் திருப்பினார்கள். அமெரிக்க முதலாளிகளின் விருப்பம் மாறிய போது பாகிஸ்தானிய அரசாங்கம் தனது செல்லப்பிளளைகளையே பயங்கரவாதிகாள பார்க்க வேண்டிய நிர்பநதத்திற்கு உள்ளானது. செல்லப்பிள்ளைகளும் அதீத துணிச்சலுற்று ஒரு அரசாங்கத்தையே சுயமாக நடத்திக் கொள்கிற வழக்கத்திற்கு மாறினார்கள். இஸ்லாமின் அடிப்படை அம்சமான கட்டுப்பாடு என்பது கேலிக் கூத்தாக மாறியது. அது தான் லால் மஸ்ஜிதின் வரலாறு. லால் மஸ்ஜித் 1965 ல் கட்டப்பட்டது. பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆப் பாரா பகுதியில் அதிபார் அலுவலகத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்தள்ளது. அந்தப்பகுதியல்தான் முக்கிய அரசு அலவலகங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக நம்நாட்டு காவல் துறையும் மீடியாக்களும் அதிகம் பயன்படுத்துகிற அல்லது பயப்படுத்துகிற ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைமை அலுவலகக்கட்டிடத்திற்கு அருகில் லால் மஸ்ஜித் அமைந்துள்ளது. ஐ.எஸ்.ஐ அமைப்பின் ஊழுpயர்கள் பலரும் கூட அங்குதான் தொழுகைக்கு செல்வார்கள் என செய்யத் சுஹைபு ஹஸன் பி.பி.சி க்கு எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிடுகிறார்.லால் மஸ்ஜிதை ஒட்டி மதலில் ஜாமிஆ ஹப்ஸா என்கிற பெண்கள் கல்லூரியும் , ஓரிரு தொலைவில் ஜாமீஆ பரீதிய்யா என்ற ஆண்களுக்கான கல்லூரியும் இருக்கிறது. லால் மஸ்ஜித் கட்டப்பட்ட நாள் தொடாங்கி இதுவரை அரசாங்கத்தின் அதிகாரபீடத்திலிருப்பவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தது. பிரதமர்கள் ராணுவத்தளபதிகள் அதிபர்கள் ஆகியோர் இம்மஸ்ஜிதுடன் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளனர். தேவ்பந்த கொள்கையின் அடிப்படையில் பல்லாண்டுகளாக மாhக்க அடிப்படை கல்லியை போதிக்கும் இம்மையத்தில் பல்லாயிரக் கணக்காண ஆண்களும் பெண்களும் தங்கி கல்வி படித்து வநதனர். இக்கல்விநிறுவனத்தை உருவாக்கியவர் மௌலானா முஹம்மது அப்துல்லாஹ் உணர்ச்சியூட்டும் சொற்பொழிவாளராக திகழ்ந்துள்ளார். அவருக்கும் பாகிஸ்தானின் நீணட நாள் ஆட்சியாளர் ஜியாவுல் ஹக் அவர்களுக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது. ஆப்கானில் நடைபெற்ற சோவியத்துக்கு எதிரான யுதத்த்தின் போது லால் மஸ்ஜித் முக்கிய பங்கு வகித்துள்ளது. 1998 ம்ஆண்டு ஒரு துப்பாக்கிச் சூட்டில் அப்துல்லாஹ் கொல்லப்பட்ட போது அவரது மகன் அப்துல் அஜீஸ் காஜி அப்துல் ரஷீத் காஜி ஆகியோர் அந்நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். முஸ்லிகளிடையே குறிப்பாக இஸ்லாமிய ஆட்சி முறை வேண்டும் என்று கோருகிற முஸ்லிம்களிடையே அந்நிறுவனத்திற்கு அபரிமதமான செல்வாக்கு இருந்துள்ளது. பாகிஸ்தானிலள்ள செல்வாக்குமிக்க பழங்குடி இனத்தவர்களின் ஆதரவு அமோகமாக இருந்துள்ளது. நிறைய மாணவர்கள் பழங்குடிகளஜ இனத்தவர்களின் பரதேசத்தை சார்ந்தவர்கள். அரசாங்கத்தையும் அரசாங்கத்திலுள்ளளோரையும் எசச்ரிக்கும் அதன் செல்வாக்கு எந்த நீண்டு செல்லக் கூடிய என்பதற்கு, சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட பாகிஸ்தானின் சுற்றுலாத்துறை பெண் அமைச்சர் நிலோபர் பக்தியார் ராஜினா செய்தது ஒரு உதாரணம். பிரான்ஸ் நாட்டில் பாராசூட்டில் குதித்து அந்தரத்தில் மிதக்கிற விளையாட்டை கற்றுக் கொண்ட அவர், பயற்சியின் நிறைவில் அவருடைய ஆண் பயிற்சியாளரை கட்டடிப்பிடித்து நன்றி தெரிவித்த காட்சி புகை;கப் படமாக உலகெங்கும் பிரசுரமானது. ஆந்த அவமானச் செயலுக்கு நாடுமுழுவதிலிலும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. அந்த சமயததில் லால் மஸ்ஜித் வெளியிட்ட கருத்து தான் நிலோபர் பகதியார் அமைச்சர் பதவியை ராஜினா செய்வதற்கு காரணமாக இருந்தது. இதை வைத்து தநைகரிலுள்ள இவ்வளாகத்தின் செல்வாக்கை அளவிட்டுக் கொள்ளலாம் என பல பத்ரிகையாளர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். 2001 செப்டம்பர் 11 தாககுதலுக்கு பிறகு பாகிஸ்தான் அமெரிக்காவுடன் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிரான யுதத்த்தில் பங்கேற்ற போது லால் மஸ்ஜித் அதை வன்மையாக கண்டித்தது. தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் அதிபர் முஷர்ரப் பங்கேற்பதை லால் மஸஜித் நிhவாகம் கடுமையாக எதிர்த்தது. அதன்பிறகு லால் மஸ்ஜித் நிர்வாகத்திற்கும் அரசு நிர்வாகத்திற்குமிடையேயான தகராறுகள் தொடர்கதையாயின.2005 ஜுலையில் லண்டனில் நடைபெற்ற ரயில் குண்டு வெடிப்பை தொடர்ந்து அதனுடன் தொடர்புடைய ஷெஹ்ஸாத் தன்வீரக்கு லால் மஸ்ஜிதுடன் தொடர்பு பற்றி ஆராய இருப்பதாகா கூறி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் லால் மஸ்ஜிpல் சோதனை நடத்த முயற்சித்தனர். சேதனைக்கு உடன்பட மதரஸா மறுத்துவிட்டது. மீறி உள்ளே நுழைய முயன்ற காவலர்களை உள்ளே நுழையவிடாமல் ஜமிஆ ஹப்ஸாவின் மாணவிகள் தடுத்து விட்டனர்.இந்த ஆண்டு மார்ச் 27 ம் தேதி மஸ்ஜித் அருகிலுள்ள ஒரு வீட்டில் தவறு நடப்பதாக குற்றம் சாட்டிய மாணவர்னள் அவ்வீட்டை சோதனையிட்டு அதிலிருந்தவர்களை வெளியேற்றியுள்ளனர். மார்ச் 28 ம் தேதி இதபற்றி விசாரிக்க வந்த மூன்று காவலர்களை பிடித்து வைத்துள்ளனர். லால் மஸ்ஜித் பகுதியில் சி.டி. வீடியோ கடை நடத்துவோர் அந்த தொழிலை விட்டு வேறு தொழில்களை கவனிக்குமாறு மார்ச் 9 ம் தேதி லால் மஸ்ஜிதின் சார்பாக அறிவுறத்தப்பட்டுள்ளது. ஏப்ல் 6 தேதி லால் மஸ்ஜிதின் சார்பாக ஷரீஆ கோர்ட் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த ஷரீஆ கோhட்டு தான் அமைச்சர் நிலோபர் பக்தியார் விசயயத்தில் தீர்ப்பு வெளியட்டது. தொடர்நது மே மாதத்தில் சில போலீஸர் கடதத்ப்பட்டு வந்தததாக பாதுகாப்புத்துறை தகவல்கள் லால் மஸ்ஜிதின் மீத குற்றம் சாட்டுகின்றன. இந்நிலையில் ஜெனரல் பர்வேஷ் முஷர்ரபை கொலை செய்வதற்கு பல முறை முயற்சி செய்தத்தாக குற்றம் சாட்டப்படகிற ஜெய்ஷே மஹம்மது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அஸாருடன் லால் மஸ்ஜிதிற்கு ஏற்பட்ட தொடர்பு பாகிஸ்தானிய அரசுக்கு பொதும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. 2006 ஆண்டின் முதல் பகுதியிலும் 2007 லிலும் மாணவர்கள்; அரசு அதிகாரிகளுக்கு பலவகையிலம் சவாலாக இருந்துள்ளனர்.ஜுன் 23 ம் தேதி ஒரு அக்குபஞ்சர் கிளினிக்கில் நுழைந்த மாணவர்கள் அங்கிருந்த 6 சீனப் பெண்கள் ஒரு சீன ஆண் உட்பட 9 நபர்களை கடத்தியுள்ளனர். இது சீனாவுடன் தொடர்நது நல்லறவை பேணிவரும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு பெரும் மன உளைச்சலை தந்துது. இவ்வாறு சட்ட ஒழுங்கு பிரச்சினையில் லால் மஸ்ஜித் ஈடுப்டுவது அரசு நிர்வாகத்திற்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. ஆயினும் அந்நிறுவனத்தின் மீது மக்களுக்குள்ள மரியாதை மற்றும் பல மட்டத்திலும் ஊடுறுவி இருக்கிற அதனுடைய முந்iதைய செல்வாக்கு பற்றிய அச்சத்தின் காரணமாக நிர்வாகம் பெரிதாக எந்த முடிவும் எடுக்கவில்லை. ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் எற்படக்கூடிய அதிகமான உயிரிழப்புக்களை கருதியும் அரசு அமைதி காத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் இஸ்லாமாபாத் டெவலப்மெனட் கார்ப்பரேஷன் தலைநகரிலுள்ள 80 பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் சட்டத்திற்கு புறம்பாக பொது இடத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறி அவற்றை இடிக்கப் போவதாக அறிவித்தது. ஜாமிஆ ஹப்ஸாவும் அந்தப் படடியலில் இருந்தது. ஆதிலிரந்த விவகாரம் பற்றிக் கொண்டது. பள்ளிவாசல்களை இடிக்கும் தனது திட்டப்படி அரசு ஜாமிஆ ஹப்ஸாவை ஒட்டியிருக்கும் ஒரு பொது நுஸலகத்தை இடிக்கத் தொடங்கியது. லால் மஸ்ஜித் நிர்வாகம் அதை தடுக்க மேற்கொண்ட முயற்சி அலாதியானது. ஆங்கு ஜமிஆ ஹப்ஸ் மகளிர் கல்ல} ரியின் மாணவிகளை லால் மஸ்ஜித் அனுப்பிவைத்தது. ரஷ்யத் தயாரிப்பான கலானிஷ்கொவ் ரக இயந்திரத் துப்பாக்கிகளுடன் அங்கு சென்ற அம்மாணவிகள் அதை தடுத்து நிறு;த்தினர்.இடிக்க வந்தவர்களை விரட்டினர். தொடர்ந்து அரசுப் படைகள் வரமுடியாதவாறு தடுப்புக்களை ஏற்படுத்தினர். தொடர்ந்து அந்நூலகத்தை கைப்பற்றி அதில் தங்கி கொண்டு இரவு பகலாக முறை வைத்துக் கொண்டு காவல் காத்ததனர். ஆல்லாஹ்வின் மாhக்த்திற்காக உயிரை அர்ப்பணிக்கத் தயராக இருப்பதாக சபதமேற்றனர். இடிக்கப்பட்ட அனைத்து பள்ளிவாசல்களையும் கட்டித்தருவதோடு ஷரீஅத் சட்டததை அமுல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் கடும் நடவடிக்கை எடுத்தால் அது பெரிய மக்கள் பிரச்சினையாகி விடும் என்று கரதிய அரசு அவர்களிடம் பேச்சு வார்த்தைக்கு இறங்கி வந்தது. ஆந்தப் பள்ளிவாசலின் இடிக்கபட்ட சுற்றுச் சுவரை கட்டித்தருவதாக வாக்களித்தது. பள்ளிவாசலின் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் கட்டப்பட்டுக் கொண்டிருந்த போது இதுபோல அன்றைய தினம் இடிக்கபட்ட மற்ற ஆறு பள்ளிவாசல்களும் இவ்வாறு கட்டப்பட வேண்டும் என லால் மஸ்ஜஜத் நிர்வாகம் அரசாங்கத்தை கேட்டது. அரசாங்கத்தின் பதில் தாமதமானபோது மாணவர்கள் மீண்டும் நூலகவளாகத்தை கைப்பற்றினார்கள். அந்தப் பகுதியில் மற்ற சமூக நடவடிக்கையில் இறங்கினார்கள். வசசகர்கள் கவனத்தில் வைக்க வேண்டு;ம். இவை அனைத்தும் எங்கோ ஒரு தொலை தூர எல்லைப் பகுதியில் நடக்கவில்லை. தலைநகர் இஸ்லாமாபாத்தின் மையப்பகுதியல் நடந்து. அதிபர் முஷர்ரப் எச்சரிக்கை விடுத்தார். முசியவில்லை. இறுதியில பல்லிடுக்கில் மாட்டிக் கொண்டு துன்பம் தந்த கொண்nருக்கிற இந்த விசயத்திற்கு அரசாங்கம் அதன் பாணியில் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தது. லால் மஸ்ஜித் வளாகத்திற்குள் வெளிநாட்டுச் சக்திகள் இருந்து கொண்டு பாகிஸதானுக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும், மஸ்ஜித் வளாகத்திற்குள் சுரங்கம் ஒன்று இருப்பதாகவும் செய்திகளை வெளியிட்டு கல்லூhவளாகத்தை முழமையாக சோதனையிடுவதற்கு வசதாக அனைவரம் வெளியேறுமாறு கேட்டுக் கொண்டது.அதை முற்றிலுமாக நிராகரித்த லால் மஸ்ஜித் நிர்வாகம் , கல்லூரிக்குள் சுரங்கம் எதுவும் இல்லை என்றும் தங்களில் எவரும் தீவிரவாதிகள் இல்லை என்றும் வெளிநாட்டுத் தீவிரவாதிகள் எவரும் வளாகத்திற்குள் இல்லை என்றும் அமெரிக்காவின் அடாவடித்தனத்தையும் அதை ஆதரிக்கும் அரசாங்கத்தின் போக்கையுமே தாங்கள் எதிர்ப்பதாக கூறியது. ஜுலை மூன்றாம் தேதி அரசின் சாதாரண முற்றுகை நடவடிக்கை தொடங்கியது. மாணவர்கள் பெட்ரோல் குண்டுகளையும் கற்களையும் துணை ராணுவப்படையை நோக்கி வீசினர். லூல் மஸ்ஜிதுக்கு அரகிலிருந்த ஒர அரசு அலுவலகத்திற்கு தீ வைத்தனர். அரசின் முற்றுகை இறுகத் தொடங்கியது. சரணடைபவர்களுக்கு மன்னிப்பும் தகுந்த பாதுகாப்பும் தரப்படும் என்று ஒலி பெருக்கி மூலம் அறிவப்புச் செய்யப்பட்டது. சமாh 1200 பேர் சரணடைந்தனர். அந்தச் சந்தர்பத்தில் தான் புர்கா அணிந்து வெளியேற முயன்ற அப்தல் அஜீஸ் காஜி கைது செய்யப்பட்டார். உள்ளெ இன்னும் பலர் இருந்தனர். அரசு மறுபுரம் அப்துல் ரஷீத் காஜியுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. ஜுலை ஏழாம் தேதி பிரதமர் சஜ்ஜாத் ஹுசைன் தலைமையில், மௌலானா முப்தீ ரபீ உஸ்மானி, மௌலானா சலீமுல்லா கான், மெலானா ஹனீப் ஜலக்தரீ உள்ளிட்ட 13 பேர் கொண்ட ஒரு குழ அமைக்கப்பட்டது. மொபைல் போன் மற்றும் லவுட்ஸ்பீக்கர் வழியாக இப்பேச்சுவாhத்தை நடந்தது. ஏனெனில் காஸி அப்துர் ரஷீத்வெளியே வர சம்மதிக்கவில்லை. உலமாக்கள் உள்ளே செல்ல அரசாங்கம் அனுமதிக்கவில்லை. காஸி அப்துர் ரஷீத் கேட்டுக் கொண்டதற்கிணஙக ஒரு மொபைல் போனை அரசு அலுவலர் ஒருவர் கேட்டிற்கு வெளியயே நின்று பொண்டு கொடுக்க உள்ளேயிருந்து உடல்முழவதையும் போர்த்தியிருந்த ஒருவர் அதை பெற்றுச் சென்றார். ஆந்த மொபைல் போன் வழியாக இக்குழு அப்துல் ரஷீத் காஜி ஆயதங்களை களைந்து விட்டு சரணடந்தால் அவரை வீட்டுக்காவலில் வைப்பதாகவும், அவர் சட்டத்தின் தீர்பபை எதிர் கொள்ளட்டும் என்று கூறியது. இதற்கு பஞ்சாபில் உள்ள தன்னுடைய சொந்த ஊரில் வீட்டுக்காவலில் இருக்க ரஷீத் காஜி சம்மத்தித்தார். ஆயினும் அல்லாஹ்வின் நாட்டம் அந்தக் கடைசி நிமிடத்தில் ஒரு மாற்றம் நிகழந்தது. தன்னை வீட்டக் காவலில் வைக்க ஒத்துக் கொண்ட அப்துல் ரஷீத் காஜி தனடனுடன் உள்ள வெளிநாட்டுக்காரர்களை பத்திரமான அனுப்பிவைக்க வெண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். ஆதை அரசு எற்றுக் கொள்ளவில்லை. தொடர்நது பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது. ஜுலை 9 ம் தேதி மாலை ஏழமணிக்குத் தொடங்கி 11 மணிநேரங்களுக் தொடாந்த பேச்சு வாhத்தi தோல்வியில் முடிந்தது. கடைசி கட்ட பேச்சு வாhத்தைகள் செல்பொனில் நடந்து கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் அப்துல் ரஷீத் காஜி தனது செல்போனை ஆப் செய்து விட்டார் என்று செய்திகள் தெரிவிக்கினறன. இறுதியாக 15 நிமடங்கள் வாய்பளிக்பட்டது. அதன் பிறகு ஜுலை 10 ம் தேதி அதிகாலை 3.45 மணியளவில் லால் மஸ்ஜிதை நோக்கி நகருமாறு ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டது. ஆபரேஷன் சைலனஸ் என்று பெயரிடப்பட்ட நடவடிக்கை தொடங்கியது. இன்று போல் நான் என்றும் கவலையுற்றதில்லை என்று கூறியபடி தன்னுடய காருக்குள் எறிய பிரதமர் சஜ்ஜாத் ஹுசைன் தொடந்து சொன்னார். நாங்கள் இதை அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டு விடுகிறோம். ஆவர் அப்படிச் சொன்ன சிறிது நேரத்திற்குப் பிறகு எங்களது இரத்தம் இந்த பூமியில் இஸ்லாமியப் புரட்சியை தொடங்கி வைக்கப் போகிறது என்று சொன்ன நாற்பத்தி ஆறே வயதான அப்துல் ரஷீத் காஜி மதரஸா வளாகத்தில் நடந்த தப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார். பலியானோர்களின் மொத்த எண்ணிக்கை என்பது தொன்னூறு என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும் அந்த எண்ணிக்கை உறுதியற்றது என்று சொல்கிற அனைத்து செய்தியதளாகளும் பல நூறு பேர் பலியாகி இருக்கக் கூடும் என்கின்றனர். லால் மஸ்ஜித் வளாகம் முற்றிலுமாக சேதப்படுத்தப் பட்டவிட்டது. அதன் இடிபாட்களுக்கிடையே கல்வி கற்க வந்து காணாமல் தங்களது மகன்களின் அல்லது மகள்களின் அடையாளம் ஏதாவது கிடைக்கிறதா என்று பெற்றோர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொது அவர்கள் அழ வேண்டுமல்லவா ! அழவில்லை. பலர் அப்தல் ரஷீத் காஜிக்காக பிராhத்தனை செய்கிறார். சிலர் தங்களது பிள்ளை இறந்த பொயிரந்தாலும் மகிழ்தான் கிடைத்தாலும் மகிழ்சிதான் என்கிறார்கள். இது தான் இந்நிகழச்சியின் ஆண்டி கிளைமாக்ஸாகிவிட்டது. ஹபிப் ரஹ்மான் பி.பி.சிக.கு அளித்த பேட்டியில் நான் பரீதிய்யா திறந்தவுடன் அதில் மீண்டும் சேருவேன். அதுவரை அப்தல் ரஷீத் காஜிக்காக குர்ஆன் ஓதிக்கொண்டெ யிருப்பேன் என்று கூறுகிறார். மகளை காணாமல் தேடும் ஆஸியா பீவியின் மகள் ஆறு வயதிலிருந்து ஜாமிஆ ஹப்ஸாவில் படித்தவர் லால் மஸ்ஜிதின் மீது ராணுவத்தாக்குதல் நடந்த அதே ஜுலை 10 ம் தேதி அவருக்கு பட்டம் வழங்கப்படவதாக இருந்தது. இப்போது அந்த மகளைத்தான் அவர் தேடுகிறார். ஆந்தக் காட்சியை பார்ப்பதற்கும் அவரது மகளின் கதையை கேட்பதற்கும் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ஆனால் அந்தத்தாயின் வார்த்தகைளில் கவலையில்லை. உறுதி தொனிக்கிறது. அவர் சொல்கிறார் அகர் மேரீ பேட்டீ ஜிந்தா நஹீ பஜீ தோ பீ மேரீ குஸ் நசீபீ ஹோகீ, கே ஓ அல்லாஹ்கீ ராஹ்மே ஷஹீத் ஹோகயீ ஹே!.அவர் அகர் ஓ பஜகயீதோபீ குஸ் நஸீபீ ஹோகீ கே ஓ காஸி பன்கர் லவ்டீஹே! (பி.பி.சி. இணைய தளம் உருது)இந்த வார்த்தைகளை மொழி பெயாப்பதற்கு கூட நடுக்கம் ஏற்படுகிறது. ஏனது மகள் இறந்த விட்டாளும் மகிழ்ச்pதான் ஏனெனில் அவள் உயிர்த்தியாகம் செய்திருக்கிறாள். அவள் திரும்பி வந்தாலும் மகிழச்சிதான் ஏனெனில் அவள் காஸி போராளியாக திரும்பி வருகிறாள். ஜெனரல் பர்வேஸ் முஷர்ரப் மிகுந்த தயக்கத்திற்குப்பிறகு மேற் கொண்ட இந்த நடவடிக்கை அவரது சுய விருப்பத்தின் பால் பட்டதா? அல்லது அவரது எஜமானர்களை திருப்திப் படுத்துவதற்காக செய்ய்பட்டதா? அல்லது நாட்டு மக்களை ஒரு நாகரீக வழிக்கு கொண்டு வந்தாக வேண்டும் என்ற சீர்திருத்த உந்ததுலினால் இது ஏற்பட்டதா என்பதை இப்பொதைக்கு தீர்மாணிக்க இயலாது. நம்முடைய நிலை இதில் எப்பக்கம்? என்பதை யோசிக்கவே மிக சிக்கலாக இருக்கிறது. ஆனால் மிக ஆழமாக யோசிக்க வேண்டிய விசயம் இது. சமுதாயத்தின் இன்றைய மதிப்பீடுகளை மறு ஆயவ்வுக்கு உட்படுத்தி இஸ்லாத்தின் எதார்த்தங்களை மிக அழுத்தமாக போதிக்கத் தகுந்த ஒரு வசீகரமான முஜத்தித் (மறுமலர்ச்சி தலைவர்) வந்தாக வேண்டிய அவசியத்தேவையை இது உணர்த்தகிறது. ஆப்போதூதான் இஸ்லாம் என்ற பெயரைச் சொல்லிக் கொண்டு இப்படி ஒரு தேசம் இருப்பது முஸ்லிம் உலகத்துக்கு நன்மையாக அமையுமா? என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும்.தற்போதைக்கு நடக்கிற நிகழ்வுகளைப் பார்க்கிற போது ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. முஷர்ரப் கடைசியில் துணிந்து நெருப்பொடு விளையாடியிக்கிறார். எரியப் போவது முஷர்ரபா? அல்லது பாகிஸ்தானா என்று பொறுத்திருந்து தான் பாhக்க வேண்டும். அது வரை முட்டாள்தனமான அழிவிலிருந்தும் மூhக்த்தனமான அழிவிலிருந்து அல்லாஹ் பாகிஸ்தானை காப்பாற்றட்டும் என நாம் பிரார்த்ததக் கொண்டிருப்போம்.

பாவத்தின் சம்பளம் -

11 கோடி ரோமன் கத்தோலிக்கர்களின் பாவங்களுக்கு மன்னிப்பு வழங்குகிற அதிகாரத்தில் இருக்கிற போப்பரசர் போப் 16 பெனடிக்ட்;, தானே இப்படி மன்னிப்பு கேட்கிற நிலைக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்று எதிர்பாhத்திருப்பாரா என்பது தெரியவிலலை. ஏதிர்பாhத்தது போல் அவர் மன்னிப்பு கேட்டவிட்டார்தான். ஆனால் டீப்லீ சாரி என்று அவர் சொன்னவுடன் பிரச்சினையின் ஆழம் தூர்ந்து போய்விட்டதாக அவரோ மற்றவர்களோ நினைத்தால் அது தவறானது.
அரசியல் லாப நோக்கங்களுக்காக திட்மிட்டு உருவாக்கபட்ட வாடிகன் தேசத்தின் அதிபரர் என்ற பெரும் பொருப்பும் வகிக்கிற போப் 16 ம் பெனடிக்ட் கடந்த 12.09.2006 செவ்வாய்கிழமை ஜெர்மனியிலுள்ள ரெகனஸ்பர்க் பல்கலைகழகத்தில் ஆற்றிய உரை உலகில் வியப்பையும் சர்ச்சசையும் ஏற்படுத்தியிரக்கிறது. முஸ்லிம் உலகத்தில் கொந்தளிப்பை உண்ட பண்ணியது. அதன் விளைவாக 16 ம் தேதி அவர் மன்னிப்பு கேட்டார்.
போப்பின் மன்னிப்பு கோரல் உள்ளார்த்தமானது என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் (சி என.ஏன.21.9.06) வழங்கினாலும் கூட புஷ் தலைமையேற்று நடத்துகிற றயச ழn ளைடயஅ முகாமில் போப்பும் கைகோhத்துக் கொண்டு விட்டாரோ என்ற தோற்றம் தான் உலக மக்களின் உள்ளத்தில் மேலோங்கியது. இதனால் சமீப காலங்களாக போhப்புகள் அணிந்து வந்த சமாதான தூதர்கள்; என்ற முகமூடி கிழிந்துவிட்டது. வலிந்து புனையப்பட்ட புனிதர்கள் என்ற இமேஜும் பலத்த அடிவாங்கியிருக்கிறது. போப் இரண்டாம் ஜான்பாலும் அவரக்கு முன்னிருந்த ஓரிவர் உருவக்கி வைத்திருந்த ஒரு மாயக்கோட்டையை 16 ம் பெனடிக்கடடின் பேச்சு தகர்த்துவிட்டது. போப்புகளின் நிஜ முகம் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
போப் 16 ம் பெனடிக்ட் அவருடயை சொந்த நாடான ஜெர்மனிக்கு பயணம் செய்தபோது அங்குள்ள ரெகனஸ்பெர்க் பல்கலைகழகத்தில் ஒரு உரை நிகழ்த்தினார். நம்பிக்கைகும் பகுத்தறிவுக்கும் இடையே உள்ள தொடர்பு என்பது அவரது உரையின் தலைப்பு. போப் தனது உரையில் கிருத்துவ சமயம் பகுத்தறிவின் மீது நம்பிக்கை கொண்ட சமயம் என்று கூறினார்.
ஒரு விஞ்ஞான உண்மையை கண்டறிந்து சொன்னதற்காக கலீலீயோவுக்கு திருச்சபை மரணதண்டனை விதித்த செய்தி அவரது நினைவுக்கு வரவிலலையோ என்னவோ அது பற்றியும் அது போன்ற பல புதிய கண்டுபிடிப்புகளுக்கும் முட்டாள்தனமான காரணங்களைச் சொல்லி திருச்சபை எதிர்ப்புத் தரிவித்த விசயங்கள் குறித்தும் அவர் வாய் திறக்கவிலலை.
அது போலவே இஸ்லாத்தை பற்றியும் அவா பேசாமல் இருந்திருக்கலாம். விதி அவரை விட வில்லை. முஸ்லிம்களின் இன்றைய பலவீனமான சூழ்நிலையை அவர் கண்முன்னே காட்டி அவரை வம்பில் இழுத்து விட்டது. கிருத்துவத்தை போல இஸ்லாம் பகுத்தறிவின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்று முதல் குற்றாச்சாடடை முன் வைத்தார். தொடர்ந்து சாத்தான் அந்த சன்னியாசியின் நாவை பிடித்துக் கொண்டு நரகத்திற்கு இழுத்துச் சென்றான். 14 ம் நூற்றாண்டின் நாசகரா சகத்தியாக இருந்த ஒரு பைசாந்திய அரசனின் கூற்றை மேற்கோளாக காட்டினார். இது அவருக்குள்ளிருந்த சாத்தான் செய்த வேலையே வேறில்லை.
வாடிகனிலுள்ள மற்ற பாதிரிகள் கூட இந்த மேற்கோள் காட்டிய இடத்தில் போப் தனது பேச்சின் கருத்தோட்டத்திலிருந்து விலகிச் சென்றுவிட்டதாக குறிப்பிடுகிறார்கள். ராய்டட்ர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் வாடிகனிலுள்ள சர்ச்சின் அதிகார பீடத்திலுந்கும் ஒருவா இது அரிதாக ஏற்பட்டு விட்ட சருகுதல் என்று கூறியிருக்கிறார். தனது வார்ததைகளில் அதிக பட்ச எச்சரிகை;கயை கையாள வேண்டியவர் தனது பேச்சினால் என்ன விளைவு ஏற்படும் என்று எண்ணிப்பார்க்காகததது எவரையுமு; ஆச்சரியப்படுத்தக் கூடியது என்றும் அவர் கூறியுள்ள்ளர்.
நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன் என்று கூறும் வாடிகனின் ஒரு அரச தந்திரி ஒருவர் போப் தானே வலியப் போய் ஒரு பள்ளத்தில் விழுந்திரக்கிறார் என்று கூறியுள்ளார்.
ஜெர்மனியில் இதற்கு முன்னர் கிருத்துவ தத்துவ இயல் பேராசியராக பணியாற்றி போப் தன்னுடைய கடந்த காலத்தையும் நிகழ் காலத்ததையுமு; கலந்ததில் தவறு செய்து விட்டார் என்றும் கூட சர்ச் வட்டாரம் கருத்து தெரிவித்ததாக ராய்ட்டர் நிறுவனத்தின் செய்திக குறிப்பு தெரிவி;கிறது.
ஜேர்மனியில் படித்த் அவர் இன்னும் ஒரு போப்பாக தன்னை உணரத் தொடங்கவில்லை.அது தான் பிரச்சினை என்று சொன்னார் அமெரிகாகாவின் ஜர்ஜ்டவுன் யுனிவர்சியிடியின் போதகர் தாமஸ் ஜே. ரீஸ் 'ஐ வாiமெ hளை pசழடிடநஅ ளை வாயவ hந'ள ய புநசஅயn யஉயனநஅiஉ றாழ hயளn'வ சநயடணைநன லநவ hந'ள ய pழிநஇ' ளயனை சுநஎ. வுhழஅயள து. சுநநளந ழக வாந றுழழனளவழஉம வுhநழடழபiஉயட ஊநவெநச யவ புநழசபநவழறn ருniஎநசளவைல.
போப் மேற்கோளுக்கு எடுத்துக் கொண்ட 14 ம் நூற்றாண்டை பைசாந்திய மன்னர் இரண்டாம் இமானுவேல் ஒரு போர் வெறியன். தொடர்ந்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மிக மோசமான வார்தததைகளில் தூசிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தவன். 1394 க்கும் 1402 க்கும் இடைப்பட்ட காலத்தில் கான்ஸ்டாண்டி நோபிளோடு அவன் யுத்தம் செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஓரு பாரசிக பயணியுடன் அவன் செய்த வாதங்களை அவனது புத்தகத்தில் ஏழாவது உரையாடல் என்ற தலைப்பில் அவன் எழுதியிருக்கிறாhன். அவன் ஒரு புத்தகம் எழுதினான் என்ற ஒNரு காரணத்திற்காக போப் 16 ம் பெனடிக் தனது உரையில் அவனை ஒரு அறிஞர் என்று குறிப்பட்டார்.
நிகழ்காலத்தின் சூழ்நிலைகளை கவனத்தில் கொள்ளாமல் போப் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு மிக்க பண்டைய பைசாந்திய அரசனோடு தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். இனம் இனத்தோடு சேர்ந்திரக்கிறது . அவ்வளவே!
வாடிகனுகும் முஸ்லிம் உலகுக்கும் நல்லிணக்கம் நிலவி வரகிற இன்றைய சூழ்நிலையில் முன்னர் எப்போதோ ஒரு யுத்த காலத்தில் ஒரு அரசன் பேசிய பேச்iசை மேற்கோளாக எடுத்துக் கூறயயது தகுமா என்று அப்பாவித்தனமாக சிலர் கேட்கிறார்கள் அவர்கள் தற்போதையோ போப் 16 ம் பெனடிக்டின் கடந்த காலத்திதை பற்றி அறியாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
போப் 16 ம் பெனடிக்டின் கடந்த காலம் இஸ்லாமிய வெறுப்புணர்வு கொண்டதாகவும் முஸ்லிம்களின் மீது ஆத்திரம் கொண்டதகவும் இருந்திருக்கிறது. அவர் ஜொமனியில் இருக்கும் போது ஜெர்மனியிலுள்ள முஸ்லிம் இளைஞர்களை காட்டுமராண்டிகள் என வர்ணித்திருக்கிறார். வாடிகனில் கர்டினலாக இருக்கும் போதும் அவரிடம் முஸ்லிம் எதிர்புணர்வு மேலோங்கியிருந்து. அதன் விளைவாக துருக்கி ஐரோப்பிய யூனியனில் இணைவதை அவர் எதிர்த்தாh. 1996 அவர் எழுதிய ஒரு கட்டுரையில் நவீன நாகரீக வாழ்கை முறை யை சுவீகரித்துக் கொள்வதில் இஸ்லாம் சிரமப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இவரக்கு முன்னர் நீண்ட காலம் போப்பாக இருந்த இரண்டாம் ஜான் பால் சமய நல்லுறவுக்கு அரும்பாடு பட்டார்.மற்ற மதங்களை விளங்கிக் கொள்ள முயற்சி செய்தார். இராக் மற்றும் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போரை எதிர்த்தார். அப்பாவி மக்களை கொல்லவதற்கு பதிலாக பேச்சு வார்த்தையின் வழிகளை கையாளுமாறு அவர் புஷ்ஷை கேட்டுக் கொண்டார்.அவர் ஒரு முறை சிரியாவுக்கு பயணம் சென்ற போது அங்குள்ள பள்ளிவாசலுக்குள் சென்று பார்வையிட்டார். முஸ்லிம்களின் பள்ளி வாசலுக்கு முதன் முதலாக நுழைந்த நுழைந்த போப் என்ற பெயர் பெற்ற போப் ஜான் பால் முஸ்லிம் உலகத்துடன் நெருக்கத்தை வளர்த்துக் கொள்வதற்காக ஏற்பாடு செய்த சர்வதேச சமயங்களுக்கிடையேயான உரையாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆந்த உரரையாடலுக்கு ஏற்பாடு செய்ததது குறித்து அப்தேயை வாடிகன் கர்டினலாக இருந்த போப் பெனடிக்ட அதிருப்தி கொண்டிருந்தார் என்பதும் இப்பொது கசிய வரகிற செய்திகளாகும்.
புல வகைகiளிம் 14 ம் நூற்றாண்டின் பைசாந்திய மன்னனின் மனோபாவத்தோடு 16 ம் பெனடிக்டின் மனோபாவமும் ஒத்தப்போனது. ஆதன் விளைவாகவே ஆந்தப் பதினான்காம் நூற்றாண்டின் பழைழய வார்த்தைகளைத்தானட் போப் இப்போது தூசு தட்டடி எடுத்து வந்து தேவையற்ற ஒரு அலர்ஜியை சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிறார்.
இம்மானுவேலின் வார்ததைகளi எடுத்துக் கூறுவதற்கு மன்பாக நான் மேற்கோள் காட்டுகிறேன் நான் மேற்கோள்தான் காட்டுகிறேன் என்று இரண்டு தடவை கூறினாhர். ஆந்த தடுமாற்றமே இந்தச் செய்தி எத்தகைய பாதிப்பை உண்டு பணணக்கூடியது என்று அவர் தெரிந்திரக்கிறார் என்பதை புலப்படத்தி விடுகிறது. வுhட்டிகன் அதிகாரி சொல்வது போல இது ரேர் சிலிப் அரிதான சருகுதல் அல்ல. இது முஸ்லிம்களை அரிக்கும் சருகுதல் என்று அவரக்கு தெரிந்தே இருக்கிறது. போப்பின் தங்க் சிலிப்பாகவில்லை. அவரது தின்கிங்கே சிலிப்பாகியிரக்கிறது. அவரது உள்மனதின் வேட்கையை தீர்துக் கொள்ள இம்மானுவேலின் வார்த்தைகள் அவருக்கு துணை செய்திருக்கின்றன.
இம்மானுவேல் பாரசிகப் பயணியுடன் வாதம் செய்த போது முஹம்மது இந்த உலகிற்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. வன்முறையைiயும் மனிதாபிமானம் அற்ற நடவடிக்கை களiயுமே அவர் உலகிற்கு விட்டுச் சென்றார் அவரது உத்தரவுகள் வாட்களின் வழியாக பரப்பபட்டன என்று கூறியுள்ளான்.
இந்த மேற்கோளை உள்ளடக்கிய போப்பின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு உலகின் அனைத்து பாகததிலும் எழுந்தது. இது பொறுப்பற்ற பேச்சு என்பது அனைத்து மக்களின் முதன்மையான விமர்சனமாக இருந்தது. போப்பை கண்டிக்கத் தயங்கிய கிருத்துவ தலைவர்கள் கூட இது தேவையற்ற மேற்கோள் என்று கூறினர். அமெரிக்காவின் பல இடங்களிலும் கிருத்துவர்கள் முஸ்லிம்களை சந்தித்து போப்பின் பேச்சு தங்களுக்கு உடன்பாடானது அல்ல என்று தெரிவித்துள்ளனர். இது விசயமாக தனது கருததை தெரிவிப்பதற்காக லாஸ் ஏஞ்சல்ஸின் ஆர்ச் பிஷப் ரோஜர் மோனி தென் கலிபோர்னியாவில் உள்ள 70 பள்ளிவாசல்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார் என்று பர்பரா பர்குஸன் அரப் நியூஸில் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்கள் விரைந்து போப்பின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தனர். ஜெர்மனிய இஸ்லரிய மையத்தின் தலைவர் அய்மன் மாஜிக் மிகக் கடுமையாக போப்பை சாடினார். ரத்தக்கறை படிந்த வரலாறுகளை கொண்ட கிருத்துவ தேவாயத்திற்கு மற்ற சமயங்களை நோக்கி விரல் நீட்டி பேசுகிற தகுதியில்லை என்று அவர் சொன்னார். இரண்டு நூற்றாண்டுகளுக்கு நீடித்த மிகக் கொடுரமான சிலுவைப் போர்களுக்கு தலைமை தாங்கியதும் அதை தூண்விட்டதும் போப்கள் அல்லவா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
உலகிலள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் உடனடியாக போப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தின. இந்த சமயத்தில் ஜித்தாவில் கூடியிருந்த சுவூதி இராக் ஜோர்டான் பஹ்ரைன் சிரியா எகிப்து குவைத் ஆகிய ஏழு அரபு நாடுகள் மற்றும் இரான் துரக்கி உள்ளிட்ட நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் கூட்டமும் போப்பின் அறிக்கையை கண்டித்து அவர் தெளிவான மன்னிப்பை கோர வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. லெபனானில் உள்ள சன்னி இஸ்லாமிய நீதிமன்றத்தின் தலைவர், துரக்கியின் சமய விவாகரங்களுக்குhன பொறுப்பதிகாரி அகியோர் அருவருக்கத்தக் வெறுப்பூட்டுகிற வார்ததைகளi இஸ்லாமின் மீது பிரயோகிதத்தறகாக போப் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரினர். கத்தார் பல்கலைகழகத்தின் இஸ்லாமிய தத்தத்தவத் துறை தலைவர் மஹம்மது இயாஸ் போப் கிள்ப்பிய பிரச்சினையில் திறந்த விவாததத்திற்கு தான் தயாராக இருப்பதாக அறைகூவல் விடுத்தார்.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் நடவடிக்கை இது விசயத்தில் விரைவாகவும் தெளிவாகவும் இருந்தது. பாராளுமன்றம் போப்பின பேச்சை கண்டித்தது. அதன் வெளியுறவுத்துறை பேச்சாளர் தஸ்னீம் அஸ்லம் மிகச் சிறப்பாக போப்புக்கு பதில் கொடுத்தார். போப்பின் இந்தப் பெச்சு இஸ்லாமை பற்றி அடிப்படை அறிவு இல்லாமையை காட்டுகிறது என்று கூறிய அவர், அறியவில் கலைகள் அனைத்துககும் முஸ்லிம்கள்தான் அடித்தளமிட்டனர். உலகத்தை அறியமைiயும் இருளும் சூழ்ந்திருந்த போது முஸ்லிம்கள் தான் வெளிச்ச விளக்ககுகளை ஏற்றினர் என்று அவர் கூறுpனார். இஸ்லாம் இயற்கையான அறிவார்த்தமான மனிதாபிமானம் மிகுந்த மார்க்கம். அது தன்னுடய தொண்டர்களை இப்பண்புகளின் அடிப்படையில் வாழும்படி தான் பணிக்கிறது எனவே திடீரென முளைக்கிற எவரும் இஸ்லாம் பகுத்தறிவை ஏற்கவில்லை என்று கூறுவது கண்டிக்ககத்தக்கது என்றும் அவர் கூறினார். இத்தாலியிலுள்ள பாகிஸ்தான் பள்ளிக்கூடத்தின் முதல்வர் இஜாஸ் அஹ்மது கிரேக்க தத்தவங்களை முதன் முதலில் மொழி பெயாத்தவர்கள் அதை ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் முஸ்லிம்கள தான் என்பதை நினைவு கூர்ந்தார்.
இஸ்லாம் பற்றி போர்ப்பின் கருத்துக்குள் அருவருப்பானவை. கவலை அளிப்பவை என்று கூறிய துருக்கியின் பிரததமர் ரஜப் தைய்யிப், போப் தனது பேச்சை திரும்பப் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். வருகிற நவம்பரில் துருக்கியில் போப் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறார். அதற்குள்ளாக போப் தனது கருத்தை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்று விட வேண்டும் என்று எதிர்பார்கிற துருக்கிய அரசாங்கம் போப்பின் பயணத்தை ரத்து செய்யவோ தாமதப்படுத்தவோ கோராது என்றும் தெரிகிறது. ஆனால் முஸ்லிம்கள் முழமையாக சமாதானப் படுத்தாததவரை பழைய மரியாதையோடு போப் துருக்கிக்கு செல்ல முடியாது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
ஊலகம் முழவதிலும் வாழ்கிற முஸ்லிம்கள் இஸ்லாத்தைதையோ இறைத்த}துதரையோ இழிவுபடுத்தப்படுத்துவதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கூறிய 24 அமைப்புக்ள அங்கம் சகிக்கிற காஷ்மீர் மாநாட்டு அமைப்பு போப்பனி; பேச்சு இஸ்லாத்தின் மீதான புதிய வகை சிலுபை; போர் தாக்குதல்களாகும் என்று கூறியுள்ளது.
பாலஸ்தீனீன் சில பகுதிகளில் சர்ச்சுகள் தாக்கப்பட்டன. இராக்கின் பஸரா ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகளிலும் அமெரிக்கா மற்றும் ஜொமனியின் கொடிகள் தீக்கிரையாககப்பட்டன. புல இடங்களில் போப்பின உருவ பொம்மை தீ வைத்து கொளுத்தப்பட்டது.
சடுதியில் நிகழ்ந்தேறிய இந்த எதிப்புகளால் போப் 16 ம் பெனடிக்ட் சனிக்கிழமை அவரது கோடை வாசஸ்தலமான ரோமிற்கு அருகிலள்ள ஒரு மாளிகையில் தனது பக்தர்களிடையே பேசும் போது டீல்லி சாரி என்று கூறினார். என்னுடைய வார்த்தைகளால் நிகழ்ச்து விட்ட சரமங்களுக்கு தான் மிகவும் வருந்தவதாக கூறிய அவர் தான் மேற்கோளாக எடுத்துக் காட்டிய வார்த்ததகள் தனது சொந்தக் கரத்தை பிரதிபலிப்பைவ அல்ல என்றும் கூறினார்.முஸ்லிம்கள் தன்னுடைய வார்த்தகள் தவறாக பரிந்து கொண்டனர் என்றும் கூறினார்.
போப்பின் இந்தப் மன்னிப்பு பெரிதாக பேசப்படுகிறது. போப் விரைவாக சாரி கேட்டுடுவிட்டதில் சிலர் சமாதானம் அடைந்தாலும் அந்த சந்தர்பத்திலும் அவர் உதிர்த்த வாசகங்களில் ஜார்ஜ் புஷ் குறிப்பிடுவத போன்ற உள்ளாத்தமான மன்னிபு;பு இருப்பதாக பெருவாரியான முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.ஐNhப்பிய ஊடகங்களே கூட போப் முழமையான வருத்தம் தெரிவித்துவிட்டதாக நினைக்கவில்லை. சந்தேத்திற்கிடமற்ற வகையில் மன்னிப்பு கோர வேண்டும் என்று போப் கோரப்பட்டார். ஆனால் இதுவரை அவர் தனது வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கங்களுக்கான வருத்தத்தை மட்;டுமே தெரிவித்துள்ளார் ஏன பி.பி.சி.யின் இனையதளம் கருத்து வெளியிட்டுள்ளது.
16 ம் தேதி தனது பேச்சினால் ஏற்பட்ட விளைவுகளுக்காக அதிகம் வருந்து வதாக போப் குறிப்பிட்டார். இந்த வார்த்தைகள் வருத்தம் தெரிவிக்கும் சரியான வழிதானா என்ற ஒரு வாக்கெப்பை சி என் என் தெலைக்காட்சியின் இணைய தளம் நடத்தியது. 22 ம் தேதிவரை நடந்த அந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்ட 1,16,533 பேரில் 101793 பேர் அதாவது 87 சதவீதம் பேர் போப்பின் வார்த்தைகள் வருத்தும் தெரிவிக்கும் சரியான வழி அல்ல என்று கூறியிருக்கின்றனர். 13 சதவிதத்தினர் மட்டுமே அவரது மன்னிப்பு சரிதான் என்று கூறியுள்ளனர்.
போப்பின் மன்னிப்பு அறிக்கையை திசை திருப்பும் நடவடிக்கை என்று விமர்ச்சித்த எகிப்தின் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் தளபதிகளில் ஒருவரான அப்துல் முன்இம் அபுல் புதூஹ், மன்னிப்பு கோரும் முறை இதுவல்லவே என்று கேட்டார்.
முஸ்லிம் மார்க்க அறிஞர்களுக்கான சர்வதேச அமைப்பின் தலைவரான யூசுப் அல் கர்ழாவி போப்பின் மன்னிப்பு அறிக்கை நிராகரித்தார். போப்பின் மன்னிப்பு மன்னிப்பு அல்ல. முஸ்லிம்கள் தவறாக விளங்கிக் கொண்டனர் என்பது முஸ்லிம்களின் மீது இன்னொரு அவதூறு என்று கூறினார்.
மேற்கோளாக எடுத்துக் கூறிய அந்த வாhத்தைகள் தமது எண்ணத்தை பிரதிபலிக்கவில்லை என்று போப் கூறுவது ஏற்கத்ததக்கதல் என்று கூறிய கர்ழாவி, வார்த்தைகள் தெளிவாக இருக்கும் போது நினைப்புகள் பற்றி நாம் விசாரித்துக் கொண்டிருக்க தேவையில்லை என்றும் கூறினார். (ஹீன யகூனல் கலாமு சரீஹன் லா நஸ்அல் அனின்னிய்யாத்)
முஸ்லிம்களுக்கும் கிருத்துவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ரோமிலும் பார்சிலோனாவிலும் நடந்த பேச்சு வார்ததையில் நாங்கள் கலந்து கொண்டோம். சரியான மன்னிப்பு வராதவறை இனியுண்டான கூட்டங்களில் நாங்கள் பங்கு பெற மாட்டோம் என்று கூறிய அவர் சர்ச்சுகளi தாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
எழத்துப் பூர்வமான ஒரு விளக்கம் தேவை என அரபு நாடுகளின் தூதர் கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு சரியான மறுப்பு வராவிட்டால் வாடிகன் உடனான தங்களது உறவை முஸ்லிம் நாடுகள் மறித்துக கொள்ள வேண்டும் என்ற கோரிக்களை வலுப்பெற்றுவரகின்றன.பகிரங்கமான தெளிவான ஒரு மன்னிப்பு வெளிவராத வரை இஸ்லாமையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் போப் களங்க்கப்டுத்தியது தொடருவதாகவே பொருள் என அரபுக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர். முஹம்மது சலீம் அல் அவாபி கூறியுள்ளார்.
மன்னிப்பு அறிவிப்பினால் இஸ்லாமிய அரசுகள் சமாதானமடையவில்லை ஆகையால் வாடிகனின் தூதரக அதிகாரிகள் இஸ்லாமிய அரசுத்தலைவர்களைச் சந்தித்து விளக்கமிளிக்கச் செய்யப்பட்டுள்ளதாக அல்ஜஸீராவின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
உண்மையில் போப்பின் மன்னிப்பு அறிவிப்பு ஒரு பம்மாத்து வேலை. மேற்கத்தியஅரசியலின் ஒரு பக்கா கில்லாடியாக 16 ம் பெனடிக்ட் இந்த மன்னிப்புpன் மூலம் தன்னை அடையாளம் காட்டிவிட்டார். கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை குரூரமாக புண்படுத்திவிட்டு அதற்காக ஒரு சரியான வருத்தம் கூட தெரிவிக்கத் தெரியாதவர் கருணையே வடிவான ஏசுவின் பிரதிநிதியாக இருக்கிறார் என்பது கிருத்துவத்திற்கு இந்த நூற்றாண்டில் நேர்ந்த மிகப் பெரிய சோதனையாகும். கிருத்துவம் வேறு திருச்சபை வேறு என்ற பழைய வரலாறு மீண்டும் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது.
ஏது எப்படி இருப்பினும் முஹம்மது (ஸல்) அவர்களது புகழின் மீதும் கை வைக்கிற எவரும் தங்களது மரியதையை இழக்க நேரிடும் என்ற சத்தியம் மீண்டும் ஒர முறை நிஜமாகி இருக்கிறது.