Saturday, December 1, 2007

இலக்கிய தர்பார்

அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாம் மாநாடு சென்னையில் கடந்த மே மாதம் 25,26,27 அகிய தேதிகளில் கலைவாணர் அரங்கம் புதுக்கல்ல}ரி ஆகிய இடங்களில் நடைபெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமான எஸ்.எம் இதாயதல்லாஹ், கேப்டன் அமீர் அலி அகியோர் மாநாட்டை நடத்தினர். கலைஞர் கரணாநிதி , பேராசிரியர் அன்பழகன், பாராளுமன்ற துணை சபாநாயகர் ரகுமான் கான், இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் மலேஷிய அமைச்சர் ------------------------------ பொன்னம்பல அடிகளார் உள்ளிட்ட பலர் சிற்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சுமார் 500 பேராளர்கள் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பங்கேற்ற இம்மாநாட்டில் கிட்டதட்ட தமிழகத்தின் அனைத்து இலக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டது சிறப்பு. வளைகுடா நாடுகிளிலிருந்து கலந்து கொண்டோர் எண்ணிக்கை குறைவாக இருந்த போதும் இலங்கையிலிருந்து சுமார் 150 பேர் கலந்து கொண்டிருந்தனர். சுமர் 30 லட்சலம் ரூபாய் செலவு பிடித்திருக்கக்கூடிய இம்மாநாட்டிற்கு புரவலர்கள் தாராளமான நிதி உதவி செய்துள்ளனர். எஞ்சியுள்ள தொகையில் இனிவரும் காலங்களில் தேவையான இலக்கிய பணிகள் ஆற்றப்படும் என்று கவிக்கோ அறிவித்திருக்கிறார்.ஒரு மாநாட்டை நடத்திப் பார்ப்பதில் உள்ள மிகுந்த பிரயாசைகளும் பொருட்செலவும் உழைப்பும் விமர்சகர்களின் கண்களுக்கு தெரியாது பாயாசத்தில் முந்திரி தட்டுப்படாததது மாத்திரம் தான் விமர்சகனின் பார்வைக்கு தட்டுப்படும். விமர்சகன் என்பவன் கனிகனை விடுத்து முட்களை மட்டுமே மேய்கிற ஒட்டகத்தை போன்றவன் என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் விமர்சன உலகின் மீது கறையாக படிந்துள்ளது என்ற போதும் இந்தக் கட்டுரை அந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி விடக்கூடாது எச்சரிக்கையோடு எழுதப்படுகிறது. அதே நேரத்தில் இலக்கியம் என்ற ஒரு அருமையான தளத்தின் மீது எதிர்கால முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு விரக்தியோ வொறுப்போ ஏற்பட்டுவிடமால் பாதுகாத்தாக வேண்டும் என்ற பொறுப்புணர்வும் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதே போல 27 ம் தேதியோடு மாநாடு நிறைவு பெற்று விட்டது என்றாலும் மழை விட்ட பிறகும் தூவானம் விடாத கதையாக தொடரும் மாநாட்டுச் சர்ச்சைகளளும் இந்த விமர்சனத்தின் வட்டத்திற்குள் கொண்டுவரப்படு கின்றன. ஓரு இளைஞனிடம் உள் வாழ்வின் லட்சியம் என்ன என்று கேட்கப்பட்டதற்கு ரொம்ப நேரம் யோசித்து விட்டு வாழும் வரை சுவாசித்துக் கொண்டிருப்பது என்றானாம். வாழ்ந்து முடித்துவிடுவதையே வெற்றிகரமான வாழ்விற்கான இலக்கணமாக எடுத்துக் கொள்பவராக இருந்தால் இந்த மாநாடு வெற்றி பெற்று விட்டது என்று நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.இலக்கிய மாநாடுகள் இனி தமிழகத்தில் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று என்னைப் போன்றவர்கள் கருதிக் கொண்டிருந்த நிலையில் அந்தப் பெயரில் ஒரு மாநாடு நடந்து முடிந்து விட்டது என்பதில் மகழ்ச்சிதான். மாநாட்டுக்கான முன்னேற்பாடுகளில் காணப்பட்ட லட்சணங்களை வைத்து இம்மாநாட்டில் குளறுபடிகள் மலிந்து கிடக்க வாய்ப்புண்டு என்ற ஒரு தயாரிப்பு மனோ நிலையில் சென்ற எனக்கு மார்க்க அறிஞர் அரங்கை ஏற்பாட்டாளர்கள் புறக்கணித்ததை தவிர்த்து மற்ற அரங்குகள் எப்டியோ நடதேறிவிட்டதில் குறிப்பாக கலைஞர் கலந்து கொண்ட நிகழ்வில் அரங்கு நிறைந்து காணப்பட்டதில் அப்பாடா ஒரு வழியாக இலக்கிய மாநாடு முடிந்துவிட்டது என்ற திருப்தி எனக்கும் ஏற்பட்டது தான்.ஆனால், மாநாடு நடைபெற்ற விதம் ஆற்றப்பட்ட பணிகள் மன நிறைவு என்ற அடிப்படைகளில் அல்லது ஒரு இலக்கிய மாநாட்டின் வரையரைகளுக்குள் சிக்காத நன்மைகள் என்று வேறு எந்த ஒரு அலகையாவது வைத்துக் கொண்டு அலசினால் என்றால் அனைத்துல இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாம் மாநாடு ஒரு தோல்விதான்.அத்திப் பூத்தார்ப் போல நடைபெறுகிற அனைத்துலக இலக்கிய மாநடுகள் இலக்கியச் செழுமையையும் இனிய நினைவுகளையும் மணம் வீசச் செய்ய வேண்டும் என்பது அறிஞர்;கள் மற்றும் சுவைஞர்களுடைய எதிர்பார்ப்பு.அந்த எதிர்பார்ப்பை மாத்திரமல்ல ஒரு அனைத்துலக மாநாட்டிற்கான இலக்கணத்தையும் சிதறடித்துவிட்ட மாநாடாக இம்மாநாடு அமைந்து விட்டது. மூன்று நாள் நிகழ்சிசியில் கலந்த கொண்ட ஒருவர் கூட தங்களது அதிப்தியை வெளியிடாமல் செல்லவில்லை என்பது ஏழாம் மாநாட்டின் பொதுப் பண்பு. எங்காவது ஒரு ஊரில் ஷரீஅத் மாநாடோ தப்லீக் இஜ்திமாவோ நடந்தால் இம்மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் அதை ஒரு முறை போய் பார்த்த விட்டு வரவேண்டும் என்று சிலர் பேசிய போது அதை மறுக்க முடியவில்லை. இந்த அனைத்துலக மாநாடு வெற்றி பெற்றதா? தோல்வியடைந்ததா? என்று அலச வேணடிய நேரத்தில் இதயங்கள் இணைப்பிற்கு இலக்கியம் என்ற முத்திரை வாசகம் இந்த மாநாட்டிற்கு பொருந்துமா என்றொரு பெரிய பட்டிமன்றம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது துரதிஷ்டவசமானது.அந்த வகையில் இம்மாநாடு தோல்வி மாநாடு மட்டுமல்லாமல் தொல்லை மாநாடாகவும் ஆகி பலருக்கும் வேதனை அளித்தது. ஒரு மாநாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்டுவதற்காக நடத்தப்படுவதாக ஜாம்பவான்களால் தம்பட்டம் அடிக்கப்பட்ட மாநாடு ஒரு மாநாடு எப்படி நடக்கக் கூடாது என்பதற்கான முன்னுதராணமாகிவிட்டது. அந்த முன்னுதாரணம் சென்னையில் நடைபெற்ற ஒரு அனைத்துலக மாநாட்டில் நடந்துவிட்டது என்பது தமிழக முஸ்லிம்களுக்கும் தமிழக இலக்கிய வாதிகளுக்கும் புரவலர்களுக்கும் ஏற்பட்ட தலைக்குணிவு.இதை புரிந்தும் உணர்ந்தும் கொள்ள வேண்டியது, இதன் தோல்விக்கான காரணிகளை ஆராய வேண்டியது இஸ்லாமிய தமிழ் இலக்கியம் வாழ வேண்டும் வளர வேண்டும் என்று நினைக்கிற இலக்கியவாதிகள் புரவலர்களுடைய கடமை. இனிவரும் மாநாடுகளில் அத்தகைய தவறுகள் நடைபெறாமல் கவனித்துக் கொள்ள அது உதவும். மாநாட்டின் தோல்விக்கு முதன்மையான காரணம், இலக்கிய ஆர்வத்ததைவிட மேலோங்கியிருந்த தனியாவார்தன மனப்போக்கும் சுயவிளம்பரச் சிந்தனையுமேயாகும். அலட்சிய மனப் போக்கும் பாரபட்ச உணர்வும் இதன் துணையாக சேர்ந்து கொள்ள மாநாடு ''களை ' கட்டிக்கொண்டு விட்டது. இஸ்லாம் என்ற சமய அடையாளம் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கிராத் ஓதியதற்கு அடுத்த படியாக பர்வீன் சுல்தானாவின் பர்தாவில் வெளிப்பட்டது. வெல்;டன்.மாநாட்டுத் தீர்மாணங்கள் வாசிக்கப்பட்ட விதமும் அதன் உள்ளடர்த்தியும் மாநாட்டின் தோல்விக்கு எடுத்தக் காட்டத் தகுந்த போதுமான ஒரே உதாரணமாகும்.ஒரு அனைத்துலக மாநாட்டின் தீர்மாணங்கள் வாசிக்கப்பட்ட போதும் புரியவில்லை அது பிரசுரமாகவும் தரப்பட வில்லை அடுத்த நாள் பத்ரிகைகளிலும் வரவில்லை. மாநாடு என்பது குறித்து பக்கம் பக்கமாக விளக்ககம் எழதிய எற்பாட்டாளர்கள் ஒர மாநாடு அதன் தீர்மாணங்களால் மதிப்படைகிறது ஆத்தீர்மாணங்கள் வெற்றி பெறுவதில் தான் அது உயரிர்வாழ்கிறது என்ற தத்துவத்தை எப்படி அறியாமல் போனார்கள்? வெத்து அறிக்கைகள் வெளியிடுவதற்கு அல்லது தன்னிலை விளக்கப் பேட்டிகளை அச்சேற்றுவதற்கும் முயற்சி எடுத்துவர்கள் மாநாடு முடிந்து ஒரு மாதமாகிவிட்ட சூழ்நிலையில் இன்று வரை அத்தீர்மாணங்களை மக்கள் மன்றத்திற்கு கொண்டு சேர்க்க வில்லை. அவர்களது அறிக்கைகளையும் தீர்மாணங்களையும் வெளியிட்ட பத்hகைகள் கூட அத்தீர்மாணங்களை வெளியிட வில்லை. ஒரு வேளை இந்த மாநாடு பேராளர்களுக்கு மட்டும்தான் என்று அறிவித்தது போல தீர்மாணமும் கலைஞருக்கு மட்டும்தான் என்று தீர்மாணித்துவிட்டார்களா என்பது தெரியவில்லை. ஆய்வரங்குகள் தான் இம்மாநாட்டின் சிறப்பு அம்சம் என்று பெரிதாக பேசப்பட்டது. நிறைய அரங்குகள் இருந்தது சரிதான் நிறைவாக இருந்தததா என்பது தான் கேள்வி. ஓரு பிடிவாதத்திற்hக இத்தகைய அரங்குகளை ஏற்படுத்திய அதே நேரத்தில் மாநாட்டு மைய அரங்கில் அருமiயான தலைப்பில் ஒரு கருத்தரங்கமோ விவாத மன்றமோ நடத்தியிருந்தால் பொதுமக்கள் பலர் பயன் பெற்றிருப்பார்கள். மார்க்க இலக்கிய அரங்கு மகளிர் அரங்கு உள்ளிட்ட சிற அரங்குகளில் கூட்டம் இருந்தது. அரங்குகளில் வாசிக்கபட்ட கட்டுரைகள் பல பிரசுரிக்கப்பட வில்லை என்று குறை கூறப்பட்டது. முஸ்லிம் அல்லாதோர் பலர் ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்தது இவ்வரங்குகளின் முக்கியமான ஒரு சிறப்பம்சமே!. திருவணந்தபுரத்திலிருந்து வந்திருந்த திருமலர் மீரான் அவர்கள் சொன்னது போல இலக்கியகர்த்தாக்கள் பலருக்கு அது மட்டுமே மாநாட்டின் திருப்திக்குரிய விசயமாக இருந்தது. ஆனால் பொதுப் பார்வையாளர்களைப் பொறுத்தவரை எங்கே செல்வது என்ற குழப்பத்தில் அங்கும் இங்குமாக அல்லாடிக்கொண்டிருந்தார்கள். பொதுவான பார்வையாளர்கள் பலருக்கும் சனிக்கிழமை சனி பிடித்த கிழமையாக இருந்தது அவர்களது அறிவுக்கோ ரசனைக்கோ இலக்கிய ஆர்வத்திற்கோ எந்த தீனியும் அன்று கிடைக்கவில்லை. ஒரு நுட்பமான அல்லது பல்கலைகழகங்கள் அளவில் மட்டுமேயான மாநாடு இப்படி ஆய்வரங்குகள் நிரம்பியதாக நடத்தப்படுவது பொருத்தமானதாக இருக்கலாம், மக்கள் மத்தியில் இலக்கிய தாகத்தை வளாத்தாக வேண்டிய காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஒரு மாநாடு இத்தகைய ஆய்வரங்குகளால் கணம் பெறத் தவறிவிட்டது என்பது உண்மை. பொதுமக்கள் பயன்பெற்ற விடக் கூடாது என்பதில் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் மிக எச்சரிககையாக நடந்து கொண்டிருப்பதை காட்டுகிறது என்று அங்குமிங்கும் அல்லாடிக் கொண்டிருந்த ஒருவர் சொன்னது காதில் விழுந்தது. சனிக்கிழமை மாலை என்ற பிரதான நேரத்திற்கு ஒதக்கீடு செய்யப்பட்டு தனியாக சுவரொட்டி விளபம்பரமும் செய்யப்பட்டிருந்த மார்க்க அறிஞர் அரங்கம் ரத்து செய்யப்பட்டது மாநாட்டின் முகத்தில் பூசப்பட்ட கரி. கரியை பூசியது ஏற்பாட்டாளர்களா ? அல்லது முந்தயை நிகழ்சியை நடத்தியவர்களா என்பது தான் ஆராயப்பட வேண்டிய கேள்வி. நிகழ்ச்சியல் பெயரிடப்பட்டிருந்த ஆலிம்களை குற்றம் சுமத்த முடியாது. அழைக்கபட்டிருந்த ஆலிம் பெருமக்கள் நால்வரில் ஒருவர் கூட நிகழ்சிக்கு வரவில்லை என்பது உண்மைதான் ஆனால் அவர்கள் வராமல் போனதற்கு காரணம் தகுந்த ஏற்பாடுகள் எதுவும் செ;யயப்படாததே!. குறைந்த பட்சம் அவர்களுக்கான டிக்கட் கூட ஏற்பாடு செய்யப்பட வில்லை.மார்ச் மாதத்தின் மத்தியில் அவர்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகு நிகழ்சி நடப்பதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக தொலை பேசியில் தொடர்பு கொண்டு அவர்களையே ஏதாவது எற்பாடு செய்து கொண்டு வரச் சொல்லங்கள் என்று ஏற்பாட்டாளர்களால் சொல்லப்பட்டுள்ளது. மே மாதத்தில் போக்கு வரத்து எப்படி இருக்கும் அனைவரக்கும் தெரிந்த விசயம். அதிலும் அழைக்கப்பட்ட அனைவரும் மிக மூத்த அலிம்கள். பொன்னம்பல அடிகளாருக்கும் அரது உதவியாளருக்கும் விமான டிக்கட் வழங்கிய அளவுpற்கு இல்லை என்றாலும் அதில் கால் வாசி முக்கியத்துவமாவது இந்த மூத்த ஆலிம்களுக்கு தரப்பட்டிருந்தால் கண்டிப்பாக அவர்கள் நிகழ்சியை தவிhத்திருக் மாட்டார்கள். கவிக்கோவை யாராவது மூன்று மாதங்களுக்கு முன் தொடர்பு கொண்டு நிகழ்சிக்கு ஒப்புதல் பெற்ற பிறகு வேறு எந்த தொடர்பும் கொள்ளாமல் இருந்து விட்டு நிகழ்சியன்று வந்துவிட்டீpர்களா என்று கேட்டால் கவிக்கோ என்ன செய்வார் என்று ஒ.எம் அப்துல் காதிர் பாகவி கேட்டதில் நியாயம் இல்லை என்று சொல்ல முடியுமா? சென்னையிலேயே இருக்கிற ஷப்பீர் அலி ஹஜ்ரத் அவர்களை அழைத்து வரவும் எந்த ஏற்பாடும் இல்லை. வெள்ளிக்கிழமை வரை தனக்கு அழைப்பிதழே வரவில்லை என்று ஹஜ்ரத் கூறியிருக்கிறார். முறையான அழைப்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்படாததால் தான் ஆலிம்கள் வரவில்லை எனவே நிகழ்சி ரத்தானதற்கு அவர்களை காரணம் சொல்வது பழிபோடுவதன்றி வேறில்லை. மார்க்க அறிஞர் அரங்கு ரத்தானதற்கு காரணம் வேறு. புதுக்கல்லஸரியின் புல்வெளி அரங்கில் சனிக்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்க வேண்டிய பாராட்டரங்க நிகழ்ச்சி இரவு 7.30 மணிக்குத் தொடங்கப்பட்டது. அது மார்க்க அறிஞர் நிகழ்க்காக ஓதக்கப்பட்ட நேரம். சுமார் இரண்டரை மணி நேர காலதாமதத்தை எற்பாட்டாளர்கள் கண்டு கொள்ளவே இல்லை. 5 மணியிலிருந்து மைதானத்தில் கூடியிருந்த மக்கள் ஏதாவது ஒரு சிறு அறிவிப்பாவது செய்யப்படுமா என்று காத்திருந்து ஏமாந்தனர். அந்நிகழச்pக்கு வந்திருந்த சென்னை எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழக துணை வேந்தர் கூட சலித்தப் போய் காத்திருந்தர். காலம் கடந்து தொடங்கப்பட்ட பாராட்டரங்கம் 10.00 மணிவரை நீண்டது. பின்னால் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது இந்நிகழச்pக்காக்த்தான் கூட்டம் காத்திரக்கிறது என்ற பிரக்ஞை ஏற்பாட்டாளர்களுக்கு சிறிதும் இருக்கவில்லை. முற்றிலுமாக மார்க்க அறிஞர் நிகழ்ச்சிக்கான நேரம் களவாடப்பட்டது. நிகழ்சிக்கு சொற்பொழிவாளர்களாக அழைக்பட்ட மூத்த அலிம்கள் வந்திருந்தால் இந்தப் புறக்கணிப்பை கண்டு எவ்வளவு மனம் நொந்திருப்பார்கள் நல்ல வேளை அவர்கள் யாரும் வரவில்லை என்று நான் என் மனதுக்குள் சொல்லிக் கொண்டிருந்த போது அந்த அதிர்ச்சியான அறிவிப்பு செய்யப்பட்டது. நிகழ்சிக்கு அழைக்கப்பட்ட ஆலிம்கள் யாரும் வராததால் நிகழ்ச்சி ரத்த செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது. நிகழ்சி ரத்தானதற்கு முதல் காரணம் அளவு கடந்து எற்பட்டு விட்ட கால தாமதம், இரண்டாவது காரணம் எற்பாட்டாளர்கள் சிலரின் காரணம் அற்ற வெறுப்புணர்வு போக்கு. ஏனெனில் அழைக்கப்ட்ட பேச்சாளர்கள் எவரும் வரக் கூடிய நிலையில் இல்லை என்பது காலையிலேயே தெரிந்துவிட்டது. அந்நிலையில் தேங்கை ஷர்புத்தீன் அவர்களின் கடும் முயற்சியின் விளைவாக மாநாட்டிற்கு பேராளர்களாக வந்திருந்த பேச்சாற்றல் மிக்க ஆலிம்கள் சிலர் திட்மிட்ட அதே தலைப்பில் அரங்கை வெற்றிகரமாக நடத்தி முடிக்கத் ஒப்புக்கொண்டனர். தேங்கையாருடன் சேர்ந்து கான் பாகவி ஹஜ்ரத் அவர்களும் நிலமையின் தீவிரம் உணர்நது அங்கும் இங்கும் ஒடியாடி ஆட்களை பிடித்ததை ஏற்பாட்டாளர்கள் எவரும் கவனித்திரக்கவே முடியாது. அவர்கள்தான் அரங்கத்திலேயே இல்லையே! கான் பாகவி ஹஜ்ரத்திடம் வந்த ஒருவர் இது அவங்க நிகழ்ச்சி. அவங்களே அலட்டிக்காம இருக்கும் போது நீங்க ஏன் ஹஜ்ரத் இப்படி முயற்சி பண்றீங்க என்று கேட்ட போது இல்லப்பா மக்கள் ஆலிம்கள் பேச்சிற்காக காத்திருக்கும் போது அது இல்லேன்னு சொல்லக் கூடாது என்று ஹஜ்ரத் சொல்லிக் கொண்டு பேப்பர் பேப்பராக கிழித்து நிகழ்சி நிரல் ஏற்பாடு செய்ததில் மக்களின் மீதான ஆலிம்களின் அக்கறை புலப்பட்டது.இந்த அரங்கை எதிர் பாhத்துத் தான் நிறைய மக்கள் அரங்கில் காத்திருந்தார்கள். சனிக்கிழமை மதியம் களோபரமாக நடந்தேறிய உணவு ஏற்பாடுகளுக்கிடையே இலங்கை பேராளர்களும் மலேஷி பேராளர்;களும் இன்றைக்கு மாலை மார்க்க அறிஞர் நிகழ்சிசதான் ஒரு உருப்படியான நிகழ்ச்சி என்று சொல்கிக் கொண்டிருந்ததை பலரும் கேட்டனர். பாவம் அவர்களது அந்த சாமாண்ய எதிர்பார்ப்பும் கூட பலிக்கவில்லை.மார்க்க அறிஞர் அரங்கை கூடிய மட்டும் தவிர்க்க முயற்சி செய்து விட்டு பல தரப்பிலும் வந்த நிர்பந்தங்கள் காரணமாக அதை ஏற்பாடு செய்தவர்கள் அதற்கான மதிப்பை உணர்நதே சனிக்கிழம மாலை நிகழ்ச்சியை முழுமையாக அதற்கு ஒதுக்கியிருந்தனர். எண்ணம் போல் வாழ்வு என்பது போல் நிகழ்ச்சி ரத்து செ;ய்யப்பட்டது.ஒரு சர்வதேச மாநாட்டில் மக்கள் எதிர்பார்த்த ஒரு முக்கிய அரங்கை ரத்து செய்ததற்காக - காரணம் யாராக இரந்தாலும் - மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். அதைவிடுத்து அழைத்தவர்கள் யாரும் வராத காரணத்தால் ரத்து செய்யப்படுகிறது என்று மட்டுமே அறிவித்த போது அது ஒரு வன்முறையாகவே கருதப்பட்டது. ஏற்பாட்டாளர்கள் சிலரின் காழ்ப்புணர்வின் வெளிப்பாடு என்றும், மக்களின் மீது சில இலக்கியப் பிதாமகன்களுக்கிருந்த பற்றின் வெளிப்பாடு அது என்றும் விமர்சிக்கப்படுவதற்கு அது காரணமானது. முதல் நாள் நிகழ்சியல் தொடக்கவிழாவில் ஏற்பட்ட பல மணி நேரத்த தாமதம். இரண்டாம் நாள் மாலை நிகழச்pயல் சில மணி நேரத் தாமதம் மூன்றாம் நாள் காலை நிகழ்ச்சி பல மணி நேரத் தாமதம் என கணக்கற்ற கால தாமதம் தமிழக பார்வையாளர்களையே சேர்வடையவும் வெறுப்படைவும் வைத்தது என்றால் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் என்ன மனோ நிலைக்கு ஆளாகி யிருப்பார்கள்?.எனவே சுதாரண பள்ளிக்கூட விழவை விட மோசமாக ஒரு மாநாட்டை நடத்தினார்கள் என்ற இலங்கை கவிஞர் ஜின்னாஹ் ஷர்புதீன் அவர்களின் விமர்சனம் பொருத்தமானதாவே படுகிறது. மாநாட்டு நிகழ்வுகளில் பெரும்பாலான வற்றில் - ஆய்வரங்குகள் தவிர - சபாஷ் என்ற பாராட்டுப் பெற்றவர்கள் இலங்கையை சார்ந்த பேச்சாளர்களே! முதல் நாள் நிகழ்ச்சியில் ரவூப் ஹக்கீம் இரண்டாம் நாள் நிகழச்pயில் அஸ்வர், மூன்றாம் நாள் கருத்தரங்கில் கௌரவ பஷீர் கவியரங்கில் அஸ்ரப் சிஹாபுதீன் அகியோரே சரியான பங்களிப்பை செய்தனர். மூன்றாம்; நாள் காலை இரண்டு மணி நேர தாமதத்திற்கு பிறகு தொடங்கிய கருத்தரங்கின் தலைப்பு இஸ்லாம் பயங்கரவாத மதமா? இந்த தாமதம்தான் பயங்கரவதம் என்று பின்னாலிருந்து ஒருவர் கிண்டலடித்தார். பலமுறை யோசித்துப் பார்த்தும் இத்தலைப்பு இலக்கியத்தோடு எப்படி சம்பந்தப்படுகிறது என்பது புரிபடவில்லை. அந்தக் கூட்டத்திலிருந்து இலக்கியத்தின் வாடையை நுகரச் செய்யும் ஒரு கவிதையோ அல்லது ஒரு சிறு மேற்கோளே எதுவம் நம் செவிகளில் விழவில்லை. கேள்விக்குறியாக தலைப்பை சூடியது சரியா என்று கவிக்கோவை கேள்வி கேட்டு சேம் செய்டு கோலடித்து, இந்த மாநாட்டின் காரியங்கள் எதுவம் எங்கள் எல்லேரையும் கலந்து கொண்டு செய்யப்பட்டதில்லை என்பதை புத்திசாலித்தனமாக வெளிப்படுத்திய திருச்சி ஜமால் முஹம்மது கல்ல}ரி பேராசியர் மன்சூர் அவர்கள் கூட இது இலக்கியம் சார்ந்தா தலைப்பா என்ற கேள்விக்குள் ஏன் செல்ல வில்லை என்பது எனக்கு இதுவரை புரியாத புதிர். அரசியல் அல்லது சமூக மாநாட்டிற்கான தலைப்பை இலக்கிய மாநாட்டிற்கு ஏன் தோந்தொடுத்தார்கள் என்று விவாதித்துக் கொண்டிருந்த போது ஒரு நண்பர்;, கனமான தலைப்பு வேணும் என்று தோந்தெடுத்திரப்பார்கள் என்று சொன்னார். அப்படியானால் இலக்கியத்தோடு தொடர்புடைய ஒரு கனமான தலைப்பு எதுவும் இல்லையா என்று மற்றொருவர் கேட்டார். அந்தக் கேள்வி என்ககுள் இப்பொதும் இருந்து கொண்டிருக்கிறது.இந்த சூடேற்று கிற தலைப்பை இலங்கை அமைச்ர் கவுரவ பஷீர்மட்டுமே கவனமாக கையாண்டார். அவரது பேச்சு ஆரம்பத்தில் சற்று மெதுவாக சென்ற போதும் அழுத்தமான கருத்துகளை சுமந்த அழமான வார்த்தைகளாக இருந்தது. இறுதியில் அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மரியாதையும் கண்ணியமும் தந்து அவர்களது பிரச்சினைகளை தீர்க்காத வரையில் இந்த பயங்கரவாம் நிற்கப் போவதில்லை. அது இஸ்லாமிய பயங்கர வாதமல்ல. அது சர்வதேச முதலாளித்துவத்துடைய பயங்கரவாதம். தங்களது சௌகரியங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக மேற்குலகின் பயங்கர வாதம் வளரப் போகிறது அந்தப் பயங்கரவாதத்தை எதிர்பதற்கு அனைவரும் கைகோர்த்துச் செல்வோம் என்று அவர் பேசி முடித்த போது அரங்கு உணர்ச்சி வசப்பட்டிருந்தது.பீட்டர் அல்போன்ஸ் வழக்கப்படி தனது சொல் சிலம்பத்தை காட்டிவிட்டு பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முஸ்லிம்கள் இஸ்லாமை கடைபிடிக்க வேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றார். இப்படித்தான் பல பேச்சாளர்களும் நாச10க்காக நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போய்விடுகிறார்கள். பயங்கவாதத்தின் காரணிகளை விளக்குவதில்லை அதன் கர்தாக்ககளை கண்டிப்பதுமில்லை. பேராசிரியர் காதர் மைதீன் இந்த தலைப்பை தொடுவதில்லை என்று சத்தியம் செய்த விட்டு வந்தது போலவே பேசிக் கொண்டிருந்தார். பசி எடுக்க ஆரம்பித்ததால் பலரும் எழுந்து போய்விட்டார்கள்.தொடர்ந்து நடந்த மற்றொரு கருத்தரங்கம் இலக்கியத்தில் மனித நேயம் என்ற தலைப்பில் நடைந்து கொண்டிருந்த போது பெரும்பாலும் வெளிநாட்டுப் பேராளர்களே அரங்கில் இருந்தனர். நாங்கள் பலரும் உணவருந்திக் கொண்டிருந்தோம்.ஆந்நிகழ்ச்சி முடிந்த போதே முதல்வர் வருகைக்கான கெடுபிடிகள் தொடங்கிவிட்டிருந்தன. ஆடுத்து திட்மிடப்பட்டிருக்கிற கவியரங்கம் எங்கே நடக்காமல் போய்விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்தேன். நல்ல வேளை கவியரங்கு நடந்து. அது முடிந்த பிறகு தான் எதற்கு இப்படி ஒரு கவியரங்கம் நடந்தது என்று என்ற கேள்வி பிறந்தது. கவியரங்கத் தலைப்பு உவமையிலா உத்தம நபி.கவியரங்கத் தலைவர் மு.மேத்தா பெருமானாரை பற்றி கவிதை படித்தது தினமலர் கவிதைகளை லிட சுமாராக இருந்தது. ஒருக்கால் கவிக்கோ அந்தக் கவியரங்கிஙற்னு தலைமை ஏற்றிருந்தால் அது ஏழாம் மாநாட்டிற்கும் அதில் பங்கேற்றவர்களுக்கும் கவிக்கோ செய்த ஒரே பெருங் கொடையாக அமைந்திருக்கும். கவியரங்கில் பாடப்பட்ட அஷ்ரப் சிஹாபுதீனின் கவிதையை தவிர மற்ற கவிதைகளும் அனைத்தும் பெருமானர பாடுவதில் இவர்களை இப்படி சிரமப்பட வைப்பது எது என்று யோசிக்கத் தூண்டியது. மேத்தா போன்றோர் கலந்த கொண்ட கவியரங்கிற்கு சமூகத்தை பிரதிபலிக்கிற வேறு ஏதேனும் தலைப்பு தரப்பட்டிருந்தால் அந்த அரங்கில் குழமியிருந்தோர் கவிதைகளை ரசித்திருக்கக் கூடும். சில கவிதைகள் கேட்ட போது பக்கத்திலிருந்த நண்பர் சொன்னர். எனக்கென்ன பயம்னா போலீஸ்காரர்கள் ஒடிவிடுவர்களோன்னு பயமாயிருக்கு என்று சொன்னார். நிகழ்சி முடிந்து திரும்பும் போது சிலர் அஷ்ரப் சிஹாபதீனின் முஹம்மது என்று எழுதிவிட்டு என் விரலை முகர்ந்த பார்த்தேன் என் கலிமா விரலிலும் கஸ்தூரி வாசம் என்ற கவிதையை உச்சரித்துக் கொண்டு போனது அந்தக் வரிகளின் வெகுஜன ஈர்ப்பை வெளிப்படுத்தியது. உற்சாகம் ததும்பும் நூற்றுக்கணக்கான கவியரங்குகளின் கர்தர்க்காளக இருந்தவர்கள் அனைத்துல மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த கவியரங்கம் சற்று ஏமாற்றத்தையே அளித்தது. அதை தொடர்நது பிரதானமான நிறைவு நிகழச்சி தொடங்கியது. தமிழ் முஸ்லிம்களின் பெருதனக்காரர்கள் மாநாட்டின் புரவலர்கள் பெரும்பாலோர் மொத்தமாக அமர்நதிருந்து அழகு சேர்த்தனர். கிராஅத் என்ற அறிவிப்பை தொடாந்து இரண்டு பெயர்கள் அறிவிக்கப்பட்ட பொது இரண்டு பேரும் அங்கு இல்லை. முதல்வர் உட்டபட பலரும் புரவம் சுருக்கினர். இது ஒரு அனைத்துலக மாநாடு? என்ற முனுமனுப்பு ஒவ்வெருவாமிருந்தும் வந்தது.வரவேற்புரைக்கு பெயர் போடப்பட்டிருந்த மாநாட்டின் பொருளாளர் ஏ.வி.எம் ஜாபர்தீன் மாநாட்டு மேடையிலேயே இல்லை. முறையான திட்டங்கள் எற்படுகள் குறித்து தன்னுடைய கருத்தக்கள் அலட்சியப்படுத்தப்பட்டதாலும் தொடர்நது கைகொள்ளப்பட்ட சர்வதிகாரப் பொக்கினாலும் மனம் வெறுத்து அவர் அரங்கின் ஒர மூளையில் உட்கார்ந்திரந்தது எனக்குத் தெரியும் என்பதால் அதில் ஆச்சரியம் எதுவும் எழவில்i. ஆனால் அவரை பலரும் அந்த இடத்தில் பார்த்து அதிந்ந்ததை நான் உணர்ந்தேன். வரவேற்புரை நிகழ்த்திய இதாயதுல்லாஹ் கலைஞருக்கு முன்னிலையில் பேசுவதாலோ அல்லது பல நாட்கள் பாடுபட்ட நிகழ்ச்சியின் நிறைவு என்ற நெகிழசியினாலோ என்னவொ தடுமாறினார். ஆவர் எழுதி வைத்துப் பேசி இருக்கலாம். உணர்ச்சி வேகத்தில் இடஒதுக்கீட்டை பிச்சையாகவாவது தரும்படி கேட்டார். சில இயக்கங்களையும் அரசியல் கட்சிகளையும் வாழ வைத்துக் கொண்டிருந்த இட ஒதுக்கீடு கோஷம் இந்த முறை இலக்கிய கழகத்தையும் வாழ வைத்திருக்கிறது. இலக்கிய மாநாடு நடத்தினிர்களே என்ன சாதித்தீர்கள்? என்ன தீர்மாணம் நிறைவேற்றினீர்கள் என்று கேட்டால் இடஒதுக்கீடு பிச்சை கேட்டோமே அதுவும் முஸ்லிம்களுக்கு எந்த நன்மையும் தனியாக செய்து விடக் கூடாது அழுத்தமான பிடிவாதததில் இருக்கிற கiiலைஞரிடம் கேட்டோமே என்பதைத்தான் சொல்வார்கள். பிறை கூட ஒரு பிச்சை பாத்திரம் போலத்தான் இருக்கிறது என்று கவிக்கோ சொன்ன போது அதன் இலக்கிய தரத்தை மக்கள் ரசித்தாலும் அதன் எதாhதத்தை அவர்கள் ரசிக்கவில்லை.இடஒதுக்கீடு கோஷத்தை இயக்கங்கள் தங்கள் லாபத்தற்காக காப்பாற்றி வைத்துக் கொண்டிருக்கின்றன. இடஒதுக்கீடு மட்டுமே முஸ்லிம் சமதாயத்திற்கு தேவைப்படகிற பிரதான விசயம். ஆந்த ஒரு மாத்திரையில் சமுதயத்தை பீடித்தள்ள அனைத்து வியதிகளுக்கும் திர்வு கிடைத்துவிடும் என்று நடைபாதையில் கடைவிரித்திருக்கும் மருந்து வியாபாரியை போல் அவை குரல் எழப்பிக் கொண்டிருக்கின்றன. நீண்ட காலத்திற்கு யாராலும் நிறைவேற்றப்பட முடியாத ஒரு கோரிக்கையை கையில் எடுத்தக் கொண்டால் போராடுவதற்கு நீண்ட காலத்திற்கு வேறு தலைப்பை தேட வேண்டிய அவசியிம் இருக்காது என்ற காரணத்திற்காகவே இயக்கங்கள் அந்த கோஷத்தை உடும்புப்படியாக பிடித்திருக்கின. தங்களது இருப்பை ஊர்ஜிதம் செய்த கொள்வதற்காக இடஒதுக்கீடு கோஷத்தோடு கும்பகோணத்தை குலுங்க வைத்தவர்கள் இப்பொது அதே கோஷத்தோடு சிறைகளை நிரப்புவதற்கு தயாராவதை பாருங்கள். அடலேறுகளாய் சமுதாயத்திற்காக உழகை;க தயாராக இருந்த துடிப்பு மிக்க இளைஞர் கூட்டத்திற்கு தவறான வழியை காட்டி மாநிலத்திலள்ள அத்துனை சிறைகளிலம் அவர்களை முடக்கியவர்கள், அண்டப்புளுகு அகாசப்புளுகு என்பார்களே அதைவிட கேவலமான தகவல்களால் தூய இஸ்லாத்தை கொச்சைப்படுத்திய கயவர்கள இப்போது இடஒதக்கீட்டிற்காக 15 லட்சம் மக்களை சிறைகளில் நிரப்பப் போகிறார்களாம். இயக்கங்களின் இத்தகைய போக்கினால் ஒரு வகையான மூளைச் சலவைக்கு அளாக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமுதாயம், தண்ணிர் தேவை சாக்கடை தேவை சுகாதார மையங்கள் தேவை பிரசவ விடுதிகள் தேவை பள்ளிக் கூடங்கள் தேவை பள்ளிவால்கள் கட்ட அனுமதி தேவை போன்ற தேவைகளையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு இடஒத்ககீடு என்ற ஓரே கோஷத்தில் மயங்கிக் கிடக்கிறது என்பதாலோ என்னவே இலக்கிய மாநாட்டின் அறிவு ஜீவிகளும் அதையும் இலக்கிய வட்டத்திற்குள் சேர்த்துவிட்டார்கள். சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவருக்கு இலக்கிய விருது வழங்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு சுதந்திரமும் இலக்கியம் தான் ஏற்பாட்டாளர்களது பதிலை நான் இந்த இடத்தில் நினைவு கூர்ந்து கொண்டேன்.சமுதாயம் அந்தக் கோஷத்தை தாண்டி நடக்கத் தொடங்கிவிட்டது என்பதை அந்த நிகழ்ச்சியிலேயே மக்கள் உணர்த்தினார்கள். 12 ம்வகுப்புத் தேர்வில் நான்கு பாடப்பரிவுகளில் 200 க்கு 200 மதிப்பென் பெற்ற மாணவிக்கு விருது வழங்கப்பட்ட போது மொத்த அரங்கும் ஒன்று சேர கரவொலி எழுப்பியது. சாதாரணமாக தனது உரையில் அதிகமாக கைதட்டல் பெறுகிற கலைஞருக்கு கூட அந்த கைதட்டல் கிடைக்க வில்லை. எந்த அரசியில் வாதியின் தயவை நம்பியும் நாங்கள் இல்லை என்று உரத்து கூறுவதாக அந்தக் கைத்தட்டல் அமைந்தது.கவக்கோவின் உரையின் போக்கு சிலருக்கு புரிய வில்லை என்றாலும் அதில் தஃவாவன் ஒரு நொடி இருந்தது. இலக்கிய மாநாட்டின் நிறைவு நகிழ்ச்சிக்கு பொருத்தமாகவே இருந்தது. கவிக்கோவின் உரையின் இரண்டாம் பகுதி அவரது கவித்துவ மேதமையை எடுத்துக்காhட்டியது.மூன்றாம் நாள் அரங்கில் பெரிதும் பாரபாட்டப்பட்டது பாராளுமன்ற துணை சபாநாயகர் ரகுமான் கான் அவர்களின் உரை. இந்திய முஸ்லிம்கள் இரண்டு வகையான சூழ்நிலையில் இருக்கிறார்கள். மதஅடிப்படையில் அவர்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் என்ற அடிப்படையில் அவர்கள் யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை. அவர்களை கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். குர்னும் நபிவழியும் அவர்களை கொடுப்பவர்களாக இருக்கவே சொல்கிறது. சமுக ரீதியில் அவர்கள் பிற்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட வர்கைளi கைதூக்கிவிடுவதற்கு அரசாங்கம் பல முயற்சிகளை செய்கிறது. அந்த நன்மைகள் முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை. கலைஞர் போன்ற இன்றைய அரசாங்கத்தில் சொல்வாக்குள்ள தலைவர்கள் அதற்காக முயற்சித்தால் அது கிடைக்கும் என்று அவர் பேசியது மரியாதையான பேச்சாக இருந்தது. நிறைவுரை ஆற்ற வந்த கலைஞர் இடஒதுக்கீட்டு கோரிக்கையால், அதுவும் பிச்சை என்று கேட்டு விட்டதால் ஒருவகை தர்மசங்கடத்திலும் எரிச்சலிலம் இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். என்னய்யா உங்களோட இதே ரோதனையாப் போச்சு இட ஒதுக்கீடு தருகிற நிலையில் நான் இல்லை. அதை புரிஞ்சுக்காம பிச்சை கிச்சை என்றல்லாம் பேசி என்னை பேச வைக்கிறீங்களே என்ற கடுப்பில் தான் அது காந்hடாக வில் இருக்கும் என்றால் நாளைக்கே நான் உத்தரவிடத்தயார் என்றார். ஆந்திரா என்பதற்கு பதில் கர்நாடகா என்ற வார்தை தவறாக வந்து விட்டது. இதை புரிந்த கொள்ளாமல் இதோ நாளைக்கே உத்தரவிடப்போகிறார் என்று நினைத்துக் கொண்டு சிலர் கைதட்டியது முஸ்லிம் சிலரின் பேதமைய காட்டியது. தினமணி பத்ரிகை கூட முஸ்லிம்களுக்கு இட ஓதக்கீட்டுக் அவசர சட்டம் என்று செய்தி வெளியிட்டது ஆச்சரியமாக இருந்தது. மானுக்குப் பிணைநின்ற பழைய கதை ஒன்று மட்டுமே கலைஞர் உரையிலிருந்த இஸ்லாமிய இலக்கிய தொடர்பு. மாநாட்டு நிறைவு நாள் பேச்சுக்கள் இலக்கிய மாநாட்டை வாழ்வுரிமை மாநாடாக மாற்றிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கலைஞர் மிகப் பெருந்தன்மையோடு உமருப்புலவருக்கு தபால் தலை வெளியிட ஆவண செய்வதாக அறிவித்தார்.ஓரு தபால் தலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமே ஒரு சர்வதேச மாநாட்டின் பிரதான தீர்மாணமாகிவிட முடியும் என்றால் ஆட்சியாளர்கள் வெகு சீக்கிரத்தில் அதை நம் முகத்தின் மீது குத்தி நமக்கு நல்லது செய்த விடமாமாட்டார்களா என்ன?இஸ்லாமியத் தமிழ் இலக்கிய உலகின் நட்சத்திரங்களுக்கும், மாநாட்டின் விஷேச பிரமுகர்களும் எந்த ஒரு தனி மரியாதையும் தரப்படவில்லை. கலைஞர்; கரத்தால் விருது பெறும் இரண்டு சாகித்ய அகாதமியாளர்கள் பார்வையானர்கள் பகுதியிலிருந்து மேடையேறி வந்ததும் காவலர்கள் அவர்களை மேடை ஏற விடாமல் தடுத்து விசாரித்ததும் இலக்கியததிறந்கு நிகழ்ந்த அவமதிப்புகள். மாநாட்டில் ஆய்வாளர்கள் பலரும் பாரட்டப்பட்டது சிறப்பு. ஆனால் படைப்பிலக்கிய வாதிகள் இதில் கண்டு கொள்ளப்படவில்லை. அவர்களது படைப்புக்களை வைத்து ஆய்வு செய்து எம் பில், பிஎச்டி படட்டம் பெற்றவர்கள் பாராட்டப்பட்டார்கள். படைப்பாளிகள் ஓரங்கட்டப்பட்டார்கள். சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த ஹிமானா செய்யத் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து நிகழ்சிகளை பார்த்துக் கொண்டிருந்தார் அவ்வளவே! நிறைவு நாள் நிகழ்சியில் விருதுகளுக்கு தேர்வு செய்ய்பட்டவர்கள் குறித்து பலத்த ஆட்சேபம் எழுந்தது. மாநாட்டின் துணைச் செயலாளர் என்று அறிவிக்கப்படடிருந்த திருமலர் மீரான், இவ்விருதுகள் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பது தங்களிடம் எந்தக் கருத்தம் கேட்கப்படவில்லை என்றார். இது தவிர, உணவு தரமாகவும் போதுமானதாகவும் இருந்தபோதும் உபசரிப்பு இல்லாதததால் அது ருசிக்கப்பட்ட போதும் பாரட்டை பெறவில்லை. பேராளர்களுக்கு உணவு உறையுள் ஏற்பாடு செய்வதில் காணப்பட்ட அலட்சியம் கைகொள்ளப்பட்ட மெத்தனம் ஏதோ ஏற்பாடு பண்ணியிருக்கோம்ல எப்படியோ தங்கிகிக்க போ! எப்படியோ சப்ட்டுக்க போ! நீ கொடுக்கிற இருநூத்தம்பதுக்கு இதுவே ரொம்ப அதிகம் என்ற மனோபாவத்தை வெளிப்படுத்தியதாக பலரும் குறை கூறினர்.நவீனம் புதமை குறித்து வாய்கிழிய் பேசுவோர் சமுதயாத்தின் மிகப் பெரிய தொகை செலவழித்து நடத்திய மாநாடு பழைய பஞ்சாங்கமாக இருந்தது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். புதிய காற்றின் ஆசிரியர் ஹாமீம் முஸ்தபா சொன்னது போல 1980 களில் இப்படி ஒரு மாநாடு நடந்திருந்தால் அதை சரி பரவாயில்லை என்று சொல்லலாம் 2007 க்கு இந்த மாநாடு பொருத்தமானல்ல. நவீனத்துவத்தின் ஒரு சிறு அடையாளம் கூட மாநாட்டில் இல்லை. பத்ரிகை, தொலைக்காட்சி, இணைய வழி இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கூறுகள் எதவும் கண்டு கொள்ளப்படவில்லை.ஒரு வழியாக இலக்கியம் என்பது என்ன என்பதை புரிந்து கொள்ளவோ கலந்து கொண்டீடாரிடம் ஒரு இலக்கிய மலர்ச்சியை ஏற்படுத்தவோ தவறிய நிலையிலும் இனி இலக்கிய மாநாடு என்ற சொல்லிக் கொண்டு எவனாவது வந்தால் என்று பலர் பல்லைக் கடிக்கிற அளவிலம் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.இத்தனை குறைகள் இருந்தாலும் இலக்கியவாதிகள் அனைவரையும் ஓரிடத்தில் சந்திக்கிற வாய்புக்கிடைத்ததில் அனைவரும் மகிழ்ந்தனர். அதை சிரமப்பட்டு ஏற்பாடு செய்தவர்ககளை பாரட்டவே செய்தனர். நிகழ்சிகள் பெருந் தாமதமான போது கூட அமைதி காத்தனர். நூல்கள் வழங்கும் பணியில் தொண்டூழிர்களிடமோ அல்லது பேராசியர்களிடமோ ஒப்படைக்காமல் ஒரு பதிப்பகத்திடம் ஒப்பபடைத்தது ஏன் என்று கடுமையாக பேசிக் கொண்ட போதும் அது பற்றியோ வேறு அசௌகரியங்களைப் பற்றியோ எவருடைய நெஞ்சுச் சட்டையை பிடித்து யாரும் கேள்வி கேட்ட வில்லை. தங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களை தங்களது மனங்களுக்குள் வைத்துப் பூட்டியவாட்களாக அக்கம் பக்கத்தில் இருந்தோரிடம் புலம்பியவர்களாகவே அனைவரும் திரும்பிச் சென்றனர்.ஆனால் பத்ரிகைகளில் இது குறித்து விமர்சனங்கள் வருகிற போது பொறுப்போடும் பொறுமையோடும் பதலளிக்க வேண்டியது ஏற்பாட்டாளர்களின் கடமை. ஓரு நிழ்ச்சி பொதுமக்களை பொறுத்தவரை நன்றியுரையோடு முடிந்து பொய்விடும். ஏற்பாட்டாளர்களைப் பொறுத்தவரை அதற்குப்பின்னரும் பொறுப்பாக நடந்த கொள்ள கடமைப்படடிருக்கிறார்கள். இம்மாநாட்டை பொறுத்தவரை மாநாடு முடிந்த பிறகும் சர்சசைகள் தொடர்வது வேதனையானது. இலங்கை பதரிகைகளில் வந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கையில் இலங்கை குழவினர் இரண்டு குழவினரா வந்திருந்தனர். அதிலம் பலர் தங்களது குழந்ததைகள் குட்டிகளுடன் சுற்றுலாவுக்கு வருவது போல் வந்தனர். அவர்களுக்குள்ளும் சண்டை இருந்தது அமைசசர்களுக்குள்ளும் கூட மோதல் இருந்தது என்று மநாட்டு ஏற்பாட்டாளர்கள் விமர்ச்சித்திருப்பது கேடுகெட்ட விமர்ச்சனமாகும். தமிழக அரசியலின் கீPழ்த்தமான அரசியல் பாணி அது. அவர்கள் எப்படி வந்திருந்தாலும் மாநாட்டின் அரங்குகள் அத்தனையிலும் அவர்கள் தான் முழுமையாக உட்காந்து மாநாட்டில் கூட்த்தை காட்டினர் - ஒரு பார்வையாளர் சொன்னது போல வெளிநாட்டு பேராளர்கள் மட்டும் இல்லை என்றால் அரங்குகள் பலவற்றிலும் 50 க்கும் குறைவான இருக்கைகளே நிறைந்திருக்கும். இந்நிலையில் அவர்கள் தங்களது அதிருப்தியை இங்கிதமற்றோ கோபமாகவே வெளிப்படத்தியிருந்தாலும் கூட ஆரோக்கியமற்ற பதில்கள் பேசப்படுவது மாநாட்டின் பொருமையை மேலும் மங்கவைத்துவிடும்.அடுத்த மாநாடு மலேஷியாவில் நடக்கலாம் என்று கூறப்படகிறது. அந்த மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து செல்லும் இலக்கியப் பிரதிநிதிகள் எல்லோரும் ஒரே ஒரு குழவாக சொன்று வருவார்கள், அவர்களுக்கிடையே சண்டையே இருக்காது, அவர்களில் யாரும் சுற்றிப் பார்ப்பதற்காக போக மாட்டர்கள் என்று தமிழக இலக்கிய வாதிகள் யரேனும் உத்தரவாதம் தருவர்களா என்ன? ஜின்னாஹ் ஷர்புத்தீன் சொல்வது போல ஒரு சர்வதேச மாநாட்டை திட்டமிடத் தெரியமல் நடத்திவிட்டு வாயாடுவது நமது முதுகை மேலும் புண்ணாக்கி விடும். கசப்புணர்வை கலைந்து அடுத்த இலக்கிய மாநாட்டிற்குள் ஒரு நல்ல சூழலை ஏற்படுத்த இலக்கிய ஆர்வலர்கள் முயற்சிக்க வேண்டும். மண்டல அளவில் இலக்கியப் பேரவைகள் அமைக்கப்பட்டு அதற்கு ஒரு மைய அமைப்பும் ஏற்படுத்தப்பட்டு அதன் வழியாக இலக்கிய மாநாடுகள் நடக்க தொய்வின்றி தொட வழிசெய்யப்பட வேண்டும். அல்லாஹ் அருளட்டும்.மாநாட்டு நிகழ்சிகளை எல்லாம் வரிவிடாமல் கேட்டுக் கொண்டிருந்து விட்டு என் நண்பர் ஒருவர் சொன்னார்:அப்படியானால் இது மாநாடு அல்ல. கவிக்கோ ராஜாவாகவும் இதயதுல்லாஹ் இளவரசராகவும் அமிர்; அலி மந்திரியாகவும் இருந்து நடத்திய தர்பார் என்று சொல்லலாமா என்று கேட்டார்.என்ன பதில் சொல்வதென்று யோசித்தக் கொண்டிருக்கிறேன்! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்

சச்சார் அறிக்கை முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?

வேடிக்கையான ஒரு முல்லா கதை இருக்கிறது।சமூகத்தில், முல்லா என்றாலே வேடிக்கை என்றாகிப்போனது ஏன்? என்ற கேள்வி அவ்வப்போது எனக்குள் எழுவதுண்டு। அப்படியெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் சில அருமையான விசயங்களை ரசிக்கம முடியாமல் போய்விடும் என்பதால் அதைப்பற்றி அதிகம் யோசிப்பதில்லை।உங்களுக்கும் அப்படி ஒரு கேள்வி எழுந்தால் அதை ஒரு புறமாக ஒதுக்கி வைத்து விட்டு இந்த கதையை படியுங்கள்। ஒரு விடுமறை நாளில், முல்லா இறைச்சிக் கடைக்குச் சென்று அரைக்கிலோ ஆட்டுக்கறி வாங்கினார்। பக்கத்திலிருந்த ஒரு புத்தகக் கடைக்குள் நுழைந்து ஆட்டிறைச்சி சமைப்பது எப்படி என்றொரு செய்முறைப் புத்தகத்தையும் வாங்கினார். பெருமிதத்தோடு அவர் நடந்து கொண்டிருந்த போது ஒரு தெரு நாய் அவரது கையிலிருந்த கறிப்பையை பறித்துக் கொண்டு ஓடியது. தெருவில் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பலரும் பதறினார்கள். நாயை துரத்திக் கொண்டு ஒடினார்கள். முல்லா மட்டும் பதறவில்லை ஒடவுமில்லை. குறுக்கே வந்த ஒருத்தன் ஏன்ம்பா! நாய் உன் இறைச்சிப் பையயை தூக்கிக் கொண்டு போகிறது நீ பதறாமல் நிற்கிறாயே என்று கேட்டான். முல்லா சொன்னாராம். நாய் கறிiயைக் கொண்டு போனாலும் செய் முறை புத்தகம் என்னிடம் தானே இருக்கிறது. கடந்த மாதம் தமிழகத்தின்; பல பகுதியிலும் சச்சார் கோஷம் ஒலித்ததை கேட்க நேர்ந்த போது இந்தக்கதை ஞாபகத்தில் வந்து இடறியது.ஏதேனும் ஒரு தீர்பபோ அறிக்கையோ கிடைத்துவிட்டால் அந்த காகிதங்களை கவனமாக உடும்பும்புபிடியாகப் பிடித்தக்கொண்டு காரியத்தில் கோட்டை விட்டுவது நம்முடைய முஸ்லிம் சமுதாயத்தின் பழக்கமாயிற்றே இந்த சச்சார் அறிக்கையும் அப்படி ஒரு சராசரி கோஷமாக கறைந்து போய்விடுமோ என்ற கவலையின் விளைவாக இந்த இடறல் நேர்ந்திருக்கலாம்.முஸ்லிம்களுக்கு ஒரு கோஷம் கிடைத்துவிட்டால் ஓரு வகை கிளர்ச்சியும் போலித்தனமான எழுச்சியும் அந்த கோஷத்தின் பின்னணியில் வெளிப்படும். அறிவார்த்தமான அணுகுமுறைகளோ தீர்க்கமான திட்ட மிடுதல்களோ இல்லாமல் ஒரு பயணற்ற ஆடம்பர வெளிப்பாடாக அது முடிந்து போய்விடும்.சச்சார் அறிக்கையும் அப்படியொரு நீர்குமிழியாக வண்ணமயமாக தெரிந்து பிறகு கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து பொய்விடக் கூடாது.60 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முஸ்லிம்களை பற்றி தனியாகவும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் இத்தகைய தொரு அறிக்கை எந்த ஒரு அரசு சார்பாகவும் வெளியிடப்பட்டதில்லை. இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட சில ஆய்வுக்குழக்ககள் பத்தோடு பதினொன்றானத்தான் முஸ்லிம்களைப்பற்றி பேசின.முஸ்லிம்களின் இன்றைய சமூக பொரளாதார கல்வி நிலைகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையாக சச்சர்க்குழ வெளியிடட்ட தகவல்கள், சமுதாயத்தை ஆட்டம் காணச் செய்துவிட்டன. அரசியல் அதிகாரம் பெறுவதில் விலக்கிவைக்கப்பட்டதில் தொடங்கி, உயர்கல்விக்கான வாசல்கள் மூடப்பட்டதில் தொடர்நது பொருளாதார வளத்துக்கான வாய்ப்புகள் வழங்கப்படாததில் முடங்கி முஸ்லிம் சமுதாயம் எப்படி மோசமமாக பின்னடந்தள்ளளது அல்லது பின்னுக்கு த்தள்ளப்பட்டுள்ளது என்பதை வேதனையளிக்கிற புள்ளிவிபரங்களோடு அவர் தெரிவத்துள்ள கருத்துக்கள் இன்றைய முஸ்லிம் சமதாயத்தின் விழிகளை வலக்கட்டாயமாக திறந்து வைக்க போதுமானதாகும்.முஸ்லிம்களின் நிலையை பிட்டு வைத்த சச்சார் குழு, ஒரு முழமையான தீர்வை சொல்லியிருக்கிறதா என்பதில் ஒரு சில சர்ச்சைகள் இருக்கிறது என்றாலும் ஒரு பெதுநோக்கில் பார்க்கையில் சச்சாரின் அறிக்கை முஸ்லிம்களின் புண்பட்ட மனதுக்கு நம்பியளிக்கிற இதமான ஒரு ஒத்தடத்தை பதிவு செய்தள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தச் சூழ்நிலையில் சச்சார் அறிக்கை குறித்த விளக்கக் கூட்டங்கள் நடத்துகிற முஸ்லிம்கள், அவர்களது வரலாற்று வாடிக்கைப்படி சச்சாருக்கு ஒரு அச்சா போட்டுவிட்டு அமைதியடைந்து விடுவார்கள் என்றால் கடைசிப் பேருந்தை தவற விட்ட வெளியுர்க்காரனப்போல தவிக்ககிற நிலைக்குத் அவர்கள் தள்ளப்படுவார்கள். எனவே இந்த அறிக்கை குறித்து வழக்க்தை விட சற்று அதிகமாக யோசிப்பதற்கும் இவ்வறிக்கையின் அடிப்படையில் ஒரு செயல்திட்டத்தை வகுத்துச் செயல்படுவதற்கும் முஸ்லிம்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். முதலில் சச்சார் குழு என்பது என்ன? எந்த நோக்கத்தில் அதனுடைய அறிக்கை தேசத்தின முன்னிலையில் வைக்கப்பட்டள்ளது? அதன் ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது? என்னென் பரிகாரங்கள் செய்யப்பட வேண்டும் என்று அது அரசாங்கத்தை கேட்டுக் கொண்டிருக்கிறது? என்பதை அறிந்து கொள்ள வேண்டியது முஸ்லிம்கள் வாழ்கிற ஒவ்வொரு மஹல்லாவிலும் இருக்கிற ஆலிம்கள், ஜமாத் பொறுப்பாளர்கள், சமூகத்திற்கு எதையவது செய்ய வேண்டும் என்று நினைக்கிற சமூக சேவர்கள் அனைவருடயை கடமையாகும். மருத்துவம் படிப்பது பர்ளு கிபாயா (சமுதாயக கடமை) என்றுசொல்லும் சமூகத்தில் வாழ்கிற முஸ்லிம்கள் இந்த அறிக்கையின் அடிப்படை அம்சங்களை விளங்கிக்க கொள்வதும் பர்ளு கிபாயா என்று சொன்னால் அது தவறாகாது. மத்திஅரசை ஆண்டு கொண்டிருக்கிற ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள், தமது குறைந்த பட்ச பொதுத் திட்ட அறிக்கையில் முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்வதற்கு ஒர குழு அமைத்து அக்குழு தரும் பரிந்துரைகளின் அடிப்படையில் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் வகுக்கப்படும் என்று கூறியிருந்தன. அதன் அடிப்படையில் 2005 மார்ச் ஒன்பதாம்; தேதி தில்லி உயர்நீதி மன்ற நீதிபதி ராஜீந்தர் சச்சார் தலைமையில் சையத் ஹமீத், டாக்டர் டி.கே.ஊமன்,எம்.ஏ. பாஸித், டாக்டர் அக்தர் மஜீத், டாக்டர் அபுசாலிஹ் ஷரீப், டாக்டர் ராகேஷ் பாஸந்த ஆகிய 7 நபர்களைக் கொண்ட ஒரு உயர்மட்டக்குழ அமைக்கப்பட்டது. முஸ்லிம்களின் சமூக பொரளாதார கல்வி நிலைகைளைப்பற்றி ஆராய்ச்சி செய்து அவர்களின் முன்னேற்றத்திற்கு தகுந்த பரிந்துரைகள் வழங்க வேண்டும் என்பது இக்குழவிற்கு இடப்பட்ட பணியாகும். இக் குழு நாடுமுழுவதும் பயணம் செய்து அனைத்து அரசுத்துறைகள,; அரசு சார்பு நிறுனங்கள் தனியார் அமைப்புக்கள் உள்ளிட்ட சுமார் 500 அமைப்புக்களோடு தொடர்பு கொண்டு முஸ்லிம்களின் பொருளாதார சமூக கல்விச் சூல்நிலைகளைப்பற்றி தகவல்கள திரட்டியது. ஆதனடிப்படையில் ஆய்வு செய்து விரிவான 12 அத்தியாயங்களை கொண்ட சுமார் 417 பக்க அறிக்கையை 2006 நவம்பர் 18 ம் தேதி அன்று பிரதமரிடம் சமாப்பித்தது. நவம்பர் 30 ம் தேதி இவ்வறிக்கையை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ ஆர் அந்துலே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அத்தோடு இவ்வறிக்கையின் அடிப்படையிலான செயல்பாடுகள் 2007 பிப்ரவரி முதல் தொடங்கும் என்றும் கூறினார்.இந்தக் கட்டத்தில் முஸ்லிம்களின் நிலை குறித் ஒரு அறிக்கையை கேட்டுப் பெறுகிற ஒரு நிலைக்கு இந்திய அரசு தள்ளப்பட்டதற்கு என்ன காரணம ;என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்தியா கடந்த 20 ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஓரு இந்தியக் குடிமகன் தேசத்தின் எந்த மூளையில உட்கார்ந்து கொண்டிருந்தலும் இந்த வளர்;ச்சியை உணர முடியும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக கார் பங்களா வைத்திருந்தோரின் எண்ணிக்கை என்ன? இன்று அந்த வளர்ச்சியை தொட்டுவிட்டவர்களின் எண்ணிக்கை எனன ? கலர் டிவி யும் செல் போனும் எவ்வளவு இலகுவாக வாங்கும் பொருட்களாகிவிட்டன? இந்திய இளையர்களின் சம்பாத்திய வேகம் எத்தனை நூறு மடங்கு உயர்ந்திருககிறது? படித்த இளைஞர்கள் வேலை தேடி நிறுவனங்களின் வாசல்களில் காத்திருந்த நிலை மாறி கல்ல}ரிகளின் எல்லைகளுக்குள்ளேயே வேலைக்கான அனுமதி, அதிலும் உயர்ந்த சம்பளம் பெறுகிற வேலைக்கான அனுமதி கிடைத்துவிடுகிற என்னவொரு அற்புதமான சூழ்நிலை உருவாகியிரக்கிறது ? பஞ்சைப்பராரிகளின் தேசம் என்று இழிவாக கருதப்பட்ட தேசம் இன்று எப்படி துடிப்புமிக்க் பட்டதாரிகளின் தேசமாக உருவெடுத்திருக்கிறது? இத்தனை வளர்;ச்சிகள் இங்கு இருந்தாலும் இந்த வளர்ச்சியின் சுவை அனுபவித்திராத ஒரு சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் இருக்கிறது. நாடு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த நாட்டின் இரண்டாவது பெரும் சமுதாயமமான முஸ்லிம் சமுதயாம் பெரும் பின்னடைவில் இருக்கிறது. இது தேசத்திற்கு நல்ல செய்தி அல்ல. ஒரு கப்பலில் இரண்டு பேர் நோயாளிகள் என்றால் அது இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டுவிடுகிற விசயமல்ல.நலிவடைந்தவர்களின் நலம் நாடுவதும் அவர்களை உயரச் செய்வதம் மனிதாபிமானம் என்ற தளத்தில் மட்டுமல்லாமல் பாதகாப்பு, பொது அமைதி என்ற தளத்திலும் முக்கியமக கவனிக்கப்பட வேண்டிய விசயங்களாகும். 2020 க்குள் ஆயத பலதிலும் பொருளாதார வளத்திலும் அறிவியல் திறத்திலும் வல்லரசாகவிடுகிற கனவோட விரைந்து கொண்டிரக்கிற ஒரு தேசம் தன்னுடைய அடித்தட்டு சமூக மக்களை ஆட்டம் காண்கிற நிலையிலோ அத்திரப்படகிற நிலையிலோ விட்டு வைப்பது அறிவுடமையாகாது. இந்த அலை வரிசையில் தான் முஸ்லிம்களின் முன்னேற்றம் குறித்து அதிக கவனம் தற்போது எடுக்கபட்டு வருகிறது. அந்த வகையில முஸ்லிம்கள் முன்னேறுவது, தற்போதைய முஸ்லிம்களின் தேவை என்பதை விட தேசத்தின் தேவை என்று சொன்னால் அது பொருத்தமான ஒரு செய்தியே! அந்தத் தேவையை உணாந்து தான் அரசாங்கம் சச்சார் குழவை நியமித்தது.ஓரு அரசு தனது ஆளுமையின் கீழிருக்கிற மக்களில் ஒரு கனிசமான தொகையினர் பின்னுக்குத்தள்ளிப்பட்டிருப்பதை அறிந்து அவர்களை கைதூக்கிவிடுவதற்காக ஒரு திட்டம் தயாரிப்பது என்பது நாட்டின் மீது அக்கறை கொண்ட நடவடிக்கையின் ஒர் அங்கமே தவிர அது ஒரு சார்பு நடவடிக்கை அல்ல. முஸ்லிம்கள் என்ற வார்ததைய கேட்டதுமே சிலிர்தது எழுந்து கொள்ளும் பா.ஜ.க உள்ளிட்ட இந்துத்துவ பாசிச அமைப்புக்கள் சிறுபான்மையினரை தாஜா செய்வதற்காக இப்படி ஒரு அறிகை;கை சமர்ப்பிக்கப் பட்டிருப்பதாக குறை கூறின. அது அவர்களது காமாலைக் கண்களின் பலவினமாகும் சச்சாரின் அறிக்கை சுதந்திரத்திற்கு முந்தைய முஸ்லிம் லீக்கின் குரலை ஒத்திருக்கிறது என்று கூறிய பா.ஜ.கவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஜக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நாட்டை பிளவு படுத்திவிடும் என்று அலறினார். (சுநனகைக.உழஅ 09.12.06)எதெற்கெடுத்தாலும் தேசம் பிளவு பட்டுவிடும் என்று கத்துகிற ஒரு வகை மனோ நோய் பிடித்த இவர்களுக்கு 2001 ம் ஆண்டு இவர்களது அரசு, இந்திய வரலாற்றில் முதன்முறையாக மத அடிப்படையில் மக்கள் தொகை கணக்கொடுப்பை நடத்திய போது, தேசம் பிளவு பட்டுவிடும் என்ற அச்சம் ஏன் வரவில்லை? என்பதும், முஸ்லிம்களின் ஜனத்தொகை பெருக்கம் குறித்து இந்திய மக்களிடத்தில் அவர்கள் செ;யது வந்த பொய்ப் பிரச்சாரத்திற்கு சாவு மணிஅடித்து, முஸ்லிம்களின் ஜனத்தொகை பொருக்கம் குறைந்த வருகிறது என்று சொன்ன சச்சார் அறிக்கை தேசத்தை பிளந்த விடும் என்று அவர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்கள்? என்பதும் கடவுளுக்கு மட்டுமே அல்ல எல்லோருக்குமே வெளிச்சமாகத் தெரிந்த விசயம் தான். பா.ஜ.க. வின் பேரினவாத மதவாத அரசியலின் காட்டுக் கூப்பாடுகளில் இதுவுமு; ஒன்று.இவ்வறிக்கை குறித்து ஓட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் தனது மனநெகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிற சந்தர்ப்த்தில் போலிப் பெண்ணியம் பேசும் சில முஸ்லிம் பெண்கள் சச்சார் அறிக்கை முஸ்லிம் பெண்களின் நிலை குறித்து எதையும் பேசவில்லை என்று ஆட்சேபனை வெளியிட்டிருந்தார்கள்.இவர்களுக்கு உண்மையான பெண்ணியச் சிநதனை இருந்திருக்குமானால் இந்திய சமுதாயத்தில் பொண்களது நிலையைப்பற்றி ஒரு அறிக்கை தேவை என்று இவர்கள் அரசைக் கேட்டிருக்க வேண்டும். அதை விடுத்து, ஆண் பெண் என்று வித்தியாசம் பார்க்காமல் ஒட்டு மொத்தமாக சமுதாயத்தின் நலனைப்பற்றி பேசிய ஒரு அறிக்கையை அபத்தமாக விமர்ச்சித்தது இவர்களின் பின்னணி பற்றி மர்மத்தை ஓரளவு புலப்படுத்துவதாக அமைந்தது.சச்சார் அறிக்கை என்பது முஸ்லிம்களின் மீது பரிவு காட்டப்பட வேண்டியதன் அவசியத்தை பேசினாலும் அது முஸ்லிம்களின் மீது உள்ள அக்கறையினால் பேசப்பட்டதல்ல. தேசத்தின் மீதுள்ள அக்கறையினால் பேசப்பட்டதாகும். இந்த உண்மையை அனைவரும் குறிப்பாக முஸ்லிம்கள் அனைவரும் முதலாவதாக பரிந்து கொள்ள வேண்டும்.ஓர நாளும் இல்லத திருநாளாய் இந்திய அரசயல் வாதிகளுக்கு இப்படி ஒரு உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும் என்ற நல்ல புத்தி இப்போது எப்படி வந்தது என்று ஆச்சரியப்படுபவர்களுக்கு இந்த உண்மை ஓரளவு தெளிவைத்தரக் கூடும்.சுச்சார் குழு அமைக்கப்பட்டதின் நோக்கத்தை சரிவரப்புரிந்து கொண்ட பிறகு அது திரட்டி தந்துள்ள தகவல்களில் கவனம் செலுத்துவது தான் பொருத்தமானது. ஆப்பொது தான் தேசிய அளவில் சச்சார் அறிக்கையின் முக்கியத்தவமும் புலப்படும். அது மட்டுமல்ல தேசம் அடைந்துள்ள வள்ர்சியின் பலன் அனைத்து தரப்பினருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று நமது பிரதமர் சமிபகாலமாக பேசி வருவதன் கருத்தும் புரியும்இந்தியாவில் 14 கோடி முஸ்லிம்கள் இருப்பதாக குறிப்பிடும் சச்சார் குழு அவர்கள் எவ்வளவு மேசமாக பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதையும் அவர்களது பின்னடைவை சரி செய்வதற்கு எத்தகைய விரிவான தளங்களில் நடவடிக்கை தேவை என்பதையும் மிகுந்த எச்சரிக்கையோடு பதிவு செய்திரக்கிறது.சச்சார் குழு தன்னுடைய பரிந்துரைகளை ஏராளமான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் வழங்கியுள்ளது. அந்தப் புள்ளிவிபரங்கள் முஸ்லிம்களின் மிதப்பான கற்பனைகளை கலைத்தப் போடக் கூடியவை. ஏதார்தத்தின் கோர முகத்தை அச்சம் தருகிற வகையில் அம்பலப்படுத்தக் கூடியவை.இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13.4 சதவிதத்தினராக இருக்கின்றனர். ஆனால் அரசாங்கத்தின் பொறுப்பான பதவிகளில் அவர்கள் உரிய விகிதாச்சாரத்தில் இல்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் 3 சதவீதத்தினர் தான் முஸ்லிம்கள். சர்வதேச விவகாரங்களை தீர்மாணிக்கிற ஐ.எப்.எஸ் அதிகாரிகளில் 1.8 சதவீததினராகவும், ஐ.பி.எஸ் அதிகாரிகளில் 4 சதவிததத்தினராகவும் மட்டுமே முஸ்லிம்கள் இருக்கிறார்கள். மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லை பாதுகாவல் படை உள்ளிட்ட இந்திய பாதுகாப்பு நிறுவனங்களில் 3.2 சதவீதத்தினராகவும் மாவட்ட நீதிபதிகளில் 2.7 சதவீதத்தினராகவும் மட்டுமே முஸ்லிம்கள் பதவி வகிக்கிறார்கள். மத்திய மாநில அரசு ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் 4.9 சதவீதத்தினர் மட்டுமே முஸ்லிம்கள். இந்த தேசத்தின் இரண்டாவது பெரும் சமுதாயமான முஸ்லிம் சமதாயம் நாட்டின் நிர்வாக அமைப்பில் பங்குபெறுவதில் இவ்வளவு தூரம் பின்னடைந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணமாக அமைகிற கல்வித் துறையில் முஸ்லிம்களின் பின்னடைவு வேதனையளிக்கிற விதத்தில் சரிவடைந்திரக்கிறது என்று சச்சார் குழ கூறுகிறது.முஸ்லிம்களில் 4 சதவீதத்தினர் தான் பள்ளிப்படிப்பை தாண்டி கல்லூரிக்கு செல்கிறார்கள். 7.2 சதவீதத்தினர் தான் உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்கள்; என்றும் பட்டமேற்படிப்பு படித்தவர்கள் 1.2 சதவிதத்தினர் தான் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.ஓரு அதிர்ச்சியளிக்கிற செய்தியாக, தலித்துகளைவிட முஸ்லிம்கள் பின்தங்கியிருக்கிறார்கள் என்ற உண்மையை புள்ளி விபரங்களோடு சச்சார் அம்பலப்படுத்துகிறார்.இந்தநாட்டை பன்னூறு ஆண்டுகள் கட்டியாண்ட சமுதாயம் என்ற பழம் பெறுமையினால் அல்ல. உலக சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக திகழ்ந்து உலகத்தின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப கடமைப்பட்ட ஒர சமுதாயம், அதற்கான முன்னுதாரணங்களையும் பரந்த அனுபவத்தையும் கொண்ட ஒரு சமுதாயம் என்ற வகையில் முஸ்லிம் சமுதாயத்தின் இன்றைய நிலை குறித்து சச்சார் குறிப்பிடும் தகவல்கள் மிகுந்த வேதனை அளிப்பவை. இந்தியாவில் வாழ்கிற முஸ்லிம்களில் 94.8 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக் கீழே இருக்கிறார்கள். இந்திய நகரங்களில் இருக்கிற முஸ்லிம்களில் 28.3 சதவீதம் பேர் மிக மோசமான வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்வதாக குறிப்பிடுகிற சச்சார் குழு இந்தியாவில் இந்நிலையில் வாழ்பவர்களின் மொத்த சதவீதமே 22.8 தான் என்று குறிப்பிடுகிறது. நாடு முழுவதிலுமுள்ள சிறு நகரங்களில் தலித்தகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் மாதவருவாயை விட முஸ்லிம்களின் மாத வருவாய் குறைவாக இருக்கிறது.நீதித்துறையில் தலித்துகளின் பங்கு 20 சதவீதமாக இருக்கிற போது முஸ்லிம்கள் பங்கு 7.8 சதவீதமாக இருக்கிறது.தலித்துகளில் 23 சதவீதத்தினருக்கு குழாய் குடிநீர் கிடைக்கும் போது முஸ்லிமகளில் 19 சதவிதத்தினருக்கு மட்டுமே அது கிடைக்கிறது.தலித்துகளில் 32 சதவீதம் பேருக்கு ரேஷன் கார்டு இருக்கிறதென்றால் முஸ்லிம்களில் 22 சதவிததினரே ரேஷன் கார்டு வைத்திருக்கின்றனர்.பொதுத்துறை (7.2) சுகாரத்துறை (4.4) ரயிலவே துறை (4.5) போன்ற பல்வேறு துறைகளில் தலித்களைவிட முஸ்லிம்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது.முஸ்லிம் விவசாயிகளில் 2.1 சதவீதத்தினர்தான் சொந்தமாக டிராக்டர் வைத்திருக்கிறார்கள். ஒரு சதவீதத்தினர் தான் நிலத்துக்கு நீர்பாய்ச்ச பம்ப்செட் வைத்திரக்கிறார்கள்.எல்லா வற்றுக்கும் மேலாக சச்சார் குறிப்பிடுகிற முக்கியமான விசயம் முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப அரசியல் அதிகாரத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வில்லை என்பதாகும். தற்போதைய மக்களவையில் 543 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு சச்சார் வழங்கும் எண்ணிக்பை;படி பார்த்தாலும் சுமார் 75 பேர் முஸ்லிம் எம்.பி க்கள் இருக்க வேண்டும். ஆனால் இப்பொதைய மக்களவையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 33 மட்டுமே! மின்சாரம் இல்லாத கிராமங்களில் அதிகம் வாழ்பவர்கள் முஸ்லிம்கள். அது போல சேரிகளில் வாழபவர்களிலும் முஸ்லிம்களே அதிகம். இவற்றில் தலித்துகளைவிட முஸ்லிம்கள் மோசமாக இருக்கிறார்கள் என்பது போன்ற தகவல்கள் பெருமைமிகு சமுதயாத்தின் அந்தஸ்த்திற்கும் அடையாளத்திற்கும் சிறிதும் பொருத்தமானதல்ல. அதேபோல வேகமாக வள்ர்நது வருகிற ஒரு நாட்டில் அதனுடைய மக்களில் கணிசமானோர் இத்தகைய பரிதாப சூழ்நிலையில் பின்னடைந்திரப்பது அந்நாட்டின் முன்னேற்றத்திற்கும் பொருத்தமானதல்ல. ஒரு நாடு வளர்நத நாடென்றால் அதன் அத்தனை அங்கங்களும் வளர்ந்ருக்க வேண்டும். உருவம் வளர்ந்து கால் வளராவிட்டால் அது ஊனம் என்று ஆகிவிடாதா? ஆதனால் தான் சச்சார் அறிக்கை நாடடிலுள்ள முஸ்லிமகளின் நிலையை சுட்டிக்காட்டி அவர்களை முன்னேற்றிவிடுவதற்கு தேவையான பல நடவடிக்கைககைளை அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது. அரசாங்கமும் அந்த அறிக்கையின் மீது நடவடி;ககைளை தொடங்கப் போவதாக கூறிவரகிறது.அதே நேரத்தில் சச்சார் அறிக்கையின் ஒவ்வொரு விசயத்தையும் அலசி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று எண்ணிக் கொண்டு முஸ்லிம் சமுதாயம் வாளாவிருந்துவிடக் கூடாது. அல்லது எதிர் நடவடிக்கையாக எங்கள் உயிரைக் கொடுத்தேனும் சச்சார் அறிக்கையை செயல்படுத்தப் போராடுவோம் என்று அதீத உணர்ச்சி வசப்பட்டு கோஷம் பொட்டுக் கொண்டிரக்கவும் கூடாது.சச்சார் அறிக்கை அரசாங்கத்திற்காக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்காக வழங்கப்;பட்டிருக்கிறது என்பது ஒரு முதன்மையான உண்மை என்றாலும் அதை விட முக்கியமாக இந்த அறிககையை முஸ்லிம் சமதாயம் தன்னுடைய சுய வளர்ச்சிக்கான வரைபடமாகவும் வழிகாட்டுதலாகவும் பயன்படுத்திக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறது. சச்சார் அறிக்கை குறித்து மிக அழுத்தமாக உணரப்பட வேண்டிய பேருண்மை இது. முஸ்லிம்கள் வசிக்கிற ஒவ்வொரு ஊர் அளவிலும் மஹல்லாக்கள் அளவிலம் சுச்சார் அறிக்கை விவாதிக்கப்பட வேண்டும். ஆரசியல் அதிகாரம் பெறுதல் நவின கல்வி பெறுதல் பொருளாதார வளத்திதை பெருக்கிக் கொள்வதற்காக போதுமான உதவிகளைப் பெறுதல் உள்ளிட்ட அறிக்கை குறிப்பிடுகிற அனைத்து அம்சங்களும் அலசப்பட வேண்டும். அப்படி அலசுகிற போது ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது நகரத்தின், ஊரின், அல்லது கிராமததின் நிலையை அந்த அறிக்கையோடு ஒப்பிட்டப் பார்க்க வேண்டும்.இதில் மறுக்க முடியாத ஓரு உண்மை என்னவென்றால், ஒவ்வெரு பகுதியை சேர்ந்தவர்களும் இந்த அறிக்கையின் படி தங்களது பகுதியின் நிலவரத்தை மதிபட்டுப்பாhக்கையில் முஸ்லிம் சமுதாயம் முன்னேறாமல் போனதற்கு, நமது தரப்பில் ஏற்பட்ட தவறு என்ன என்பதை உணர்நது கொள்ள ஒரு நல்ல வாய்ப்புக் கிடைக்கும். ஆது மட்டுமல்ல பிறறை எதிர்பாhத்துக் கொண்டிரக்காமல் நமது முன்னேற்றத்தை நாமே திர்மானிக்கிற சக்தி எந்த அளவு நம்மிடம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளவும் அது உதவும். சுச்சார் அறிக்கை குறித்து கருத்து வெளியிடுகிற கல்வியாளர்கள் அறிஞர்கள் பலரும் முஸ்லிம் சமுதாயம் இந்த அறிக்கைவைத்து அரகளிடம் கையேந்திக கொண்டிருப்பதை விட இந்த அறிக்யை தங்களது எதிர்கால வளர்ச்சியை திட்மிடுவதற்கு ஒரு திட்ட வரையறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்படுவதை சமுதாயம் மிக அழுத்தமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.சச்சார் குழவின் உறுப்பினர் செயலராக இருந்தவரும் பிரபல பொருளாதார நிபுணருமுhன டாக்டர் அபு சாலிஹ் ஷரீப் அமெரிக்க வாழ் இந்திய முஸ்லிம்களிடையே உரையாற்றும் போது முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அமைப்புக்களுக்கும் சில ஆலொசனைகளை வழங்கியுள்ளார். சாதகமான பரிகாரங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்காதீர்கள். அது பற்றி கேட்டுக் கொண்டிருக்கவும் வேண்டாம் என்று கூறியுள்ள அவர் முஸ்லிம்கள் தங்களது உரிமைகளையும் தேவைகளயும் முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறியள்ளது மிகுந்த பொறுப்புணர்Nவுhடு கவனிக்க வேண்டிய செய்தியாகும்.னுச. ளூயசகைக hயன கநற ளரபபநளவழைளெ கழச வாந ஆரளடiஅள யனெ வாந ழசபயnணையவழைளெ சநிசநளநவெiபெ யனெ றழசமiபெ கழச வாந ஆரளடiஅள. ர்ந ரசபநன வாநஅ ழெவ வழ யளம யனெ றயவை கழச கயஎழசள iளெவநயன hந ளரபபநளவநன வாயவ ஆரளடைஅள மழெற வாநசை சiபாவள யனெ னநஅயனெ றாயவ ளை னரந வழ வாநஅ. (னுச. ளூயசகைக னரசiபெ hளை வயடம in டீயடவiஅழசநஇ ஆயசலடயனெ ழn 3 குநடி 2007)அரசாங்கத்திடம் பொத்தம் பொதுவாக சொல்லப்படுகிற பரிந்துரைகள் பயணளிக்காது. எதையும் திட்டமிட்டு வரையறுத்து, இன்றைய தகவல் தொழில் நுட்ப உலகத்தின் பாஷையில் சொல்வதனால் புராஜக்ட் ஒர்க் செய்து முன்வைக்கப்படுகிற திட்டம் தான் செயல்பாட்டிற்கு வருவத சாத்தியமாகும் என்பதை விவரமறிந்த அனைவரம் ஒத்தக் கொள்வார்கள். அது மட்டுல்ல ஒரு குறிப்பிட்ட திட்டவட்டமான செயல்திட்டத்தை வகுத்துக் கொண்டிருந்தால் தான் சமுதாயம் தன்னுடைய கோரிக்கை கேட்கும் போது அது கூர்மையுடையதாக அமையும். இந்த வகையில் முஸ்லிம்களின் ஒவ்வொரு மஹல்லாவும் தத்தமது பகுதிகளுக்கான புராஜெக்ட் ஒர்க்கை சச்சார் அறிக்கை அடிப்படையில் தயார் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. உதாரணத்திற்கு ஒன்றை சுட்டிக்காட்ட முடியும்.சச்சார் அறிக்கை அரசியல் அதிகாரத்தில் முஸ்லிம்கள் எவ்வளவு தூரம் விலக்கி வைக்கபட்டிருக்கிறார்கள் என்பதை பட்டியலிடுகிறது. நாட்டின் மொத்த ஜன்த்தொகையில் 15 சதவீதம் இருக்கிற முஸ்லிம்களுக்கு பஞ்சாயத்துகளிலிருந்து பாராளுமன்றம் வரை உரிய பங்களிப்பு வழங்க்க படவில்லை என்கிறது. 543 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் 33 பேர் மட்டுமே முஸ்லிம்கள் என்பதை குறிப்பிடு சச்சார் இது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் அதிகாரத்தில் பாதியை விட குறைவானதே என்று குறிப்பிடகிறது. அரசியல் அதிகாரத்தில் முஸ்லிம்களுக்கு உரிய பங்களப்பு வழங்கப்படுவது தான் முஸ்லிம்களை கைதூக்கி விடுவதில் மிக முக்கியமமமான அம்சம் என்று குறிப்பிடுகிற சச்சார் அதற்கான வழிமுறைகளைகளையும் கூறுகிறார். அதுதான் மிகவும் துணிச்சலானது மிகவும் கவனிக்கத்தகுந்தது. முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கு வசதியாக முஸ்லிம்கள் நிறைந்துள்ள தொகுதிகளை மறு சீரமைப்புச் செய்யும் போது முஸ்லிம்கள் வெற்றி பெறுவதற்கு ஏற்ப தொகுதிகள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். முஸலிம் சமதாயத்தை யாராவது வுஞ்சிக்கப்பட்ட சமுயதாயம் என்று கூறினால் அஸ்தஃபிருல்லாஹ் அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் அல்லாஹ் நல்லபடிதான் நம்மை வைத்திருக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருக்கிற யாராவது சச்சார் குறிப்பிடகிற இந்த அம்சத்தை யோசித்தப் பார்த்தால் வஞ்சிக்கப்பட்ட சமுதாயம் என்ற வார்த்தைக்கான மொத்தப் பொருளும் முஸ்லிம் சமுதாயத்திற்கு பொருந்திப் போவதை உணர்வார்கள். சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி மன்றங்களுக்கான தொகுதிகள் அமைக்கப்படுகையில் மிக கவனமாக முஸ்லிம்களின் தொகுதிகள் சிதைக்கப் பட்டிருப்பதை எங்கும் பார்க்க முடியும். நான் வசிக்கிற பகுதி எங்களது மாநகராட்சி வார்டுகளிலேயே மிகப்பெரியது. சுமார் 25 ஆயிரம் வாக்காளர்கள் இதில் இருக்கிறார்கள். சாதாரணமாக 7 ஆயிரம் பேர் இருந்தாலே அதிகம். ஓரு வார்டில் இரண்டாயிரம் வாக்காளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். எங்களது வார்டில் விசேஷம் என்னவென்றால் முக்கால் பங்கு வாக்காளர்கள் முஸ்லிம்கள். இந்த வார்டை பிரித்து அறிவித்தால் மூன்று முஸ்லிம்கள் வெற்றி பெறுவதற்கு வழிஏற்படும். இந்த வார்டில் இப்போது ஒரு முஸ்லிம் தான் வெற்றிபெற முடிகிறது என்றாலும் உண்மையில் மூன்று முஸ்லிம் கவுன்சிலர்கள் வெற்றி பெற வேண்டிய இடத்தில் ஒரு முஸ்லிம் கவுன்சிலர் வெல்கிறார் என்பதே எதார்த்தம். முஸ்லிம்களோ இது குறித்து எந்த விழிப்புணர்iவும் இதுவரை பெறவில்லை. முஸ்லிம்களுக்காக நாடுதழுவிய போராட்டம் நடத்துகிற அமைப்பக்களுக்கும் இத குறித்து யோசிக்க நேரம் இருப்பதில்லை. அதே போல எங்களூரில் முஸ்லிம் கனசமாக வாழ்கிற பகுதிகள் ஒர தொடர்சிசியான நேர்கோட்டில் தான் இருக்கிறது என்றாலும் அது மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்குள் பிரித்துப பொடப்படடிருப்பதால் முஸ்லிம்கிள் அரசியல் வலிவு சிதைக்கபட்டிருக்கிறது. பல விசயத்திற்கும் ஆர்hபட்டமும் பேரணிகளும் நடத்துகிற முஸ்லிம்கள் இது குறித்து யொசித்தும் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே!இந்தப்பிரசசினை எங்களது நகரத்தில் மட்டுமல்ல. முஸ்லிம்கள் கனிசமாக வாழ்கிற ஒவ்வொரு பகுதியிலும் இருக்கிறது. ஆதிராம்பட்டினமும் முத்துப்பேட்டையும் ஆரம்பத்தில் ஒரே தொகுதியாக இருந்தது. ஆப்பொது ஒரு மஸ்லிம் சட்டமனற் உறுப்பினர் வெற்றி பெறுவதற்கு வாயப்பிருந்தது. முத்துப் பேட்டையை பிரித்து பட்டுக் கோட்டையோடு இணைத்த போது அந்த வாய்ப்பில் மண்விழுந்தது. ஆதே போல முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கிற கூத்தாநல்லூர் பொதக்குடி அத்திக்கடை பூதமங்கலம் ஆகிய பகுதிகளை ஒரு தொகுதியின் கீழ் இணைத்தால் ஒரு சட்டமன்ற உறுப்பினர் திட்டவட்டமாக தோந்தெடுக்ப்பட வாய்ப்பு ஏற்படும். ஆனால் இந்தப்பகுதிகள் மன்னார்குடி நன்னிலம் திருவாரூர் ஆகிய பல்வேறு தொகுதிகளுக்குப் பங்கிடப்பட்டதில் குரங்கு அப்பத்தை பங்கிட்ட கதையாகிவிட்டது. அங்கும் ஒரு முஸ்லிமை தேர்ந்தெடுக்கிற வாய்ப்பை சமுதாயம் இழந்தது.ஐய்யம்பேட்டை பாபநாசம் ராஜகிரி ஆகிய முஸ்லிம்கள் கனிசமாக வாழ்கிற பகுதிகள் ஒரு தொகுதியாக இணைக்கப்பட்டால்; அதே போல நீடூர் மேலக்காவேரி பூந்தோட்டம் ஆகிய பகுதிகளும் ஒரே சட்டமன்றத்தொகுதியாக இணைக்கப்பட்டால் சில முஸ்லிம் உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு யாருடைய தயவும் இன்றி தேர்நதெடுக்கப்பட வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது. முஸ்லிம் சிந்தனையாளர்களால் முன்வைக்கப்படுவதை இந்தக்கருத்துக்களை சமுதாயம் கவனிக்க வேண்டும்.சுச்சார் அறிக்கை நமது கண்களை திறக்கச் சொல்கிறது. ஊங்களுடைய அரசியல் அதிகாரம் எங்கெல்லாம் பறிக்கப்பட்டிருக்கிறது என்று கவனியுங்கள். புள்ளிவிபரங்களை தயார் செய்யுங்கள். எங்களுக்தர வேண்டிய இந்த உரிமை நீங்கள் அமைத்த உயர்நிலைககுழ சொன்னபடி தாருங்கள் என்று அரசாங்கத்தை கேட்குகம் படி சச்சார் அறிக்கை நமக்குச் இலைமறைவாகச் சொல்கிறது. துரதிஷ்டவசமாக சுச்சார் அறிக்கையின் விபரங்களை, அது வெளியடும் இந்திய முஸ்லிம்களின் அவலமான சூழ்நிலையை, முஸ்லிம்களின் முற்றத்திற்கு எடுத்துக் கொண்டு போய் கடை விரித்துக் காட்டி, சமுதாயம் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்க கடமைப்பட்டவர்கள் அந்த அறிக்கைகைய சரியாகப் புரிந்து சரியான ஒரு நகர்வுக்கு சமதாயத்தை இழுத்து வந்திருக்கிறார்களா என்பது மிக கவலை தோய்ந்த ஒரு கேள்வியாகும்.சமதயாத்திற்காக போராட களம் பல கண்ட பராக்கிரமம் கொண்ட அமைப்புக்கள் தங்களது இயக்கங்களின் அடையாளத்தை பாதுகாத்துக் கொள்வதற்காகாக நடத்துகிற பேரணிகளுக்கு தயாராகும் அவசரத்தில் சச்சாரையும் துணைக்கு இழுத்து பக்கத்தில் வைத்துக் கொண்டதை தவிர, மறத்துப் போன சமுதாயத்தை விழிப்படையச் செய்ய வெறெந்த முயற்சியையும் செய்யவில்லை. அவர்களுக்கு ஆர்ப்பட்டமாக செயல்படத் தெரிந்த அளவு ஆக்கரமமாக செயல்படத் தெரியாது என்பது அதற்கு காரணமாக இருக்கலாம்.ஜும்ஆ என்ற வளமமான அரங்கின் வீரியத்தை முழுமையாக புரிந்து கொள்ளாத மார்க்க அறிஞர்கள் இதை கொண்டு போய்ச் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்ப்பது பாவம். இதற்காக அவர்களைச் குற்றம் சொல்வது அதைவிடப் பெரிய பாவம். ஏனெனில் முழங்காலுக்கு கீழே ஜுப்பா அணிந்தால் மட்டும்தான் தான் ஒருவர் பக்தியாளராக இருக்க முடியம் என்று உரத்து நம்பிக்கொண்டிருக்கிற சமூகத்தால் உருவாக்கப்படுகிற ஆலிம்கள், சமுதாயத்தில் தன் அடையாளத்தை பாதுகாத்துக் கொள்வதற்கே போராட வேண்டியிருக்கிற போது இதற்கெல்லாம் யோசிப்பதுற்கு கூட அவர்களுக்கு தெரியாது என்பது தான் எதார்த்தம். அவர்களை இடித்துரைப்பதால் எந்தப் பலனும் இல்லை. அது அன்னாந்து உமிழ்வது போல அபத்தமானது.( ஒரு நல்ல செய்தியாக கடந்த 24 ம்தேதி நீடூரில் கூடிய தமிழ்மாநில ஜமாத்துல் உலமாவின் செயற்குழு சச்சார் அறிக்கை குறித்த விழிப்புணர்வுக் கூட்டங்களை நாடுமுழுவதும் நடத்த திட்மிட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அது ஆரோக்கியய்மான சிந்தனையையும் ஆக்ககரமான செயல்பாட்டையுமு; சமுதாயத்தில் தோற்று விக்க வேண்டும்) இந்நிலையில் உதய சூரியனின் கதிர்கள் வந்து தட்டி எழுப்பும் என்றோ கை தூக்கி விடுவதற்கு கைகள் வரும் என்றோ முஸ்லிம் சமுதயம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் அது இன்னும் சில நூற்றாண்டுகளுக்கான சரிவிலே சமுதாயத்தை தள்ளிவிடக்கூடும்.தன்னுனர்வு பெற்று தனக்கான பாதையை தானே அமைத்துக் கொள்ளத் தயராகாத ஒரு சமுதாயத்தை கர்த்தன் வந்து காப்பாற்றுவான் என்று எதிர்பார்த்தால் அது கானல்நீரில் கப்பலோட்டுவதற்கு சமமானது. அது இஸ்லாமின் எண்ணவோட்டத்திற்கு எதிரானதும் கூட.தனது வெற்றிப்பயணத்திற்கான கட்டுச்சாதத்தை தன்னிடமிருப்பதிலிருந்தே தயார் செய்து கொள்ள முஸ்லிம் சமதாயம் முன் முயறச்சி எடுக்க வேண்டும். அதை விடுத்து சச்சார் என்று உச்சாடணம் மட்டும் செய்து கொண்டிருந்தால் அது முல்லா புத்தகத்தை பிடித்திருந்தது போல வேடிக்கையாகிவிடும்.

அப்ஜல் வழக்கும் இந்திய முஸ்லிம்களின் மனோ நிலையும்

டிசம்பர் மாதம் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வாட்டியெடுக்கிற குளிர்காலம். 1992 க்குப்பின் இயற்கையான சீதோஷன நிலையில் மாற்றம் ஏதும் இல்லை என்றாலும் கூட அரசியல் சமூக நிலைகளில் உஷ்ணம் படரத்தொடங்கியது. இந்த ஆண்டு அந்த உஷ்ணம் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்ஜல் கோர் தண்டனை விவகாரத்தால் இன்னும் அதிகரித்தது.நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இது வரை 55 மரண தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் தண்டனை பெற்றவர் நாதுராம் கோட்ஸே. தேசப்பிதா காந்தியை படுகொலை செய்த இந்துத்தவா ஆதரவாளர். புhரதீய ஜனதா உள்ளிட்ட இந்துது;தவ கட்சியனரின் ஆத்மீக தவைர். இறுதியாக தண்டனை வழங்கப்பட்டவர் கற்பழிப்பு மற்றும் கொiலை வழக்கில் சிக்கிய மேற்குவங்காளத்தை சேர்ந்த தனஞ்செய் என்ற இளைஞர். இந்தியாவில் மொத்தம் 333 கைதிகள் மரண தண்டனையை எதிர்நோக்கியிருப்பதாக 2003-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சிறைத்துறைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தேதிக்கு இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த 9 மாதங்களில் மட்டும் 32 வழக்குகளில் 56 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக 2006 நவம்பரில் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட கைதிகளில் 21 பேர் தண்டனையைக் குறைக்கக் கேட்டு குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்துக் காத்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையில் புதிதாக இணைந்திருப்பவர் முஹம்மது அப்ஜல் குரு. 2001 ம் ஆண்டு டிசம்பர் 13 ம் தேதி இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது ஆயதம் ஏந்திய தீவிவாதிகள் ஐந்து பேர் வெடிகுண்டு தாக்குதல் தொடுத்தனர். ஆதில் 7 காவலர்கள் உட்பட 9 பேர் பலியானார்கள். தாக்குதலில் ஈடுபட்ட ஐவரும் பாதுகாப்பு பiடினரடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்டனர். அப்போது நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்ததால் சுமார் 300 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அந்த வளாகத்தில் இருந்தனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமமாக கொண்டு செயல்படுவதாக சொல்லப்படும் ஜெய்ஸே முஹம்மது என்ற அமைப்பின் மீது குற்றம் சாட்டப் பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் உறவு பெரிய அளவில் சீர்கெட்டது. இரு நாட்டு இராணுவங்களும் மோதிக் கொள்ளத் தயாராயின. சர்வதேச நிர்பந்தங்களைத் தொடர்ந்து நிலமையின் சுடு தணிந்தது. இராணுவம் பின் வாங்கிக் கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதல் பற்றிய புலன் விசாரணையை 17 நாட்களில் முடித்துவிட்ட தில்லி சிறப்புப் போலீசார்;; 4 நபர்களை கைது செய்தனர். சௌகத் அஜீஸ், அவரது மனைவி நவ்ஜோத் சித்து என்கிற அப்ஸான், அப்துர் ரஹ்மான் கீலானி, முஹம்மது அப்ஜல் கோர் ஆகிய அந்நால்வர் மீதும் விஷேச நீதிமன்றத்தில் குறறப்பத்ரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதீமன்றம் நவ்ஜோத் சித்துவுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மற்ற மூவருக்கு மரண் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. வுpசேஷ நீதிமன்றம் வழங்கிய இத்தீர்பபை எதிர்த்து கீலானி தில்லி உர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். கீலானி தில்லிப் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்ததால் அவருக்கு ஆதரவாக, அந்தப் பல்கலை கழகத்தில் செயல்பட்ட அரசு சாரா ஆசிரியர் அமைப்பு, மேல் முறையீட்டுக்கு தேவையான உதவிகளை செய்ததனால் மேல் முறையீட்டுக்கான வய்ப்பு கீலானிக்கு கிடைத்தது. விசாரனைக்குப்பின் உயர்நீதிமன்றம் கீலானியையும் நவ்ஜோத் சித்துவையும் வீடுதலை செய்தது. தில்லி உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இரண்டு மேல் முறையீட்டு மனுக்கள் பதிவு செய்யப்பட்டன. ஓன்று காவல் துறையின் மூலம் இருவரின் விடுதலைக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது. மற்றொன்று அப்ஜல் மற்றும் சௌகத்தின் சார்பில் தண்டனையை எதிர்த்து பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 2006 செப்டம்பர் 26 ம் தேதி இருவரின் விடுதலையை உறுதிப்படுத்திய அதே வேளையில் இந்த வழக்கில் மேலும் ஒரு திருத்தத்தை செய்தது. சௌகத் அஜீஸின் மரண தண்டனைணையை 10 ஆண்டு சிறைத்தண்டனைiயாக குறைத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. அப்ஜலின் மரண தண்டனையை உறுதி செய்ய உச்சநீதமன்றம் 2006 அக்டோபர் 20 ம் தேதி காலை 6 மணிக்கு அவர் தூக்கிலப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.இதைத் தொடர்ந்து எதிர்பாராத வகையில் காஷ்மீர் மாநிலத்தில் பெரும் ஆர்ப்பட்டங்கள் கடையடைப்புக்கள் நடந்தன. காஷ்மீர் மாநில முதல்வர் குலாம் நபி ஆஸாத், அப்ஜலக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் அது காஷ்மீரில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இந்திய நீதி அமைப்புபின் மீது காஷ்மீரிகளுக்கு பெரும் அதிருப்திய ஏற்படுத்திவிடும் என்றும் கூறினார். காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் அனைவரும் அவருடைய கருத்தை பிரதிபலித்தனர். காஷ்மீர் பார்கவுன்சில் உள்ளிட்ட ஏராளமான அமைப்புக்கள் அப்ஜலின் மரண தண்டனை உத்தரவு மாற்றப்பட வேண்டும் என்று கோரினர். இந்திய முஸ்லிம்களை ஆச்சரியப்பட வைத்த விசயம் இது! நம்முடைய பாராளுமன்றத்தீன் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். அந்தக் குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டு ஒருவருடைய தண்டனை குறைக்கப்பட்டு ஒருவருக்கு மட்டுமே மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இவ்வளவு தூரம் குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்ட ஒருவருக்கு கருணை காட்டச்சொல்லி ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களும் அங்குள்ள ஆளும் கட்சி எதிர்க்கட்சி எல்லோருமாக இணைந்து கேட்கிறார்களே! மாநில முதல்வரே அப்ஜல் விசயத்தில் சரியான நீதிவழங்கப்பட வேணடும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதுகிறாறே என்ன விந்தை இது ! என்ற கேள்வி காஷ்மீர் பற்றி அறியாத அனைத்து மக்கள் மத்தியிலும் எழுந்தது. இந்நிலையில், அப்ஜல் குருவுக்கு மரண தண்டனை வழங்கிவிட்டால் இந்திய தேசத்தின் பாதுகாப்புக்கான அத்தனை அச்சுறுத்தல்களும் அகன்றுவிடும் என்பது போலவும், அந்த மரண தண்டனையை அனுமதிக்கவும் ஆதரிக்கவும் செய்தால் மட்மே தேசபக்தர்களாக இருக்க முடியும் என்பது போலவும் ஒரு கருத்து தொலைக்காட்சிகள் இணையதளங்கள் மூலமமாக வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. தேசத்தின் இறையான்மைக்கு அடையாளமமாகத் திகழும் நாடாளுமன்றத்தை பாதுகர்ககத் திராணியற்ற பாரதீய ஜனதா கட்சி அப்ஜலக்கு எதிராக உரத்து குரல் எழப்புவதின் மூலம அந்த இயலாமையை மறைக்க முயற்சி செய்கின்றது. அப்ஜலுக்கு மன்னிப்புக் கேட்டபவர்கள் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அது கூறிவருகிறது. நாடாளுமனறத்ததையும் அக்ஷர்தாம் கோயிலையும் கார்கில் முனைகளையும் பாதுகாககத்தவறியவர்கள், குஜராத்தில் தங்களது சொந்த மக்களையே கொடூரமாக கொன்றுவித்தன் மூலம் தங்களது கட்சியை சாhந்த வசிஷ்டராலேயே ராஜ கடமையை பாதுகாக்கத் தவறிவிட்டவர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஓரிசாவில் பாதிரியார் ஸ்டைன்ஸ் மற்றும் அவரது குழந்தைகளை தீயிட்டு கொளுத்திய தாரா சிங்கிற்கு வக்காலத்து வாங்கியவர்கள் யாரிடம் எப்போது மன்னிப்புக் கேட்கப்போகிறார்கள் என்பதை அறிய நாடே எதிர்பார்ததுக் கொண்டிருக்கிற சூழ்நிலையில் பாரதீய ஜனதாவும் அதன் கள்ளக் குழந்தைகளும் அப்ஜல் விசயத்தில் தங்களது தேசபக்தியை விளம்பரபபடுத்தவும் விறபனை செய்யவும் முயற்சி செய்கினறடன. உலகின் எந்த நீதிமன்றமானாலும் தண்டனை வழங்குகிற போது ஒரு தேதியை குறிப்பிட்டுத்தான் தீர்ப்பு வழங்கும். அந்தத்தேதி அந்த தண்டனைக்கான இறுதித் தேதி அல்ல. மேல் முறையீடுகளும் கருணை மனுக்களும் முற்றிலுமமாக நிராகரிக்கப்பட்ட பின்னரே தண்டனைக்கான இறுதித் தேதி நிர்ணயிக்கப்படும். உச்சநீதிமன்றம் அப்ஜலுக்கு தண்டனை வழங்கவதற்கா அக்டேபா 20 ம் தேதியை நிர்ணயம் செய்திருந்தாலும் அந்தத் தேதியில் தண்டனை வழங்கப்படுவது சாத்தியமல்ல. உள்துறை அமைச்சர் சிவராஜ் படடீல் சொன்னது போல மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் தங்களது வாழ்வுரிமையை பாதுகாத்துக் கொள்வதற்காக கருணை மனுச் செய்யும் போது அது சம்பந்தமாக ஜனாதிபதி முடிவெடுக்க குறைந்தது ஏழு மாதங்கள் பிடிக்கும். அரசியலில் ஆனா ஆவன்னா படிக்கிறவர்களுக்குகூட தெரிகிற இந்த உண்மை சில மாநிலங்களிலும் மத்தியிலும் ஆட்சி செயத பா ஜ க வினருக்கு தெரியாமல் இருக்காது.என்ற போதும் முஸ்லிம் விரோத மன்பானமை ஒன்றை மடடுமே மூலதனமாக வைத்து அரசியல் நடத்துகிற அவர்ககள் நாடாளுமன்றத்தை காப்பதற்கு வக்ககற்றிருந்து விட்டு அப்ஜலக்கு வாய்க்கரிசி போடுவதற்கு அவசரம் காட்டுகிறார்கள். அவர்கள் இப்படிப் பேசுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. நாய்கள் குறைத்தால் அதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது. காஷ்மீர் மாநிலத்து மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் ஒன்று திரண்டு அப்ஜலக்கு ஆதராவாக குரல் எழுப்புவது இந்திய முஸ்லிம்களை ஆச்சரியப்படவைத்தது. தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு வாக்கு மூலம் வழங்கிய ஒரு குற்றவாளிக்கு ஆதராவாக ஒரு மாநிலமே திரண்டிருக்கிறதே! இது என்ன நியாயம்? என்ற கேள்வி பிரதானமாக எழுந்து. இந்தக் கேள்விக்கு பதிலை தேடிப் புறப்பட்டால் மிகவும் கசப்பான சில உண்மைகளை நாம் சந்திக்க வேண்டியது வரும். காயடிக்கப்பட்ட அந்த உண்மைகளை ஆப்ஜல் வழக்கு மீ;ண்டும் வெளிச்த்திற்கு கொண்டு வந்திருக்கிறது. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதில் எந்த சர்ச்சைக்கும் இடமில்லை என அரசியல்வாதிகள் அடித்துச் சொன்னாலும் அது அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்ற விசயம் தான். 1947 ல் இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற போது காஷ்மீர் இந்திய யூனியனில் இல்லை. அது போல நமது அரசியல் சாசனப்படி இந்தியா என்ற வார்ததை காஷ்மீரை எடுத்துக் கொள்ளாது. இந்தியா சுதந்திரம் பெற்ற போது ஆங்கிலேயரின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத பல சமஸ்தானங்கள் இருந்தன. அவை நவாப்கள் மஹராஜாக்களால் ஆளப்பட்டு வந்தன. மைசூர் ஹைதராபாத் திருவாங்கூர் காஷ்மீர் சமஸ்தானங்கள் தனிநபர் ஆளுமையின் கீழ் இருந்தன. இச்சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைந்து கொள்ளுமாறு அப்போதைய இந்திய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் கோரினார். திருவாங்கூர் மைசூர் சமஸ்தானங்கள் இந்திய யூனியனுடன் இணைந்தன. ஹைதராபாத்திலும் காஷ்மீரிலும் பிரச்சினகள் இருந்தன. ஹைதராபாத்தின் மக்கள் தொகையில் பெரும்பான்மையோர் இந்துக்கள். நிஜாம் உஸ்மான் அலி கான் என்ற முஸ்லிம் மன்னராக இருந்தாh. மக்கள் இந்தியாவுடன் இணைவதை விரும்பினர். நிஜாம் இணைய மறுத்தார். 1948 செப்டம்பர் 17 தேதி பட்டேல் காவல்துறையை பயன்படுத்தி ஹைதராபாத்தை இந்திய ஆளுமையின் கீழ் கொண்டு வந்தார். காஷ்மீரின் நிலை நேர் எதிராக இருந்தது காஷ்மீரின் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்களாக இருந்தனர் மன்னர் ஹரிசிங் இந்துவாக இருந்தார். காஷமீரக்கு விடுதலை அளித்த ஆங்கிலேயர்கள் அது இந்தியாவுடNனூ பாகிஸ்தானுடனோ இணைந்து இணைந்து கொள்ளலாம் என்று அறிவித்தனர். மன்னர் ஹரிசிங் இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் செராமல் தனினத்திருக்க முடிவு செய்தர். மக்களின மனோ உணர்வை ஒட்டி அவர் எடுத்த முடீவு அது. இப்பகுதியை தன்னுடன் இணைத்துக் கொள்ள பாகிஸ்தான் முயற்சித்தது. மன்னர் ஹரிசிங் அதற்கு இணங்காததால் 1947 செப்டம்பரில் பாகிஸ்தான் ரானுவம் காஷ்மீருக்குள் நுழைந்தது. ஹரிசிங் இந்திய உதவியை நாடினார். இந்தியாவுடன் இணை;நது கொள்வதற்கு ஒப்புக் கொளவதாக அவரிடமிருந்து ஒரு கடிதம் பெறப்பட்டது. 1947 அக்டோபர் 27 ம் தேதி இந்தியப்படைகள் காஷ்மீருக்குள் நுழைந்தன. பாகிஸ்தானிய படைகளை சில இடங்களிலிரந்து விரட்டின.சில இடங்களை பாகிஸ்தான் ஆக்ரமித்தது. பாகிஸ்தான் இப்பரச்சினையை ஐ நா வின் பாதுகாப்பு சபைக்கு கொண்டு சென்றது. காஷமீர் மன்னரை கட்டாயப்படுத்தி இந்தியா இணைப்புக் கடிதத்தை பெற்றதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. ஐ நா சபை போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியாவையும் பாகிஸ்தானையும் கேட்டுக் கொண்டது அத்Nதூடு இரு நாடுகளும் தமது படைகளை திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டது. காஷமீரில் ஒரு மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்கள் எவருடன் இணைய விரும்புகின்றனரோ அவருடன் இணையலாம் என்றும் இல்லை எனில் ஒரு தனி நாடாக செயல்படலாம் என்றும் ஐ நா பாதுகபப்புச் சபை கூறியது. காஷ்மீர் விசயத்தில் பாகிஸ்தான் பிரச்சினையை தொட்ங்காமல் இருந்திருந்தால் காஸ்மீர் மக்களின் எண்ணவோட்டம் இன்னதென்று தெளிவாக அறியப்படடிருக்ககும். ஊலக அரங்கில் காஷ்மீர் பற்றி முதலைக் கண்ணீர் வடிக்கிற பாகிஸ்தான் தான் காஷ்மீரிகளின் கண்ணீர் வரலாறு தொடர்வதற்கு காரணமாகும். தோடர்ந்து காஷ்மீர் விசயத்தை சாக்கா வைத்து பாகிஸ்தான் தொடுத்த யுத்தங்களின் பாகிஸ்தான மோசமாக தேற்ற போது காஷ்மீரில் இந்தியாவின் ஆளுமை உறுதிப்பட்டு வந்தது. பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிற காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆகரமிப்பு காஷமீர் என்று இந்தியாவும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கிற காஷ்மீரை இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் என்று பாகிஸ்தானும் கூறிக் கொள்ளத் தெடங்கியதில் காஷ்மீர் மக்களின் விருப்பமோ அபிலாசைகளொ கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வில்லை. சுய நிர்ணய உரிமை என் ஐ நா வின் தீர்மாணம் காற்றோடு கலைந்து போய்விட்டது. ஆனாலும் முழு அளவில் பிற மாநிலங்களைப் போல காஷ்மீரை இந்தியாவுடன் இணைந்த மாநிலமாக கருத முடியாது என்பது தான் எதார்த்தம்.1957 ல் தான் காஷ்மீர் இந்தியாவின் ஒர மாநிலமாhக அறிவிக்கப்பட்டது. அதுவும் அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவின் படியான சில விசேஷ அந்தஸ்த்துடன். இந்திய அரசியல் சாசணப்படி இந்திய என்பத காஷ்மீர் தவிரவுள்ள பிற மாநிலங்களை மட்டுமே குறிக்கும். இந்தியா நாடாளுமன்றம் ஒரு சட்டம் இயற்றினால் அது காஷ்மீருக்கும் பொறுந்த வேண்டும் எ;னறால் காஷ்மீர் உள்ளிட்ட இந்தியா என்று குறிப்பிட வேண்டும். காஷ்மீர் முதல்வரை பிரதமர் என்று அழைக்க அனுமதி உண்டு. காஷ்மீரில் காஷ்மீரிகளை தவிர வேறு இந்தியர் எவரும் நிலம் வாங்க முடியாது என்பத போன்ற வேறு சில சிறப்பு அந்தஸத்துக்களும் காஷ்மீருக்கு அரசயில் சாசனப்படி உண்டு. 370 வது ஷரத்தின் படி காஷ்மீர் ஒரு நாட்டுக்குள் இருக்கிற இன்னொரு நாடாக கருதப்படும்.அதற்கு தனியான கொடி முத்ததரை வைத்துக் கொள்ள உரிமை உண்டு. தனியாக ஒரு ஆட்சித்தலைவரை வைத்துக் கொள்ளவும் அதிகாரம் வழங்கப்பட்டது. 1960 ல் இந்த உரிமை பறிக்கபட்டது. யுசவiஉடந 370 ழக வாந ஐனெயைn உழளெவவைரவழைnஇ றாiஉh ளை ழக ய வநஅpழசயசல யெவரசந பசயவெள ளிநஉயைட ளவயவரள வழ துயஅஅர யனெ முயளாஅசை. யுசவiஉடந 370 எசைவரயடடல அயனந துயஅஅர யனெ முயளாஅசை ய உழரவெசல றiவாin ய உழரவெசலஇ றiவா வைள ழறn கடயபஇ நஅடிடநஅஇ உழளெவவைரவழைn யனெ ளுயனச-i-சுலையளயவ (ர்நயன ழக ளுவயவந). வுhந சiபாவ ழக வாந ளவயவந வழ hயஎந ய ளநியசயவந hநயன ழக ளவயவந றயள டழளவ in வாந 1960ள.வுhளை யசவiஉடந ளிநஉகைநைள வாயவ நஒஉநிவ கழச னுநகநnஉநஇ குழசநபைn யுககயசைள யனெ ஊழஅஅரniஉயவழைளெஇ வாந ஐனெயைn Pயசடயைஅநவெ நெநனநன வாந ளுவயவந புழஎநசnஅநவெ'ள உழnஉரசசநnஉந கழச யிpடலiபெ யடட ழவாநச டயறள. (விக்கீபீடியா)காஷ்மீர் இந்தியாவுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற நாம் அம்மாநில மக்களின் மனோ உணர்வை நம்மோடு இணைக்க எவ்வளவு தூரம் பணியபற்றினாம் என்பது கேள்விக்குரியானதாகும். சுற்றுலாவைத்தவிர வேறு எந்த வளர்ச்சிப்பணியும் இந்திய மத்திய அரசுக்கு காஷ்மீருக்கு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்நது சொல்லப்படுவதண்டு. இந்திய அரசு காஷ்மீரிகளை படைபலத்தால் கட்டிப்போட நினைக்கிற தே தவிர மனவளத்தால் அல்ல என்பதும தொடர்ந்து சொல்லப்படுகிற குற்றச்சாட்டாகும்.இத்தைகய சூழ்நிலையில் இந்தியாவில் வளர்நது வந்த இந்துத்துவ சக்திகளின் ஆதிக்கமும் இந்திய முஸ்லிம்கள் கடும் பின்னடைவுக்கு தள்ளப்பட்டதும் காஷ்மீர் இளைஞர்களை பாகிஸ்தான், தன் பக்கம் ஈர்ப்பதற்கு காரணமானது. அவர்களை தொடர்நது பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக உபயோகப்படுத்தி வந்தது. வி பி சிங் இந்தியப்பிரதமரான காலகட்டம் தொடங்கி காஷ்மீரர் மீதான இந்திய ரானுவத்தின் பிடி நெருங்கியது. தொடர்நது காஷ்மீரின் பணி படர்நத பள்ளத்தாக்குப் பகுதி அரசியல் வனமுறைப் பிணி நிறைந்தததாகவும் மாறிவிட்டது. காஷ்மீரின் சில பகுதியில் இருக்கிற குடும்பங்கள் ஒவ்வொன்றும் பாகிஸ்தான் அல்லது இந்திய ரானுவத்தால் சின்னாபின்பபடுத்தப்படடிருக்கிறது என்பதை அப்ஜல் குருவின் மனைவி தபஸ்ஸும் எழுதிய கடிதம் தெளிவு படுத்துகிறது.சி மகேந்திரன் ஆறாம்திணைக்கு எழுதிய ஒரு கட்டுரையில், ஒரு புறம் பயங்கரவாதிகளிடமிருந்தும் மறுபுறம் தன்னை பயங்கரவாதி என்று ரானுவம் சுடுவதிலிருந்தும் பாதகாப்பு வேண்டும் என்பது தான் காஷ்மீர் மக்களின் அதிக பட்ச தேவையாக இருக்கிறது என்று குறிப்பிட்டள்ளார். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஏதாவது ஒரு துப்பாக்கி குறுக்கிட்டு கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது நெஞ்சை உருக்கும் எதார்த்தமாகும். இத்தகைய சூழ்நிலைகளின் விளைவாக காஷ்மீரத்து மக்களிடத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிரான மனோநிலையே மேலோங்கியிருக்கிறது. அதனால் இந்தியப் பாராளுமன்றத்தின் மீதான தாக்குதை காஷ்மீரிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று சொன்னால் அந்த வாதத்தில் ஒரளவுக்கு உண்மையிருக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்ஜலுக்கு பாகிஸ்தான் சார்பு தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருந்திருக்கிறது. பின்னர் அவர் மனந்திருந்தி காஷ்மீர் விசேஷ காவல் படையிடம் சரணடைந்திருக்கிறார். இது போல சரணடைந்த பலரையும் ரானுவமும் காவல் துறையும் தொடர்நது மிரட்டி துன்புறுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாகவும் அழுத்தமாகவும் பேச்பபடுகிறது. 'அப்சல் என்ற தனிமனிதனின் கதை அல்ல இது. காஷ்மீரிலுள்ள பல இளம் தம்பதியினரின் கதை இது.... காஷ்மீரில் நிலவும் சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும். தாம் ஈடுபடாவிட்டால்கூட, காஷமீரில் உள்ள ஒவ்வொரு ஆணும், பெண்ணும், குழந்தையும் கூட இயக்கங்கள் குறித்த ஏதேனும் தகவலை அறிந்திருப்பார்கள். மக்களை உளவு சொல்பவர்களாக மாற்றுவதன் மூலம், சகோதரரைச் சகோதரருக்கு எதிராகவும்; மனைவியைக் கணவனுக்கு எதிராகவும்; குழந்தைகளைப் பெற்றோர்களுக்கு எதிராகவும் பாதுகாப்புப் படையினர் மாற்றுகின்றனர். அவர்கள் மக்களை நிம்மதியாக, சுதந்திரமாக வாழ அனுமதிக்க விடுவதில்லை' என்கிறார், அப்சலின் மனைவி தபஸ்ஸும்அப்ஜல் விசயத்தில் காஷ்மீரிகள் போராடுவதன் பிண்ணனியல் இது போன்ற பல்வேறுபட்ட அரசியல் சமூக காரணங்கள் உண்டு. இத்தகைய காரணங்கள் விளைவாக காஷ்மீரிகள் அப்ஜலுக்கு ஆதராவாக இருப்பதாலும் விசேஷ நீதிமன்றத்தில் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை அப்ஜலின் வழக்கு விசாரிக்கப்பட்ட விதமும் தீர்ப்pன் வாசகங்களும் காஷ்மீரிகளின் நிலையை புரிந்து கொள்ளாமல் அவர்களை துண்புறுத்தும் வகையில் இருப்பதால் காஷ்மீரிகள் ஒன்று திரண்டு அப்ஜலுக்கு மரண தண்டணை தருவதற்கு எதிராக போராடி வருகிறாhகள். இந்தப்பிண்ணனியோடு காஷ்மீர் மக்கள் அப்ஜல் வழக்கை அனுகும் விதத்தை அலசிப்பார்த்தல் அதில் ஆச்சரியம் எதுவும் தோன்றாது. காஷ்மீர் தவிரவுள்ள இந்திய முஸ்லிம்களோ இது விசயத்தில் என்ன கருத்துச் சொல்வது என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறார்கள். தடா பொடா வழக்குகளில் நீதிமன்றங்களில் அப்பட்டமாக வழங்கப்படும் ஒரு தலைப்பட்சமான திர்ப்புகளுக்கு எதிராக போரடும் ஆர்வலர்களும், மரண தண்டனை;கு எதிராக போராடும் இயக்கங்களும், அப்ஜலுக்கு ஆதரவாக போராடும் போது அவர்களுடன் கைகோhத்துக் கொள்வதை தவிர தனியான எந்த ஒரு கருத்தும் முஸ்லிம் சமுதாயத்தின் கருத்தாக இதுவரை வெளியிடப்படவில்லை;. தீவிரவாதக் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை சமயத்தின் பெயரால் ஆதரித்துவிட்டால் அதனால் சமுதாயத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஒரு புறமும், கடந்த கால் நூற்றாண்டுகளாக இந்திய நிர்வாக அமைப்பும் நீதிமன்ற அமைப்பும் முஸ்லிம்களுக்கு எதிரான மனோநிலையில் இருப்பதால் தனது அனுபவத்தில் கண்ட பல வழக்குகளில் நடந்தது போல இந்த வழக்கிலும் ஒரு அப்பாவி சிக்கவைக்ப்பட்டு விட்டாரோ என்ற ஆதங்கம் மறு புறமுமாக முஸ்லிம்கள் ஒரு வித தடுமாற்றத்தில் இருக்கிறார்கள்.முஸ்லிம் அல்லாத சட்ட அறிஞர்கள் சமூக ஆர்வலர்களின் துணிச்சலனான போராட்டங்களைப் பார்த்தே சற்று தைரியம் பெற்று இது விசயத்தை முஸ்லிம்கள கவனிக்க ஆரம்பித்திருககிறார்கள். ஆனாலும் இந்திய முஸ்லிம்களின் மனோ நிலை காஷ்மீரி முஸ்லிம்களின் மனோ நிலையிலிருந்து வேறு பட்டது. அப்ஜலுக்கு ஆதரவாக குரல் எழுப்பப் பட்ட போது அது கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டதே அதற்கு சாட்சி! நாடளுமன்ற வழக்கில் அப்ஜல் குற்றவாளி என்று சந்தேகத்திற்கிடமின்ற உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவரக்கு மரண தண்டணை வழங்கப்படுவதில் இந்திய முஸ்லிம்களில் பெரும்பான்மையோருக்கு ஆட்சேபனை எதுவுமில்லை. எதிரி நாட்டுடன் இணைந்து நமது நாட்டின் இறையான்மைக்கு சான்றாக திகழும் நாடாளுமன்றக் கட்டடிடத்தின் தாக்குதல் தொடுப்பதற்கு உதவியாக இருந்தவரை மன்னிக்க முடியாது என்பதே இந்திய முஸ்லிம்களின் மனோ நிலை. ஆதே அதே சமயத்தில் இந்த வழக்கு விசாரண நடைபெற்ற விதம் குறித்தும் விசாரனயில் ஈடுபட்ட அதிகாரிகள் குறித்தும் நீதிமன்றங்கள் இந்த வழக்கை அனுகி முறை குறித்தும் பிரபலமான முஸ்லிம் அல்லாத சட்ட அறிஞர்களே சந்தேகமும் கவலையும் தெரிவித்திருப்பதை பார்க்கையில் யாராவது ஒருவரக்கு தண்டனை வழங்கியாக வேண்டும் என்ற திட்டவட்டமான எண்ணத்தில் அனைவரும் செயல்படடிருப்பதாக ஒரு தோற்றம் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. நாற்பது சாட்சிகள் தங்களிடம் இருப்பதாக உச்சநீதிமன்றத்திடம் குறிப்பிட்ட அரசுத்தரப்பு தெரிவித்திருக்கிற போதும் அந்த சாட்சிகள் பொய்யானவை என்று தில்லி உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறுது. அப்ஜலின் வாக்கு மூலம் ஒன்று தான் அவருக்கு எதிரான பிரதான சாட்சி. ஆந்த வாக்கு மூலம் மிரட்டி உறவினர்களை பிடித்து வைத்துக் கொண்டு அச்சுறுத்தி வாங்கப்பட்டுள்ளது என்று அப்ஜலக்காக வாதிடுகிற சட்ட அறிஞர்கள் கூறுகின்றனர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கூட வித்தியாசமாகவும் விசித்திரமாகவும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆதாரங்களின் உறுதிப்பாடு என்ற தளத்தில் இல்லாமல் சூழ்நிலை உணர்ச்சி என்ற தளத்தில் தீர்பபு வழங்கப்பட்டிருப்பதான ஒரு தோற்றத்தை தீர்ப்பின் வாசகங்கள் அழுத்தமாக ஏற்படுத்துகின்றன். அப்ஜலின் குற்றத்தை நிரூபிக்க போதுமதான ஆதாரம் எதுவும் இல்லை என்ற போதும் ஓட்டுமொத்தமாக சமுதாயத்தின் உணர்வை சமாதானப்படுத்துவதற்காக மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியதாக ஆப்ஜலின் வக்கீல் என் டி பன்சாலி கூறியுள்ளார். இந்தியாவில் வாழும் எந்த சமுதாயத்தின் மனதை திருப்தியடைச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்வியை வெளிப்படையாக கேட்க முடியாவிட்டாலும் அந்த எண்ணம் உள்ளத்தில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.எனவே அப்ஜலின் கருணை மனுவை பரிசீலிக்கையில் நியாயமாக அவரது வழக்கு விபரத்தையும் வழக்கு விசாரணை நடைபெற்ற முறைகளையும் உச்ச நீதிமன்றத்தீர்ப்பின் நியாயத்தையும் எந்த அழுத்தத்திற்கும் ஆட்படாமல் ஜனாதிபதி பரீசிலிக்க வேண்டும் என்பதே இந்திய மஸ்லிம்களின் எண்ணம். மரண தண்டனை கைதியின் மீது கருணை காட்டுவதற்கு எந்த விசயங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமோ அது அத்தனை விசயங்களையும் ஜனாதிபதி கவனித்தில் எடுத்தக் கொள்ள வேண்டும் என்பதும் அப்ஜலக்கு அவரது குற்றம் நிரூபிக்கப்பட்ட அளவிற்கு தகுந்த தண்டனையை வழங்க வேண்டும் என்பதே இந்தி முஸ்லிம்களின் அவாவாகும். இதுவே இந்திய மக்களின் நியாய சிந்தனை உடைய பெரும்பான்மையோரின் எதிர்பார்ப்புமாகும். தகுந்த பரீசீலனைக்குப்பின் ஆப்ஜல் மரண தண்டனைக்குரியவர்தான் என்று மத்திய அரசம் ஜனாதிபதியும் முடிவு செய்தால் அதை இந்;திய முஸ்லிம்கள் சந்தேகத்திற்கிடமின்றி ஏற்றுக் கொள்வார்கள். அதே நேரத்தில் நம்முடைய நாடாளுமன்றத்தை விட பழமையான பாபர் பள்ளிவாசலை இடித்தவர்களுக்கு அந்த சதித்திட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் முதன்மையானது முதலில் என்ற அடிப்படையில் தண்டனை வழஙகப்பட்ட பிறகு அப்ஜல் குருவிற்கு தண்டனை வழங்க்பட்டால் அதை இந்திய முஸ்லிம்கள் முழமனதோடு ஏற்றுக் கொள்வார்கள. ஏனெனில் இந்தியத்திருநாட்டின் பாரம்பரிய அமைதிக்கு வேட்டு வைத்து, நாட்டின் மூளை முடுக்கெங்கும் தீவிரவாதத்தீ படர்வதற்கும் 1500 க்கும் மேற்பட்ட குடிமக்கள் கொல்லப் படுவதற்கும் பாபர் பள்ளிவாசல் இடிப்பே காரணமாக இருந்தது. புhபர் பள்ளிவாசல் இடிப்பு வழக்கில் ஒரு தீர்ப்பு வரும்வரை இந்திய நீதி அமைப்பின் மீது முஸ்லிம்களுககு ஒரு சந்தேக கண்ணோட்டம சன்னமாக வேனும் இருந்து கொண்டுதான் இருக்கும்.அது அப்ஜல் வழக்கிலம் தொடரும். அதுவரை சட்டத்திற்கு புறம்பாக வலையை வீசியவர்களை விட்டு விட்டு மீன்களை கைது செய்வது என்ன நியாயம் என்று முஸ்லிம்கள் கேட்டுக் கொண்டு தான் இருப்பார்கள்

உங்கள் ஓட்டு யாருக்கு?

ஓட்டுப் போடுங்கள்
ஓட்டுப் போடுவது உங்கள் கடமை
உங்கள் குடும்பத்தில் உள்ளோரை வாக்களிக்கச் செய்யுங்கள்!
உங்களது நிறுவனங்களில் பணியாற்றுவோர் வாக்களிக்கச் செல்ல அனுமதி கொடுங்கள்।
இது உங்களது தேசீய கடமை மட்டுமல்ல சமயக் கடமையும் கூட।

அனுதாப அலையோ எதிர்ப்பலையோ அதிவேகமாக வீசாத தேர்தல் இது.தமிழக மக்கள் எந்தப் பக்கம் சாயப்போகிறார்கள் என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. ஓரு ஐடியா கிடைக்கலே என்ற சொல் ஆய்வாளர்கள் மட்டத்திலும் கூட அதிகமாக இருக்கிறது.ஒரு தெளிவான முடிவு நோக்கிச் செல்ல வேண்டிய சரியான கால கட்டம் இது. இந்தத் தேர்தலே நமக்கு விடிவாகிடும் என்றில்லாவிட்டாலும். இந்தத் தேர்தலாவது நமது வளர்ச்சிக்கான சமிக்ஞைகளை தருவதாக இருக்க வேண்டும்.இந்த சந்தர்ப்பத்தில் உங்களது திட்டமிட்ட சரியான ஒட்டு தமிழகத்திற்கு நன்மைய உண்டுபன்னுவதாக அமையும். சந்தேகமில்லாமல், பிரச்சினைகளை பெருக்காமல் குறைக்கவாவது உதவும் .
அலைகளற்ற இந்தத் தேர்தலில் வாக்களிக்கச் செல்வதற்கு முன் நீங்கள் யோசிக்க வேண்டிய சில விசயங்கள் உண்டு. நீங்கள் திட்வட்டமாகவும் தெளிவாகவும் முடிவாடுக்க அது உதவும்.
உங்கள் தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பபுள்ள இரு வரை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நெருக்கமானவர் என்பதற்காக எந்த வகையிலும் மூன்றாம் நிலை வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்காதீர்கள். இந்தத் தேர்தலில் தங்களது சொந்த ஒட்டு வங்கியை தக்கவைத்துக் கொள்வதற்காக அல்லது மதிப்பிட்டுக் கொள்வதற்காக பி.ஜே.பியையும் விஜயகாந்தின் கட்சியையும் தவிர வேறு எந்தக் கட்சியும் களத்தில் இல்லை என்பதை கவனத்தில் வையுங்கள். நீங்கள் அந்தக் கட்சிகளின் அனுதாபிகாளக இல்லை எனும் போது ஒரு முக்கியமான தேர்தலில் உங்களது வாக்கை விணடித்த விடாதீர்கள்.
கட்சி அனுதாபத்தை தூர எறிந்து விடுங்கள்.தமிழகத்தில் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கான அமைப்புக்கள் வழக்கம் போலவே இரண்டு அணிகளையும் ஆதரிக்கின்றன. புதிதாக ஏதாவது ஒரு லீக் விஜயகாந்தோடு சென்றிருந்தால் நமது அமைப்புக்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும். இந்தத் தேர்தலில் அப்படி ஒரு வாய்ப்பு அமையவில்லை. அது ஒரு ருசிக்குறைவுதான். பரவாயில்லை பெறுத்துக்(?) கொள்வோம்.இயக்கங்கள் அமைப்புக்கள் சுட்டிக் காட்டும் கட்சிக்கு தமிழக முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களித்த்தில்லை என்பது தான் வரலாறு. அந்த வரலாறு அப்படியே தொடரட்டும்.
வீராவேசம் காட்டுகின்ற முஸ்லிம் இயக்கங்களின் லட்சணம் பத்ரிகைகள் தொலைக்காட்சிகள் என்ற எல்லைகளை கடந்து இணையத்தளங்கள் குறுந்தகவல்கள் வழியாகவம் நாறி நிரம் குலைந்து கிடக்கிறது. திரு பீ ஜேவும் அவரது ஆட்களும் த.மு.முக வினரும் மாநில எல்லைகளை தாண்டி வெளிநாட்டில் பிழைக்கச் சென்ற இடத்திலும் கூட சக்களத்தி சண்டயை விடுவதாக இல்லை. வளைகுடா நாடுகள் தென்கிழக்காசிய நாடுகளின் சுற்றுப்புறச் சுகாரத்தை சீர்கெடுக்கிற வகையில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைககுப்பின் கிறுக்குப் பிடித்தவர்களாக கத்தி; சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
திரு பீஜே சமுதாயத்தில் உருவாகிவிட்ட ஒரு தீய சக்தி. தனது லாபத்தை பார்த்தக்கொண்டு பதுங்கிவிடுகிற பேர்வழி அவர். எந்த நிலையிலும் அவரை முன்னிறத்துவதோ முதன்மைப்படுத்துவதோ ஆபத்தானது. முஸ்லிம் சமூக அரங்கில் அவரால் ஏற்பட்ட தீய விளைவுகள் ஏராளம். பார்வையற்ற கொள்கைக்காரர்கள் வெனிநாடுகளிலிருந்து செய்து வருகிற பண உதவியால் இன்னும் உலாவி;க் கொண்டிருக்கிறார்கள். ஒரு நல்ல விலைக்கு தொலைக்காட்சியை விற்று விட்ட தெம்பில் இம்போது அரசியல் பேச வந்திருக்கிறார்கள்.
அரசியல் கூடாது என்று சொல்லி த.மு.மு.க.விலிருந்து விலகிய பின் எவ்வளவு சாமார்த்தியமாக அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் பாருங்கள்! கொஞ்சமும் நா கூசாமல் கும்பகோணத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் கூடியதாக பல லட்சம் தடவை தொலைக்காட்சியிலும் பத்ரிகையிலும் பேசியவர் முதலமைச்சரை சந்தித்த போது கும்பகோணத்தில் 1 லட்சம் பேர் கூடினர் என்று சொன்னாரே! அம்மாவின் அறையே அவருக்கு மஹ்ஷராகிவிட்டது. அம்மாவுக்கு முன்னால் அவரது நாவு அவரையும் மீறி உண்மை பேசிவிட்டது. அம்மா அவருக்கு எப்படி அல்லாஹ் ஆகிவட்டார் பாருங்கள்!
அடப்பாவிகளா! உங்களால் நிம்மதியை தொலைத்து விட்டு அமைதியான வாழ்கைக்காக போராடிக் கொண்டிருக்கிற ஒரு அப்பாவிச் சமுதயத்தை எதற்hக இப்படி ஏமாற்றுகிறீர்கள்? தொலைக்காட்சிகளுக்கு முன்னால் உட்கார்ந்நதிருப்பவர்கள் எல்லோரும் கூடைகூடையாய் காதில் பூச்சூடிக்கொண்டிருக்கிற கேனயன்கள் என்று நினைத்துவிட்டீர்களா? உங்களுக்காக கூடுகிற கூட்டத்தை நீங்கள் அப்படி நினைத்துக் கொண்டால் அதில் தவறேதுமில்லை. தொலைக் காட்சியை பார்ப்பவர்கள் எல்லோருமா அப்படி இருப்பார்கள்?
முன்னுக்குப்பின் முரணாக பேசுபவன் பொய்யன் என்று சொல்லி சம்சுத்தீன் காஸிமியை பொய்யராக்க முயற்சி செய்தார்களே! உங்களுடைய இந்த இமாலயப் பொய் நீங்கள் சமுதாயத்திலிருந்து துறவறம் பெற்றுவிடத் தக்க முரண்பாடல்லவா?
நல்லோர்களையும் முன்னோர்களையும் பொய்யர்களாகவும் புரட்டர்களாகவும் விமர்சனம் செய்த புதிய இயக்கங்களின் போரளிகள் இந்த அண்ணனிண் உருட்டல் புரட்டல்களை அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா! ஏன்று ஒரு ரகசியச்சிரிப்போடு ரசித்துக் கொள்வது கேவலமானது. சாத்தன்கள் ஓதிய வேதத்தால் சமுதாயத்தில் விளைந்த சங்கடங்களை எண்ணிப்பார்க்கிற போது எழும் பெருமூச்சில் உஷ்ணம் உச்சத்திற்கு போய்விடுகிறது.
அரசியலில் பங்கேற்காமல் சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம் என்று சொன்ன தமிழ்நாடு தறுதலைகள் ஜமாத் தமிழக முதலசை;சரிடம் பேசும் போது சமுதாயத்திற்காக பேச வேண்டியதை எல்லாம் பேசி (?)முடித்துவிட்ட பிறகு இந்தச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்த புரோக்கர் ஜெகவீரபாண்டியனுக்கு ஒரு சீட் கொடுங்கள் என்று முறையிட்டதாம். என்ன கொடுமையடா இது? எங்கள் இறiவா! இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தச் சோதனை?பொய்யே மெய்யாகக் கொண்ட ஒருவரின் அதரவையோ எதிர்பபையோ சமுதாயம் ஒரு போதும் பெருட்படுத்தப்போவதில்லை. கண்ணையும் காதையும் பொத்திக் கொண்டிருக்கிற காந்தியின் பொம்மைகளை தவிர.திரு பி,ஜே வை சந்தித்தின் மூலம தனக்குத் தேவையெனறால் எத்தகைய சமூக விரோதியையும் ஜெயலலிதா பக்கத்தில் வை;த்துக் கொள்வாரரோ என்ற சந்தேகத்தை; முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்படுத்திவிட்டார். கருணாநிதியின் மீது இனம் புரியாத கடும் வெறுப்பில் முஸ்லிம் சமூகம் இருக்கிறது என்ற போதும் அவர் ஒரு தடைவ கூட திரு பீஜே வை சந்திக்க அனுமதித்ததில்லை என்ற விமர்சனம் முஸ்லிம் உலகில் அர்தத்தோடு எழுப்பப்படுவதற்கு செல்வி ஜெயலலிதாவே காரணமாகிவிட்டாரா? அல்லது அவருக்காக உழைத்த அமைச்சர்கள் அறியாமiயில் செய்த பிழையா? ஏன்பது தெரியவில்லை. அ தி மு கவினரக்கு முஸ்லிம் சமூகத்தினரிடம் இரக்கிற தொடர்பின் இழை அனுபவமற்றது என்பதை இது புலப்படுத்திவிட்டது.
தமிழக முஸ்லிம்களின் அரசியலில் வாயெடுப்பாக வந்தமைந்துவிட்ட தேசிய லீக் எனும் கட்சி அப்துல் லத்தீப் சாஹிப் என்ற சமுதாயத் தொண்டருக்காக பொறுத்துக் கொள்ளப்பட்ட கட்சியாகும். போஸ்டர் அடிக்க காசு வைத்திருந்தததை தவிர வேறெந்த தகுதியிமில்லாத சிலரிடம் அது கைமாறிய பிறகு அதற்கு ஒரு அன்னக்கை தேவைப்பட்டது. எனவே திரு பீஜே ஜமாத்தை அது துணைக்கு வைத்துக் கொண்டது. இந்த இருவரில் எவரும் முஸ்லிம் சமுமூகத்தின் அதிகார பீடங்களான பள்ளிவாசலுக்குள் அனுமதிப்படுவதில்லை என்று உளவுத்துறை கூறியதால் முதலமைச்சரை சந்திக்க வரும்போது தொப்பியும் தாடியும் வைத்த சிலரையும் சோத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன் விளைவாக இ.வி.க.வும் ஷம்சுத்தின் காஸிமியும் கூட்டமைப்பு ஏன்ற போர்வையில் பங்கேற்கச் செய்யப்பட்டனர். ஏதோ அழைக்கிறார்கள் போய் வருவோம் அதன் மூலம் நாமும் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள ஏதுவாகும் என்று நினைத்த அவர்களும் அதில் கலந்து கொண்டுவிட்டனர். முதல்வரை சந்திக்கச்செல்வது என்பது தவறில்லைதான். ஆனால் யாருடன் போகிறோம் யாரை பெரியவர்களாக்கும் முயற்சியில் போகிறோம் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ளாமல் இருந்து விட்டு பிறகு வந்து குத்துதே குடையுதே என்கிறார்கள். சில பணக்கார சகாக்களின் கைங்கர்யமும் இதில் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.வேலூரில் நடைபெற்ற செயற்குழுவின் புண்ணியத்தால் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை இந்த விபத்தில் சிக்காமல் தெய்வாதீன்மாக தப்பிவிட்டது.இடஒதுக்கீடு என்ற பிலாஸ்டிக் கீரையை காட்டி தற்போதைய அரசையே ஆதரிப்பது என்ற வலுவற்ற தங்களது வழிக்கு மக்களை இழுக்க இவர்கள் முயற்சிப்து ஏற்கத்தக்கதல்ல.
தமிழகத்தின் நிலையை உங்கள் தொகுதியின் நிலையை சற்று எண்ணிப்பாருங்கள். மாநிலம் எவ்வளவு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கு எந்த அரசியல் வாதியின் சொற்பொழிவையும் பத்ரிகையும் தொலைக்காட்சியையும் பார்க்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் அன்றாடம் பயணம் செல்கிற சாலைகளையும் பேருந்துகளையும் கொஞசம் சிந்தித்துப் பார்த்தால் போதுமுhனது.
கந்து வட்டி ஒழிப்பு, லாட்டரிக்கு தடை ஆகிய மக்கள நலச்சட்டங்களும் மகளிர் சுய உதவிக்குழுக்ள அமைத்ததும் இப்போதைய அரசின் சாதனைகள் என்றாலும்
அ.தி.மு.க வின் ஆட்சிக்காலத்தில் பெரும் மதக்கலவரங்கள் ஏற்படவில்லை என்பது மட்டுமே மிகப்பபெரிய சாதனை.ஜெயேந்திரர் கைது விசயத்தில் முஸ்லிம்கள் சந்தோஷப்படுவதற்கு எதுவுமில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் வரை ஜெயலலிதா கட்டுப்படுத்த முடியாத மக்களை சட்டை செய்யாத முதல்வராகவே இருந்தார்.தமிழ் நாடு வடகிழக்கு மாநிலங்களைப் போல மாறிவிடுமோ என அச்சப்படவைக்கிற அளவுக்கு மாநிலத்தின் வளர்ச்சி அபாயகரமாக சரிந்து கொண்nருக்கிறது.கல்வித்துறை பொதுப்பணித்துறை ஆகிய எதிர்கால வளத்திற்கான துறைகள் கோமாவில் கிடக்கின்றன.
எனவே நாட்டு நலன் என்று யோசிக்கிற கட்டத்தில் ஆளும் அ.தி.மு.க அரசை ஆதரிப்பதற்கு வலிமையான காரணங்கள் ஏதுமில்லை.
இன்னொரு விசயமுமும் கவனிக்கத்தக்கது. பெரும்பாலும் ஆளும் கட்சியின் மீது தான் மக்களுக்கு வெறுப்பு இருக்கும். இந்தத் தேர்தலில் கருணாநிதியின் மீதும் தி மு க வின் மீதுமே முஸ்லிம்கள் அதிக வெறுப்புக் கொண்டுள்ளனர். ஆயினும் அந்த வெறு;பபு ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மாறுவதற்கு முக்கியத்தடையாக இருப்பது வெற்றி பெற்றால் இவர் எப்படி நடந்து கொள்வாரோ என்ற அச்சம் தான். ஜெயலலிதா வெற்றி பெற்றால் அவரது பதவியேற்பு விழாவிற்கு நரேந்திர மோடி அழைக்கப்படுவார் என்ற பிரச்சாரம் உண்மையாகிவடுமோ என்ற அச்சமே முஸ்லிம்கள் அவரை ஆதரிக்க தடையாக இருக்கிறது.
கருணாநிதியின் மீதான வெறுப்புணர்வு ஒன்றை தவிர ஜெயலலிதாவை ஆதரிப்பதற்கு வேறு பெரும் காரணங்கள் எதுவும் இல்லை.கருணாநிதி ஆதரிக்கத்தகுந்தவரா என்ற அடுத்த வினாவிற்கும் கிடைக்கிற பதிலும் உறுதியானதல்ல.
தள்ளாமையின் எல்லையில் நிறகும் பெரியவர் தனது முதிந்த நிலையில் தூய மரியதையை பெற்றுக்கொள்ளாமல் போய்விட்டார் என்பது துரதிஷ்டமே! குடும்பப் பாசத்தையும் பழந்தமிழiயும் தவிர தற்போதைக்கு அவரிடம் எதுவமில்லை.தமிழக அரசியலையம் தமிழக மக்களையும் சீரழித்ததில் அவரையம் அவருடைய குடும்பத்தினரையும் அவரது கட்சியினரையும் விட அதிகம் பங்காற்றியோர் வேறு யாருமில்லை.
ஜெயலலிதா ஆட்சியின் தொடக்க காலத்தையும் நாட்டு நடப்பையும் எண்ணிப்பார்த்து வேதனைப்படுகிற வாக்காளர்கள் ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைத்தால் தவிர இவருக்கு வாக்களிக்க எந்தக்காரணமும் இல்லை.நாடாளுமன்றத் தேர்தல் தந்த நம்பிக்கையiயே ஊன்று கோலாக கொண்டு களத்தில் நிற்கின்றனர்.
அரசியல் ஆதிக்கத்தை பயன்படுத்தி தங்களது குடும்ப உறவுகளின் பணபலத்தை பெருக்கிக்கொண்டோர் என்கிற விசயத்தில் இரு திராவிடகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.எனவே கட்சி அடிப்படையில் ஆதரவு தெரிவிக்க இந்தத் தேர்தலில் முஸ்லிம்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.
முஸ்லிம் லிக் அதனுடைய அரசியலில் இப்போதையை நிலையைவிட முன்னெப்போதும் இவ்வளவு பரிதாபமாக காட்சியளித்தில்லை. எங்களுக்கு சீட் வேண்டும் என்று கேட்க்கக் கூட உரத்து குரல் எழுப்பவில்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் தலையிலடித்துக் கொள்கிறார்கள். ஏதோ த.மு.மு.கவின் புண்ணித்தால் 3 சீட் கிடைததது. இந்தத்தேர்தலில் முஸ்லிம் லீக் செய்த நன்மை ஒன்று உண்டென்றால் த.மு.மு.க பாயையங்கோட்டை தொகுதியில் தனது கருத்துப்புரவலர் ஒருவரை மறைமுகச் சார்பில் நிறுத்தப்பார்த்ததை தடi செய்தது தான். பாளையங்கோட்டை தொகுதியை தி.மு.க வையே எடுத்துக் கொள்ளச் செய்தது, முஸ்லிம் லீக் இந்தத் தேர்தலில் செய்த ஒரு நல்ல காரியமாகும்.நாய் வேஷம் போட்டால் குறைத்துத்தான் ஆகவேண்டும் என்ற நியதிக்கேற்ப த.மு.மு.க வினர் தி.மு.க.வை ஆவேசமாக ஆதிரிக்கின்றனர். ஒரு வரலாற்றுப்பாத்திரம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிற த.மு.மு.க இயக்கம்,தன் முன்னே காத்திருக்கிற ஏராளமான ஆக்கப்பணிகளை ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்து விட்டு தேவையும் நாகரீகமுமற்ற கலகக நடவடிக்கைகளில் இறங்கி அரசியல் செய்து கொண்டிருப்பதாக சமுதாய நோக்கர்கள் கவலையோடு கூறுகிறார்கள்.
நீண்ட கால இலட்சியங்களோடு ஆக்கப்பணிகளை தொகுத்தும் வகுத்தும் கொண்டு செயல்பட்டால் எதிர்கால வரலாற்றில் பல எவரஸ்ட்டுகளை தொடுவதற்கு வாய்ப்புள்ள ஒர இயக்கம், துரதிஷ்டவசமாக அடாவடித்தனம் மிகுந்த திராவிடக் கட்சிகளின் அரசியலை பிரதிபலிக்கிறது.
இந்தத் தேர்தலில் வைகோ வின் பேச்சுக்களைவ விட இஸ்லாமியக் குழுக்களுக்கிடையே நடக்குpற குடுமிப்பிடி சண்டைதான் சுவாரசியமானது.முஸ்லிமகளின் நலன் சார்ந்த எந்தப்பிரச்சினையானும் முஸ்லிம்கள் இனி அரசியல் கட்சிகளை நம்புவதை விட கல்வியின் உதவியை சட்டத்தின் துணையை நம்பவதே உசிதமானது. இடஒதுக்கீடு விசயமாகட்டும் சிறைக் கைதிகள் விசயமாகட்டும் ஜெயலலிதா செய்த சமாளிப்பை விட மிகச்சிறப்பாக வேறு யாரும் சமாளித்து விட முடியாது.
இரண்டு கூட்டணிகளிலுமே பலவினங்கள் மிகுந்து காணப்படுகிற சூழ்நிலையில் முஸ்லிம்கள் தெளிவாக யோசிப்பதற்கும் செயல்படவதற்கும் ஒரே வழி தத்தமது தொகுதிகளில் இரு கூட்டணி வேட்பாளர்களில் யார் தொகுதிக்கு நல்லது செய்யக்கூடியவர் என்பைதை ஆலோசித்து செயல்படவது தான். நமது ஜனநாயக அமைப்பை சிறப்பானதாக மாற்றக்கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாக இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
எனNவு உங்கள் வேட்பாளைரை கவனியங்கள்.இருவரில்,உங்கள் தொகுதியின் பிரச்சினைகளுக்கு தீரத்தோடு உதவக் கூடியவர் யார்?உங்கள் பகுதியின் சமய நல்லிணக்கத்திற்கு உதவிகரமாக இருப்பவர் யார்?சுயநலம் குறைவாக தென்படுகிற அரசியல் உழைப்பாளர் யார்?மாநிலச் சட்டமன்றத்திற்கு ஒரு மதிப்பான தேர்வாக எவர் அமைவார்? ஏன்பதை அலசுங்கள்.நம் சமுதாய நலன் முக்கியமானது. ஆனால் நாட்டுக்கு நன்மை செய்ய நினைப்போர்தான் அனைத்து சமதாயங்களுக்கும் உண்மையானவராக இருக்க முடியும் என்பதை அடிப்படையாக நினைவில் வையுங்கள்.ஆராயுங்கள். வாக்கிளிப்தற்கு முன்னால் ஒரு தெளிவுக்கு வாருங்கள். இதற்காக நிங்கள் யோசிப்பது நன்மையான காரியமே! ஓரு தெளிவான முடிவிற்கு வந்தவிட்டீர்களென்றால் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் உங்கள் வேட்பாளருக்காக வாக்களிக்க காரணங்களை எடுத்துச் சொல்லி உங்கள் உறவுக்காரர்களையம் நணபர்களையும் தயார்படுத்துங்கள். வீண் விவாதங்களை தவித்து விடுங்கள். உள்ளச்சுத்தியோடு நம்மில் ஒவ்வொருவரும் உழகை;கிற உழைப்பு நாட்டுக்கு நல்லதை கொண்டுவரும்.தெளிவும் புதுiயுமான முடிவுகள் வந்தால் இனி வரும் தேர்தல்களில் நாம் எல்லோருமாக சேர்ந்து பாடலாம். ஸாரே.. ஜஹான்ஸே.. அச்சா ...

இந்தியாடுடே வக்கிர வியாபாபரம்

குஷ்பு என்றால் பாரசீக மொழியில் நறுமணம் என்று பொருள்.இன்று அது தமிழில் பத்பூ (நாற்றமடிக்கும் பொருள்) ஆகிவிட்டது. ஆரோக்கியாவின் ஜாக்பாட்டில் வண்ணவண்ணமான வலை ஜாக்கெட்டுகளில் பெண்களை ஈர்த்த குஷ்பு இந்தியா டுடேவின் தந்திர வலையில் சிக்கி எப்போதும் போல உணாச்சி வசப்பட்டதில் சானி பக்கெட்டுகளால் அர்ச்சிக்கப்படும் நிலைக்கு ஆளாகிவிட்டார். ஆரோக்கியமற்ற அரசியலால் மீடியாக்களின் முன் கைகளைப் பொத்திப்பொத்தி கண்ணீர் விடும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஐயன் வள்ளுவன் வாயில் சர்க்கரை அள்ளிப்போட வேண்டும். நாகாக்க காவாக்கால் சோகாப்பர் என்பது அட்சரம் பிசகாமல் சத்தியமாகிவட்டது. ஒரு காலத்தில் குஷ்புவை கோயில் கட்டி கொண்டாடிய தமிழர்கள் இன்று அவருக்கு விளக்குமாறு அர்ச்சணை செய்ய தயாராகிவிட்டார்கள். தங்கர்பச்சானின் வாhத்தைககளை கேட்டு குஷ்பு உணர்ச்சி வசப் பட்டாரென்றால் குஷ்புவின் வார்தைகளில் தமிழகம் உணர்ச்சி வசப்பட்டு விட்டது. போலீஸ் புகழ் ஜெயலட்சுமி கூட கற்பு குறித்து குஷ்பு வெளியிட்ட கருத்துக்கள் மிகுந்த வேதனை அளித்ததாக ஜுனியர் விகடனிடம் தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணிடம் கற்பொழகக்கம் தவறிப்போனால் சமூகம் எவ்வளவு சீரழிந்து போகும் என்பதற்கு தானே ஒரு சாட்சி என்றும் அதில் அவர் கூறியுள்ளார். தமிழ் நடிகைகளில் குஷ்பு செலூலாய்ட் பொம்மையாக மட்டும் இல்லாமல் கருத்துப்பேசுமளவு அறிவுடையவர். பல பேட்டிகளிலும் அவரது கருத்துக்கள் தெளிவாகவும் நறுக்கென்றும் இருக்கும். மும்பையை பிறப்பிடமாக கொண்ட போதும் தமிழ் நாட்டிற்கு வந்தபின் தமிழோடும் தமிழக மக்களோடும் மிகவும் நெருக்கமாக ஒட்டிக் கொண்டவர். மேடைகளில் தைரியமாகவும் தெளிவாகவும் பிள்ளைத் தமிழ் பேசுவார். ஓரளவு வெளிப்படையானவரும் கூட. அவரது ஆரம்ப நாட்களில் சினிமா நடிகைகளுக்கான தடுமாற்றம் இருந்த போதும் திபை;பட இயக்குனர் சுந்தரை கைப்பிடித்த பிறகு தமிழகத்தின் மருமகளாக வடிவம் பெற்றார். அனந்த விகடனுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது போல அதன்பிறகு தன்னை ஒரு தாயாகவே அடையாளப் படுத்த மயற்சித்தார். அதற்காகவே விழாக்களில் கலந்து கொள்ளும் போது குழந்தைகளுடனேயே கலந்து கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்ததார். சின்னத்திரையிலலும் தனது திறமையை நிரூபித்து மக்களின் குறிப்பாக பெண்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தார். அரசியலில் அடியெடுத்து வைத்தால் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அடுத்த படியாக வெற்றி பெறும் தமிழ் நடிகையாக இருப்பார் என்று பேசப்பட்டது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அ தி மு க சார்பில் நிறுத்தப்படும் பிரதான வேட்பாளராக இருப்பார் என்றும் பேசப்ட்டு வந்தது. அத்தனையிலும் மொத்தமாக மண்ணை அள்ளிப்போட்டார் இந்திய டுடேயின் நிருபர். கற்பு குறித்தும் கற்பொழுக்கம் மீறிய நடவடிக்கைகள் குறித்தும் ஒரு ஆய்வு நடத்தியிருபபதாக சொல்லிக் கொண்டு இந்தியாடுடே தன்னை அனுகிய போதே அதன் எண்ண ஓட்டத்தை குஷ்பு அறிந்து கொண்டிருக்க வேண்டும். அவரை வம்பில் இழுத்து விடுவதும் அவரது கடந்த கால வரலாற்றை வாசகனின் எண்ணத்தில் நிழலாட விடுவதும் தான் அதனுடைய நோக்கம் என்பதை அவர் உணரத்தவறிவிட்டார்.செக்ஸ் பற்றிய கருத்துக் கணிப்பு நடத்தப்படுவது நல்லது தான் என்று ஆதிரிக்கிற பிரபல செக்ஸாலஜிஸ்ட் டாக்கடர் நாராயண ரெட்டி இது குறித்து கருத்து கேட்பதென்றால் செக்ஸாலஜி சம்பத்தப்பட்டவர்களிடமோ அல்லது ஒரு சமூகவியலாரிடமோ கேட்டிருக்க வேண்டும் என்றார். குஷ்புவிடம் கேட்டது பத்ரிகைக்கு கவர்சிசியை கூட்ட இந்தியா டுடே மேற்கொண்ட தந்திரமே. குஷ்பு அதை புரிந்து கொள்ளாமல் எப்போதும் போல சற்று அதிகம் அலட்டிக் கொள்ளும் அவரது இயல்புப் படியோ அல்லது அவர்பிறந்த இடமான மும்பையின் உயர்மட்டக் கலாச்சாரத்தை ஒட்டியோ ஆபத்தான கருத்துக்களை மிகச் சாதாரணமாக கூறிவிட்டார். பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுபட வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித்தனமையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான் என அவர் பேசிய கருத்துக்கள் ஒழுக்க வரையரைகளை பெரிதெனப் போற்றும் இந்தியக்கலாச்சாரத்தின் மீது அக்கறை உள்ள எவரும் ஜீரனிக்க்கூடியது அல்ல. இந்த வார்த்தைகளில் குஷ்புவின் தமிழகத்து மருமகள் இமேஜ் பலத்த அடிவாங்கிவிட்டது.கவனிக்கவும் . அதே இதழில்; மனநல மருத்துவர் டாக்கடர் ஷாலினி இதே விசயம் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் மிக நேர்த்தியாகவும் பக்குவமாககும் அமைந்திருந்தது. ஓரு நாள் காலை நேரத்தில் ரிமோட்டில் தொகை;காட்சியை நெருடிக் கொண்டிருந்த போது எதேச்சையாக ஜெயா டிவியின் காலை மலர் நிகழ்சியில் ஒரு இளவயது பெண் சாதாரணமாக ஒரு சட்டையும் பேண்டும் அணிந்து பேட்டியளித்த்துக் கொண்டிருந்ததை பார்க்க நேர்ந்தது. ஏதோ ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியாவுக்கு வந்து தனது செல்வாக்கின் புண்ணியத்தால் டி வி யில் முகம் காட்டுவதாக நினைத்தேன். ஆனால் அவரது தங்குதடையற்ற வெகு இயல்பான பேச்சும் அதில் தொனித்த அர்த்தமும் ஆழமும்; எவரையும் ஈர்க்கும் விதத்தில் இருந்தது. எனக்கு தெரிந்து நான் காலை நேரத்தில் பார்த்த முழமையான பேட்டி அது. அந்த ஒரு மணி நேரம் ரிமோட்டுக்கு விடுதலை தான். மக்களின் மனநலம் சார்ந்த பல விசயங்களை அவர் விவரித்தார். ஒரு பேச்சாளனாக எனக்கு அதில் நிறைய விசயங்கள் கிடைத்தன. இறுதியாக குடும்ப விவகாரங்கள் பலவற்றுக்கும் தீர்வாக அவர் ஒரு விசயம் சொன்னார். அது மிக முக்கியமானது. இன்றைய சமூக சூழலில் வயது வந்து விட்ட காரணத்திற்காக சிலர் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆசைக்காக சிலர் திருமணம் செய்து கொள்கிறார்கள் இவர்கள் யாருமே திருமணத்தின் நோக்கத்தை சரியாக புரிந்து கொள்வதில்லை. திருமணம் என்பது வயதிற்காகவோ ஆசைக்காகவோ செய்யப்படுவது அல்ல. மனித சமூகத்தின் அடுத்த தலைமுறையை பாதுகாப்பாக உருவாக்குவதற்காகவே செய்யப்பகிறது. இந்த உண்மையi இன்றைய இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் புரிய வைக்க வேண்டும் என்றார். இதை அவர்கள் புரிந்து கொண்டாலே பல பிரச்சினைகள் ஏற்டாது என்று தெரிவித்தார். அந்த கணத்தில் மனதில் எழுதி எடுத்துக் கொண்ட அந்த வாசகங்களை பல கூட்டங்களில் நான் பேசியது உண்டு. அந்த அறிமுகத்தோடு இந்தியாடுடேவின் விருந்தினர் பக்கத்தில் அவரும் எழுதியிருந்ததை பார்த்தபோது மிகுந்த ஆவலோடு பார்வைழய ஓடவிட்டேன். நம்பிக்கை வீண் போகவில்லை. அவரிடம் வாய் வழியாக பேட்டிகண்டவர் குண்டக்க மண்டக்க வேலை எதையும் செய்யவில்லை. டாக்டர் ஷாலினி அவரது பேட்டியில் திருமணத்திற்கு முன் செக்ஸில் ஆர்வம் காட்டாமல் இருப்பது ஒருவகையில் நல்ல விசயம்தான். எப்போதுமே தேவையில்லாத ரிஸ்க் எடுப்பது ஆபாத்தான் சங்கதி என்று கூறியிருந்தார்.ஒரு சமூக நல ஆர்வலரின் கண்ணோட்டம் ஒரு நடிகையின் கண்ணோட்டத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது என்தற்கு ஒரு சிறந்த உதாரணம் அது. டாக்டர் ஷாலினியின் கருத்து சமூக அக்கறை கொண்டது. இளைஞிகளுக்கு நல்வழிகாட்டக் கூடியது. குஷபுவின் கருத்தோ இளைஞிகiளுக்கு தவறான் வழிகாட்டுதலையுமு; துணிச்சலையும் தரக்கூடியது. ஓரு நண்பர் சொன்னார் : குஷ்புவுக்கு கிடைத்தது போல எல்லோருக்கும் பெருந்தன்மையான கணவர்கள் கிடைத்துவிடவார்களா என்ன? குஷ்பு யோசிக்க வேண்டிய விசயம் அது. இந்தியாடுடேவிடம் மருந்துக்காவது சமூக அக்கறை இரந்திருக்கும் எனில் 24 சதவீதம் பெண்கள் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் உறவு கொண்டிருந்தாக குறிப்பிடும் இந்தியா டுடே அத்தகைய பெண்களுக்கு அதனால் ஏதேனும் பிர்சசினை ஏற்பட்டதா என்பதையும், பிரச்சினை ஏற்பட்டிருந்தது எனில் அது எத்தகைய பிரச்சினை என்பதையும் கேட்டு அந்தப்பிரச்சினைகளுக்கு அவர்களால் தீர்வு காண முடிந்ததா என்பதையும், தொடர்ந்து எத்தகைய தொழில் ஈடுபட நேர்ந்தது என்ற விபரத்தையும்; வெளியிட்டிருக்க வேண்டும். குறைந்த பட்சம் அந்த இதழில் வெளிவந்த மனநல மரத்துவர் டாக்டர் ஷாலினியின் கருத்தையாவது ஹைலைட் செய்திருக்க வேண்டும்.ஆனால் இரண்டு கருத்துக்களிலிலும் இந்திய டுடேவிற்க்கு பிடித்தமானது குஷ்புவின் கருத்தே!ஏனெனில் அது தான் அவாகளது விற்பனைக்கு சவுகரியமானது.குஷ்புவின் கருத்து சர்ச்iயானவுடன் பத்ரிகைகள் தேடத் தொடங்கியது யாரைத் தெரியுமா? நடிகர் பிரபுவை. வெளிநாட்டிலிருந்து அப்பொது தான் வந்திறங்கிய அவரை தேடிப்பிடித்து குஷ்பு வின் கருத்து குறித்த விமர்ச்சனத்தை கேட்டார்கள். அவர் அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி விட்டார். அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னது தினசரிப்பத்திரிகைகளில் போட்டாவுடன் பிரசுரமாகியிருந்தது. எந்த திட்டத்தோடு குஷ்புவை இந்தியா டுடே அணுகிதோ அந்த திட்டம் வெற்றியடைந்துவிட்டது. இது விசயத்தில் அதிகம் அலட்டிக் கொள்ளாதவராக தன்னைக்காட்டிக்கொண்ட தங்கர் பச்சான் கூட அது அவரது சொந்த அனுபவமா இருக்கலாம் என்று கருத்து வெனளியிட்டார். பலரும் நினை;பபது போல இந்த வார்த்தைகளில் வெளிப்படுவது தங்கர் பச்hனின் வெற்றிச் சிரிப்பு அல்ல. வஞ்சக ரேகைகள் ஓடிய இந்தியா டுடேவின் வெற்றிமுகமே அதில் புன்னகை;கிறது. இந்தியா டுடே இதழ் வண்ணமயமான வழவழப்பான தாளில் நேர்த்தியான அச்சமைப்பில் தமிழில வெளிவந்த போது தமிழர்களுக்கு வாசிக்கக் கிடைக்காத விசயங்களை நேசிக்கும் எழுத்து நடையில் எடுத்துரைக்கும் என்ற கனவு எனக்கும் இருந்தது.பல பேராக இணைந்து தினமணி வாங்கிப்படித்த காலத்தில் நான் தனியாளாக இந்தியாடுடேவை காசு கொடுத்து வாங்கிப்படித்து வந்தேன். ஜெனரல் சுந்தர்ஜீயின் பரபரப்பான பேட்டியை வெளியிட்டதன் மூலமாக என்னை அது ஈர்ததிருந்தது. தேசத்தின் மீதும் சமூகத்தின் அக்கறை கொண்ட ஒரு பொறுப்பான பத்ரிகையை வாசிக்கிறோம் என்ற பெருமை எனக்கு இருந்தது. சினிமாக்களில் ஆபாசம் என்ற என்ற தலைப்பில் ஒரு சிறப்பிதழை அது வெளியிடும் வரை. அக்கட்டுரைக்கு சான்றாக அது வெளியிட்டிருந்த புகைப்படங்கள் எனது நம்பிக்iகையிலும் பெறுமையிலும் மண்ணை அள்ளிப் போட்டது. சரி இன்றை போட்டி உலகில் இப்படியெல்லாம் செய்தால் தான் பத்ரிகையை விற்க முடியும் ஒன்று ஒருவகையாக மனதை தேற்றிக் கொண்ட போது அதற்கடுத்த இதழில் முன்னதைவிட கடுமையான அதிர்சி காத்திருந்தது. வாசகர்கள் பலர் அதிர்ச்சியடைந்து எழுதிய கடிதங்களுக்கு பதிலளித்து அதன் அப்போதைய ஆசிரியர் எழுதிய தலையங்கம் படு அயோக்கியத்தனமானது. வாசகர்களில் சிலர் தங்களது அதிர்ச்சியை தெரிவித்துள்ளார்கள் ஆனாலும் பத்ரிகை முழவதுமாக விற்றுத்தீர்ந்து விட்டது என்று குறிப்பிட்டிருந்தார். எந்த பத்திரியாளரும் தர்மத்திற்காக பத்ரிகை நடத்த மாட்டார். விறபணையை அதிகரிக்க வேண்டும் என்பது பேனாவுக்கு மையைப் போல அவசியமான ஒன்று. அதற்காக விதவிதமான உத்திகளை கையாள வேண்டியுள்ளது என்பதும் உண்மைதான்.அனால் அதற்காக ஆபாசப்புகைப்படங்களை அச்சிலேற்றுவதும் அதன் மூலம் வாசகனை சூடேற்றி காசு பார்ப்பதும் மிக கீழ்த்தரமான மலிவான உத்தியல்லவா அத்தகைய கீழ்தரமான உத்தியை பயன்படத்திய பிறகு அதற்காக வருத்தப்படாமல் அதையே நமுட்டுச்சிரிப்போடு பெருமைப்பட்டுக் கொள்கிறதே அது கல்லெறி தண்டனை வழங்குமளவு கொடிய குற்றம் அல்லாவா? ஆனால் எந்தவித வெட்கமும் இன்றி ஆண்டுதோறும் இப்படி செக்ஸ் சிறப்பிதழ்களை வெளியிட்டு இந்தியாடுடே வின் அந்தராத்மா மகிழ்ச்சிக்கிளிப்போடு கொண்டாடியது.இந்த ஆண்டு தொடர்ந்து பல செக்ஸ் சிறப்பிதழ்களை வெளியிட்டது. அதில் பிரதானமானது செப்டம்பர் 28 தேதியிட்ட இதழ். அதன் அட்டைப்படமே நீலப்பட சீடிக்களின் அட்டைப்பட ரேஞ்சில் இருந்தது. தலைப்பு: மணமாகாத இளம்பெண்களின் செக்ஸ். ஊள்ளே மணமகாத இளம் பெண்களிடம் யாரும் எளிதில் கேட்டுவிட முடியாத கேள்விகளை சர்வசாதாரணமாக கேட்டு நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தது. பல கேள்விகள் ஆபாசப் புகைப்படங்களை விட அதிர்ச்சிகரமானவை.நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் சற்றேறக்குறை அதன் சரிபாதியை எட்டிப்பிடித்திருப்பவர்கள் பெண்கள். அப்படினால் சுமார் 50 கோடிப் பெண்கள் இந்தியாவில் இருக்கிறாhகள். இந்தியா டுடே மனமாகாத பெண்களின் செக்ஸ் குறித்து ஆய்வு நடத்தியது வெறும் 2035 பெண்களிடம் மட்டுமே. அதுவும் நகரப் பகுதிகளில் மட்டுமே. அதுவும் குஷ்பு போன்று அது தேர்ந்தெடுத்த பெண்களிடம் மட்டுமே. அப்படித் தேர்ந்தெடுத்து கருத்துச் சொன்னவர்களில் பெரும்பாலோர் இந்தியா டுடேவின் எண்ண ஓட்த்திற்கு எதிராகவே கருத்து தெரிவித்திருந்hர்கள். உதாரணமாக படித்த ஆண்கள் தாங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்கள் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார்கள் என்ற குஷ்புவின் கருத்தை வெளியிட்;ட அதே பக்கத்தில் 82 சதவீத ஆண்கள் திருமணமாகும் போது பெண்ணின் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்று கருத்துச் சொல்லியுள்ளனர். வேறு தொடர்பில் இருந்தவரை திருமணம் செய்வீர்களா என்ற கௌ;விக்கு 71 சதவீதம் மக்கள் மாட்டோம் என்று கருத்துத் தொரிவித்திருக்கிறார்கள். இது இந்தியா டுடே குழமத்தினரின் வாழ்வோட்த்திற்கும் சமுகத்தின் கருத்தோட்டத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை அப்பட்டமாக வெளிப்படுத்தி விட்டது. திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்தது உண்டா என்ற கேள்விக்கு 76 சதவீதம் பெண்கள் இல்லை என்றே பதிலளித்திருக்கிறார்கள். 24 சதவீதம் பேர் ஆம் என்று பதிலளித்திருக்கிறார்கள். அந்தரங்க மான இந்தக் கேள்விக்கு நான்கில் ஒருவர் செக்ஸ் உறவு கொண்டதாக ஒப்புக்கொண்டிருப்பது திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு சகஜமாகி வருகிறது என்பதை காட்டுதாக இந்தியா டுடே வாதிடுகிறது. ஆனால் ஒர விசயத்தை வசதியாக மறந்து விட்டார்கள் தெருவில் போவோர் வரவோர் எல்லோரிடமுமு; இத்தைகயை கேள்வியை கேட்கவில்லை. ஆட்களை தோந்தெடுத்து கோள்வி கேட்டதாக இந்தியாடுடே கூறுகிறது.திருமணம் ஆகாத பெண்களிடம் சென்று, வாய்வழியாக செக்ஸ் வைத்துக் கொள்வதை விரம்புவீர்களா என்று; கேள்வி கேட்டு அதற்கு விடை பெற வேண்டு மெனில் எத்தகைய பெண்களை அவர்கள் தேர்ந்தெடுத்து இந்த ஆய்வை நடத்தியிருக்க முடியும் என்பது மில்லியன் டாலர் பெருமானமுள்ள கேள்வியாகும். மரியாதையான பெண்களிடம் இத்தைகைய கேள்விகளை கேட்டிருந்தால் கேள்வி கேட்டவர் எதனால் அடிவாங்கியிருப்பார்? என்பது யூகிக்க முடியாத ஒரு விசயமல்ல. டாக்டர் நாராயண ரெட்டி சொல்கிறாh:ஒரு சர்வேயில் சொல்லப்படும் கருத்துக்கள் ஒட்டுமொத்த மக்களின் கருத்தோ உண்மையின் பிரதிபலிப்போ அல்ல. இரு நூறு பேரிடம் கேள்வி கேட்டு அதற்கு அத்தனை பேருமே ஆம் என்று பதில் சொல்லியிருந்தாலும் கூட அதை ஒட்டு மொத்த மக்களின் கருத்து என்று சொல்லிவிட முடியாது என்கிறார் ஆனால் இந்தியப் பெண்களில் நான்கில் ஒருவர் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்திருக்கிறார்கள் என்ற முதன்மையான பிரச்சாரம் அந்த இதழ் நெடுகிலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. உண்மையில் இது எதார்தத்தின் பிரதிபலிப்பது அல்ல. அவர்களது ஆசையின் வெளிப்பாடு. சமுதாயம் எப்படி மாறினால் சவுகரியமாக இருக்கும் என்று ஆசைப்படுகிறார்களோ அந்த ஆசையின் வெளிப்பாடு.அந்த இதழிலுள்ள எந்த ஒரு கட்டுரையும் முழுமையாக எவரும் புரிந்து கொள்ள முடியாத மர்ம பாஷையில் இரந்தது. ஓட்டுமொத்தத்தில் கட்டுரையாளர்களின் கருத்து பெண்கள் கட்டுப்பெட்டித்தனமாக இல்லை. சுதந்திரமான உறவுகளுக்கு தயாராகிவிட்டார்கள் என்று திரும்பத்திரும்ப கூறப்பட்டிருந்தது. கணக்கெடுப்புத் தகவல்களோ அல்லது அவர்கள் மேற்கோள் காட்டும் நபர்களோ அவர்களுக்கு சாதாகமாக இல்லாத போதும், புகைப்படங்கள் மற்றும் கனக்கெடுப்பில்; பயன்படத்தியதாக சொல்லும் வாசகங்களைப் போட்டு தமிழ்வாசகனின் நாவில் எச்சில் ஊற வைக்க முயறசித்திருக்கிறார்கள் என்பதே உண்மை. அந்தப்புத்தகம் பெண்கள் குறித்து பேசினாலும்; அது சபலிஸ்ட்டுகளான ஆண்வாசகர்களை குறிவைத்Nது தயாரிக்கப்பட்டிருந்து என்பது நூற்றுக்கு நூறு உண்மை. செக்ஸ் ஆய்வும் அதன் முடிவுகளும் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். அது கண்க்கில் எடுத்துக் கொள்த்தக்கக்க விசயமே அல்ல. உள்ளே இருந்த புகைப்படங்களோ மிக ஆபாசமனாவை. அது மரியாதையான எந்த வீட்டின் வரவேற்பரைக்கும் தகுதியானது அல்ல. அந்த புகைப்படங்கள் எதுவும் சமூகத்தில் ஏதோ ஒரு வகையில் எங்கோ ஒரு இடத்தில் நடந்தது அல்ல. இந்தியா டுடே கனவான்களின் கற்பனைக்கேற்ப விஷேச மாடல்களை கொண்டு அந்த இதழுக்காகவே பிரத்தியோகமாக படம்பிடிக்கப்பட்டவை. இது யோக்கியமான செயல் என்றால் இவ்வளவு அருமையாக(?) புகைப்படம் எடுத்தவர்களை பெரிய எழுத்துக்களில் பெருமைப்படுத்தியிருக்க வேண்டுமே? அப்படிச் செய்யவில்லை. கண்ணுக்கு சட்டென்று புலப்படாத ஒரு மூளையில் சிறு எழுத்துக்களில் இந்தச் செய்தி பிரசுரிக்கப் பட்டிருந்தது. ப்ரதீப் சிங் எடுத்த எல்லா புகைப்படங்களும் புரொஃபசனல் மாடல்களை கொண்டு எடுக்கப்பட்டது என்ற மிக்சிறிய எழத்துக்களில வஞ்சக ரேகை ஓடும் அதன் கோர முகம் புதைந்து கிடந்தது. அட்டகாசமான அந்தப் புகைப்படங்களால் இந்தியாவில் செக்ஸ் மலினப்பட்டுவிட்டதான ஒரு தோற்றத்தை அது ஏற்படத்தியிருந்தது. நாளைக்கே உங்கள் அருகே நிற்கும் பெண்ணை சாதாரணமாக நிங்கள் அழைக்கலாம் என்ற தோரணை அதிலிரந்தது.இத்தகைய புள்ளிவிபரங்களும் கணக்கெடுப்புகளும் பல சமயங்களில் வெறும் கண்ணாமூச்சி விளையாட்டுதான்என்று இந்திய அரசயல்வாதிகள் புரிந்து கொண்டுவிட்ட நிலையில் நடிகையான குஷ்பு அவசரப்பட்டு அள்ளிக் கொட்டி விட்டார். விசயம் பற்றிக் கொண்டு விட்டது.குஷ்புவிட்ம் இந்தியா டுடேயின் செய்தியாளர் பேட்டி கண்ட விதத்தில் அவரது அந்தரங்க வாழக்கையைப்பற்றி வாசகனுக்கு தேவைப்படாத பல தகவல்கள் உண்டு. எங்கள் உறவு பற்றிய நிச்சயம் இருந்ததால் திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தோம் என்று குஷ்பு தருகிற வாக்கு மூலம், குழந்தைகளும் எங்களுடன் உறங்குவதால் நாங்கள் எங்களுக்கென்று தனியான நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. இப்போதும் எங்களது தாம்பத்தியம் மகிழ்ச்சிhனதானக இருக்கிறது என்பன போன்ற தகவல்கள் பேட்டியாளரின் மலிவான கவர்ச்சி நோக்கத்தை அம்பலப்படுத்திவிடுகின்றன். குட்டை கலக்கி மீன் பிடிப்பபது என்றால் இது தானோ? தங்கர் பச்சான் விசயத்தில் குஷ்பு நடந்து கொண்ட அதிகப் பிரசங்கித்தனமான நடவடிக்கையால் கொதித்துப் போயிருந்த தமிழ்பாதுகாப்பு(?)க் குழவினருக்கு சரியான சந்தாப்ம் வாய்த்தது. குஷ்புவிற்கு எதிரான ஆர்ப்பாட்ம் கெபாடும் பாவி எரிப்பு ஆங்காங்கே வழக்கு பதிவு என புதிய தமிழ் கலாச்சாரத்தின் அத்தனை எதிர்ப்பு வடிவங்களையும் அரங்கேற்றினர். கழுதை கழுத்தில் குஷ்பு படம் மாட்டி ஊர்வலம் நடத்தினர். ஒருகாலத்தில் தமிழர்கள் கோயில் கட்டி கொண்டாடிய குஷ்பு தன் முதுகில் உட்கார்ந்திருக்கிறார் என்பது அந்த கழுதைககு; எங்கே தெரியப்போகிறது?ஆனால் வன்மமாகவும் விகாரமாகவும் குஷ்புவிற்கு எதிரான போராட்டங்களைத் தூண்டிவிட்ட திருமாவளவள் உள்ளிட்ட தமிழ் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள்; இந்தியா டுடே பற்றி எங்கும் வாய்திறக்கவில்லை. தொல் திருமாவளவன் இந்தியாடுடே குறித்து ஒரு சொல் திருவாய்மலர்தருள மாட்டாரா என தமிழகம் தவமாய் தவமிருந்து பாhத்தது. அவர் வாய் திநக்கவே இல்லை. அவரும் இந்தியா டுடேவின் விருந்தினர் அல்லவா? நடிகர் சங்கத்திடம் நியாயம் கேட்கிற திருமாவளவன் இந்தியா டுடே விடம் என்ன நியாயத்தை கேட்டுப் பெற்றார் என்பது அர்த்தமுள்ள கேள்விதான். ஓரு கழுதையின் முதுகிலாவது இந்தியாடுடே ஒரு இதழை மாட்டியிருக்க வேண்டாமா? பதில் தான் இதுவரை கிடைக்கவில்லை. குஷ்பு பிரச்சினை அரசியல் வாதிகளால் பெரிது படுத்தப்பட்ட போது அதை பெரியாரிசத்தின் பெயரால் எதிர்ர்த்த சமூக அக்கறை கொண்ட மார்க்ஸ் போன்ற எழத்தாளர்கள் கூட இந்தியாடுடே வின் இந்த வக்கிர வியாhபாரத்தை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது பெரும் வேதனைதான். குஷ்புவின் கருத்தை எதிர்த்தோரும் ஆதரித்தோரும் திட்டமிட்டு இந்தியா டுடேவின் மதிப்பை காப்பாற்றிட முயற்சி செய்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எதன் பொருட்டு இந்தியா டுடேவை அவர்கள் பாதுகாக்க முயற்சிக்கிறார்கள் அல்லது கண்டு கொள்ளாமல் விட்டார்கள் என்பது புரியாத புதிரே. இந்த சந்தர்ப்த்தில் வகுப்பு துவேசத்தை பரப்புவதற்கென்றே நடத்தப்படுகிற தினமலர் பத்ரிகை கொஞ்சமும் கூச்சநாச்மில்லாமல் ஒரு பொய்யை எழுதியது. குஷ்புவுக்கு காட்டப்படுகிற எதிர்ப்பை கண்டு திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் கொதிப்படைந்நதிருப்பதாக அப்பட்டமாக பொய்ச் செய்தி வெளியிட்டது. (காஞ்சிபுரத்துச்) சாமியார்களால அணுராதாரமணண்; பாதிக்கப்பட்ட செய்தி பரவிய போது மயிலாப்பூர் மாமிகள் வருத்தப்ட்டதை கண்டு கொள்ளாத தினமலர் முஸ்லிம் பெண்கள் மீது காட்டிய அக்கறை விஷமத்தனதானது. ஆதை த மு மு க வினர் கண்டித்து சென்னiயிலும் மதுரையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பலர் கைதாகி பின்னர் விடுதலையாயினர்.உடனடியாகச் செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் வரவேற்கப்பட வேண்டியதே! அதே நேரத்தில் இந்தியா டுடேயின் வக்கிர வியாபாரத்தையும் சேர்த்துக் கண்டித்திருந்தால் அது தமுமுக வின் விசாலப்பார்வைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருககும். முஸ்லிம் என்று வந்தால் தான் போராட வருவோம் என்றில்லாமல் சமூகத்தை பாதிக்கிற எந்த விசயத்தையும் நாங்கள் கண்டிக்கத் தயங்க மாட்டோம் என்று வெளிப்படுத்தவதாக அமைந்திருக்கும். இஸ்லாத்தின் கடமைகள் மட்டுமே முஸ்லிம்களுக்கு உரியவை. இஸ்லாம் தடை செய்துள்ள விசயங்கள் அனைத்தும் மனித சமுதயத்திற்கு ஒட்டுமொத்தமாக தீங்களிப்பவையே என்ற இலக்கணத்தை அது புரிய வைத்திருக்கும். கண்களுக்கு கடிவாளம் பூட்டியுள்ள பெண்ணியச் சார்பு பேச்சாளர்கள் கற்பு என்பதை ஆணாதிக்கக் கருத்தாக கருதி குஷ்புவிற்கு வக்காலத்து வாங்க முயன்றனர்.கற்பொழுக்கம் என்பது பெண்களில் மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆண்கள் உலகில் அது ஒரு அலட்சியமான சொல் என்ற வாதத்தை பரவலாக பேசினர். அது முற்றிலும் உண்மையல்ல. ஆண்களிலும் கற்பொழுக்கம் இல்லாதவர்கள் கள்வர்களாகவே கருதப்படுகிறார்கள். சினமா உலகம் உள்பட கற்பொழுக்கம் கெட்ட எந்த ஆணும் மரியாதையை பெற முடியாது. விடுதிகளில் மாட்டிக் கொள்ளுமு; சட்ட விரோத ஜோடிகளில் பெண்களை மட்டும் பிடித்து விட்டு ஆண்களை விடுதலை செய்து விடுவதுமில்லை. எனவே சட்டத்திலும் சமூகத்திலும் கற்பொழுக்கம் தவறும் பழக்கமுடையவர் ஆணாயினும் பெண்ணாயினும் மரியாதை அற்றவரே!ஆயினும் கற்பொழுக்கம் மிறீனால் பாதிக்கப்படுவது அதிகம் பெண்களே! அது ஏன் என்பது தனி ஆய்வுக்குரிய விசயம். ஆனால் ஒன்று நிச்சயம் அதன்காரணத்திற்காகவும் பெண்கள் அதிக எச்சரிக்கை அடைவது அவசியம். அது காண்டம் அணிகிற எச்சரிக்கை அல்ல. கற்பை பேணுகிற எச்சரிக்கை.ஏனெனில் பிரபு சாவ்லாவும் அவரது குழவினரும் வாழும் மேற்கத்திய இரவல் செசைட்டியில் கற்பு என்பது காலாவதியாகி விட்டிருக்கலாம். அது இந்தியக் கலாச்சாரத்தை பொறுத்தவரை பெரம்பாலான இந்திய மக்களைப் பொறுத்த வரை இன்னும் புனிதமானது. 82 சதவீதம் பேர் மணப்பெண் கன்னியாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தவறான வழிகாட்டுதலால் பெண்கள் தவறிப்போனால் இந்தியாடுடேக்கள் காசு சம்பாதிக்க அதுவும் வழியமைத்துக் கொடுக்கலாம் ஆனால் அவர்களுக்கு வாழ்க்ககையை அமைத்து தராது. கலாச்சார வீழ்ச்சியினால மேல் நாடுகளில் வாழ்கைகைய பற்றி மதிப்பீடுகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியும் விரக்கதி மனப்பான்மையும் பெருகியுள்ளது. எனவே இந்தியத் தத்துவங்களின் பாலும் கலாச்சாரத்தின்பாலும் அவர்களுக்கு ஆசையும் அக்கறையும் ஏற்பட்டுவருகிற காலகட்டத்தில் மேலைநாட்டின் கழிவுகளை இந்தியக்கலாச்சார புரட்சியாக சிததரிக்க முயல்கிறது இந்தியா டுN;ட. இது இன்று நேற்றல்ல. தொன்று தொட்டு அது செய்துவருகிற புண்ணியகாரிமாகும். குஷ்பு விவகாரத்தால் அது மக்கள் மன்றத்தில் தற்போது அம்பலப்பட்டுள்ளது. இத்தைகய ஒரு கண்ணக்காய்வை வெளியிடுவதற்கு முன், இந்தியா டுடே குழுமத்தினர் தங்களது மனைவியர் மகள்கள் சகோதிரிகளின் கருத்தையும் கேட்டுப் பெற்றிருந்தால் ஒரு வேளை இந்த விபரீதம் நடந்திருக்காது.குஷ்பு வை சிக்கவைத்த தங்களது தொழில் திறமைக்கு பிராயசித்தமாக அடுத்த இதழில் குஷ்புவின் அழகிய படத்தை அட்டைப்படத்தில் போட்டு விட்டு பிரபு சர்வலா எழுதுகிறார் :வழக்கம் போல சில வாசகர்கர்கள் எதிர்ப்பு; தெரிவித்திருந்தனர் ஆனாலும் அந்த இதழ் முழுமையாக விற்றுத் தீர்ந்தது. இக்கருத்தை நண்பர்களோடு பகிர்ந்து கொண்ட போது இன்னும் நிறைய சம்பாதிக்கனும் என்றால் வேறு சில வழிகள் இருக்கிறதே அது அவருக்கு தெரியாதோ என்று கேட்டனர். யாமறியோம் பராபரமே!