Saturday, December 1, 2007

உங்கள் ஓட்டு யாருக்கு?

ஓட்டுப் போடுங்கள்
ஓட்டுப் போடுவது உங்கள் கடமை
உங்கள் குடும்பத்தில் உள்ளோரை வாக்களிக்கச் செய்யுங்கள்!
உங்களது நிறுவனங்களில் பணியாற்றுவோர் வாக்களிக்கச் செல்ல அனுமதி கொடுங்கள்।
இது உங்களது தேசீய கடமை மட்டுமல்ல சமயக் கடமையும் கூட।

அனுதாப அலையோ எதிர்ப்பலையோ அதிவேகமாக வீசாத தேர்தல் இது.தமிழக மக்கள் எந்தப் பக்கம் சாயப்போகிறார்கள் என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. ஓரு ஐடியா கிடைக்கலே என்ற சொல் ஆய்வாளர்கள் மட்டத்திலும் கூட அதிகமாக இருக்கிறது.ஒரு தெளிவான முடிவு நோக்கிச் செல்ல வேண்டிய சரியான கால கட்டம் இது. இந்தத் தேர்தலே நமக்கு விடிவாகிடும் என்றில்லாவிட்டாலும். இந்தத் தேர்தலாவது நமது வளர்ச்சிக்கான சமிக்ஞைகளை தருவதாக இருக்க வேண்டும்.இந்த சந்தர்ப்பத்தில் உங்களது திட்டமிட்ட சரியான ஒட்டு தமிழகத்திற்கு நன்மைய உண்டுபன்னுவதாக அமையும். சந்தேகமில்லாமல், பிரச்சினைகளை பெருக்காமல் குறைக்கவாவது உதவும் .
அலைகளற்ற இந்தத் தேர்தலில் வாக்களிக்கச் செல்வதற்கு முன் நீங்கள் யோசிக்க வேண்டிய சில விசயங்கள் உண்டு. நீங்கள் திட்வட்டமாகவும் தெளிவாகவும் முடிவாடுக்க அது உதவும்.
உங்கள் தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பபுள்ள இரு வரை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நெருக்கமானவர் என்பதற்காக எந்த வகையிலும் மூன்றாம் நிலை வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்காதீர்கள். இந்தத் தேர்தலில் தங்களது சொந்த ஒட்டு வங்கியை தக்கவைத்துக் கொள்வதற்காக அல்லது மதிப்பிட்டுக் கொள்வதற்காக பி.ஜே.பியையும் விஜயகாந்தின் கட்சியையும் தவிர வேறு எந்தக் கட்சியும் களத்தில் இல்லை என்பதை கவனத்தில் வையுங்கள். நீங்கள் அந்தக் கட்சிகளின் அனுதாபிகாளக இல்லை எனும் போது ஒரு முக்கியமான தேர்தலில் உங்களது வாக்கை விணடித்த விடாதீர்கள்.
கட்சி அனுதாபத்தை தூர எறிந்து விடுங்கள்.தமிழகத்தில் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கான அமைப்புக்கள் வழக்கம் போலவே இரண்டு அணிகளையும் ஆதரிக்கின்றன. புதிதாக ஏதாவது ஒரு லீக் விஜயகாந்தோடு சென்றிருந்தால் நமது அமைப்புக்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும். இந்தத் தேர்தலில் அப்படி ஒரு வாய்ப்பு அமையவில்லை. அது ஒரு ருசிக்குறைவுதான். பரவாயில்லை பெறுத்துக்(?) கொள்வோம்.இயக்கங்கள் அமைப்புக்கள் சுட்டிக் காட்டும் கட்சிக்கு தமிழக முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களித்த்தில்லை என்பது தான் வரலாறு. அந்த வரலாறு அப்படியே தொடரட்டும்.
வீராவேசம் காட்டுகின்ற முஸ்லிம் இயக்கங்களின் லட்சணம் பத்ரிகைகள் தொலைக்காட்சிகள் என்ற எல்லைகளை கடந்து இணையத்தளங்கள் குறுந்தகவல்கள் வழியாகவம் நாறி நிரம் குலைந்து கிடக்கிறது. திரு பீ ஜேவும் அவரது ஆட்களும் த.மு.முக வினரும் மாநில எல்லைகளை தாண்டி வெளிநாட்டில் பிழைக்கச் சென்ற இடத்திலும் கூட சக்களத்தி சண்டயை விடுவதாக இல்லை. வளைகுடா நாடுகள் தென்கிழக்காசிய நாடுகளின் சுற்றுப்புறச் சுகாரத்தை சீர்கெடுக்கிற வகையில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைககுப்பின் கிறுக்குப் பிடித்தவர்களாக கத்தி; சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
திரு பீஜே சமுதாயத்தில் உருவாகிவிட்ட ஒரு தீய சக்தி. தனது லாபத்தை பார்த்தக்கொண்டு பதுங்கிவிடுகிற பேர்வழி அவர். எந்த நிலையிலும் அவரை முன்னிறத்துவதோ முதன்மைப்படுத்துவதோ ஆபத்தானது. முஸ்லிம் சமூக அரங்கில் அவரால் ஏற்பட்ட தீய விளைவுகள் ஏராளம். பார்வையற்ற கொள்கைக்காரர்கள் வெனிநாடுகளிலிருந்து செய்து வருகிற பண உதவியால் இன்னும் உலாவி;க் கொண்டிருக்கிறார்கள். ஒரு நல்ல விலைக்கு தொலைக்காட்சியை விற்று விட்ட தெம்பில் இம்போது அரசியல் பேச வந்திருக்கிறார்கள்.
அரசியல் கூடாது என்று சொல்லி த.மு.மு.க.விலிருந்து விலகிய பின் எவ்வளவு சாமார்த்தியமாக அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் பாருங்கள்! கொஞ்சமும் நா கூசாமல் கும்பகோணத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் கூடியதாக பல லட்சம் தடவை தொலைக்காட்சியிலும் பத்ரிகையிலும் பேசியவர் முதலமைச்சரை சந்தித்த போது கும்பகோணத்தில் 1 லட்சம் பேர் கூடினர் என்று சொன்னாரே! அம்மாவின் அறையே அவருக்கு மஹ்ஷராகிவிட்டது. அம்மாவுக்கு முன்னால் அவரது நாவு அவரையும் மீறி உண்மை பேசிவிட்டது. அம்மா அவருக்கு எப்படி அல்லாஹ் ஆகிவட்டார் பாருங்கள்!
அடப்பாவிகளா! உங்களால் நிம்மதியை தொலைத்து விட்டு அமைதியான வாழ்கைக்காக போராடிக் கொண்டிருக்கிற ஒரு அப்பாவிச் சமுதயத்தை எதற்hக இப்படி ஏமாற்றுகிறீர்கள்? தொலைக்காட்சிகளுக்கு முன்னால் உட்கார்ந்நதிருப்பவர்கள் எல்லோரும் கூடைகூடையாய் காதில் பூச்சூடிக்கொண்டிருக்கிற கேனயன்கள் என்று நினைத்துவிட்டீர்களா? உங்களுக்காக கூடுகிற கூட்டத்தை நீங்கள் அப்படி நினைத்துக் கொண்டால் அதில் தவறேதுமில்லை. தொலைக் காட்சியை பார்ப்பவர்கள் எல்லோருமா அப்படி இருப்பார்கள்?
முன்னுக்குப்பின் முரணாக பேசுபவன் பொய்யன் என்று சொல்லி சம்சுத்தீன் காஸிமியை பொய்யராக்க முயற்சி செய்தார்களே! உங்களுடைய இந்த இமாலயப் பொய் நீங்கள் சமுதாயத்திலிருந்து துறவறம் பெற்றுவிடத் தக்க முரண்பாடல்லவா?
நல்லோர்களையும் முன்னோர்களையும் பொய்யர்களாகவும் புரட்டர்களாகவும் விமர்சனம் செய்த புதிய இயக்கங்களின் போரளிகள் இந்த அண்ணனிண் உருட்டல் புரட்டல்களை அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா! ஏன்று ஒரு ரகசியச்சிரிப்போடு ரசித்துக் கொள்வது கேவலமானது. சாத்தன்கள் ஓதிய வேதத்தால் சமுதாயத்தில் விளைந்த சங்கடங்களை எண்ணிப்பார்க்கிற போது எழும் பெருமூச்சில் உஷ்ணம் உச்சத்திற்கு போய்விடுகிறது.
அரசியலில் பங்கேற்காமல் சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம் என்று சொன்ன தமிழ்நாடு தறுதலைகள் ஜமாத் தமிழக முதலசை;சரிடம் பேசும் போது சமுதாயத்திற்காக பேச வேண்டியதை எல்லாம் பேசி (?)முடித்துவிட்ட பிறகு இந்தச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்த புரோக்கர் ஜெகவீரபாண்டியனுக்கு ஒரு சீட் கொடுங்கள் என்று முறையிட்டதாம். என்ன கொடுமையடா இது? எங்கள் இறiவா! இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தச் சோதனை?பொய்யே மெய்யாகக் கொண்ட ஒருவரின் அதரவையோ எதிர்பபையோ சமுதாயம் ஒரு போதும் பெருட்படுத்தப்போவதில்லை. கண்ணையும் காதையும் பொத்திக் கொண்டிருக்கிற காந்தியின் பொம்மைகளை தவிர.திரு பி,ஜே வை சந்தித்தின் மூலம தனக்குத் தேவையெனறால் எத்தகைய சமூக விரோதியையும் ஜெயலலிதா பக்கத்தில் வை;த்துக் கொள்வாரரோ என்ற சந்தேகத்தை; முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்படுத்திவிட்டார். கருணாநிதியின் மீது இனம் புரியாத கடும் வெறுப்பில் முஸ்லிம் சமூகம் இருக்கிறது என்ற போதும் அவர் ஒரு தடைவ கூட திரு பீஜே வை சந்திக்க அனுமதித்ததில்லை என்ற விமர்சனம் முஸ்லிம் உலகில் அர்தத்தோடு எழுப்பப்படுவதற்கு செல்வி ஜெயலலிதாவே காரணமாகிவிட்டாரா? அல்லது அவருக்காக உழைத்த அமைச்சர்கள் அறியாமiயில் செய்த பிழையா? ஏன்பது தெரியவில்லை. அ தி மு கவினரக்கு முஸ்லிம் சமூகத்தினரிடம் இரக்கிற தொடர்பின் இழை அனுபவமற்றது என்பதை இது புலப்படுத்திவிட்டது.
தமிழக முஸ்லிம்களின் அரசியலில் வாயெடுப்பாக வந்தமைந்துவிட்ட தேசிய லீக் எனும் கட்சி அப்துல் லத்தீப் சாஹிப் என்ற சமுதாயத் தொண்டருக்காக பொறுத்துக் கொள்ளப்பட்ட கட்சியாகும். போஸ்டர் அடிக்க காசு வைத்திருந்தததை தவிர வேறெந்த தகுதியிமில்லாத சிலரிடம் அது கைமாறிய பிறகு அதற்கு ஒரு அன்னக்கை தேவைப்பட்டது. எனவே திரு பீஜே ஜமாத்தை அது துணைக்கு வைத்துக் கொண்டது. இந்த இருவரில் எவரும் முஸ்லிம் சமுமூகத்தின் அதிகார பீடங்களான பள்ளிவாசலுக்குள் அனுமதிப்படுவதில்லை என்று உளவுத்துறை கூறியதால் முதலமைச்சரை சந்திக்க வரும்போது தொப்பியும் தாடியும் வைத்த சிலரையும் சோத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன் விளைவாக இ.வி.க.வும் ஷம்சுத்தின் காஸிமியும் கூட்டமைப்பு ஏன்ற போர்வையில் பங்கேற்கச் செய்யப்பட்டனர். ஏதோ அழைக்கிறார்கள் போய் வருவோம் அதன் மூலம் நாமும் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள ஏதுவாகும் என்று நினைத்த அவர்களும் அதில் கலந்து கொண்டுவிட்டனர். முதல்வரை சந்திக்கச்செல்வது என்பது தவறில்லைதான். ஆனால் யாருடன் போகிறோம் யாரை பெரியவர்களாக்கும் முயற்சியில் போகிறோம் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ளாமல் இருந்து விட்டு பிறகு வந்து குத்துதே குடையுதே என்கிறார்கள். சில பணக்கார சகாக்களின் கைங்கர்யமும் இதில் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.வேலூரில் நடைபெற்ற செயற்குழுவின் புண்ணியத்தால் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை இந்த விபத்தில் சிக்காமல் தெய்வாதீன்மாக தப்பிவிட்டது.இடஒதுக்கீடு என்ற பிலாஸ்டிக் கீரையை காட்டி தற்போதைய அரசையே ஆதரிப்பது என்ற வலுவற்ற தங்களது வழிக்கு மக்களை இழுக்க இவர்கள் முயற்சிப்து ஏற்கத்தக்கதல்ல.
தமிழகத்தின் நிலையை உங்கள் தொகுதியின் நிலையை சற்று எண்ணிப்பாருங்கள். மாநிலம் எவ்வளவு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கு எந்த அரசியல் வாதியின் சொற்பொழிவையும் பத்ரிகையும் தொலைக்காட்சியையும் பார்க்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் அன்றாடம் பயணம் செல்கிற சாலைகளையும் பேருந்துகளையும் கொஞசம் சிந்தித்துப் பார்த்தால் போதுமுhனது.
கந்து வட்டி ஒழிப்பு, லாட்டரிக்கு தடை ஆகிய மக்கள நலச்சட்டங்களும் மகளிர் சுய உதவிக்குழுக்ள அமைத்ததும் இப்போதைய அரசின் சாதனைகள் என்றாலும்
அ.தி.மு.க வின் ஆட்சிக்காலத்தில் பெரும் மதக்கலவரங்கள் ஏற்படவில்லை என்பது மட்டுமே மிகப்பபெரிய சாதனை.ஜெயேந்திரர் கைது விசயத்தில் முஸ்லிம்கள் சந்தோஷப்படுவதற்கு எதுவுமில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் வரை ஜெயலலிதா கட்டுப்படுத்த முடியாத மக்களை சட்டை செய்யாத முதல்வராகவே இருந்தார்.தமிழ் நாடு வடகிழக்கு மாநிலங்களைப் போல மாறிவிடுமோ என அச்சப்படவைக்கிற அளவுக்கு மாநிலத்தின் வளர்ச்சி அபாயகரமாக சரிந்து கொண்nருக்கிறது.கல்வித்துறை பொதுப்பணித்துறை ஆகிய எதிர்கால வளத்திற்கான துறைகள் கோமாவில் கிடக்கின்றன.
எனவே நாட்டு நலன் என்று யோசிக்கிற கட்டத்தில் ஆளும் அ.தி.மு.க அரசை ஆதரிப்பதற்கு வலிமையான காரணங்கள் ஏதுமில்லை.
இன்னொரு விசயமுமும் கவனிக்கத்தக்கது. பெரும்பாலும் ஆளும் கட்சியின் மீது தான் மக்களுக்கு வெறுப்பு இருக்கும். இந்தத் தேர்தலில் கருணாநிதியின் மீதும் தி மு க வின் மீதுமே முஸ்லிம்கள் அதிக வெறுப்புக் கொண்டுள்ளனர். ஆயினும் அந்த வெறு;பபு ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மாறுவதற்கு முக்கியத்தடையாக இருப்பது வெற்றி பெற்றால் இவர் எப்படி நடந்து கொள்வாரோ என்ற அச்சம் தான். ஜெயலலிதா வெற்றி பெற்றால் அவரது பதவியேற்பு விழாவிற்கு நரேந்திர மோடி அழைக்கப்படுவார் என்ற பிரச்சாரம் உண்மையாகிவடுமோ என்ற அச்சமே முஸ்லிம்கள் அவரை ஆதரிக்க தடையாக இருக்கிறது.
கருணாநிதியின் மீதான வெறுப்புணர்வு ஒன்றை தவிர ஜெயலலிதாவை ஆதரிப்பதற்கு வேறு பெரும் காரணங்கள் எதுவும் இல்லை.கருணாநிதி ஆதரிக்கத்தகுந்தவரா என்ற அடுத்த வினாவிற்கும் கிடைக்கிற பதிலும் உறுதியானதல்ல.
தள்ளாமையின் எல்லையில் நிறகும் பெரியவர் தனது முதிந்த நிலையில் தூய மரியதையை பெற்றுக்கொள்ளாமல் போய்விட்டார் என்பது துரதிஷ்டமே! குடும்பப் பாசத்தையும் பழந்தமிழiயும் தவிர தற்போதைக்கு அவரிடம் எதுவமில்லை.தமிழக அரசியலையம் தமிழக மக்களையும் சீரழித்ததில் அவரையம் அவருடைய குடும்பத்தினரையும் அவரது கட்சியினரையும் விட அதிகம் பங்காற்றியோர் வேறு யாருமில்லை.
ஜெயலலிதா ஆட்சியின் தொடக்க காலத்தையும் நாட்டு நடப்பையும் எண்ணிப்பார்த்து வேதனைப்படுகிற வாக்காளர்கள் ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைத்தால் தவிர இவருக்கு வாக்களிக்க எந்தக்காரணமும் இல்லை.நாடாளுமன்றத் தேர்தல் தந்த நம்பிக்கையiயே ஊன்று கோலாக கொண்டு களத்தில் நிற்கின்றனர்.
அரசியல் ஆதிக்கத்தை பயன்படுத்தி தங்களது குடும்ப உறவுகளின் பணபலத்தை பெருக்கிக்கொண்டோர் என்கிற விசயத்தில் இரு திராவிடகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.எனவே கட்சி அடிப்படையில் ஆதரவு தெரிவிக்க இந்தத் தேர்தலில் முஸ்லிம்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.
முஸ்லிம் லிக் அதனுடைய அரசியலில் இப்போதையை நிலையைவிட முன்னெப்போதும் இவ்வளவு பரிதாபமாக காட்சியளித்தில்லை. எங்களுக்கு சீட் வேண்டும் என்று கேட்க்கக் கூட உரத்து குரல் எழுப்பவில்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் தலையிலடித்துக் கொள்கிறார்கள். ஏதோ த.மு.மு.கவின் புண்ணித்தால் 3 சீட் கிடைததது. இந்தத்தேர்தலில் முஸ்லிம் லீக் செய்த நன்மை ஒன்று உண்டென்றால் த.மு.மு.க பாயையங்கோட்டை தொகுதியில் தனது கருத்துப்புரவலர் ஒருவரை மறைமுகச் சார்பில் நிறுத்தப்பார்த்ததை தடi செய்தது தான். பாளையங்கோட்டை தொகுதியை தி.மு.க வையே எடுத்துக் கொள்ளச் செய்தது, முஸ்லிம் லீக் இந்தத் தேர்தலில் செய்த ஒரு நல்ல காரியமாகும்.நாய் வேஷம் போட்டால் குறைத்துத்தான் ஆகவேண்டும் என்ற நியதிக்கேற்ப த.மு.மு.க வினர் தி.மு.க.வை ஆவேசமாக ஆதிரிக்கின்றனர். ஒரு வரலாற்றுப்பாத்திரம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிற த.மு.மு.க இயக்கம்,தன் முன்னே காத்திருக்கிற ஏராளமான ஆக்கப்பணிகளை ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்து விட்டு தேவையும் நாகரீகமுமற்ற கலகக நடவடிக்கைகளில் இறங்கி அரசியல் செய்து கொண்டிருப்பதாக சமுதாய நோக்கர்கள் கவலையோடு கூறுகிறார்கள்.
நீண்ட கால இலட்சியங்களோடு ஆக்கப்பணிகளை தொகுத்தும் வகுத்தும் கொண்டு செயல்பட்டால் எதிர்கால வரலாற்றில் பல எவரஸ்ட்டுகளை தொடுவதற்கு வாய்ப்புள்ள ஒர இயக்கம், துரதிஷ்டவசமாக அடாவடித்தனம் மிகுந்த திராவிடக் கட்சிகளின் அரசியலை பிரதிபலிக்கிறது.
இந்தத் தேர்தலில் வைகோ வின் பேச்சுக்களைவ விட இஸ்லாமியக் குழுக்களுக்கிடையே நடக்குpற குடுமிப்பிடி சண்டைதான் சுவாரசியமானது.முஸ்லிமகளின் நலன் சார்ந்த எந்தப்பிரச்சினையானும் முஸ்லிம்கள் இனி அரசியல் கட்சிகளை நம்புவதை விட கல்வியின் உதவியை சட்டத்தின் துணையை நம்பவதே உசிதமானது. இடஒதுக்கீடு விசயமாகட்டும் சிறைக் கைதிகள் விசயமாகட்டும் ஜெயலலிதா செய்த சமாளிப்பை விட மிகச்சிறப்பாக வேறு யாரும் சமாளித்து விட முடியாது.
இரண்டு கூட்டணிகளிலுமே பலவினங்கள் மிகுந்து காணப்படுகிற சூழ்நிலையில் முஸ்லிம்கள் தெளிவாக யோசிப்பதற்கும் செயல்படவதற்கும் ஒரே வழி தத்தமது தொகுதிகளில் இரு கூட்டணி வேட்பாளர்களில் யார் தொகுதிக்கு நல்லது செய்யக்கூடியவர் என்பைதை ஆலோசித்து செயல்படவது தான். நமது ஜனநாயக அமைப்பை சிறப்பானதாக மாற்றக்கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாக இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
எனNவு உங்கள் வேட்பாளைரை கவனியங்கள்.இருவரில்,உங்கள் தொகுதியின் பிரச்சினைகளுக்கு தீரத்தோடு உதவக் கூடியவர் யார்?உங்கள் பகுதியின் சமய நல்லிணக்கத்திற்கு உதவிகரமாக இருப்பவர் யார்?சுயநலம் குறைவாக தென்படுகிற அரசியல் உழைப்பாளர் யார்?மாநிலச் சட்டமன்றத்திற்கு ஒரு மதிப்பான தேர்வாக எவர் அமைவார்? ஏன்பதை அலசுங்கள்.நம் சமுதாய நலன் முக்கியமானது. ஆனால் நாட்டுக்கு நன்மை செய்ய நினைப்போர்தான் அனைத்து சமதாயங்களுக்கும் உண்மையானவராக இருக்க முடியும் என்பதை அடிப்படையாக நினைவில் வையுங்கள்.ஆராயுங்கள். வாக்கிளிப்தற்கு முன்னால் ஒரு தெளிவுக்கு வாருங்கள். இதற்காக நிங்கள் யோசிப்பது நன்மையான காரியமே! ஓரு தெளிவான முடிவிற்கு வந்தவிட்டீர்களென்றால் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் உங்கள் வேட்பாளருக்காக வாக்களிக்க காரணங்களை எடுத்துச் சொல்லி உங்கள் உறவுக்காரர்களையம் நணபர்களையும் தயார்படுத்துங்கள். வீண் விவாதங்களை தவித்து விடுங்கள். உள்ளச்சுத்தியோடு நம்மில் ஒவ்வொருவரும் உழகை;கிற உழைப்பு நாட்டுக்கு நல்லதை கொண்டுவரும்.தெளிவும் புதுiயுமான முடிவுகள் வந்தால் இனி வரும் தேர்தல்களில் நாம் எல்லோருமாக சேர்ந்து பாடலாம். ஸாரே.. ஜஹான்ஸே.. அச்சா ...

No comments: