Saturday, December 1, 2007

அப்ஜல் வழக்கும் இந்திய முஸ்லிம்களின் மனோ நிலையும்

டிசம்பர் மாதம் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வாட்டியெடுக்கிற குளிர்காலம். 1992 க்குப்பின் இயற்கையான சீதோஷன நிலையில் மாற்றம் ஏதும் இல்லை என்றாலும் கூட அரசியல் சமூக நிலைகளில் உஷ்ணம் படரத்தொடங்கியது. இந்த ஆண்டு அந்த உஷ்ணம் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்ஜல் கோர் தண்டனை விவகாரத்தால் இன்னும் அதிகரித்தது.நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இது வரை 55 மரண தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் தண்டனை பெற்றவர் நாதுராம் கோட்ஸே. தேசப்பிதா காந்தியை படுகொலை செய்த இந்துத்தவா ஆதரவாளர். புhரதீய ஜனதா உள்ளிட்ட இந்துது;தவ கட்சியனரின் ஆத்மீக தவைர். இறுதியாக தண்டனை வழங்கப்பட்டவர் கற்பழிப்பு மற்றும் கொiலை வழக்கில் சிக்கிய மேற்குவங்காளத்தை சேர்ந்த தனஞ்செய் என்ற இளைஞர். இந்தியாவில் மொத்தம் 333 கைதிகள் மரண தண்டனையை எதிர்நோக்கியிருப்பதாக 2003-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சிறைத்துறைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தேதிக்கு இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த 9 மாதங்களில் மட்டும் 32 வழக்குகளில் 56 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக 2006 நவம்பரில் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட கைதிகளில் 21 பேர் தண்டனையைக் குறைக்கக் கேட்டு குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்துக் காத்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையில் புதிதாக இணைந்திருப்பவர் முஹம்மது அப்ஜல் குரு. 2001 ம் ஆண்டு டிசம்பர் 13 ம் தேதி இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது ஆயதம் ஏந்திய தீவிவாதிகள் ஐந்து பேர் வெடிகுண்டு தாக்குதல் தொடுத்தனர். ஆதில் 7 காவலர்கள் உட்பட 9 பேர் பலியானார்கள். தாக்குதலில் ஈடுபட்ட ஐவரும் பாதுகாப்பு பiடினரடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்டனர். அப்போது நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்ததால் சுமார் 300 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அந்த வளாகத்தில் இருந்தனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமமாக கொண்டு செயல்படுவதாக சொல்லப்படும் ஜெய்ஸே முஹம்மது என்ற அமைப்பின் மீது குற்றம் சாட்டப் பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் உறவு பெரிய அளவில் சீர்கெட்டது. இரு நாட்டு இராணுவங்களும் மோதிக் கொள்ளத் தயாராயின. சர்வதேச நிர்பந்தங்களைத் தொடர்ந்து நிலமையின் சுடு தணிந்தது. இராணுவம் பின் வாங்கிக் கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதல் பற்றிய புலன் விசாரணையை 17 நாட்களில் முடித்துவிட்ட தில்லி சிறப்புப் போலீசார்;; 4 நபர்களை கைது செய்தனர். சௌகத் அஜீஸ், அவரது மனைவி நவ்ஜோத் சித்து என்கிற அப்ஸான், அப்துர் ரஹ்மான் கீலானி, முஹம்மது அப்ஜல் கோர் ஆகிய அந்நால்வர் மீதும் விஷேச நீதிமன்றத்தில் குறறப்பத்ரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதீமன்றம் நவ்ஜோத் சித்துவுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மற்ற மூவருக்கு மரண் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. வுpசேஷ நீதிமன்றம் வழங்கிய இத்தீர்பபை எதிர்த்து கீலானி தில்லி உர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். கீலானி தில்லிப் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்ததால் அவருக்கு ஆதரவாக, அந்தப் பல்கலை கழகத்தில் செயல்பட்ட அரசு சாரா ஆசிரியர் அமைப்பு, மேல் முறையீட்டுக்கு தேவையான உதவிகளை செய்ததனால் மேல் முறையீட்டுக்கான வய்ப்பு கீலானிக்கு கிடைத்தது. விசாரனைக்குப்பின் உயர்நீதிமன்றம் கீலானியையும் நவ்ஜோத் சித்துவையும் வீடுதலை செய்தது. தில்லி உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இரண்டு மேல் முறையீட்டு மனுக்கள் பதிவு செய்யப்பட்டன. ஓன்று காவல் துறையின் மூலம் இருவரின் விடுதலைக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது. மற்றொன்று அப்ஜல் மற்றும் சௌகத்தின் சார்பில் தண்டனையை எதிர்த்து பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 2006 செப்டம்பர் 26 ம் தேதி இருவரின் விடுதலையை உறுதிப்படுத்திய அதே வேளையில் இந்த வழக்கில் மேலும் ஒரு திருத்தத்தை செய்தது. சௌகத் அஜீஸின் மரண தண்டனைணையை 10 ஆண்டு சிறைத்தண்டனைiயாக குறைத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. அப்ஜலின் மரண தண்டனையை உறுதி செய்ய உச்சநீதமன்றம் 2006 அக்டோபர் 20 ம் தேதி காலை 6 மணிக்கு அவர் தூக்கிலப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.இதைத் தொடர்ந்து எதிர்பாராத வகையில் காஷ்மீர் மாநிலத்தில் பெரும் ஆர்ப்பட்டங்கள் கடையடைப்புக்கள் நடந்தன. காஷ்மீர் மாநில முதல்வர் குலாம் நபி ஆஸாத், அப்ஜலக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் அது காஷ்மீரில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இந்திய நீதி அமைப்புபின் மீது காஷ்மீரிகளுக்கு பெரும் அதிருப்திய ஏற்படுத்திவிடும் என்றும் கூறினார். காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் அனைவரும் அவருடைய கருத்தை பிரதிபலித்தனர். காஷ்மீர் பார்கவுன்சில் உள்ளிட்ட ஏராளமான அமைப்புக்கள் அப்ஜலின் மரண தண்டனை உத்தரவு மாற்றப்பட வேண்டும் என்று கோரினர். இந்திய முஸ்லிம்களை ஆச்சரியப்பட வைத்த விசயம் இது! நம்முடைய பாராளுமன்றத்தீன் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். அந்தக் குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டு ஒருவருடைய தண்டனை குறைக்கப்பட்டு ஒருவருக்கு மட்டுமே மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இவ்வளவு தூரம் குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்ட ஒருவருக்கு கருணை காட்டச்சொல்லி ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களும் அங்குள்ள ஆளும் கட்சி எதிர்க்கட்சி எல்லோருமாக இணைந்து கேட்கிறார்களே! மாநில முதல்வரே அப்ஜல் விசயத்தில் சரியான நீதிவழங்கப்பட வேணடும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதுகிறாறே என்ன விந்தை இது ! என்ற கேள்வி காஷ்மீர் பற்றி அறியாத அனைத்து மக்கள் மத்தியிலும் எழுந்தது. இந்நிலையில், அப்ஜல் குருவுக்கு மரண தண்டனை வழங்கிவிட்டால் இந்திய தேசத்தின் பாதுகாப்புக்கான அத்தனை அச்சுறுத்தல்களும் அகன்றுவிடும் என்பது போலவும், அந்த மரண தண்டனையை அனுமதிக்கவும் ஆதரிக்கவும் செய்தால் மட்மே தேசபக்தர்களாக இருக்க முடியும் என்பது போலவும் ஒரு கருத்து தொலைக்காட்சிகள் இணையதளங்கள் மூலமமாக வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. தேசத்தின் இறையான்மைக்கு அடையாளமமாகத் திகழும் நாடாளுமன்றத்தை பாதுகர்ககத் திராணியற்ற பாரதீய ஜனதா கட்சி அப்ஜலக்கு எதிராக உரத்து குரல் எழப்புவதின் மூலம அந்த இயலாமையை மறைக்க முயற்சி செய்கின்றது. அப்ஜலுக்கு மன்னிப்புக் கேட்டபவர்கள் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அது கூறிவருகிறது. நாடாளுமனறத்ததையும் அக்ஷர்தாம் கோயிலையும் கார்கில் முனைகளையும் பாதுகாககத்தவறியவர்கள், குஜராத்தில் தங்களது சொந்த மக்களையே கொடூரமாக கொன்றுவித்தன் மூலம் தங்களது கட்சியை சாhந்த வசிஷ்டராலேயே ராஜ கடமையை பாதுகாக்கத் தவறிவிட்டவர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஓரிசாவில் பாதிரியார் ஸ்டைன்ஸ் மற்றும் அவரது குழந்தைகளை தீயிட்டு கொளுத்திய தாரா சிங்கிற்கு வக்காலத்து வாங்கியவர்கள் யாரிடம் எப்போது மன்னிப்புக் கேட்கப்போகிறார்கள் என்பதை அறிய நாடே எதிர்பார்ததுக் கொண்டிருக்கிற சூழ்நிலையில் பாரதீய ஜனதாவும் அதன் கள்ளக் குழந்தைகளும் அப்ஜல் விசயத்தில் தங்களது தேசபக்தியை விளம்பரபபடுத்தவும் விறபனை செய்யவும் முயற்சி செய்கினறடன. உலகின் எந்த நீதிமன்றமானாலும் தண்டனை வழங்குகிற போது ஒரு தேதியை குறிப்பிட்டுத்தான் தீர்ப்பு வழங்கும். அந்தத்தேதி அந்த தண்டனைக்கான இறுதித் தேதி அல்ல. மேல் முறையீடுகளும் கருணை மனுக்களும் முற்றிலுமமாக நிராகரிக்கப்பட்ட பின்னரே தண்டனைக்கான இறுதித் தேதி நிர்ணயிக்கப்படும். உச்சநீதிமன்றம் அப்ஜலுக்கு தண்டனை வழங்கவதற்கா அக்டேபா 20 ம் தேதியை நிர்ணயம் செய்திருந்தாலும் அந்தத் தேதியில் தண்டனை வழங்கப்படுவது சாத்தியமல்ல. உள்துறை அமைச்சர் சிவராஜ் படடீல் சொன்னது போல மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் தங்களது வாழ்வுரிமையை பாதுகாத்துக் கொள்வதற்காக கருணை மனுச் செய்யும் போது அது சம்பந்தமாக ஜனாதிபதி முடிவெடுக்க குறைந்தது ஏழு மாதங்கள் பிடிக்கும். அரசியலில் ஆனா ஆவன்னா படிக்கிறவர்களுக்குகூட தெரிகிற இந்த உண்மை சில மாநிலங்களிலும் மத்தியிலும் ஆட்சி செயத பா ஜ க வினருக்கு தெரியாமல் இருக்காது.என்ற போதும் முஸ்லிம் விரோத மன்பானமை ஒன்றை மடடுமே மூலதனமாக வைத்து அரசியல் நடத்துகிற அவர்ககள் நாடாளுமன்றத்தை காப்பதற்கு வக்ககற்றிருந்து விட்டு அப்ஜலக்கு வாய்க்கரிசி போடுவதற்கு அவசரம் காட்டுகிறார்கள். அவர்கள் இப்படிப் பேசுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. நாய்கள் குறைத்தால் அதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது. காஷ்மீர் மாநிலத்து மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் ஒன்று திரண்டு அப்ஜலக்கு ஆதராவாக குரல் எழுப்புவது இந்திய முஸ்லிம்களை ஆச்சரியப்படவைத்தது. தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு வாக்கு மூலம் வழங்கிய ஒரு குற்றவாளிக்கு ஆதராவாக ஒரு மாநிலமே திரண்டிருக்கிறதே! இது என்ன நியாயம்? என்ற கேள்வி பிரதானமாக எழுந்து. இந்தக் கேள்விக்கு பதிலை தேடிப் புறப்பட்டால் மிகவும் கசப்பான சில உண்மைகளை நாம் சந்திக்க வேண்டியது வரும். காயடிக்கப்பட்ட அந்த உண்மைகளை ஆப்ஜல் வழக்கு மீ;ண்டும் வெளிச்த்திற்கு கொண்டு வந்திருக்கிறது. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதில் எந்த சர்ச்சைக்கும் இடமில்லை என அரசியல்வாதிகள் அடித்துச் சொன்னாலும் அது அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்ற விசயம் தான். 1947 ல் இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற போது காஷ்மீர் இந்திய யூனியனில் இல்லை. அது போல நமது அரசியல் சாசனப்படி இந்தியா என்ற வார்ததை காஷ்மீரை எடுத்துக் கொள்ளாது. இந்தியா சுதந்திரம் பெற்ற போது ஆங்கிலேயரின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத பல சமஸ்தானங்கள் இருந்தன. அவை நவாப்கள் மஹராஜாக்களால் ஆளப்பட்டு வந்தன. மைசூர் ஹைதராபாத் திருவாங்கூர் காஷ்மீர் சமஸ்தானங்கள் தனிநபர் ஆளுமையின் கீழ் இருந்தன. இச்சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைந்து கொள்ளுமாறு அப்போதைய இந்திய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் கோரினார். திருவாங்கூர் மைசூர் சமஸ்தானங்கள் இந்திய யூனியனுடன் இணைந்தன. ஹைதராபாத்திலும் காஷ்மீரிலும் பிரச்சினகள் இருந்தன. ஹைதராபாத்தின் மக்கள் தொகையில் பெரும்பான்மையோர் இந்துக்கள். நிஜாம் உஸ்மான் அலி கான் என்ற முஸ்லிம் மன்னராக இருந்தாh. மக்கள் இந்தியாவுடன் இணைவதை விரும்பினர். நிஜாம் இணைய மறுத்தார். 1948 செப்டம்பர் 17 தேதி பட்டேல் காவல்துறையை பயன்படுத்தி ஹைதராபாத்தை இந்திய ஆளுமையின் கீழ் கொண்டு வந்தார். காஷ்மீரின் நிலை நேர் எதிராக இருந்தது காஷ்மீரின் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்களாக இருந்தனர் மன்னர் ஹரிசிங் இந்துவாக இருந்தார். காஷமீரக்கு விடுதலை அளித்த ஆங்கிலேயர்கள் அது இந்தியாவுடNனூ பாகிஸ்தானுடனோ இணைந்து இணைந்து கொள்ளலாம் என்று அறிவித்தனர். மன்னர் ஹரிசிங் இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் செராமல் தனினத்திருக்க முடிவு செய்தர். மக்களின மனோ உணர்வை ஒட்டி அவர் எடுத்த முடீவு அது. இப்பகுதியை தன்னுடன் இணைத்துக் கொள்ள பாகிஸ்தான் முயற்சித்தது. மன்னர் ஹரிசிங் அதற்கு இணங்காததால் 1947 செப்டம்பரில் பாகிஸ்தான் ரானுவம் காஷ்மீருக்குள் நுழைந்தது. ஹரிசிங் இந்திய உதவியை நாடினார். இந்தியாவுடன் இணை;நது கொள்வதற்கு ஒப்புக் கொளவதாக அவரிடமிருந்து ஒரு கடிதம் பெறப்பட்டது. 1947 அக்டோபர் 27 ம் தேதி இந்தியப்படைகள் காஷ்மீருக்குள் நுழைந்தன. பாகிஸ்தானிய படைகளை சில இடங்களிலிரந்து விரட்டின.சில இடங்களை பாகிஸ்தான் ஆக்ரமித்தது. பாகிஸ்தான் இப்பரச்சினையை ஐ நா வின் பாதுகாப்பு சபைக்கு கொண்டு சென்றது. காஷமீர் மன்னரை கட்டாயப்படுத்தி இந்தியா இணைப்புக் கடிதத்தை பெற்றதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. ஐ நா சபை போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியாவையும் பாகிஸ்தானையும் கேட்டுக் கொண்டது அத்Nதூடு இரு நாடுகளும் தமது படைகளை திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டது. காஷமீரில் ஒரு மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்கள் எவருடன் இணைய விரும்புகின்றனரோ அவருடன் இணையலாம் என்றும் இல்லை எனில் ஒரு தனி நாடாக செயல்படலாம் என்றும் ஐ நா பாதுகபப்புச் சபை கூறியது. காஷ்மீர் விசயத்தில் பாகிஸ்தான் பிரச்சினையை தொட்ங்காமல் இருந்திருந்தால் காஸ்மீர் மக்களின் எண்ணவோட்டம் இன்னதென்று தெளிவாக அறியப்படடிருக்ககும். ஊலக அரங்கில் காஷ்மீர் பற்றி முதலைக் கண்ணீர் வடிக்கிற பாகிஸ்தான் தான் காஷ்மீரிகளின் கண்ணீர் வரலாறு தொடர்வதற்கு காரணமாகும். தோடர்ந்து காஷ்மீர் விசயத்தை சாக்கா வைத்து பாகிஸ்தான் தொடுத்த யுத்தங்களின் பாகிஸ்தான மோசமாக தேற்ற போது காஷ்மீரில் இந்தியாவின் ஆளுமை உறுதிப்பட்டு வந்தது. பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிற காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆகரமிப்பு காஷமீர் என்று இந்தியாவும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கிற காஷ்மீரை இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் என்று பாகிஸ்தானும் கூறிக் கொள்ளத் தெடங்கியதில் காஷ்மீர் மக்களின் விருப்பமோ அபிலாசைகளொ கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வில்லை. சுய நிர்ணய உரிமை என் ஐ நா வின் தீர்மாணம் காற்றோடு கலைந்து போய்விட்டது. ஆனாலும் முழு அளவில் பிற மாநிலங்களைப் போல காஷ்மீரை இந்தியாவுடன் இணைந்த மாநிலமாக கருத முடியாது என்பது தான் எதார்த்தம்.1957 ல் தான் காஷ்மீர் இந்தியாவின் ஒர மாநிலமாhக அறிவிக்கப்பட்டது. அதுவும் அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவின் படியான சில விசேஷ அந்தஸ்த்துடன். இந்திய அரசியல் சாசணப்படி இந்திய என்பத காஷ்மீர் தவிரவுள்ள பிற மாநிலங்களை மட்டுமே குறிக்கும். இந்தியா நாடாளுமன்றம் ஒரு சட்டம் இயற்றினால் அது காஷ்மீருக்கும் பொறுந்த வேண்டும் எ;னறால் காஷ்மீர் உள்ளிட்ட இந்தியா என்று குறிப்பிட வேண்டும். காஷ்மீர் முதல்வரை பிரதமர் என்று அழைக்க அனுமதி உண்டு. காஷ்மீரில் காஷ்மீரிகளை தவிர வேறு இந்தியர் எவரும் நிலம் வாங்க முடியாது என்பத போன்ற வேறு சில சிறப்பு அந்தஸத்துக்களும் காஷ்மீருக்கு அரசயில் சாசனப்படி உண்டு. 370 வது ஷரத்தின் படி காஷ்மீர் ஒரு நாட்டுக்குள் இருக்கிற இன்னொரு நாடாக கருதப்படும்.அதற்கு தனியான கொடி முத்ததரை வைத்துக் கொள்ள உரிமை உண்டு. தனியாக ஒரு ஆட்சித்தலைவரை வைத்துக் கொள்ளவும் அதிகாரம் வழங்கப்பட்டது. 1960 ல் இந்த உரிமை பறிக்கபட்டது. யுசவiஉடந 370 ழக வாந ஐனெயைn உழளெவவைரவழைnஇ றாiஉh ளை ழக ய வநஅpழசயசல யெவரசந பசயவெள ளிநஉயைட ளவயவரள வழ துயஅஅர யனெ முயளாஅசை. யுசவiஉடந 370 எசைவரயடடல அயனந துயஅஅர யனெ முயளாஅசை ய உழரவெசல றiவாin ய உழரவெசலஇ றiவா வைள ழறn கடயபஇ நஅடிடநஅஇ உழளெவவைரவழைn யனெ ளுயனச-i-சுலையளயவ (ர்நயன ழக ளுவயவந). வுhந சiபாவ ழக வாந ளவயவந வழ hயஎந ய ளநியசயவந hநயன ழக ளவயவந றயள டழளவ in வாந 1960ள.வுhளை யசவiஉடந ளிநஉகைநைள வாயவ நஒஉநிவ கழச னுநகநnஉநஇ குழசநபைn யுககயசைள யனெ ஊழஅஅரniஉயவழைளெஇ வாந ஐனெயைn Pயசடயைஅநவெ நெநனநன வாந ளுவயவந புழஎநசnஅநவெ'ள உழnஉரசசநnஉந கழச யிpடலiபெ யடட ழவாநச டயறள. (விக்கீபீடியா)காஷ்மீர் இந்தியாவுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற நாம் அம்மாநில மக்களின் மனோ உணர்வை நம்மோடு இணைக்க எவ்வளவு தூரம் பணியபற்றினாம் என்பது கேள்விக்குரியானதாகும். சுற்றுலாவைத்தவிர வேறு எந்த வளர்ச்சிப்பணியும் இந்திய மத்திய அரசுக்கு காஷ்மீருக்கு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்நது சொல்லப்படுவதண்டு. இந்திய அரசு காஷ்மீரிகளை படைபலத்தால் கட்டிப்போட நினைக்கிற தே தவிர மனவளத்தால் அல்ல என்பதும தொடர்ந்து சொல்லப்படுகிற குற்றச்சாட்டாகும்.இத்தைகய சூழ்நிலையில் இந்தியாவில் வளர்நது வந்த இந்துத்துவ சக்திகளின் ஆதிக்கமும் இந்திய முஸ்லிம்கள் கடும் பின்னடைவுக்கு தள்ளப்பட்டதும் காஷ்மீர் இளைஞர்களை பாகிஸ்தான், தன் பக்கம் ஈர்ப்பதற்கு காரணமானது. அவர்களை தொடர்நது பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக உபயோகப்படுத்தி வந்தது. வி பி சிங் இந்தியப்பிரதமரான காலகட்டம் தொடங்கி காஷ்மீரர் மீதான இந்திய ரானுவத்தின் பிடி நெருங்கியது. தொடர்நது காஷ்மீரின் பணி படர்நத பள்ளத்தாக்குப் பகுதி அரசியல் வனமுறைப் பிணி நிறைந்தததாகவும் மாறிவிட்டது. காஷ்மீரின் சில பகுதியில் இருக்கிற குடும்பங்கள் ஒவ்வொன்றும் பாகிஸ்தான் அல்லது இந்திய ரானுவத்தால் சின்னாபின்பபடுத்தப்படடிருக்கிறது என்பதை அப்ஜல் குருவின் மனைவி தபஸ்ஸும் எழுதிய கடிதம் தெளிவு படுத்துகிறது.சி மகேந்திரன் ஆறாம்திணைக்கு எழுதிய ஒரு கட்டுரையில், ஒரு புறம் பயங்கரவாதிகளிடமிருந்தும் மறுபுறம் தன்னை பயங்கரவாதி என்று ரானுவம் சுடுவதிலிருந்தும் பாதகாப்பு வேண்டும் என்பது தான் காஷ்மீர் மக்களின் அதிக பட்ச தேவையாக இருக்கிறது என்று குறிப்பிட்டள்ளார். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஏதாவது ஒரு துப்பாக்கி குறுக்கிட்டு கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது நெஞ்சை உருக்கும் எதார்த்தமாகும். இத்தகைய சூழ்நிலைகளின் விளைவாக காஷ்மீரத்து மக்களிடத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிரான மனோநிலையே மேலோங்கியிருக்கிறது. அதனால் இந்தியப் பாராளுமன்றத்தின் மீதான தாக்குதை காஷ்மீரிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று சொன்னால் அந்த வாதத்தில் ஒரளவுக்கு உண்மையிருக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்ஜலுக்கு பாகிஸ்தான் சார்பு தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருந்திருக்கிறது. பின்னர் அவர் மனந்திருந்தி காஷ்மீர் விசேஷ காவல் படையிடம் சரணடைந்திருக்கிறார். இது போல சரணடைந்த பலரையும் ரானுவமும் காவல் துறையும் தொடர்நது மிரட்டி துன்புறுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாகவும் அழுத்தமாகவும் பேச்பபடுகிறது. 'அப்சல் என்ற தனிமனிதனின் கதை அல்ல இது. காஷ்மீரிலுள்ள பல இளம் தம்பதியினரின் கதை இது.... காஷ்மீரில் நிலவும் சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும். தாம் ஈடுபடாவிட்டால்கூட, காஷமீரில் உள்ள ஒவ்வொரு ஆணும், பெண்ணும், குழந்தையும் கூட இயக்கங்கள் குறித்த ஏதேனும் தகவலை அறிந்திருப்பார்கள். மக்களை உளவு சொல்பவர்களாக மாற்றுவதன் மூலம், சகோதரரைச் சகோதரருக்கு எதிராகவும்; மனைவியைக் கணவனுக்கு எதிராகவும்; குழந்தைகளைப் பெற்றோர்களுக்கு எதிராகவும் பாதுகாப்புப் படையினர் மாற்றுகின்றனர். அவர்கள் மக்களை நிம்மதியாக, சுதந்திரமாக வாழ அனுமதிக்க விடுவதில்லை' என்கிறார், அப்சலின் மனைவி தபஸ்ஸும்அப்ஜல் விசயத்தில் காஷ்மீரிகள் போராடுவதன் பிண்ணனியல் இது போன்ற பல்வேறுபட்ட அரசியல் சமூக காரணங்கள் உண்டு. இத்தகைய காரணங்கள் விளைவாக காஷ்மீரிகள் அப்ஜலுக்கு ஆதராவாக இருப்பதாலும் விசேஷ நீதிமன்றத்தில் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை அப்ஜலின் வழக்கு விசாரிக்கப்பட்ட விதமும் தீர்ப்pன் வாசகங்களும் காஷ்மீரிகளின் நிலையை புரிந்து கொள்ளாமல் அவர்களை துண்புறுத்தும் வகையில் இருப்பதால் காஷ்மீரிகள் ஒன்று திரண்டு அப்ஜலுக்கு மரண தண்டணை தருவதற்கு எதிராக போராடி வருகிறாhகள். இந்தப்பிண்ணனியோடு காஷ்மீர் மக்கள் அப்ஜல் வழக்கை அனுகும் விதத்தை அலசிப்பார்த்தல் அதில் ஆச்சரியம் எதுவும் தோன்றாது. காஷ்மீர் தவிரவுள்ள இந்திய முஸ்லிம்களோ இது விசயத்தில் என்ன கருத்துச் சொல்வது என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறார்கள். தடா பொடா வழக்குகளில் நீதிமன்றங்களில் அப்பட்டமாக வழங்கப்படும் ஒரு தலைப்பட்சமான திர்ப்புகளுக்கு எதிராக போரடும் ஆர்வலர்களும், மரண தண்டனை;கு எதிராக போராடும் இயக்கங்களும், அப்ஜலுக்கு ஆதரவாக போராடும் போது அவர்களுடன் கைகோhத்துக் கொள்வதை தவிர தனியான எந்த ஒரு கருத்தும் முஸ்லிம் சமுதாயத்தின் கருத்தாக இதுவரை வெளியிடப்படவில்லை;. தீவிரவாதக் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை சமயத்தின் பெயரால் ஆதரித்துவிட்டால் அதனால் சமுதாயத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஒரு புறமும், கடந்த கால் நூற்றாண்டுகளாக இந்திய நிர்வாக அமைப்பும் நீதிமன்ற அமைப்பும் முஸ்லிம்களுக்கு எதிரான மனோநிலையில் இருப்பதால் தனது அனுபவத்தில் கண்ட பல வழக்குகளில் நடந்தது போல இந்த வழக்கிலும் ஒரு அப்பாவி சிக்கவைக்ப்பட்டு விட்டாரோ என்ற ஆதங்கம் மறு புறமுமாக முஸ்லிம்கள் ஒரு வித தடுமாற்றத்தில் இருக்கிறார்கள்.முஸ்லிம் அல்லாத சட்ட அறிஞர்கள் சமூக ஆர்வலர்களின் துணிச்சலனான போராட்டங்களைப் பார்த்தே சற்று தைரியம் பெற்று இது விசயத்தை முஸ்லிம்கள கவனிக்க ஆரம்பித்திருககிறார்கள். ஆனாலும் இந்திய முஸ்லிம்களின் மனோ நிலை காஷ்மீரி முஸ்லிம்களின் மனோ நிலையிலிருந்து வேறு பட்டது. அப்ஜலுக்கு ஆதரவாக குரல் எழுப்பப் பட்ட போது அது கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டதே அதற்கு சாட்சி! நாடளுமன்ற வழக்கில் அப்ஜல் குற்றவாளி என்று சந்தேகத்திற்கிடமின்ற உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவரக்கு மரண தண்டணை வழங்கப்படுவதில் இந்திய முஸ்லிம்களில் பெரும்பான்மையோருக்கு ஆட்சேபனை எதுவுமில்லை. எதிரி நாட்டுடன் இணைந்து நமது நாட்டின் இறையான்மைக்கு சான்றாக திகழும் நாடாளுமன்றக் கட்டடிடத்தின் தாக்குதல் தொடுப்பதற்கு உதவியாக இருந்தவரை மன்னிக்க முடியாது என்பதே இந்திய முஸ்லிம்களின் மனோ நிலை. ஆதே அதே சமயத்தில் இந்த வழக்கு விசாரண நடைபெற்ற விதம் குறித்தும் விசாரனயில் ஈடுபட்ட அதிகாரிகள் குறித்தும் நீதிமன்றங்கள் இந்த வழக்கை அனுகி முறை குறித்தும் பிரபலமான முஸ்லிம் அல்லாத சட்ட அறிஞர்களே சந்தேகமும் கவலையும் தெரிவித்திருப்பதை பார்க்கையில் யாராவது ஒருவரக்கு தண்டனை வழங்கியாக வேண்டும் என்ற திட்டவட்டமான எண்ணத்தில் அனைவரும் செயல்படடிருப்பதாக ஒரு தோற்றம் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. நாற்பது சாட்சிகள் தங்களிடம் இருப்பதாக உச்சநீதிமன்றத்திடம் குறிப்பிட்ட அரசுத்தரப்பு தெரிவித்திருக்கிற போதும் அந்த சாட்சிகள் பொய்யானவை என்று தில்லி உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறுது. அப்ஜலின் வாக்கு மூலம் ஒன்று தான் அவருக்கு எதிரான பிரதான சாட்சி. ஆந்த வாக்கு மூலம் மிரட்டி உறவினர்களை பிடித்து வைத்துக் கொண்டு அச்சுறுத்தி வாங்கப்பட்டுள்ளது என்று அப்ஜலக்காக வாதிடுகிற சட்ட அறிஞர்கள் கூறுகின்றனர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கூட வித்தியாசமாகவும் விசித்திரமாகவும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆதாரங்களின் உறுதிப்பாடு என்ற தளத்தில் இல்லாமல் சூழ்நிலை உணர்ச்சி என்ற தளத்தில் தீர்பபு வழங்கப்பட்டிருப்பதான ஒரு தோற்றத்தை தீர்ப்பின் வாசகங்கள் அழுத்தமாக ஏற்படுத்துகின்றன். அப்ஜலின் குற்றத்தை நிரூபிக்க போதுமதான ஆதாரம் எதுவும் இல்லை என்ற போதும் ஓட்டுமொத்தமாக சமுதாயத்தின் உணர்வை சமாதானப்படுத்துவதற்காக மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியதாக ஆப்ஜலின் வக்கீல் என் டி பன்சாலி கூறியுள்ளார். இந்தியாவில் வாழும் எந்த சமுதாயத்தின் மனதை திருப்தியடைச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்வியை வெளிப்படையாக கேட்க முடியாவிட்டாலும் அந்த எண்ணம் உள்ளத்தில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.எனவே அப்ஜலின் கருணை மனுவை பரிசீலிக்கையில் நியாயமாக அவரது வழக்கு விபரத்தையும் வழக்கு விசாரணை நடைபெற்ற முறைகளையும் உச்ச நீதிமன்றத்தீர்ப்பின் நியாயத்தையும் எந்த அழுத்தத்திற்கும் ஆட்படாமல் ஜனாதிபதி பரீசிலிக்க வேண்டும் என்பதே இந்திய மஸ்லிம்களின் எண்ணம். மரண தண்டனை கைதியின் மீது கருணை காட்டுவதற்கு எந்த விசயங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமோ அது அத்தனை விசயங்களையும் ஜனாதிபதி கவனித்தில் எடுத்தக் கொள்ள வேண்டும் என்பதும் அப்ஜலக்கு அவரது குற்றம் நிரூபிக்கப்பட்ட அளவிற்கு தகுந்த தண்டனையை வழங்க வேண்டும் என்பதே இந்தி முஸ்லிம்களின் அவாவாகும். இதுவே இந்திய மக்களின் நியாய சிந்தனை உடைய பெரும்பான்மையோரின் எதிர்பார்ப்புமாகும். தகுந்த பரீசீலனைக்குப்பின் ஆப்ஜல் மரண தண்டனைக்குரியவர்தான் என்று மத்திய அரசம் ஜனாதிபதியும் முடிவு செய்தால் அதை இந்;திய முஸ்லிம்கள் சந்தேகத்திற்கிடமின்றி ஏற்றுக் கொள்வார்கள். அதே நேரத்தில் நம்முடைய நாடாளுமன்றத்தை விட பழமையான பாபர் பள்ளிவாசலை இடித்தவர்களுக்கு அந்த சதித்திட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் முதன்மையானது முதலில் என்ற அடிப்படையில் தண்டனை வழஙகப்பட்ட பிறகு அப்ஜல் குருவிற்கு தண்டனை வழங்க்பட்டால் அதை இந்திய முஸ்லிம்கள் முழமனதோடு ஏற்றுக் கொள்வார்கள. ஏனெனில் இந்தியத்திருநாட்டின் பாரம்பரிய அமைதிக்கு வேட்டு வைத்து, நாட்டின் மூளை முடுக்கெங்கும் தீவிரவாதத்தீ படர்வதற்கும் 1500 க்கும் மேற்பட்ட குடிமக்கள் கொல்லப் படுவதற்கும் பாபர் பள்ளிவாசல் இடிப்பே காரணமாக இருந்தது. புhபர் பள்ளிவாசல் இடிப்பு வழக்கில் ஒரு தீர்ப்பு வரும்வரை இந்திய நீதி அமைப்பின் மீது முஸ்லிம்களுககு ஒரு சந்தேக கண்ணோட்டம சன்னமாக வேனும் இருந்து கொண்டுதான் இருக்கும்.அது அப்ஜல் வழக்கிலம் தொடரும். அதுவரை சட்டத்திற்கு புறம்பாக வலையை வீசியவர்களை விட்டு விட்டு மீன்களை கைது செய்வது என்ன நியாயம் என்று முஸ்லிம்கள் கேட்டுக் கொண்டு தான் இருப்பார்கள்

No comments: