Saturday, December 1, 2007

யாருக்கு எதிராக இந்த வெறித்த்னம்?

ஜகாத் விசயத்தில் முஸ்லிம் சமூகத்தின் ஒன்று பட்ட கருத்தை மறுதலித்ததின் மூலம் ஜனாப் என்றழைக்கப்படுகிற தகுதியை திரு பி.ஜே இழந்துவிட்டார் என்பது என் கருத்து. சுன்னத் ஜமாத்தைச் சார்ந்த மூத்த அறிஞர்கள் சட்ட நுணுக்கங்களில் இப்படிச் சொல்ல வழியிருக்கிறதா? என்று யோசித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற சாமாண்யர்களுக்கு இதில் தயங்குவதற்கு எதுவுமில்லை.அவரது நிலை கலீபா அபூபக்கர் (ரலி) அவர்கள் காலத்தில் ஜகாத் தர மறுத்த முர்தத்துகளின் நிலைக்கு ஒப்பானது.ஆனால் மார்க்க அறிஞர்கள் இது விசயத்தில் ஒரு முடிவை அறிவிக்காமல் தாமதிப்பது குறித்து அவரது முன்னாள் ஆதரவாளர்களே கூட ஆச்சரியப்படுகிறார்கள். ஆலிம்கள் இவரை முர்தத் என்று அறிவித்தால் சமுதாயத்தில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட அது வழிவகுக்கும். அத்தோடு சீர்திருத்தவாதி வேடம் போடும் ஒருவரிடமிருந்தும் அவரை ஒண்டிப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஒரு கொள்ளைக் கூட்டத்திடமிருந்தும் ஒட்டு மொத்த சமுதாயத்தை பாதுகாப்பதாக அது அமையும். அது வரை எல்லோரும் பொறுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் நான் திரு என்றே அவரை அழைக்கிறேன்.) திரு பி.ஜே. அவர்களின் இலங்கைப் பயணம் சர்வதேச அளவில் ஏற்படுத்திய சர்ச்சை குறித்து மிக இளகிய வார்த்தைகளில் அஷ்ரப் சிஹாபுதீன் விமர்ச்சித்திருக்கிறார். திரு பி.ஜே. வின் ரௌடிசத்தை விமர்ச்சிக்கையில் தனது கட்டுரை களங்கப்பட்டு விடக்கூடாது என்ற அக்கறையில் மிகப் பக்குவமான வார்த்தைகளை அவர் பிரயோகித்திருப்பதாக எனக்குப்படுகிறது. இந்த வரலாற்றுப்ப பிழயை அவர் மட்டுமல்ல தமிழ் நாட்டிலுள்ள ஆலிம்கள், சமூகப்பிரமுகர்கள் அத்தனை பேரும் செய்து விட்டது தான் வேதனை.ஒரு குற்றவாளிக்கு சமூகச் திருத்தவாதியின் அந்தஸ்த்தை வழங்கியதை விட பெரிய வரலாற்றுப் பிழை வேறு என்ன ?அதே போல அவரை இஸ்லாமிய அழைப்பாளர் என்று வரையறுத்தது கண்டிக்கத் தக்கதாகும். சமநிலைச் சமுதயமும் நியாஸ் மௌலவியும் எந்த அர்தத்தில் அவரை இந்தப் பட்டியலுக்குள் சேர்த்தனர் என்பது ஆச்சிரியமானதே. ஒரு வேளை ஹாமித் பக்ரிக்கு தென் மாவட்ட தஃவா உரிமையை ரூபாய் 65 ஆயிரத்திற்கு பட்டா போட்டு விற்றார் என்ற செய்தியை கேள்விப்பட்டதின் பின்னணியில் இஸ்லாமிய தஃவா பணியின் ஒட்டு மொத்த குத்தகை தாரராக அவரை கருதிவிட்டார்களோ என்னவோ? உக்கிரமாமாக பேசுபவரெல்லாம் அறிஞன், அழைப்பாளன் என்றால் இந்தியாவில் பிரவீன் தொகாடியாவுக்கு அடுத்த அறிவாளி திரு பி.ஜே தான்.திரு பி.ஜே. தமிழக முஸ்லிம் சமூகத்து இளைஞர்களிடையே மதத்தின் பெயராலே வன்முறை உணர்வைத் தூண்டி அவர்களை வெறி கொள்ளச் செய்த மிக முக்கிய குற்றவாளி ஆவார். எல்லா வரையறைகளையும் மீறி விட்டு சமயோஜிதமாக தப்பிக்கத் தெரிந்தவர் அவர். அவர் விசயத்தில் அவரது முன்னாள் ஆதரவாளர்களே கூட காட்டாத மரியதையையும் கரிசனத்தையும் அஷ்ரப் சஹாபுதீனும் நியாஸ் மௌலவியும் வெளிப்படுத்தியிருப்பதாக நான் நினைக்கிறேன். இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் திரு பி.ஜே வின் பயணத்தால் விளைந்த விபரீதங்களை அஷ்ரர் சிஹாபுதீன் பட்டியலிடுகையில் எனக்கு எங்கள் ஊரில் திரு பீ.ஜே வால் ஏற்பட்ட பாதிப்புகள் வரிசையாக ஞாபகத்திற்கு வந்தன.நான் வாழ்கிற கோவை நகரில் எங்கள் பகுதியல் இப்போதும் சில சமயங்களில் காலை நேரங்களில் திடீர் திடீர் என ஏராளமான போலீஸ் வாகன்கள் படையெடுக்கும். ஒயர்லெஸ் அலறல்களால் அந்தப்பகுதியே ஒரு போலீஸ் கன்ட்ரோல் அறை போல தென்படும். சீறிக் கொண்டு வருகிற ஒரு வேனிலிருந்து ஒரு 20, 25 வயதுடைய இளைஞன் இறங்குவான். அத்தனை போலீஸாரும் நிமிடத்தில் அலார்ட்டாகி கன்னிமைக்கும் நேரத்தில் அந்த இளைஞனை அவனது வீட்டிற்குள் அனுப்பி விடுவார்கள். பக்கத்தில் வசிப்பவர்கள் பரபரப்hகவும் பரிதாபமாகவும் இந்தப் பையன் பரேலில் வந்திருக்கிறானாம் என்று பேசிக் கொள்வார்கள். என்னுடைய நண்பர் நேற்று ஒரு செய்தி சொன்னார். ஒரு வயதான பெண்மணி அவரை வந்து சந்தித்து, தன்னுடைய மகன் பரேலில் வருவதாகவும் அவனுக்கு அரைக் கிலோ கறி வாங்கி சமைத்துக் கொடுக்க காசு இல்லை என்று முறையிட்டதாகவும் அதற்காக அவர் நூறு ரூபாய் வழங்கியதாகவும் வேதனையோடு கூறினார். (இதோ! இந்த கட்டுரையை நான் டைப் செய்து கொண்டிருக்கும் இப்பபோது கூட எங்கள் தெருவில் ஒரு கைதி பரேலில் வந்திருக்கிறார். அவரக்கு காவல் வந்த ஒரு காவலர் என் வீட்டில் குடிப்பதற்கு தண்ணீர் பெற்றுச் செல்கிறார்.) என்னுடைய பத்து வயது மகள் அத்தா பரோல் என்றால் என்ன என்று கேட்டாள். அன்று நான் நெஞ்சுடைந்து உள்ளுக்குள் அழுதேன். அவன் நாசமாய் போகட்டும் என்று என் நாவு சபித்தது. அந்த அவன் வேறு யாரும் அல்ல திரு பி.ஜே தான்.எங்கள் ஊரின் இத்தனை சீரழிவுகளுக்கும் மூல காரணகர்த்தா அவர் தான். திரு பி.ஜே லால்பேட்டையில் சமீபத்தில் பேசுகிறார்.அடிப்பார்கள் அடியை வாங்க வேண்டும். ஊதைப் பார்கள் உதையை வங்க வேண்டும்.சிறைக்கு செல்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். என்று ஆவேசமாக குரல் எழுப்பினார். அதைப் பார்த்ததும் என் அடி வயிறு பற்றி எரிந்தது. அடப் பாவி இத்தனை பேர் ஜெயிலுக்குப் போனது போதாதா? இன்னும் எத்தனை பேர் உள்ளே போக வேண்டும்? இப்படிப் பேசிப் பேசித்தானே எங்கள் ஊரில் இத்தனை இளைஞர்களை உள்ளே அனுப்பினீர்கள். இனி எத்தனை முஸ்லிம் ஊர்களை கோவையாக மாற்றத்திட்டமிட்டிருக்கிறீர்கள்? திரு பீ .ஜே வின் ஆதரவாளர் ஒருவர் சென்னiயில் த.மு.மு.க வினரோடு தகறாறு செய்து தாக்குதலுக்கு உள்ளாகிறார்.உடனே அறிஞர் பி.ஜே தொலைக்காட்சியில் தமிழகத்தை அழைக்கிறார்.சகோதரர்களே! வாருங்கள்! இது ஒரு ஜிஹாது. இந்த ஜிஹாதிNலு நம்முடைய பெண்கள் குழந்தைகளோடு நாம் கலந்து கொள்ள வேண்டும்.திரளாக வாருங்கள் என்று அழைப்பு விடுகிறார். அடப்பாவிகளா? வீட்டிற்குள்ளிருந்த முஸ்லிம் பெண்களை இப்படி தெருவிற்கு அழைத்து வந்தது உங்களது அக்கிரமங்களுக்கு அரணாக நிற்கத்தானா? இப்படிப்பட்ட ஒருவரையா சீர்திருத்த வாதி என்றும் அழைப்பாளன் என்றும் அடையாளமிடுகிறீர்கள். திரு பி.ஜே. யை அவருடைய நெருங்கிய சகாக்கள் கூட சீர் திருத்தவாதி என்று சொல்லமாட்டார்கள். இன்று வரை அவரைப் பேச்சாளர், சிறந்த பேச்சாளர், மக்களுக்கு புரிகிற வகையில் பேசுபவர் என்று சொல்வார்களே தவிர அவரை சிர்திரத்த சிந்தனையாளர் என்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள். தன்னுடைய நெருங்pய வட்டத்தில் அவருக்குள்ள மரியாதை (?) உலகறிந்த ரகசியம். நான்கு மத்ஹபுகளைச் சேர்ந்த இமாம்கள் எல்லோரும் நல்லவர்கள் தான் ஆனால் அவர்களின் பெயரால் நூற்களை எழுதியவர்கள் தான் பித்தலாட்டம் செய்து விட்டார்கள் என்று திரு பி.ஜே. அடிக்கடி பேசுவதுண்டு. ஆனால் மத்ஹபுகளின் பிரபலமான நூலாசிரியர்களில் எவரைப் பற்றியும் அவரது காலத்தில் வாழ்ந்தவர்களோ அவர்களுக்கு பின்னால் வந்தவர்களோ இவர் வேண்டுமென்றே ஜும்ஆ தொழுகையை விட்டவர் ரமலானிய காலங்களில் நோன்பு பிடிக்காதவர் சுபுஹ் தொழுகை என்றால் அவருக்கு என்னவென்றே தெரியாது முக்கியமாக துணிந்து பொய் பேசுபவர். தனக்கு சாதகமாகும் என்றால் எதையும் எப்படியும் வளைப்பவர் என்று யாரும் குற்றம் சொன்னதில்லை. குறை பேசியதில்லை. ஆனால் இது போன்ற இன்னும் இதைவிட கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு திரு பி.ஜே ஒரு நூறு முறை ஆளானதுண்டு. அப்படி குற்றம் சாட்டியவர்கள் வேறு யாருமல்ல, அவரது வலது கரமாகவும் இடது கரமாகவும் இருந்தவர்கள் தான். ஒரு த.மு.மு.க தலைவர் சொன்னார். ஒரு தடவை பொதுக்கூட்டத்தில் திரு பி.ஜே பேசினார். த.மு.மு.க ஒரு சாராருக்கு மட்டுமே உரியது அல்ல. இதோ இந்த மேடையில் சுன்னத் ஜமாத்தை சார்ந்த வர்களும் தான் உ;கார்ந்து இருக்கிறாங்க என்று பேசிக் கொண்டே எங்களைப் பார்த்து அர்த்த புஷ்டியோடு திரும்பினார். நாங்கள் நகைத்துக் கொண்டோம்.ஏஅனனில் அப்போது மேடையில் ஒருவர் கூட சுன்னத் ஜமாத்தைச் சார்ந்தவர் இல்லை. இது அவருக்கு நன்றாகவே தெரியும். திரு பி.ஜே பச்சையாக பொய் பேசுபவர் தான் என்று எனக்கு அன்று தெரிய வந்தது என்று அந்த த.மு.மு.க தலைவர் சொன்னார். நான் சொன்னேன் மிக மிக தாமதமாக நீங்கள் இந்த உண்மையை புரிந்து கொண்டிருக்கிறீர்கள். துர்ருல் முக்தார் எனும் ஹனபி சட்ட நூலில் 9 பாட்டில் சாராயம் குடித்தால் போதை வராது 10 வது பாட்டில் குடித்தால் தான் போததை வரும் என்றால் 9 பாட்டில் குடிப்பது ஹராம் அல்ல 10 வது பாட்டில் தான் ஹராமாகும் என்று எழுதப்ட்டிருப்தாக அவர் சொன்ன போது அதை நீங்கள் பட்டி தொட்டி எல்லாம் கேலியும் கிண்டலாக பரப்பினீர்கள். பேரீச்சம் பழச்சாற்றை குறிக்கும் நபீத் என்ற வார்த்தைக்கு சாராயம் என்று மொழி பெயர்த்த போது நீங்கள் எல்லாம் கைகொட்டி வரவேற்றீர்களே அப்போதே நீங்கள் அவரது கயமைத் தனத்தை உணர்ந்த கொண்டிருக்க வேண்டும். சமூகத்தில் நீங்கள் சில ஆலிம்களi நம்பாதிருந்திருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக அனைத்து ஆலிம்களளையும் இவரது பேச்சைக் கேட்டு அவமதித்தீர்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் நபீத் அருந்தியுள்ளார்கள் என்று உறுதியாக தெரிந்திருந்த பின்னரும் அந்த வார்த்தைக்கு சாராயம் என்று ஒருவர் மொழிபெயர்த்தார் என்றால் அவரைவிட சமூக களவானி வேறு யாராக இருக்க முடியும் ? ஒரு கால கட்டத்தில் மௌலவி ஹாமித் பக்ரீ திரு பீ.ஜே வின் பதிலியாக செயல்பட்டார். ஹாமித் பக்ரியை, அவரைச் சார்ந்தவர்கள திரு பி.ஜே வின் கார்பன் காப்பி என குறிப்பிட்டதும் மற்றவர்கள் ஹாமித் பக்ரியை திரு பி.ஜே உடைய பினாமி என்று விமர்ச்சித்ததும் நடந்ததுண்டு. இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு டிசம்பர் மாத நெருக்கத்தில் ஹாமித் பக்ரி கைது செய்யப்பட்ட போது கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற் பட்டு அனைத்து ஆலிம்களும் வருத்தப்பட்டார்கள்.ஒருவரைத் தவிர.அவர் தான் பீ.ஜே. அப்போது திரு பி.ஜே வைச் சந்தித்து இது பற்றி மிக அக்கறையோடு விசாரித்த ஒரு மௌலவியிடம் பி.ஜே சொன்னது எனன தெரியுமா? ஹாமித் பக்ரி பாகிஸ்தானிய உளவு அமைப்பான ஐ எஸ்ஸிடமிருந்து பணம் வாங்கிவிட்டார் என்பதுதான். இப்படி ஒரு குற்ச்சாட்டை ஹாமித் பக்ரியின் அன்றைய எதிரிகளே கூட நினைத்தும் பார்க்கவில்லை. ஆனால் பீ.ஜே நா கூசாமல் அந்தக் குற்றச் சாட்டை பேவோர் வரவேரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். கார்பன் காப்பி, ஐ எஸ்ஸிடமிருந்த பணம் பெற்றது என்றால் அசல் பிரதி அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தா? அல்லது பணப்பரிவர்த்தனையில் ஏற்பட்ட பிரச்சினையால் தான ஹாமித் பக்ரியை காட்டிக் கொடுத்தாரா என்பது இறைவனுக்கே வெளிச்சம்உணர்வு பத்ரிகையும் ஒற்றுமை பத்ரிகையும் த.மு.மு.க வின் பிரச்சார ஏடுகளாகவே தொடங்கப்பட்டன. அவை தவ்ஹீத் ஜமாத்தின் ஏடுகளல்ல. தமிழகத்தின் பல்வேறுபட்ட சுன்னத் ஜமாத் அமைப்புகளின் விளம்பரங்களும் செய்திகளும் அதில் இடம் பெற்று வந்ததுண்டு. த.மு.மு.க வின் பிரச்சார ஏடு என்ற அடிப்படையிலேயே அனைத்து தரப்பினரும் அதனை வாங்கியும் விளம்பரங்களை கொடுத்தும் வந்தனர்.இலங்கையில் பிரச்சினை ஏற்படுத்தியது போலவே திரு பீ.ஜே த.மு.மு.க விலும் பிரச்சினைகளை எற்படுத்தியதால் அங்கிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அப்போது நடந்த மகா பாதகங்கள் அனைத்தும் நாடறிந்தவை. உணர்வையும் ஒற்றுமையையும் எந்த அடிப்படையில் பீ.ஜே எடுத்துக் கொண்டார் என்பது இன்று வரை வெளிவராத ரகசியம். ஏப்படியாவது இவர் தொலைந்தால் சரி த.மு.மு.க சும்மா இருந்து விட்டது. அதற்கு திரு பீ.ஜேவும் அவருடைய ஆட்களும் எத்தகைய தீரம் (?) மிக்கவர்கள் என்று த.மு.மு.க அறிந்திருந்ததே காரணம். எதற்குப் பிரச்சினை என்று த.மு.மு.க இளிச்ச வாய்த்தனமாக சும்மா இருந்து விட்டது என அப்போது த.மு.மு.க வின் அபிமானிகள் பலரும் என் காதுபட பேசியதுண்டு. த.மு.மு.க விற்கும் திரு பீ.ஜே அன் கோவினருக்கும் பிரச்சனை ஏற்பட்ட போது தேவையானதைப் பெற்றுக் கொண்டு சமாதானமாக போவதாக எழுதிக் கொடுத்துவிட்டு வந்தவர், சென்னை கிண்டியில் அவரது அதரவாளர்களை கூட்டி நீங்கள் அயிரம் பேராக திரண்டு த.மு.மு.க அலுவலகத்தை முற்றுகையிட்டுக் நியாயம் கேளுங்கள் என தூண்டிவிட்டார். அப்போது நான் ஒரு தேர்வுக்காக கிணடியில் தங்கியிருந்தேன். திரு பீ.ஜே மீது பெரிதும் அபிமானம் கொண்டிருந்த ஒருவர் மிகவும் வருத்தப்பட்டு கூறினார். இவரெல்லாம் இப்படிச் செய்யலாமா? போராடுவது என்றால் அங்கேயே போராடி இருக்க வேண்டும் அதைவிட்டு விட்டு இவ்வளவு நாள் உழைத்ததற்கு கூலி கொடு என்று கேட்பது போல தேவையானதைப் பெற்றுக் கொண்;ட பிறகு இப்படி அடியாட்களை தூண்டிவிடலாமா? இது அநியாயமல்லவா என்று அவர் பெருமினார். நீங்கள் ஏமாந்து போனதற்கு அவர் என்ன செய்வார் பாவம் என்று நான் பதில் சொன்னேன். அதை அவர் புரிந்து கொள்ள சிறிது நேரம் பிடித்தது. இந்த லட்சணத்தில் அலவி மௌலானாவையும் நியாஸ் மௌலவியையம் அண்டர் வோர்ல்ட் தாதாக்கள் என திரு பி.ஜே விமர்ச்சிப்பது ஆடுகளைப் பார்த்து அசைவம் என ஓநாய்; முகம் சுளிப்பதற்கு ஒப்பானது. இலங்கையிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டது இலங்கையின் இறையான்மைக்கு நல்லது. இலங்கை வாழ் முஸ்லிம்களின் சகவாழ்வுக்கு நல்லது என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. அதற்கு காரணமாக இருந்தவர்களின் சமூக அக்கறை பாராட்டிற்குரியது.நன்மைக்குரிய செயல். ஆனால் அவர்கள் இன்னும் முன்தாகவே உஷாராகி இருந்திருக்க வேண்டும். பல முக்கிய இடங்களில் கூட்டங்கள் நடந்த பிறகு ஒரு கொலை விழுவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களா என்ன? துபாய் போலீஸ் நாட்டை விட்டு வெளியேற்றி விட்டது. இலங்கைப் போலீஸ் நாட்டை விட்டு வெளியேற்றி விட்டது. தமிழக காவல் துறை இன்னும் எதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது? தங்களுக்கு தகவல் தருபவர் என்பதால் அவர் என்ன செய்தாலும் காவல் துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்குமா? சுந்தரேஸ அய்யரை குண்டர் தடைச் சட்டத்தில் உள்ளே தள்ளிய காவல் துறைக்கு இவரால் தமிழகத்திற்குள் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பற்றித் தெரியாதா? திரு பீ.ஜே பயணம் செய்கிற பகுதிகளில் சமூகத்தில் ஒரு பதட்டம் படருவதை காவல்துறை கண்காணிக்க வேண்டும். அவரது அமைப்பினர் தவறான தகவல்களின் அடிப்படையில் பணம் திரட்டுவதையும் கண்காணிக்க வேண்டும். மேலப்பாளையத்தில் ஒரு அப்பாவி ஆலிமின இல்லத்தை சோதனையிடத் தெரிந்த அதிகாரிகளுக்கு இவர்கள் வெளிநாட்டிலிருந்து ஏராளமாக பணம் பெறுகிறார்களே அது எப்படி என எதுவும் தெரியாதா? முல்லாக்கள் பாத்திஹா ஒதி சம்பாதிப்பதாக குற்றம் சாட்டியே கோடிகளை தேடிக் கொண்ட கேடிகள் யார் என்பதையும்.அவர்களால் தொலைக் காட்சி சானல்களையே விலைக்கு வாங்க முடிவது எப்படி என்பதையும் தொடர்ந்து இவரை ஆதரித்து வருகிற பிரமுகர்களின் பின்னணியும் ஆராயப்பட வேண்டும். அது தமிழகம் இன்னொரு பாதிப்புக்கு உள்ளாகமல் தடுக்க உதவும்.தமிழகம் முழவதிலுமுள்ள சுன்னத் ஜமாத் அமைப்புக்களும் உடனடியாக விழிப்படைய வேண்டும். இலங்கையை போல கைமீறிப் போக விட்டுவிட்டு பிறகு கவலைப்படுவதில் பயனில்லை. திரு பீ.ஜே வைப் பொருத்தவரை அவர் உருவாக்கிய சமய அமைப்பை ஜாக் எடுத்துச் சென்று விட்டது. அவரது பங்களிப்பால் உருவான சமுதாய அமைப்பை த.மு.மு.க எடுத்துச் சென்று விட்டது. இப்பொது அவர் அடிபட்ட வேங்கையைப் போல விரிட்டுக் கொண்டிருக்றிhர் சமுதாயம் எச்சரி;ககையாக இருக்க வேண்டும்.கடந்த 50 ஆண்டுகளில் திரு பி.ஜே. யைப் போல விரைவாக செல்வாக்குப் பெற்று சர்வதேச அளவில் புகழடைந்த ஒரு பேச்சாளரை தமிழகம் சந்தித்தது இல்லை என அவருடைய ஆட்கள் பேசிக் கொள்வது உண்டு. அது உண்மையாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதில் நமக்கு எரிச்சல் எதுவுமில்லை. ஆனால் கேமராவுக்கு தகுந்த மாதிரி கலர் கலர் சட்டை போடுவதை தவிர இந்த வளர்ச்சிக்குரிய பக்குவமான மாற்றங்கள் அவரிடத்தில் எந்த விதத்திலாவது ஏற்பட்டதுண்டா? இத்தனை காலத்தில் வயதுக்குரிய ஒரு பக்குவம் கூட ஏற்படவில்லை எனில் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். அவர் இன்னொரு மீர்சா தான். இஸ்லாமிய உலகுக்கு இன்னொரு மீர்சாவை வழங்கிய சாபம் தமிழகத்திற்கு உண்டு.அத்வானி கூட திருந்துவதற்கு அல்லாஹ் ஒரு சூழ்நிலையை அமைத்தான். இவருக்கு எப்போ அப்படி ஒரு சூழ்நிலை அமையுமோ?

No comments: