சமநிலைச் சமுதாயம் மாத இதழில் வெளியான இஸ்லாமிய சமூகம் சார்ந்த கட்டுரைகள்
Saturday, December 1, 2007
சதாம், தூக்கு மரத்தின் நிழலில்
கால் நூற்றாண்டு காலம், மிகச்சரியாக சொல்வதானால் 24 ஆண்டுகள் ஒன்பது மாதங்கள், சக்திமிக்க தலைவராக இராக் நாட்டை ஆர்ப்hட்டமாக ஆட்சி செய்துகொண்டிருந்த சதாம் ஹுசைன் இப்போது தூக்கு தண்டனையை எதிர்பர்த்துக் கொண்டிருக்கும் ஒரு கைதி. இது அவர் இரண்டவது முறையாக எதிர்நோக்கும் மரண தண்டணை. முன்னர் ஒரு முறை 23 வது வயதில் அவர் தப்பித்தது போல இந்த முறை தப்பிச் செல்வது சாத்தியமற்றது என்று தோன்றினாலும் அவருக்காக பிரார்த்திக்க உயர்கிற கரங்களில் அந்த ஆதங்கம் இன்னும் மிச்சம்மிருக்கிறது. எங்கள் மதரஸாவில் 93 க்குபின் பிறந்த மாணவர்களில் வகுப்பிற்கு இரண்டு பேர் சதாம் என்ற பெயரில் இருக்கிறார்கள். இன்ஷியல் குறிப்பிடாமல் சதாம் என்று கூப்பிட்டால் ஒரு அணிவகுப்புக்கு தேவையான அளவு மாணவர்கள் திரளக் கூடும். சமீப காலத்திய முஸ்லிம்களின் வரலாற்றில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பெயர் இதைத் தவிர வேறில்லை. இத்தனைக்கும் அந்த பெயருக்கு காரணமானவர் ஒரு புன்னிய ஆத்மாவா என்றால் அதுவும் இல்லை. எல்லாம் அமெரிக்காவின் புண்ணியத்தால் நடந்தவை. ஆமெரிக்கா சதாமின் புண்ணியத்தால் தனது டாலர் மதிப்பை வளர்ததுக் கொண்டது என்பது வேறு விசயம். சதாம் என்ற வார்த்தைக்கு அதிகம் மோதுபவர் என்று பொருள். அந்த பெயர் சதாம் ஹுசைனுக்கு மிகக் கச்சிதமாக பொருந்தி விட்டது அவரது வாழ்வு முழவதும் மோதல் மயமாகவே இருந்தது. 2003 டிசம்பர் 13 ம் தேதி சதாமின் சொந்த ஊரான திக்ரிதுக்கு 9 மைல் தொலைவிலுள்ள ஒரு இடத்தில் ஒன்பதுக்கு ஆறு அடி ஆழமுள்ள ஒரு பதுங்கு குழியிலிருந்து அமெரிக்க வீரர்கள் 66 வயது சதாமை மண்ணப்பிய தலைமுடியுடனும் நீண்டு வளர்ந்த தாடியுடன் கைது செய்யும் வரை அவர் தீரத்துடன் மோதிக் கொண்டே இருந்தாhர். ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பலரும் அவரின் கடைசி முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடும். விறுவிறுப்பும் தீரமும் செழுமையும் நிறைந்த ஒரு கதை போன்ற வரலாறு சதாமுக்கு பின்னே இருக்கிறது. ஒரு வேளை அவர் தூக்கிலடப்பட்டாலும் கூட அது அந்த வரலாற்றின் தோல்வி அல்ல. அவரது வெற்றியின் முடிவு அவ்வளவே! இனி வருகிற இஸ்லாமிய அல்லது முஸ்லிம்களின வரலாறு அவரை எப்படி குறிப்பிடப் போகிறது என்பது தான் இப்போதைய எதிர்பார்ப்பு. அவரது முடிவிலிருந்து ஒரு விடிவு பிறக்கும் என்றால் சந்தேகத்திற்கு இடமின்றி அவர் முஸ்லிம்களின் மரியihதக்குரிய தலைவராகத் திகழ்வார். ஏடுகள் தோறும் அவர் புகழ் பாடப்படும். அவர் வரலாற்றில் நீடூழி வாழ்வார். 14 நூற்றாண்டுக்ளை கொண்ட முஸ்லிம்களின் வரலாற்றின் மிகச் சிக்கலான கால கட்டத்தில் உலகமே அஞ்சிக் கொண்டிருந்த ஒரு சக்திக்கு தலை வணங்காமல் சதாம் வாழ்ந்தார் என்பது முஸ்லிம்களைப் பற்றி வருங்கால வரலாறு மரியாதையோடு பேச உதவும். வரலாற்றுக் காலந் தொட்டு வல்லரசுகளின் அதிகாரச் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ளும் களமாக இராக் இரு;தது. யாரிடம் இராக் இருக்கிற தோ அவரே வெற்றியாளர். இராக்கை பறி கொடுத்தவர் தோற்றவர் என்பது பழங்காலத்து வல்லரசுகளின் அரசியல் அரிச்சுவடி. பாரசீகத்தை ஆட்சி செய்த சாசானியப் பேரரசும் ரோமை ஆட்சி செய்த பைசாந்தியப் பேரரசும் மோதிக் கொண்ட, பூமியின் தாழ்வான பகுதிய என்று திருக்குர்ஆனில் அர்ரூம் அத்தியாயயத்தில் சொலல்பபடுகிற நிலப்பரப்பு இராக் தான் எனறு விரிவுரையாளர்கள் கூறியுள்ளார்கள். இஸ்லாம் பாரசீகத்தை கைப்பற்றி ரோமின் கொட்டத்தை அடக்கிய பிறகு இராக்கிற்கு நிம்மதி பிறந்தது. அனாலும் கலிபாக்களில் ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் முஸ்லிம் உலகை ஆட்டுவித்த பல பிரச்சனைகளுக்கும் இராக்கே மையமாக இருந்தது. ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் மேதமையை போற்றாமல் இருக்க முடியாது. ஆரசியல் என்பது பல்வேறு பட்ட சூதாட்டங்களின் மைதானமதக மாறிவிட்ட பிறகு மதீனாவை இஸ்லாமிய அரசின் தலைநகராக வைத்திருக்க வேண்டாம் என்று அவர் தான் தீர்மாணித்தார். பரந்து பட்ட பேரரசில் அவர் தேர்நதெடுத்த இடம் கூபா. அது இராக்கில் தான் இருக்கிறது. வல்லரசுச் சக்தியின் ஆதிக்க வரலாற்றில் இராக்கின் கேந்திர மக்கியத்துவத்தை அவர் புரிந்து கொண்டிருந்தது அதற்கு காரணமாக இருக்கலாம். இராக்கின் நீண்ட நெடிய வரலாற்றில் சமீப சில நூற்றாண்டகளில் சதாம் ஹுசைனைப் போல வல்லரசுகளுக்கு சவால் விடும் ஒரு அரசியல் தலைவர் இருந்தாரா என்பது பூதக்கண்ணாடி வைத்து தேடிப்பார்க்க வேண்டிய விசயம்.சதாமின் அரசியல் வாழ்கை, இராக் நாட்டுக்குக்கும் அதன் வழியாக முஸ்லிம் சமுதாயத்திற்கும் வரமா? சாபமா? என்ற சர்சை தொடர்ந்து கொண்டிருந்தாலும் கூட அடாவடித்தனம் செய்து கொண்டிருந்த ஒரு வல்லரசை அதன் சிந்தனைப் போக்கிலேயே தோல்வியை தழுவ வைத்தவர் என்ற பெருமை நிச்சயம் அவருக்கு உண்டு. இது கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட கருத்து. முஸ்லிம் சமுதாயம் அவரை ஒரு வீரராக பார்க்கிற தென்றால் அதற்கு ஒரே காரணம் இதுவாக மட்டுமே இருக்கும். மரண தண்டணை கூறி தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டாலே ஒரவருடைய வாழ்வு முடிந்து விடும் என்றால் சதாம் ஹுசைன் 23 வயதுடைய இளைஞராக இருந்த போதே இறந்திருக்க வேணடும். அந்த தீர்ப்பு செத்துப் போனது. தீர்ப்பளிக்கப் பட்டவர்; சாதனை வாழ்வு வாழ்ந்தார். சதாமின் வரலாற்றை சுவாரசியமும் விருவிறுப்பும் நிறைந்ததாக காட்டும் இது போன்ற பல நிகழ்வுகள் உண்டு. 1937 ஏப்ரல் 28 ம் தேதி சதாம் ஹுசைன் பக்தாதிலிருந்து நூறு கீ மீ தொலைவில் உள்ள திக்ரிக் நகருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். தந்தையை சிறுவயதிலேயே இழந்த சதாம் தாய் மாமனும் அரபு தேசியவாதியுமான கைருல்லாஹ் தல்பா என்பவரிடம் வளர்ந்தார். இளவயதில் பக்தாதுக்கு குடியேறிய சதாம் அரபு பாத் சோஸலிஸ்ட் கட்சியல் சேர்ந்தார். சிரியாவின் நிதி உதவியோடு செயல்பட்டு வந்த இந்தக்கட்சி சமயச்சார்பின்மை சோஷலிஸம் அரபு இனவாதக் கருத்துக்களை கொண்டிருந்தது.அரசியல் நடிவடிக்கையில் ஈடுபட்டதால் சதாம் உயர்நிலைப்பள்ளி பருவத்திNயே சிறைக்கு செல்ல நேர்ந்தது. 1958 ல் ஆறு மாத சிறைத் தண்டனைக்கு ஆளானார். அதற்கு அடுத்த ஆண்டு அப்போதைய இராக்கிய ஆட்சியாளரான அப்துல் கரீம் காஸிமை கொiலை செய்ய முயன்ற குற்றச் சாட்டின் பேரில் சதாமும் மற்ற சிலரும் தேடப்பட்டனர். தொடையில் ஒரு குண்டு பாய்ந்த நிலையில் அவர் இராக்கிலிருந்து எகிப்திற்கு தப்பிச் சென்றார். அங்கு உயர்நிலைப் படிப்பை தொடர்ந்த சதாம் தொடர்ந்து சட்டக் கல்வியும் பயின்றார். 1960 பிப்ரவரியில் கரீம் காஸிமை கொiலை செய்ய முயன்ற குற்றச்hட்டின் பேரில்; சதாமுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 1963 ல் இராக்கில் ரமலான் புரட்சி என்ற பெயரில் ஒரு புரட்சி நடந்தது. பாத் கட்சி அப்துல் கரீம் காஸிமை அகற்றும் முயற்சியில் வெற்றி பெற்றது. பாத் கட்சி அதிகாரத்தை பெற்றதைத் தொடர்ந்து சதாம் இராக் திரும்பினார். ஆனால் ரமலான் புரட்சியைத் தொடர்ந்து இராக்கில் நிலவிய தெளிவற்றி சூழலில் 1964 அக்டோபரில் சதாம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்hர். சிறையில் இருக்கிற போதே பாத் கட்சியின் துணைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 1967 ல் சதாம் சிறையிலிருந்து தப்பித்தார்;. தலைமறைவாக செயல்பட்ட அவர் தன்னுடைய உறவினரும் பாத் கட்சியின் பிரமுகர்களில் ஒருவருமான அஹ்மது ஹசன் அல் பக்ர் இராக்கின் ஆட்சியாளராவதற்கு முக்கியப் பங்காற்றினார். 1968 ல் அல் பக்ர் இராக்கியின் ஆட்சியாளரான போது சதாமின் அரசியல் வாழ்வுக்கும் இராக்கின் எதிர்காலத்திற்குமான அடித்தளம் வலுவாக போடப்பட்ட்டது. 1970 களின் தொடக்கத்தில் புரட்சிகர அதிகார அமைப்பில் துணைத்தலைவராகவும் அதிபருக்கு அடுத்த நிலையிலும் இருந்த சதாம் இராக்கின் முன்னேற்றத்திற்கு தேவையான பல முக்கிய திட்டங்களை; செயல்படுத்தினார். 1972 ல் எண்ணெய் நிறுவனங்களை தேசியமயமாக்கியது அவற்றில் முக்கியமானது. 10,12 வருடங்களில் ஆட்சித்தலைவருக்குரிய அதிகாரச் செல்வாக்கை சதாம் திரட்டிக் கொண்டார்.எப்போது நீங்கள் அதிகப்படியான துடிப்பை வெளிப்படுத்துகிறீர்களோ! உங்களது சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் ஆற்றலை பெறுகிறீர்களோ! அப்போது மக்கள் உங்கள் பக்கமாக நிற்பார்கள் என்ற அனுபவ மொழிகளுக்கு ஏற்ப சதாமின் திறமையாலும் தீரத்தாலும் ஈர்க்கப்பட்ட அன்றைய இராக்கிய அரசியல் வாதிகள் சதாமின் தீவிர அதரவாளர்களாக மாறினார்கள். 1979 ல் நோயின் காரணமாக அல் பக்ர்; பதவியிறக்கம் செய்யப்பட்ட போது சதாம் இராக்கின் புதிய திறமை மிக்க அதிபராக ஆனார். 1980 ல் சதாம் எல்லைத் தகறாறில் இரானுடன் சண்டையை தொடங்கினார். அது எட்டு வருடங்களாக தொடர்ந்து நடந்தது. இரு தரப்பிலும் மிக மோசமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. 10 லட்சத்திற்கு மேற்பட்டோர் இறந்திருக்கக் கூடும் என்று ஒரு கணக்கு சொல்லப்படுகிறது. 1988 ல் ஒரு ஒப்பந்தத்தின் மூலம் அந்த தொடர் யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆதே ஆண்டு தனக்கு எதிராக கலகம் செய்த இராக்கின் வட பகுதியில் இருந்த குர்து இன மக்களுக்கு எதிராக ஒரு பெரும் கலையெடுப்பை சதாம் நிகழ்த்தினார் என்று ஐ. நூ வின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. அந்த சமயங்களில் சதாம் விஷவாயுவையும் ரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்துமாறு இராக்கின் துருப்புகளுக்கு உத்தரவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு கண்டனம் தெரிவிக்கிறது.சதாமின் குடும்பத்தினர் குறிப்பாக அவாரது மகன் உதய்யின் நடவடிக்கைகள் காரணமாக அவரது தனிப்பட்ட வாழ்வின் மீது பல விமர்ச்சனங்கள் எழுந்தன.1990 ல் இராக்கின் பொருளாதாரம் சரிவு கண்ட போது இராக்கின் தென்பகுதியில் இருக்கிற குவைத்தை பிடிக்க படைகளுககு சதாம் உத்தரவிட்டார். மிகுந்த சர்சசைக்குரிய அந்த நடவடிக்கையில் சதாம் குவைத்தை கைப்பற்றினார். ஆதன் மூலம் அமெரிக்கச் சாத்தான் மத்தியக்கிழக்கில் பேயாட்டம் போடுவதற்கான தொரு வாய்பை சதாம் திறந்துவிட்டார் என்பது மறுக்கு முடியாத உண்மை. இதன் மூலம் அமெரிக்க பொருளாதாரம் இரண்டு மடங்கு வளர்ச்சியமைவதற்கும் சதாம் காரணமானார். 1991 ல் அமெரிக்க கூட்டுப்படையினர் இராக்கிய வீரர்களை குவைத்திலிருந்து விரட்டினர். போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சதாம் சம்மதித்தார். இராக் பேரழிவு ஆயதங்களை அழித்து விட வேண்டும் என்றும் இராக்கின் வட பகுதியும் தென் பகுதியும் இராணுவம் அற்ற பகுதிகளாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இரானுடனான போரில் வெற்றி பெற்றதாக அறிவித்தது போலவே வளைகுடா யுத்தத்திலும் தானே வெற்றி பெற்றதாக சதாம் அறிவித்தார். 1995 ல் சதாம் இராக்கின் அதிபராக மீண்டும் தேந்தெடுக்ககப்பட்டார். வளைகுடா யுத்தத்திற்கு பிறகு இராக்கின் மீது விதிக்கப் பட்டிருந்த பொருளாதார தடையை தகர்த்தி எண்ணெய்க்கு உணவு என்ற திட்டத்தை ஐ நா அமுல் படுத்தியது. அத் திட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி சதாம் ஆயதங்களை வாங்கினார் என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.1996 இராக்கிய துருப்புக்கள் இராக்கின் குர்து ஜனநாய கட்சியினருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ரானுவ விலக்களிக்கப்பட்ட பகுதியல் ரானுவ பயிற்சி நடவடிக்கையை மேற்கொண்டனர். இது ஒரு முக்கிய நிகழ்ச்சி. ஒரு வலிமையான எதிரியை இணைந்து சந்திப்பதற்காக சதாம் தனது உள்ளு}ர் எதிர்ப்பாளர்களிடம் இறங்கி வந்ததையும் மிக நெருக்கடியான தருணத்தில் கூட அவர் தன்னுடைய சுய ஆதிக்க உரிமைய விட்டுக் கொடுக்க மறுத்ததையும் வெளிப்படுத்தியது. ஆனால் அமெரிக்கா ஏவுகனை தாக்குதல் தொடுத்து அதை தடுத்தது. 1995 ல் சதாமின் மருமகன்கள் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. இராககிய அரசு ரசாயன உயிர் கொல்லி மற்றும் அனு ஆயுதங்களை வைத்திருப்பதாக சதாமின் மருமகன்கள் வெளி உலகுக் தெரிவித்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இராக்கிற்கு வெளியே இருந்த அவர்கள் மன்னிக்கப் பட்டதாக உறுதி அளிக்கப் பட்டதின் பேரில் அவர்கள் இராக்கிற்கு திரும்பி வந்த போது அவர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1998 ல் இராக்கிலிருந்த பேரழிவு ஆயுத பரிசோதகர்களை ஐ நா திரும்ப அழைத்துக் கொண்டது. 1991 ல் போடப்பட்ட ஒப்பந்தத்தை இராக் மீறுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து இராக்கின் மீது நான்கு நாள் தொடர்ந்து விமானத் தாக்குதல்களை நடத்தின. ஆவர்களின் நோக்கம் இராக்கில் சதமிற்கு எதிரான ஒரு புரட்சி ஏற்பட்டு அவர் ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே. அமெரிக்க மக்கள் சபையில் இராக் விடுதலைச் சட்டம் என்று ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. சதாமின் ஆதிக்ககத்திற்கு முடிவு கட்ட அது கூறியது. தொடர்ந்து அமெரிக்க அரசு சதாமை அகற்றுவதற்கான முயற்சிகளில் ரகசியமாகவும் பகிரங்கமாகவும் செய்து வந்தது. அதில் எதுவும் வெற்றி பெறவில்லை. அதிபர் புஷ் சதாமுக்கு எதிராக தொடாந்து பேசி வந்தார். இராக் இரான் வட கொரிய ஆகிய மூன்றும் சாத்தானிய அச்சுகள் என்று பேசினார். சதாமும் விடாப்பிடியாக புஷ்ஷுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தாh. இரத்தைத் சிந்தும் வழிகள் மேலும் இரத்தம் சிந்தப்பட வழிவகுக்கும் என்றார்.இதற்கிடையே 2001 ல் ஒன்றில் நியூயார் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து அமெரிக்காவின் கோபம் இராக் மீது நிலை கொண்டது. பெரழிவு ஆயதப் பரிசோதகர்கள் என்ற பெயரில் இராக்கிற்குள் சென்ற அமெரிக்க உளவாளிகளை தொடர்ந்து பரிசோதனை என்ற பெயரில் இராக்கிற்கு உள்ளே அனுப்பி தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்த அமெரிக்க முயன்றது. ஓரு கட்டத்தில் அமெரிக்காவின் அத்துனை அச்சுறுத்தல்களையும் இராக் நிராகரித்தது. 2003 மார்ச் 19 ம் தேதி 48 மணி நேரத்திற்குள் சதாமும் அவரது மகன்களும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அல்லது ராணுவ நடவடி;ககையை சந்திக்க தயாராகுமாறும அதிபர் புஷ்; அறிக்கை விடுத்தார். சதாம் வெளியேற மறுத்தார். தலை துண்டிப்பு என்ற பெயரில் சதாமையும் அவரது கும்பத்தினரையும் அழிக்க அமெரிக்கா தொடுத்த ஏவகணைத் தாக்குதல்கள் தோல்வியடைந்தன. தாக்குதலிருந்து சதாமும் அவரது குடும்பத்தினரும் பத்தரமாக தப்பித்தனர். அமெரிக்க துருப்புக்கள் இரத்தக்குளியலுக்கு உள்ளபாக வேண்டிதெயது வரும் என்று சதாம் எச்சரித்தார். 2003 ஏப்ரல் 9 ல் இராக்கில் உள்நாட்டு குழப்பம் தலை தூக்கியது. சதாம் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. இராக்கின் சட்ட ஒழுங்கு சீர் குலைந்தது.2003 மே 2 ம் தேதி இராக்கை கைப்பற்றியதாக புஷ் அறிவித்தார். ஜுலை 22 2003 அன்று மெசோல் நகருக்கு வடக்கே உள்ள ஒரு பண்ணை வீட்டில் வைத்து சதாமின் மகன்களான உதய்யும் குஸைய்யுமு; சுட்டுக் கொல்லப்பட்டனர். அடிமரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன சர்வதேச பத்ரிகையாளர்களை அழைத்து அவர்களது உடலை; காட்டியது. எந்த நாட்டையும் தனது உளவு செயற்கை கோள்களால் பக்கத்திலிருந்து பார்த்து விட்க கூடிய அளவு செல்வாக்குப் பெற்ற அமெரிக்கா ஒரு சிறு தேசத்தின் அதிபரின் பிள்ளைகளை கொன்று விட்டதற்காக நடத்திய இந்த ஆர்ப்பாட்டங்கள் சிறு பிள்ளைத் தனமானது என்பது ஏனோ அமெரிக்கர்களுக்கு அப்போது புரியவில்லை. இராக்கிற்குள் நுழைந்து பல நாட்கழித்து சதாமின் மகன்களை கொன்று விட்டு அமெரிக்கா முண்டா தட்டியது வரலாற்றில் வேடிக்கையாகப் பேசப்பட இருக்கிற ஒரு நடவடிக்கையாக அமையக் கூடும்.இராக்கை சல்லடையாகத் தேடிய பிறகும் சதாம் அமெரிக்க கூட்டுப்படைக்கு கிடைக்கவில்லை. அவருக்கு அடைக்கலம் தர பல நாடுகள் தயராக இருப்பதாக சொல்லப்பட்ட போதும் அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல மறுத்துவிட்டார். உலக மக்களின் மனதில் சதாம் உய்ர்நது நின்றதற்கான காரணிகளில் அதுவும் ஒன்று. எதிர்கால வரலாறு சதாமிமை ஒரு வரலாற்று நாயகராக சித்தரிக்கும் என்றால் அதற்கு இது வே பிரதான காரணமாக இருக்கப் போகிறது. அவர் யரையும் நம்பாதது ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும் கூட தனது முடிவு நெருங்கி வந்த சந்தர்ப்பத்தில் கூட இராக்கை விட்டு அவர் வெளியேறாதது அவரை சந்தேகத்திற்கிடமின்றி ஒரு வீரராக உலகுpற்கு முன்னிறுத்திவிட்டது. 2003 டிசம்பர் 13 தேதி ஓன்பது மாத கால தேடல்களுக்கு பிறகு அமெரிக்க கூட்டுப் படைகள் சதாமின் உறவினர்களுக்கு லஞ்சம் கொடுத்து சதாமின் பதங்கு குழியை கண்டுபிடித்தன. சொந்த ஊரான திக்ரிதில் ஒர பண்ணை வீட்டில் அவர் பதுங்கியிருந்த பாதாள அறைக்குள் மயக்க வாயுவை செலுத்தி அவரைப்பிடித்தனர். 2004 ஏப்ரல் 21 அன்று இராக்கிய ஆட்சியின் கீழ் அமைக்கபட்ட ஒரு நடுவர் நீதிமன்றத்தில் சதாம் மீது வழக்கு தொடரப்பட்டது. சதாமுடைய பாத் கட்சியின் தலைமை அலுவலகத்தையே நீதிமன்றமாக மாற்றி அதை பசுமைப்பகுதி என்று அறிவித்து அந்த வளாகத்தை பலத்த பாதுகாப்புக்கு அரனுக்குள் உட்படுத்தியிருந்தது அமெரிக்கா. இவ்வாறு செய்தது இராக் அரசு அல்ல அமெரிக்கா என்று சொல்லக் காரணம் உண்டு. இந்நீதிமன்றச் செலவுகளுக்காக மட்டும் ஒரு கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர்கள் அமெரிக்க அரசு செலவிட்டிருந்தது. அது மட்டுமல்ல இராக்கிய நீதிபதிகளை கொண்ட இத்தீர்ப்பயாத்திற்காக அமெரிக்காவின் மூத்த சட்ட அறிஞர்கள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். (ஹிந்து 7 நவ) 2004 ஜுலை முதல் தேதி சதாம் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார். முழு உலகும் அவரை ஆச்சரியத்தோடு பார்தது. அவர் பேசுவதையும் ஆர்வத்Nhடு கேட்டது. நான் இராக்கின் அதிபர் என்று அவர் நீதிமன்றத்தில் முழங்கிய போது வரலாறு அந்த வார்ததைகளை கவனமாகவே பதிவு செய்திருக்கிறது. மீடியாக்கள் கேலி செய்தாலும் கூட அந்த வார்ததைகளை சதாம் என்ற வீர மறவரின் துணிச்சலான உரையாக பின்வரும் சமுதாயம் பாராயணம் செய்யும் நிலை வரலாம். காலச் சமாதியின் கல்வெட்டுக்ளில் அந்த வார்தைகள் பதியப்படும். குர்துகளை அழித்தது, குவைத்தை ஆக்ரமித்தது என அவர் மீது பொதுவாகவே குற்றம் சாட்டப்பட்டது.சதாம் பொதவாக நீதிமன்றததில் அமைதியாகவும் தன்னம்பிக்கையுடனும் இருந்தார் என்று அனைத்து ஊடகங்களும் தெரிவித்தன. தொடக்கத்திலிருந்து கடைசி வரை நீதிபதிகளுக்கு முன்னால் தன்னுடைய பெயசை சொல்லாத சதாம் பல விசாரணைகளின் போதும் தன்னை விசாரிக்க இந்த நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று கூறினார்அவரது முதல் பேச்சில் பொறி பரந்தது. அல்லாஹ்வை நம்புகிறவர்களே வெற்றியாளர்கள் என்ற கருத்துடைய திருக்குர்ஆனிய வசனத்தை ஓதித் தொடங்கிய அவர் தான் இறைவனின் அருட்கொடையின் கீழ் இருப்பதாக குறிப்பிட்டார்;. இந்த போலியான நீதிமனறத்திற்கு நான் பதிலளிக்க முடியாது. நான் இராக்கின் சட்டப்படியான அதிகாரம் பெற்ற அதிபராக இருக்கிறேன். உங்களுககு; அதிகாரம் கொடுத்தது யார் என்று எனக்குத் தெரியாது. பொய்யை அடிப்படையகக் கொண்டவை அனைத்தும் பொய்யானவைதான் என்று முழங்கினார். அந்தப் பேச்சு பயிற்சி எடுத்துக் கொண்டு வந்து பேசிய பேச்சாக இல்லாமல் இயற்கையான பேச்சாக இருந்தது. அமைதியாக இருங்கள் என்று மட்டுமே நீதிபதியால் சொல்ல முடிந்தது. மீண்டும் ஒரு முறை உங்களது பெயர் என்ன என்று நீதிபதி கேட்ட போது என்னை உங்களுக்குத் தெரியும் என்று மட்டும் பதிலளித்த சதாம் ஒரு இராக்கியரான உங்களுக்கு நான் களைப்படை மாட்டேன் என்று தெரியும் என்று கூறினார். துpரமபத்திருமபக் கேட்டால் சலிப்புற்று அவர் பெயரைச சொல்லி விடுவார் என்ற நீதிபதியின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. 2005 மே மாதம் பிரிட்டிஷ் பத்ரிகையான தி சன் இதழ் சதாம் பேண்ட் மாற்றுவதற்காக ஜட்டியுடன் இருக்கிற ஒரு போட்டோலை அட்டைப்படத்தில் வெளியிட்டது. குற்றவாளிகளை நடத்துவது சம்பந்தமாக உருவாக்கப்பட்ட ஜெனீவா மாநாட்டுத் தீர்மாணங்களுக்கு எதிராக நடந்த அப்பட்டமான அந்த அத்துமீறலை கண்டிக்காத அமெரிக்கா, தன்னுடைய ரானுவம் அந்தப் புகைப்படத்தை வெளியிடவிலலை என்று கூறியது. சதாமை இழிவுபடுத்துவதில் மேற்கலக சக்திகளுககு இருந்த அற்ப சந்தோஷ குணம் இதில் வெளிப்பட்டது.2005 ஜுலை 17 ம் தேதி இராக்கின் விஷேச நடுவர் மன்றம் சதாமுக்கு எதிராக முதல் குற்றச்சாட்டை கூறியது. சதாமின் ஆட்சி காலத்தில் 1982 ல் பக்தாதுக்கு வடக்கே ஒரு மணி நேர பயண தொலைவிலிருக்கிற ஷியாக்கள் பெரும்பான்மையாக வசிக்கிற துஜைல் நகரக்கு சதாம் வந்த பொது அவரது வாகண அணிவரிசை மீது ஒரு குழு தாகு;குதல் தொடுத்தது.அதிர்ஷ்டவசமாக சதாம் தப்பினார். தாக்குதலிலிருந்து தப்பித்த சதாம் இந்தப்புறமுமு; அந்தப்புறமுமமாக துப்பாக்கி குண்டுகள் என்னை கடந்து சென்றன. இறைவன் என்னை காப்பாற்ற நினைத்தான் என்று சொன்னார். இரானிடமிரந்து பொருளுதவி பெறும் தாவா கட்சி எனும் கட்சி தாக்குதலுக்கு பொறுப் பெற்றுக் கொண்டது.( இப்பொதைய பிரதமர் நூரி அக்கடசியை சார்ந்தவரே) அரசின் பதிலடி மிகக் கடுமையாக இருந்தது. அல் பந்தர் நீதிபதியாக இருந்த புரட்சி கர நீதிமன்றத்தில் 148 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை வழங்கப்படுவதற்கு முன்னரே அவர்களில் பலர் சித்தரவதைக்கு பலியாகி இறந்த விட்டதாக டைம் இதழ் குறிப்பிடுகிறது. துஜைல் நகர மக்களின் மரணத்திற்கு சதாம் உத்தரவிட்டதே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சதாமுடன் முள்ளாள் துணை அதிபர் தாஹா யாசீன் ரமலான், சதாமின் ஒன்று விட்ட சகோதரரும் இராக்கின் ரகசிய காவல்துறை தலைவருமான பர்ஜான் அஹ்மது இராக் புரட்சிகர நீதீமன்றத்தின் தலைமை நீதிபதி அவாhத் அஹ்மத் அல் பந்தர் துஜைல் நகரைச் சார்ந்த பாத் கட்சி பிரமுகர்கள் நால்வர் மீதும் குற்றம் சாட்டப்படடிருந்தது. வழக்கு நடந்து கொண்டிருந்த போதே சதாமின் வழக்கறிஞர்கள் மூன்று பேர் வரிசையாக கொலை செய்யப்பட்டார்கள். கொலையாளிகளான ஷியாக்களுக்கும் தற்போதைய உள்துறை அமைச்சருக்கும் தொடர்பிருக்கக் கூடும் என்று பத்ரிகைகள் தெரிவித்தன. 2005 அக்டோபர் 20 ம் தேதி சதாமின் வழக்கறிஞர் சடோன் ஜனபீ அவரது அலுவலகத்திற்கு புறப்பட்ட பொது முகமூடி அணிந்தநபர்கள் அவரை கடத்தினர். அவரது உடல் அடுத்த நாள் கண்டுபிடிக்கப்பட்டது. 2005 நவம்பர் 8 அன்று சதாமின் மற்றொரு வழக்கறிஞர் ஆதில் முஹம்மது அல் ஜுபைதீ பக்தாதில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 2005 டிசம்பர் 4 ம் தேதி சதாம் வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளில் ஒருவர் சதாமை ஒரு சர்வாதிகாரி அல்ல என்று சொன்னதற்காக நீக்கப்பட்டார். 2006 ஜனவரி 15 ம் தேதி குர்து இனத்தை சேர்ந்த தலைமை நீதிபதியான ரிஜ்கர் அமீன் ராஜினாமா செய்தார். நீதிமன்றத்தில் கடுமையாக நடந்து கொள்ள ஷியா மற்றும் குர்து அரசியல் வாதிகள் நிர்பந்திப்பதாக கூறிய தன்னால் அவ்வாறு நடந்து கொள்ள முடியாது என்று கூறி ராஜினாமா செய்தார். 2006 ஜனவரி 23 ல் குர்து இனத்தவரான ரவூப் ரஷீத் அப்துல் ரஹ்மான் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2006 ஜுன் 21 ம் தேதி சதாமின் வழக்கறிஞர் கமீஸ் அல் ஜுபைதீ பலவந்தமாக கடத்திக் கொலை செய்யப்பட்டார்.30 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். பெரும்பாலோர் திரைமறைவிலிருந்து சாட்சியம் அளித்தனர். இறுதியாக நீதிபதி சதாமைப் பார்த்து துஜைல் மக்களின் மரணதண்டனை உத்தரவில் கைழெழுத்து இட்டது ஏன் என்று கேட்ட போது சதாமின் பதில் மிகத் தெளிவாக இருந்தது. சதாம் சொன்னார். எனக்கு அந்த அதிகாரம் உண்டு. இரான் உதவுயுடன் நாடடிற்கு சட்டவிரோதமாக செயல்பட்ட ஒரு குழவை விசாரித்த நீதிமன்றம் அவர்கள் மீதான குற்றத்தை உறுதி செய்து ஒரு தீர்ப்புச் சொல்லம் போது. அந்த உத்தரவில் இறுதியாக கையெழத்திட எனக்கு அதிகாரம் உண்டு. அதற்கு பொறுப்பு நானே. நான் மட்டுமே அதற்கு பொறுப்பு என்று கூறினார். 2006 நவம்பர் 5 ம் தேதி 13 மாத கால விசாரனைக்குப்பின் நீதிபதி ரவுப் அப்துல் ரஹ்மான் தனக்கு இடபப்பட்ட கட்டளையை செவ்வனே செய்து முடித்தார். 30 நாட்களுக்குள் சதாம் தூக்கலிடப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அப்பொழுதும் சதாம் அயராமல் அல்லாஹ் அக்பர் என்று தகபீர் முழக்கம் செய்தார். அன்று நடந்த 50 நிமிட கோhட் விசாரண நாடகத்தனமாக இருந்தது. கடந்த காலத்தை போலவே சதாம் கையில் குர்ஆனை வைத்திருந்தார். அவரது முகத்தை குளோஸப்பில் காட்டிய இந்தித் தொலைக்காட்சி சானல்கள் அவரது முகத்தில் ஒரு சிரிப்பு இழையோடுவதாக குறிப்பிட்டனர்.நீயும் உனது கோர்ட்டும் முட்டாள்தனமானவை என்று நீதிபதியை பார்த்து சதாம் கூறினார். அவரை வெளியேற்றும்படி நீதிபதி உத்தரவிட்ட போது என்னை தள்ளாதேப்பா என்று காவலரைப் பார்த்து கூறிய சதாம் நீpமன்றத்திலிருந்து வெளியேறினார்.சதாமுடன் அவரது ஒன்றவிட்ட சகோதரர் பார்ஜான் ஹஸன் மற்றும் இராக்கின் புரட்சிர நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அவாத் பந்தர் ஆகியோருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கபட்டது.முன்னாள் துணை ஆதிபர் யாசீன் ரமலானுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்துல்லாஹ் கதீம் ருவைத், அலி தாயிம் அலி மிஸ்ர், அப்துல்லாஹ் ருவைத் ஆகியோருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சதாமின் வழக்கறிஞர் கலீல் அத்துலைமீ அமெரிக்க அதிபர் புஷ்ஷுக்கு எழுதிய ஒரு திறந்த மடலில் இந்தத் தீர்ப்பு இராக்கிற்குள் மீண்டும் கடும் கோபத்தையே உண்டு பண்ணும். முழு தேசத்தையும் அறியாமை இருளில் மூழ்கடித்துவிடும் என்று எச்சரித்திருந்தாக டைம் இதழ் குறிப்பிட்டீரந்தது. அவர் சொன்னது போலவே இத்தீர்ப்பு இராக்கியர்களை மேலும் பிளவு படுத்தியிருக்கிறது. தீர்ப்பை கேட்டு ஷியாக்கள் மகிழ்சி தெரிவித்திருக்கிறார்கள். சதாமின் சொந்த ஊரான திக்ரிதில் ஆயிரக்கண்கானோர் தடையுத்தரைவை மீறி ஆர்ப்பாட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். இமாம் அபுஹனிபாவின் அடக்கஸ்தளம் அமைந்துள்ள பக்தாதின் மிகப் பெரிய பள்ளிவாசலுக்குமுமுன் தரண்ட ஆயிரக்கணக்கான சன்னிகள் கண்டன ஆர்ப்பாட்டம் செயட்துள்ளனர். சதாமிற்கு தூக்கு வழங்கப்பட்ட செய்தி கேட்டு சில இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடப்பதாக கூறிய கூறிய சி என் என் தொலக்காட்சி பல இடங்களிலும் தீர்பபை வரவேற்று மக்கள் மகிழ்ச்சி நடனமாடியதாகவும் கூறியது. அப்படி சில காட்சிகளையும் காட்டியது ஆப்படியானால் பக்தாது முழக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது ஏன் விமான நிலையத்தை மூடியத ஏன் என்று ஒருவர் கேள்வி கேட்ட போது அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி 2000 பேர் திக்ரிதில் கண்டன ஊர்வலம் சென்றதாக செய்தியை காட்டியதை தொடர்நது; திக்ரிதில இயங்கி வந்த சௌரா சலாஹுத்தீன் ஆகிய இரண்டு தொலைக்காட்சி சேனல்களை முடும்படி இராக்கிய அரசு உத்தரவிட்டது.தீர்ப்பு சொல்லப்படுவதற்கு முதல் நாள் இரவு நல்ல மழை பொழிந்தது என்று கூறிய டைம் இதழ் அது திர்ப்புக்கிடைத் இறைவனின் ஆசீர்வாதம் என்று குறிப்பிட்டிருந்தது. ஏன் தீர்பபை கண்டு வானம் அழுதது என்று எடுத்துக் கொள்ளக் கூடாதா என்ற கௌ;விக் அது எந்த பதிலையும் சொல்லவில்லை. உலகம் முழவதிலுமிருந்து தீர்ப்பை வரவேற்றும் எதிர்ததும் கருத்துக்கள் கூறப்பட்ட வரவேற்று கூறப்பட்ட கருத்துக்கள சொந்த வெருப்பு அல்லது நயலாபத்தை நோக்கமாக nhக்ண்டிருந்தன. எதிர்ர்த்து கருத்துக் கூறியர்வகள் அனைவரும் சதாமை ஆதரிக்காவிட்டாலும் கூட அவரை அழிப்பதில் காட்டப்பட தேவையற்ற தீவித்தையும் நீதிமற்ம் சட்டவரையரைகளை சரியாகப் பேனாததையும் இந்த தீர்ப்புக்குப்பின் இராக்கில் ஏற்படும் அச்சம் நறைந்த சூழ்நிலைகளைப்பற்றியும் கவலை தெரிவித்திருந்தனர். அத்தோடு சதாமை அகற்றிய பிறகு இராக்கில் நிகழ்ந்த வன்முறைகளால் லட்சக்கண்ககான மக்ள் கொல்லப்பட்டதற்கு புஷ்ஷை குற்றம் சாட்டினர். அவரும் அவரக்கு துணை நின்றவர்களும் சாவ்தேச நீதிமன்றத்தின் முன் போர் குற்றவாளிகளாக நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினர். ஆமெரிக்கச் சார்பு அரசுகள் எதவும் தீர்பபை குறை கூறவில்லை. ஐரொப்பிய யுpனியனைச் சார்ந்த அரசுகள் மரண தண்டனைக்கு எதிராக வாய்கிழியப் பேசுபவை என்ற காரணத்திதால் மரண தண்டனையை எதிர்பதாக டென்மார்க் ஜெர்மன் அயர்லாந்து பிரிட்டன் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தெரிவித்தன. புpரிட்டடிஷ் பிரதமர் மரண தண்டனைணை தாம் எதிர்பதாக கூறிய போதும் அதன் வெளியுறவு அமைச்சர் மர்ககரெட் பெக்கட் இராக் முன்னாள் அதிபர்ருக்கு எதிராக வழங்க்ப்பட்டுள்ள தீர்ப்புடன் தாங்கள் ஒத்தப் போவதாக கூறினார். வெளிப்படையாக தங்களது கொள்கைகு;கு புறம்பான ஒரு செய்தியை உள்ளு}ர ஆதரிக்கும் அவர்களின் போக்கு நிதர்சனமாக வெளிப்பட்டது. ஐரோப்பிய ஒன்றயத்தின் ஆழ்மன உணர்ரவை புரிந்த கொள்வதற்கு இத்தாலியப் பிரதமர் ரொமனோவின் வார்த்தைகள் போதுமானவை . அவர் சொன்னார் மரண தண்டணை இத்தாலியின் பண்பாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் எதிரானது. ஏனவே தூக்க தண்டனை தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் தான் ஆயினும் சதாம் விசயத்தில் தான் உலகத் தலைவர்களுடன் ஒத்துப் போவதாக கூறினார். இதே கருத்தை வேறொரு வார்த்தையில் பேசிய ஸ்பெயின் பிரதமர் லூயிஸ், மரண தண்டனையை குறை கூறிய போதும் சதாமின் செயலுக்கு அவரே பெறுப்பேற் வேண்டும் என்றும் கூறினார். ஏந்த ஒரு அரசியல் வாதியின் நிலையும் இது தான் என்று அவர் தத்தவம் வேறு பேசினாhஇரான் சவூதி குவைத் போன்ற அரசுகளும் அமொக்காவின் கருத்தை பிரதிபலித்தன. சுவுதி மஸ்லிஸ் ஸுராவின் உறுப்பினர் முஹம்மது அலு தல்வா இத்தீர்ப்பு இராக்கிய சமுதாயத்திற்கு கிடைத்த முக்கிய வெற்றி என்று சொன்hர். குவைத்து ஈரானும் சதாமுக்கு கிடைத் தண்டனை அவர் இழைத்த குற்றங்களுககு மிகக் குறை;த தண்டணைதான் என்று கூறின. சவூதி எழுத்தாளர் காலித் அத்தஹீல் சதாம் வழக்கை விசாரித்த நீதிமன்றம் நீதிக்குப் புறம்பானது. இது அரசியல் கேலிக் கூத்து. சதாம் தனது அரரசியல் எதிரிகளை தீர்த்துக் கட்ட பயனபடுத்திய அதே முறையிருந்து இந்த நீதிமன்றமும் மாறவில்லை என்று கூறினார். அவரைப் பேன்றே வேறு பலரும் சதாமும் மிக நல்லவர் அல்ல என்ற கருத்தை தவறாமல் இணைத்துச் சொன்னார்கள். தீர்ப்பை குறை கூறிய அனைவரும் முதலில் தெரிவித்த கருத்து, இராக்கிய நீதிமன்றம் நடத்திய வழக்கு விசாரனை என்பது ஒரு நாடகம். ஆக்ரமிப்பின் கீழ் இயங்கும் ஒரு நீதிமன்றம் சட்டத்திற்கு புறம்பானது என்பதாகும். இந்தக் கருத்தை சிரியாவின் செய்தித் துறை அமைச்சர் முஹ்ஸின் பிலால் டமாஸ்கஸில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையல் முதலாவதாக கூறினார். ஆக்ரமிப்ப்பின் கீழ் இயங்கும் எந்த நீதிமன்றமும் அங்கீகாரமற்றதே! என்று அவர் கூறினார். உலகின் பல நகரங்களிலும் தீர்ப்பை எதிர்த்தவர்கள் அது சி என் என் விவாதமானாலும் சரி ஆஜ்தக் விவாதமானலும் சரி சன் நியூஸ் விவாதமானலும் சரி இதே கருத்தை பிரதிபலித்தனர்.தீப்பு சட்டத்திற்கு புற்ம்பானது என்ற எகிப்திய அரசியல் வாதிகள்;, இந்த வழக்கின் தீர்ப்பை இந்ம அளவோடு பார்க்கமல் Nவுறு சில தளங்களுக்கும் எடுத்துச் சென்றனர். இது அமெரிக்க அரசு ஆரபு ஆட்;சியாளர்களுக்கு சொல்லும் மறைமுகச் செய்தி என்றனர். அதாவது அமெரிக்காவை எதிர்க்கிற எவரும் எத்தகைய நிலைக்கு ஆளாக நேரிடும் என்ற குறிப்பு இதில் இருப்பதாக அரபுகள் அனைவரையுமு; எச்சரிக்கை செய்திருப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது இதன் கருத்து. எகிப்திய அரசியல் வாதிகளின் இந்தக்கருத்த மிக மக்கியமானது. எனெனில் இராக்கிய நீதிமன்றத்திற்கு ஒரு கோடி 40 லட்சம் அமெரிக்க டாலர்களை அமெரிக்க அரசு செலவிட்டதறகான காரணத்தை கூறிய ஒரு அமெரிக்க அதிகாரி இராக்கில் மட்டுமல் மத்தியக் கிழக்கு முழவமுத் ஒரு புதிய நீதிஅமைப்பை உருவர்ககுவதே இதன் நோக்கம் என்று கூறினார். உண்மையில் இவ்வளவு பணத்தை இந்த வழக்கு விசாரனக்காக அமெரிக்கா செலவிட்டதற்கு காரணம் இருந்தது. பேரழிவு ஆயதங்களை சதாம் nவைத்திரு;நததாக குற்றம் ஒரு பெரிய யுத்தத்தை தொடுத்து அதில் லட்சக்கண்கான மக்களும் ஆயிரக்கண்காகான அமெரிக்க வீரர்களும் கொல்லப்பட்ட பிறகு அமெரிக்க ஆய்வாளர்களே இராக்கில் பேரழிவு ஆயதங்கள் இல்லை சொன்ன போது அமெரிக்காவும் அதன் அதிபரும் உலக சமுதாயத்திற்கு முன் தலை குணிய வேண்டியதாயிற்று. அந்த தலைக்குணிவோடு அமெரிக்க மக்களை சந்திக்க முடியாது என்பதனால் சற்றும் கூச்சமற்ற தந்திரததின் மூலம் சதாம் நீக்கப்பட வேண்டியவர் தான் அவர் உலக சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தார் என்று அதிபர் புஷ் கூறினார் அந்த தந்திர வித்தையை நிஜம் என்று நம்ப வைப்பதற்கு அவரக்கு ஒரு நாடக மேடை தேவைப்பட்டது. அந்த நாடக மேடை தான் இராக்கிய நீதிமன்றமாக பரிமாணம் எடுத்தது. எனவே சதாம் உசேன் எதிர்ப்பாளர்கள் தூக்குதண்டனை வழங்கப்பட்டதை ஆததித்தாலும் நீதிமன்ற செயல்பாட்டை ஒரு போதும் சரி என்று கூற மாட்டார்கள் என்பது தான் மறைந்திருக்கிற ரகசியம். தீர்ப்பை குறை கூறிய சர்வதேச மனித உரிமை ஆணையம் குற்றத்தை ஊறிதிப்படுத்த நீதிமன்ற தவறிவிட்டது என்றும். தனது பொன்னான பொழுதுகளை வீணடித்து விட்டது என்றும் கூறியிருந்தது.விசாரன நடந்த விதமும் பலரது புருவத்தையும் உயரவைத்திருக்கிறது என்று மேற்கத்திய ஊடகங்களே கூறுகின்றன. அரசு தரப்பு சமர்ப்பித்த சான்றுகளை எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் பார்க்க அனுமதிக்கப்டவிலலை. அத்தோடு எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு சாட்சிகளை சொல்லிக் கொண்டிருக்கும் போதே நீதிபதி அப்தர் ரவூப் விசாரனையை முடித்துவிட்டார் என்று டைம் இதழ் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது. விசாரனையில் காட்டப்பட்ட முறையற்ற அவசரம், ஆமெரிக்கா காங்கிரஸுக்கான தேர்தல் நடைபெறுவதற்கு முன்னாள் திர்ப்பு வெளியாகிவட வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகிவிட்டது என்றும் டைம் இதழ் எழுதியிருந்தது. அமெரிக்க அதிகாரிகள் அதை மறுத்தார்கள். இது எங்களது கட்டுப்பாட்டில் உள்ள விசயமல் என்று ஒரு சிறு பிள்ளை போல கூறினார் ஒரு அமெரிக்க அதிகாரி. நீதிமன்றத்திலிருந்த எவருக்கும் தீர்ப்பு அதிர்ச்சியை தரவில்லை என்று டைம் இதழ் கூறியிருந்தது. ஏனென்றால் இப்படித்தான் தீர்பபு இருக்கும் என்பது அனைவரும் எதிர்பார்த்தது தானே! நுதீபதி தீர்பபை படிக்கத் தொடங்குவதற்க முன்னால் அவரிடம் ஒரு கடிதத்தை கொடுத்த சதாமின் வழக்கறிஞரும் அமெரிக்ககாவின் மன்னாள் அட்டானி ஜனரலாகவும் இருந்த வழக்றிஞர் நீங்கள் முன்னரே எழுதி வைத்த தீர்ப்பை படிக்கப் போகிறீர்கள் என்று சொன்ன போது நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மானுக்கு கோபம் வந்தது கெட் அவுட் அவர் சத்தமிட்டார். சதாம் தூக்கிலப்படுவார் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. சதாமுக்கே கூட இதில் சந்தேகம் வரலவிலலை;.அதனால் தான் தன்னை ஒரு வீரனைப்போல சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கேட்டிருந்தார் அவரது கோரிக்கை எற்கப்படவில்லை. எனவே அவர் தூக்கிலடப்படுவது கிட்டதட்ட உறுதியாகிவட்டது. ஆஜ்தக் தொலைக்காட்சி சொன்னது போல அப்பச் செய்யாவிட்டதால் அமெரிக்காவின் யுத்த நடவடிக்கை அன் பினிஷ்ட் அகிவிடும். முஸலிம்களில் சிலருக்கு ஒரு நப்பாசை இருக்கிறது. ஒருக்கால் மேல்முறையீட்டின் போது வழக்கு திசை மாறாலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.மேல் முறையீட்டு நடவவடிக்கை தொடங்கிவிட்டது. தீர்ப்பு வெளியான 10 நாட்களுக்கு தானகவே இந்த வழக்கு மேல் முறையீட்டு மன்றத்திற்கு சென்று விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் முறையீட்டு மன்றத்திற்கு வழக்கு சென்றபிறகு 20 நாட்கள் கழித்து அரசுத்தரப்பும் எதிர்த்தரப்பும் தங்களது ஆவணங்களை சமர்ப்பிப்பார்கள். ஆஸோஸியேட்டட் பிரஸ்ஸுக்கு பேட்டியளித்த இராக்கிள் நீதிமன்ற அதிகாரி ஒருவர் இந்த விசாரனை மூன்று அல்லது நான்கு வாரங்கள் பிடிக்கும் என்று கூறினார். ஆனாலும் எந்த கால வரையறையும் கிடையாது என சட்டத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. கோர்ட் ஒரு முடிவுக்கு வந்து தூக்கு தண்டனையை உறுதிப்படுத்திவிடுமானால் ஒரு மாத காலத்திற்குள் தண்டனை நிறைறே;றப்பட்டு விடும். முன்னரே குறிப்பிட்டது போல சதாமுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ப்படுமென்றால் அது அவரது வாழ்வின் தோல்வியாக இருக்காது. வெற்றியின் முடிவாக மட்டுமே இருக்கும். ஆனால் அதிபர் புஷ்ஷுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் வேறு பல தோல்விகளுக்கு அது வழிவகுக்கும். வரலாற்றின் தவறுகள் ஒரே மாதிரியானவை ஆட்களும் இடங்களும் தான் வேறுபடுகின்றன என்று ஓர் அறிஞன் சொன்னான். ஆட்சியும் அதிகாரமும் கிடைக்கிற போது அதை, சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதற்கு கிடைத்த வாய்ப்பாக யார் பயன்படுத்திக் கொள்கிறார்களோ அவர்களே மனித வரலாற்றில் மதிப்பிறகுரியவர்கள். அத்தைகையோர் வாழம் காலத்திலும் வரலாற்றின் போக்கிலும் பாரட்டுக்கரியவர்களாகவும் மானுடத்தின் வாழ்த்துககுரியவர்களாக திகழ்வார்கள். அதிகாரத்திற்கு வரகிற போது யார் தலைக்கணத்திற்கு உள்ளாகி அதிகாரம் என்பது சட்டத்ததை ம{றுவதற்கு கிடைத்த சலுகையாக நினைத்து கொண்டு அடாவடித்தனத்தை கட்டவிழ்த்து விடுகிறார்களோ அவர்கள் காலத்தின் போக்கில் கெடூரமான முடிவைச் சந்திப்பார்கள். அது மட்டுமல்ல வரலாறு வாழும் காலந்தோறும் வசைச் சொற்களுக்கு ஆளாவர்கள் என்பது வரலாறு தொடர்நது கற்பிக்கிற பாடமாகும். பெதுவாக ஆக்ரமிப்பு அரசுகளால் தூக்கிலோற்றப்படும் தலைவர்கள் வரலாற்று நாயகர்களாக வலம்வருவார்கள். சக்ரடீஸ் உமர் முக்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் பகத் சிங்கின் வரிசையில் சதாம் உசேனின் பெயரும் சேர்க்கப்படுமா என்பதற்கு காலம் பதில் சொல்லும். அதை அறிந்து கொள்வதற்கு வேண்டுமானால் காத்திருக்க வேண்டி வரலாம். ஆனால் ஆதிக்க வெறியில் அக்கிரமத்தை கட்டவிழ்த்து விட்டவர்கள் மிகச் சீக்கிரத்தில் மிதிபடுவார்கள். அவர்களுடைய மரியாதை மண்ணை கவ்வும் என்பதை அறிந்து கொள்வதற்கு அதிக நாட்கள் தேவைப்படாது. அமெரிக்க மக்கள் சபையிலுள்ள 435 இடங்களும் 33 செனட்சபை இடங்களும் 36 கவர்னர் இடங்களும் பணயம் வைக்பட்டிருந்தன. தே;தலில் மக்கள் புஷ்ஷின் கோரப் பல்லை பிடிங்கியிருக்கிறார்கள். புஷ்ஷின் ஜனநாயக கட்சி தோற்றப் போய் குடியரசுக் கட்சி வெற்றிருக்கிறது. புஷ் அதிகம் உச்சரித்த குடியரசு என்ற வார்ததையாலே குட்டுப் பட்டிருக்றிhர். என்பதில் புஷ்ஷின் முடிவிற்கு முன்னுரை எழுதப்பட்டிருக்கிறது.இந்த மாற்றத்திற்கு வித்திட்ட அமெரிக்க மக்கள் இராக்கின் ஒண்ணரை லட்சம் மக்கள் பலியானதற்காக இல்லாமல் தங்களது நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் 3000 பேருக்காக இந்த மாற்றத்தை தேர்வு செய்தார்கள் என்றால் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விசயம் இருக்கிறது. பிரிட்ஷ் சாம்ராஜ்யம் மெல்ல மெல்ல விழுந்தது. சோவியத் ரஷ்யா நொடியில் விழுந்தது. என்ன காரணம் என்றால் சுய லாபத்திற்காக மானுடத்தை காயப்படுத்தியவர்கள் அவர்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிகராக பழிவாங்கப்படுவார்கள் என்று வரலாறு கற்றுத் தரும் வாழ்கைத் தத்தவத்தை அவர்கள் பரிந்து கொள்ளாததேயாகும். இதை அமெரிக்கர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.அதிபர் புஷ் தன்டைய வாழ்வில் இன்னும் பல சோதனைகளை சந்திக்க வேண்டியது வரலாம். 24 ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்தவரே குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய சூழ்நிலை உருவானது என்றால் 10 ஆண்டுகள் பதவியில் இருந்தவர் தப்பித்து விடுவார் என்பதற்கு என்ன உத்தரவாதம் சொல்ல முடியும்? இனிவருகிற வரலாறு அவரை எப்படிக் கருதப் போகிறது என்பது சுவாரஸ்யமானது. ஓரக்கால் இராக்கில் அமைதி ஏற்பட்டல் வரலாறு அவரை மன்னிக்கக் கூடும். அனால் அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாகவே தென்படுகின்றன. நாள் தோறும் இராக்கில் கேட்கிற வெடிச்சத்தத்தில் அமைதிப் புறாக்கள் அங்கு கூடுகட்டுவதற்கு அல்ல பறப்பதற்கு பயப்டுகிற சூழ்நிலைதான உருவாகி இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 3700 பெர் கொல்லப்பட்டதாக ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்றைககு முன்தினம் நவம்பர் 23 ம்தேதி அல்சதர் நகரத்தில் நடைபெற்ற கொடூரமான கார்குண்ட தாக்குதலில் 200ககு மேறபட்டோர் பலியாகியிருக்கின்றனர். ஷியாக்கள் நிறைந்த அந்தப பகுதியில் நடைபெற்ற தற்கு பழி வாங்கும் நடவடிக்கையை ஷியாக்களில் அல்அகததிர் பிரிவினர் மிகத் தீவிரமாக தொடங்கயிரப்தாக சி என் என் செய்தி சொல்கிறது. இது இராக்கை எந்த நிலையில் கொண்டு பொய் நிறுத்துமோ என்ற அச்சம் செய்தி வாசிப்பவரின் முகத்திலேயே தெரிகிறது. இத்தனைக்கும் காரணமானவர் அதிபர் புஷ். புஷ் மட்டுமே! தான் செய்வது எதுவம் நியாயம் என்று வாதாடி, தன்கு கிடைத்த மிகப்பெரிய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த அதிபர் புஷ், இராக்கில் 3000 க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்படுவதற்கும், ஒண்ணரை லட்சம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கும், பல்லாயிரக்கண்கான அமெரிக்க இளைஞர்கள் உடல் ஊனமுறுவதற்கும், உலகம் முழவதிலும் அமெரிக்க நலன்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்வதற்கும் காரணமாகியிருக்கிறார். இத்தனை கொடுமைகளும் எதற்காக என்ற கேள்வி கேட்கப்படும் போது சதாம் என்ற தனிமனிதனை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக என்று அவர் பதில் சொல்வாரானால் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திலுpருந்து செயல்பட்ட குரூரமும் முட்டாள்தனமும் மிகுந்த ஆக்ரமிப்பாளர் என்று வரலாறு அவரை சபிக்காமல் விடாது. எப்போதோ படித்த ஒரு கவிதை நினைவிலிருக்கிறது.உங்கள் பேனாஉங்கள் பேப்பர்எதை வேண்டுமானலும் எழுதுங்கள்.உங்கள் நாவுஉங்கள் மூச்சுஎதை வேண்டுமானாலும் பேசுங்கள்மறந்துவிடாதீர்கள்.வரலாறுஉங்கள் பிணங்களைக் கூடதோண்டியெடுத்து தூக்கில் போடும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment