புறத்திணை சுயம்வர மண்டபத்தில்போலி நளன்களின் கூட்டம்.கையில் மாலையுடன்குருட்டுத் தமயந்தி.20 ஆண்டுகளுக்கு முன்பு அடிமனதில பதிந்த கவிக்கோவின் அருமையான வரிகள் இவை. தேர்தல் என்ற வார்த்தை காதில் விழும்போதெல்லாம் இதயத்தின் மேற்பரப்பிற்கு இந்த நான்கு வரிகள் மிதந்து வரும். இந்த வரிகளில் இந்தியத் தேர்தல் அமைப்பின் முகவிலாச்ததை அடையாளப்படுத்தி விட்டார் கவிக்கோ. புதுக்கவிதையின் உத்திக்கும் பெருளடர்த்திக்கும் சான்றாக அமைந்துவிட்ட இந்த வரிகள் தேர்தல் திருவிழாவில் மக்களே கானாமல் போய்விடுகிற அவலத்தை கவலையோடும் கோபத்தோடும் படம் பிடிக்கின்றது. இன்னும் ஒரு ஐம்பது வருடங்கள் கழித்தேனும் தமயந்திகள் பார்வை பெருவார்களா? அல்லது நளன்களாவது நல்லவர்களாகி விடுவார்களா என்பது ஏக்கம் கலந்த பெருமூச்சை வரவழைக்கிற கேள்விகளே என்றாலும் உலகின் மிகப் பெரிய ஜனறாயக் குடியரசின் குடிமக்கள் மீண்டும் ஒரு முறை சந்தோஷத்தோடு ஏமாறத் தயாராகிவிட்டார்கள். தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் திருவிழா கூட்டணிக் கொடியேற்றத்தோடு தொடங்கிவிட்டது. உலகின் தொன்னூறு நாடுகள் பிரிட்டிஷ் ஆக்ரமிப்பின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தன. இந்தியாவில் எழுந்த விடுதலைப் போராட்டத்தின் விளைவாவும் இங்கிலாந்தில் நிகழ்நத ஆட்சி மாற்றத்தின் விளைவாகவும் இந்தியா சுதந்திரம் பெற்றது. தொடர்ந்து காலனி நாடுகள் ஒவ்வொன்றாய் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கின. சுதந்திரப் பெற்ற இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தியா தனது அரசியமைப்புச் சட்டத்தை வகுத்துக் கொண்டு மக்களாட்சிக் குடியரசாக பொலிவு பெற்றது. 1951 ல் நடைபெற்ற முதல் தேர்தலில் தங்களை யார் ஆள்வது என்று முடிவு செய்யும் அதிகாரத்தை இந்திக் குடிமகன் பெற்றார். அன்றிலிருந்து இந்தியாவின் மக்களாட்சி அமைப்பு முறை வெற்றிகரமாக செயல்பட்டு வரகிறது. குறைகள் குற்றங்கள் எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்கள் நிறைய இருக்கத்தான் செய்கிறது என்றாலும் ஒரு ஏழை தேசம் 50 ஆண்டகளாக தனது குடியரசுத் தத்துவத்தை தொடர்நது பாதுகாத்து வைத்திருக்கிறது என்பது இந்திய மக்களாட்சி முறையின் பெருமைக்குரிய சிறப்பம்சமே! . ஓரு சர்வாதிகார ஆட்சியோ ரானுவப்புரட்சியோ இந்த தேசத்தின் மக்களாட்சி தத்தவத்தை மளுங்கடித்து விடவிலை;லை என்பது கல்வியறிவும் பணவசதியும் இல்லாத இந்தியக்குடிமகனை உலக அரங்கில் தலை நிமிரச் செய்திருக்கிறது. பெரும்பாலும் இந்தியத் தேர்தல்கள் குறைப்பிரசவமாக இல்லாமல் நிலையான அரசுகளை தந்ததால் உலகில் குறிப்பிடத் தகுந்த குடியராசாக இந்தியா திகழ்கிறது. ஊழல், அரசியல் குண்டாயிசம், மதமாச்சரியம் ஆகிய குற்றங்களை தேசம் குறைத்திருக்கும் என்றால் குறைந்த பட்சம் நாட்டு நலனில் அக்கறை கொண்ட அரசியல்வாதிகளை அpதகம் உருவாக்கிவிட்டிருந்தால் 50 ஆண்டுகால மக்களாட்சி வரலாறு இரானுவ பலத்தால் மட்டுமின்றி பொருளாதார வளத்தாலும் உலகின் பெரும் வல்லரசாக உயர்ந்திருக்கும் நூற்றாண்டுகால வீடுதலைப் போராட்ட வரலாறு தேசத்திற்கு தொடர்ந்து சிறந்த தலைவர்களை உருவக்கித் தராமல் போய்விட்டது துரதிஷ்டமே! அதனால் குடியரசு ஆட்சிமுறை தொய்வின்றி தொடர்கிறது என்ற போதும் கவிஞர்கள் கோபப்படுவதை நியாயப்படுத்தும் அரசியல் நாடகங்கள் தொடர்நது அரங்கேறிவருகின்றன. ஆனாலும் ஒரு நம்மபிக்கை இருக்கிறது. பசி மயக்கத்திலிருக்கிற இந்திய வாக்காளர் திருவாளர் பொது ஜனம் ஏதேனும் ஒரு சீண்டலால் வேகம் கொண்டு விழித்திதெழுந்தார் என்றால் ஓட்டு என்ற மௌனப் புரட்சியின் மூலமாக ஆனாளப்பட்ட நேருவின் மகளைக் கூட வீட்டுக் அனுப்பி விடுவார் என்ற சரித்திரம் இங்கு சாத்தியமாகியிரக்கிறது. ஓரு சில சந்தர்ப்பங்களில் பாரதீய ஜனதா போன்ற மோடி வித்தை செய்யும் தீய சக்திகள் தலை எடுத்த போது அது ஜனநாயகத்தை ஊனப்படுத்தி விட்டது என்றால் அதற்கும் காரணம் தேசம் அவர்கள் பக்கம் சாய்ந்துவிட்டது என்பதல்ல. எதிர் சக்திகள் மீது மக்கள் வெருப்பு கொண்டிருந்ததும் சமயச் சார்பற்ற சக்திகள் பிளவு பட்டுக்கிடந்ததும் தான் காரணங்களாகும். இந்தியத் தேர்தல் களில் முஸ்லிம் வாக்காளரின் பங்கு அதிகாரத்தை தீர்மாணிக்கும் அளவு முக்கயத்துவம் பெற்றதாகும். முஸ்லிம் வாக்காளர் தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு அரசியல் தெளிவு பெற்றவராக எப்பொதும் இருந்து வந்திருக்கிறார். இந்தியாவில் நிலையான அரசுகள் அமைவதற்கு முஸ்லிம்களின் அரசியல் தெளிவும் பங்களிப்பும் முக்கியக் காரணங்களாகும் . நிரயான அரசுகள் அமைந்ததின் விளைவாகவே இன்று உலகின் தொழில் துறையை ஈர்க்கிற நாடாக இந்தியா உயர்ந்நதிருக்கிறது. முஸ்லிம் வாhக்காளர்கள் எப்போதும் தங்களது சமுதாய நலனை மட்டுமே கவனிப்பவர்கள் என்ற தப்பாணதொரு கணக்கு தொடர்நது பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதனாலேயே வாக்குவங்கி என்ற அவலட்சனமானதொரு சொற்பிரயோகம் இந்திய ஜனநாயத்தின் புத்தகத்தில் இடம் பெற்று பலவகையான அஜீரணக் கோளாறுகளுக்கு காரணமாகிவவிட்டது. உண்மையில் சமுதாய நலன் என்ற எல்லைகளை கடந்து தேச நலன் என்ற ஒரே சிந்தனைதான முஸ்லிம் வாக்காளரை இயக்கி வந்திருக்கிறது. நாட்டு மக்களுக்கு இந்த உண்மையை உரத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டிய நிர்பந்தம் இன்றைய இந்திய முஸ்லிம்களுக்கு இருக்கிறது. கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். இந்த நாட்டில் அரைச் சதவீதம் காலே அரைக்கால் சதவீதம் இருக்கும் சமூகங்கள் எல்லாம் அரசியல் களத்தில் மாநில அளவில் தேசிய அளவில் தங்களது சாதீய அமைப்புக்களை உருவாக்கி தங்களது சமுதாயத் தலைவர்களை அடையாளப் படுத்தியிருக்கிறார்கள். மிகப்பெரிய சிறுபான்மை இனமான முஸ்லிம் சமுதாயம் எத்தனை தலைவர்களை அப்படி உருவாக்கியிருக்கிறது? சதவீதக் கணக்கில் தொகுதிகள் வேண்டுமென்ற கோரிக்கையைக் கூட இந்த தேர்தலில் தான் சமுதாயம் எழுப்பியிரு;க்கிறது. அதுவும் மற்றவர்களைப் பார்த்துத்தான. நாட்டின் தென்பகுதியிலாவது சொல்லிக் கொள்ளும்படி ஓரிரு தலைவர்கள் இருக்கிறார்கள் வட பகுதியில் எவரும் இல்லை. முஸ்லீம் லீக் என்ற கட்சியை, விடுதலைப் போராட்ட வரலாற்றை நினைவூட்டும் கட்சியாகவும் தங்களின் சமய சமுதாய சமயப்பிரச்சினையை அரசாங்கத்துக்கு எடுத்துச் சொல்லும் ஒரு அமைப்பாகவும் முஸ்லிம் அங்கீகரித்திருந்தார்களே தவிர அதன் பின்னால் பெரும்பாலும் அவர்கள் அணிதிரளவில்லை என்பதை இந்த தேசத்தின் அரசியல் வரலாற்றை வாசிக்கிற எவரும் எளிதில் கனித்துக் கொள்ள முடியும். முஸலிம் லீக்கின் தலைவர்களை சமயப் பிரச்சாரகர்களாக சுவீகரித்துக் கொண்ட முஸ்லிம் சமுதாயம் அவர்களை தங்களது அரசியல் பிரிவின் தலைவர்களாக பார்க்கவில்லை. அந்த வேதனை முஸ்லிம் அரசியல் நோக்கர்களுக்கு உண்டு. தனிமனித ஒழுக்கத்திலும் சீலத்திலும் மற்ற அரசியல் வாதிகளிலிருந்து அவர்கள் பெருமளவு வேறுபட்டிருந்தார்கள். சமூகங்ககளுக்கிடையே நல்லிணக்கத்திற்காக பாடுபட்டதை தவிர விழி அசைவிலேனும் விபரீதங்களுக்கு அவர்கள் அடித்தளமிட்டதில்லை. இந்த நல்ல குணங்கள் எல்லாம் அவர்களிட்ம் இருந்ததனால்தானோ என்னவோ சமுதயம் அவர்களை அரசியல் வாதிகளாக பார்க்கவில்லை. 20 கோடி ஜனத்தொகையை கொண்ட இரண்டாவது பெரும்பான்மை சமுதாயம் தேசிய நலனோடும் மாநிலங்களின் நலனோடும் தன்னைப்பினைத்துக் கொண்டதின் விளைவாக தன் சொந்த நலனில் கோட்டை விட்டுவிட்டது என்பது தான் உண்மை. இன்றும் கூட இந்திய முஸ்லிம் வாக்காளர் முஸலிம் அமைப்புக்கள் விரல் நீட்டும் திசை நோக்கி தங்களது வாக்குகளi வீசி விடுவார்கள் என்று யாரேனும் நினைத்தால் அவர்கள் ஏமாந்து போவார்கள் என்பது தான் உண்மை. முஸ்லிம் வாக்காளருக்கு தேச நலனே பிரதானமானது. மிதிபட்டுக் கிடந்த சமூகங்கள் எல்லாம் விழிப்படைந்து கண்ணெதிரே கலெக்டர்களாகவும் காவலர்களாகவும் உயர்ந்து ஆளும் வர்க்கங்களாக அவதாரம் பெற்றுவிட்ட நிலையில் ஆண்ட வர்க்கம் என்ற பெருமையிலேயே மிதந்த கொண்டிருந்த சமதாயம் சிறைக்கூடங்களும் சில்லைறை வியாபாரங்களுமே நமது வாழ்hகவும் வரலாறகவும் ஆகிவிடுமோ என்ற அச்சத்தின் விளைவாகத்தான் இப்போது சமுதயத்தின் பெயரால் சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது. அழுகிற பிள்ளைக்குத்தான் பால் என்கிற இன்றைய அரசியல் தந்திரத்தை மிகத் தாமதமாகத்தான் அவர்கள் கையாண்டிருக்கிறார்கள். இந்த கோரிக்கைள் கூட அவர்கள் வாக்களிக்கும் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தி விடும் என்;று எதிர்பார்க்க முடியாது. இத்தனை ஆண்டுகளாய் மக்களாட்சி தத்துவத்தின் மாண்பை காத்த முஸ்லிம் குடிமக்கள் இப்போது தமிழகத்தின் 13 வது சட்டமன்றத் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்போடு தயாராக வேண்டியிருக்கிறது. இன்றைய அரசியல் மரியாதையான மனிதர்களுக்கு தகுந்ததல்ல என்றதொரு கருத்தோட்டம் பொதுவாக இந்தியச் சமூகத்தில் பரவியிரக்கிறது. அரசியல் என்பது பொய், லஞ்சம், சதி மோசடி என்பதன் மறு பெயராக ஆகிவிட்டது. முன்பெல்லாம் பொது இடங்களில் தொழுநோயாளிகள்; உள்ளே நுழையக்கூடாது என்று எழுதிவைத்திருப்பர்கள். பெருநோய்கள் ஒழிக்கப்பட்டுவிட்ட இன்றைய அறிவியல் சூழ்நிலையில் இப்பொது இங்கு அரசியல் பேசாதீர்கள் என்று எழதிவைக்கப் பட்டிருக்கிறது. தொழுநோயின் இடத்தை அரசியல் பிடித்துக் கொண்டு விட்டது. அதனால் அரசியலில் பங்கேற்பதையும் தேர்தலில் நிற்பதை ஓட்டுப் போடுவதையும் சிலர், குறிப்பாக உயர் தட்டு மக்கள் தவிர்க்க நினைக்கிறார்கள்.இந்த எண்ணம் நல்லதாக இருக்கலாம் ஆனால் அதன் விளைவு தவறானது. சமூகத்திறகு தீங்கு விளைவிக்கக் கூடியது. ஓட்டுப் போடாமல் தவிர்க்கும் சிந்தனை பொதுவாகி வருகிறது என்பதை வாக்களிப்பின் சதவீதம் உணர்த்துகிறது. கடந்த 2001 ம் ஆண்டு வாக்களித்த யார் ஆண்டால் என்ன நமக்கு நாமம் தான் என்று திரவாளர் பொது ஜனம் நினைகத் தொடங்கி விட்டதையே இது காட்டுகிறது. முஸ்லிம்கள் ஓட்டுப்போடுவதை தவிர்ககும் சிந்தனைக்கு ஆட்பட்ட விடக்சுடாது. ஏனெனில் முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஓட்டுப் போடுவது ஜனநாயக கடமை மட்டுமல்ல சமயக்கடமையுமாகும். இஸ்லாமிய கடமைகள் அனைத்தும் நன்மைய பெற்றுத்தருகிற வழிபாடுகள் என்ற அடிப்படையில் பாhத்தால் ஒட்டுப் போடுவதும் நன்மையை பெற்றுத்தருகிற ஒரு இபாதத் ஆகும்.இஸ்லாமியப்பார்வையில் ஓட்டுப் போடுவது நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதின் அந்தஸ்ததை வகிக்கிறது என பிரபல இஸ்லாமிய சட்ட அறிஞர் முப்தீ முஹம்மது ஷபீ அவருடைய திருக்குர் ஆன் விhவுரையில் குறிப்பிடுகிறார். (மஆரிபுல் குர்ஆன் பாகம்3 பக்கம் 71 வசன எண் 5.8) திருக்குர்ஆன் போதிக்கிற ஷஹாதத் (சாட்சியமளித்தல்) ஷபாஅத் (சான்றளித்தல்) வகாலத் (ஒப்புவித்தல்) அகிய மூன்று தார்மீகக் கடமைகளின் படியுமும் ஓட்டளிப்பது முஸ்லிம்களின் கடமை என அவர் குறிப்பிடுகிறார். கத்தர் பல்கலைகழகத்தின் ஷரீஆ துறை தலைவரும் பிரபல இஸ்லாமிய அறிஞருமான யூசுப் அல்கர்ழாவியும் (பிறப்பு. 1926) தேர்தல் முறையை ஒருவகை பரிந்துறையே என்றும் அது நீதிமன்றத்தின் முன் சாட்சியம் அளிப்பதை ஒத்தது என்றும் கூறுகிறார்.திருக்குர்ஆன் கூறுகிறது விசுவாசிகளே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்;. (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்;. எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்;. மேலும் நீங்கள் சாட்சியத்தை மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். (4:135) திருக்குர்ஆன் மேலும் கூறுகிறது சாட்சியத்தை மறைக்காதீர்கள். யார் சாட்சியத்தை மறைக்கிறாரோ. ஆவரது இதயம் பாவம் செய்து விட்டது. (2-283)ஒரு முஸ்லிம் தனது சமூகக் கடமையை நிறை வேற்றச் சொல்கிற இந்த வசனத்தில் தொனிக்கும் உறுதியை மீண்டும் ஒருமுறை கவனித்துப் பாருங்கள். நமது சமுதாய கடமையை புறக்கணிப்பது எத்தகைய கண்டணத்திற்குரியது என்பது புரியும்.திருக்குர்ஆனின் 5.8 வசனத்தின் பினனணியில் தேர்தலில் வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றுகிற முஸ்லிம் அதை விளையாட்டாகவோ வியாபாரமாகவோ அலட்சியமாகவோ எடுத்துக் கொள்ளக் கூடாது என்று முப்தீ முஹம்மது ஷபீ வலியுறுத்துகிறார் சமூகத்தை ஆளுகிற தகுதி படைத்தவரை தேந்தெடுக்கும் தேர்தல்களின் போது ஓட்டளிக்கும் உரிமை பெற்றவர் நீதியை நிலைநிறுத்தும் சாட்சியின் நிலைய ஒத்திருக்கிறார். ஒரு வழக்கில் சாட்சி பின்வாங்கிவிட்hலோ அல்லது பிறழ்ந்த விட்டாலோ நீதி நிலை தடுமாறிப் போய்விடுமல்லவா அது போலவே ஓட்டளிக்கும் உரிமை பெற்றவர் தனது கடமையை நிறைவேற்றாவிட்டால் தவறான மனிதர்களிடம் சமூகத்தை ஒப்புக் கொடுத்த பிழையை செய்தவிட்டவர் ஆவார்.தங்களது தேர்தல் கடமையை(வாஜிபு அல் இன்திகாபி) நிறைவேற்றாத முஸ்லிம்கள் தீயவர்கள் ஆட்சிக்கு வர அனுமதிப்பதாகவே அர்த்தம் என்று யூசுப் அல்கர்ழாவி கூறுகிறார். தேர்தலின் போது தவறான மனிதர்களை சமூகப்பொறுப்பிற்கு வர விடாமல் தடுக்கிற சந்தர்ப்பம் கிடைக்கிறது. இது நாட்ற்கு செய்கிற நன்மை மட்டுமல்ல மனிதாபிமானக்கடைமையும் கூட.பெருமானார்(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.மக்கள் அநியாயக்காரனை பார்த்து விட்டு அவன் கையையைப்பிடித்து தடுக்காவிட்டால் அதற்கான தண்டனையை அல்லாஹ் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் தருவான். (திர்மிதி - அபூதாவுத் )இஸ்லாமிய பாணி அரசியலுக்காக பாடுபடுவோர் எனச் சொல்லிக் கொள்ளுமு; சிலர் தேர்தல் நடைமுறையை எதிர்ப்பதோடு தேர்தலில் பங்கேற்பதை தவறு என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இது எதார்தத்தை புரிந்து கொள்ளாத அல்லது புரிய மறுக்கிற முயலுக்கு மூன்று கால் பிடிவாதமாகும். சமூகத்தேடு ஒரு சமதளத்தில் வாழத்தெரியாதவர்கள், தங்களை தவிர மற்றனைவரையும் சுயநலமிகளாக பார்க்கிற காரணத்தால்; இஸ்லாமிய கிலாபத் என்ற பெயரிலும் தேவையற்ற ஒரு கடிவாளச் சிந்தனையை பரப்பி வருகின்னர். மொழி , வர்க்கம் ஆகியவற்றின் பெயரால் உண்டான நக்சலீய கருத் தோட்டம் போலவே இதுவும் சமூகத்தில் அமைதியின்மையைஉண்டு பண்ணக் கூடியதே! ஆயதம் ஏந்திய அறப்போராட்டதின் தீரமிக்க அடையாளமாக கருதப்படுகிற பாலஸதீனிய ஹமாஸ் இயக்கம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறது. எகிப்தில் இஸ்லாமிய சகேதரத்துவ அமைப்பு தேர்தலில் போட்டியிடுகிறது. ஜனநாயத்தின காட்பாதர்கள் என்று சொல்லிக்கும் அதிகார வெறி பிடித்த மேற்கத்திய சக்திகளின் அடிவயிற்றில் அது அமிலத்தை கொட்டியிருக்கிறது என்றாலும் இன்றைய சூழலை எதிர் கொள்வதற்கான முதிர்ந்த நடவடிக்கையாக இதை முஸ்லிம் அரசியல் நோக்கர் கருதி பாரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.இந்தச் சூழ்நிலையில் தோதலில் பங்கேற்ற காரனத்தால் ஹமாஸ் இயக்கம் காபிர்களின் சங்கமாகிவிட்டது சிலர் விமச்சிக்கத்த் தலைப்படுவது மூளைச் சிரங்கு பிடித்த சிந்தனையின் வெளிப்பாடே தவிர வேறில்லை. இஸ்லாம் தனக்கென ஒருதனியான அரசியல் நடைமுறைய கொண்டுள்ளது. அதை மற்றதெனோடும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது தான் என்றாலும் தற்போதைய தேர்தல் பாணி ஜனநாயகம் இஸ்லாம் வலியுறுத்துகிற மதிப்பீடுகளுக்கு இசைவாக நெருங்கி வருவதாக பிரபல இஸ்லாமிய அறிஞர் யூசுப் அல்கர்ழாவி குறிப்பிடுகிறார்.(மிக் பிக்ஹி அத் தவ்லா பில் இஸ்லாம்.) பிரிட்டிஷ் காரர்களிடம் காலனிகளாக இருந்த நாடுகள் விடுதலை பெற்ற போது பிரிட்டிஷாரின் பாராளுமன்ற அமைப்பு முறையை இரவலாகப் பெற்றுக் கொண்டு அதில் பிரஞ்சுப்புரட்சியின் தத்தவங்களையும் அமெரிக்க அரசியலமைப்பின் கோட்பாடுகளையும் கலந்து ஒரு வகை பாராளுமன்ற நடைமுறையை அமுல் படுத்தத் தொடங்கினர். ஆதனால் 20 ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் பாணி பாரளுமன்ற ஆட்சி முறை சரசரவென்று பரவத் தொடங்கியது. பண்டைய மன்னராட்சி முறையின் கெடுங்கோன்மைக்கு மாற்றாக கிடைத்த சிறந்த ஏற்பாடாக உலகின் பல பாகத்து மக்களும் இதை ஏற்றுக் கொண்டனர். இதைத் தவிர அவர்களுக்கு வேறு சிறந்த ஏற்பாடுகள் எதுவும் இருக்கவில்லை. துருக்கிய கிலாபத் வீழ்ச்சியடைந்த பிறகு எகிப்து துருக்கி ஆகிய நாடுகள் வழியாக தேர்தல் பாணி அரசியல் முஸ்லிம் நாடுகளிலும் நுழையத் தொடங்கயது. அப்போது முஸ்லிம் அறிஞர்கள் சிலர் இதை இஸ்லாமிய அரசியல் முறைக்கு எதிரானது என்று கருதினர். பாரளுமன்ற அதிகார மையமானது அல்லாஹ்வுக்Nகு அதிகாரம் என்ற தத்துவத்திற்கு எதிரானது என்றும் எண்ணிக்கை அடிப்படையிலான தேர்வு முறை இஸ்லாமின் தத்துவத்திற்கு எதரிரானது என்றும் அவர்கள் வாதிட்டனர். இவர்கள் சொல்வது போல இன்றை தேர்தல் பாணி ஜனநாயத்தில் சில வபரீதங்கள் உண்டு என்பதை இதனை விரும்பும் ஆய்வாளர்களே ஒத்துக் கொள்கிறார்கள். பிரபல வரலாற்றாய்வாளர் லேன்பூல் சொல்வது போல பத்து பணக்காரர்கள் செய்கிற முடிவை பதினோறு ஏழைகளால் மாற்றிவிட முடியும் என்பது ஜனநாயத்தின் பலம் என்றால் பத்து அறிவாளிகள் செய்கிற முடிவை பதினோறு முட்டாள்களால் மாற்றிவிட முடியும் என்பது ஜனநாயகத்தின் பலவீனம். ஏண்ணிக்கை அடிப்படையிலான தேர்வு முறை இந்த பலவீனத்திற்கு காரணம். ஒரு பொறுப்பற்ற பெரும்பான்மை ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் வேட்டு வைத்து விடக் கூடும் என்ற அச்சம் கர்ழாவி போன்ற இஸ்லாமி அறிஞர்களிடம் உள்ளது போலவே பொதுவான அரசியல் ஆய்வாளர்களிடமும் உண்டு. தேர்தல் ஜனநாயகத்தின் இந்த பலவீனத்திற்கு இடம் தராத மிகச்சிறப்பான ஒரு ஜனநாயகத்திற்கு இஸ்லாம் வழிகாட்டி உள்ளது. அந்த ஜனநாயகத்தை வெற்றிகரமாக நீண்ட நெடுங்காலத்திற்கு செயல்படுத்திக் காட்டியும் இருக்கிறது. ஆனலும் சிறப்பான அந்த ஜனநாயக முறை கால ஓட்டத்திறகேற்ப நவீனப்படுத்த படாத காரணத்தாலும் சிற்சில இடங்களில் மன்னராட்சி நடைமுறைக்கு வக்காலத்தாக அது பயன்படுத்தப்பட்டதாலும் முஸ்லிம்களே கூட பெரும்பான்மையாக இன்றைய தேர்தல் பாணி அரசியலுக்கு திரும்ப நேரிட்டது. இஸ்லாமிய அரசு முறையும் தேர்தல் ஜனநாய அரசு முறையும் மக்கள் விரும்பும் தலைவரை ஏற்கின்றன என்ற அடிப்படையில்; ஒன்று படுவதால் தற்கால தோதல் பாணி அரசு முறையை பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் கையாண்டு வருகின்றனர். 19 ம் நூற்றாண்டிலிருந்து சந்தர்ப் சூழ்நிலைகள் காரணமாக முஸ்லிம் உலகத்திலும் தேர்தல் அரசியல் வெளிப்படத்தொடங்கியது.இப்போது துருக்கி இரான் எகிப்து ஜோர்டான் லெபனான் மெராக்கோ குவைத் எமன் பாகிஸ்தான் பங்களாதேஷ் மலேஷியா செனகல் நைஜீரியா போன்ற நாடுகளில் தேர்தல் பானி ஜனநாக நடைமுறை வழக்கில் இருக்கிறது. இந்தியா தொன்னாப்ரிக்கா ஐரோப்பா வடஅமெரிக்கா ஆஸ்திரேலியா போன்ற முஸ்லிம்கள் பெரும் சிறுபான்மையினராக வாழ்கிற தேசங்களிலும் தேர்தல் அரசியலில் முஸ்லிம்கள் பங்கேற்று வருகிறார்கள. முஸ்லிம் உலகின் பெரும் பகுதியில் இந்நடைமுறையை தழுவியோ அல்லது இதற்க ஆதரவாகவோ முஸ்லிம்கள் செயல்பட்டு வருகிறார்கள். இதற்கு முக்கியக காரணம் இந்த பாணி அரசியல் சிறந்தது என்பது அல்ல. இஸ்லாமிய அரசியலமைப்புக்கு அடுதபடியாக இதுவே சிறப்பானது என்பதாலும் இதை விடுத்தால் இன்றைய சூழலில் சர்வாதிகாரம் தலை தூக்கும் ஆபத்து நிகழும் என்பதாலுமே இந்த நடைமுறைக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.தேர்தல் பாணி சுதந்திரமான அரசு முறை, சுதந்திரத்தையும் மனித உரிமைககளையும் பேணுவதோடு மக்கள் தங்கள் தலைவரை சுதந்திரமாக தேர்வு செய்யும் அமைப்பையும், அதிகார மாற்றத்திற்கான சுமூகமான ஏற்பாட்டையும் வழங்குகிற தென்றால் இந்த முறையை எதிர்க்க முஸ்லிம்களிடம் இஸ்லாமிய அடிப்படையில் எந்த நியாயமும் இல்லை என்று சொல்லுகிற நிலைக்கு துனீசிய முஸ்லிம்களின் தலைவர் ரஷீத் கானூஷி ஆளாகியிருக்கிறார் என்றால் சம காலத்தில் நிலவும் பிரச்சினை எத்தகையது என்பதை புரிந்து கொள்ள வேண்டிய கடமை இஸ்லாமிய அறிஞர்களுக்கு இருக்கிறது. சையத் குதுப் ஹஸனுல் பன்னா ஆகியோர் முன்னிருத்திய கிலாபத்திற்கான தளங்களிலே கூட இப்போது தேர்தல் பாணி ஜனநாயகம் நiமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த ஜனநாயக அமைப்புமுறை இஸ்லாமிய ஜனநாயக அமைப்பு முறைக்கு நெருக்கமானதாக இருப்பதால் இதை இஸ்லாமிய மயமாக்கும் முயற்சியில் இஸ்லாமிய நாடுகளின் அரசுத்தலைவர் ஒரு புறம் முயற்சித்து வருவது கவனிக்கத்தக்ககது. இரானிய அதிபர் முஹம்மது கதாமி பின்வருமாறு கூறுயிருக்கிறார். நடைமுறையில் உள்ள ஜனநாயகம் ஒரே அமைப்பு முறையை தான் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. சுதந்திர அமைப்பு முறை, சோஷலிஸ அமைப்பு முறை, சமய அமைப்பு முறை ஆகிய மூன்று முறைகளை பின்பற்றலாம். நாங்கள் மூன்றாவது முறையை தேர்வு செய்கிறோம் என்று கதாமி கூறினார்.இரான், அது தேர்ந்தெடுத்த வழிமுறையை சிறப்பாக நடைமுறைப் படுத்திக் காட்டிவிடடால் அந்த வழியே சரியானதென்று அனைவரும் அங்கீகரிக்கிற சந்தர்ப்பம் விரைவில் ஏற்படும். ஏனெனில் கதாமி சொல்வது போல இன்றைய உலகக் குடியரசுகள் ஆன்மீக வெற்றிடத்தால் பெரிதும் பாதிக்க்ப்பட்டுள்ளன.( 'வழனயல றழசடன னநஅழஉசயஉநைள யசந ளரககநசiபெ கசழஅ ய அயதழச எயஉரரஅஇ றாiஉh ளை வாந எயஉரரஅ ழக ளிசைவைரயடவைலஇ' )எனவே தான் கர்ழாவி போன்ற அறிஞர்கள் தேர்தல் பாணி ஜனநாகத்தில் உள்ள குறைபாட்டை ஒத்துக் கொண்ட போதும் சமயச்சார்பற்ற ஜனநாகத்திற்கு இடையூறு செய்வதை தவிர்ககுமாறு இஸ்லாமிய அறிஞர்களை கேட்டுக் கொண்டுள்ளார். உலக அரங்கில் முன்னேறிய இஸ்லாமிய நாடுகள் பலவும் சாத்தியப்பட்ட தொரு சரியான திசைiயில் நடைபோடத் தொடங்கியிருக்கும் போது, ஆயதம் ஏந்திய குழுக்கள் கூட ஓட்டுப் பாதைiயில் ஒய்யாரமாய் நடைபேடத் தொடங்கியிருக்கிற போது, ஒன்றிரண்டு நிகழ்வுகளைத்தவிர்த்து விட்டுப் பார்த்தால் மக்கள் நிம்மதியாகவும் மரியதையுடனும் உரிமைகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு சிறந்த குடியரசு நாட்டில் கிலாபத்தை உருவாக்குதல் என்ற போர்வையில் நடைபெற்று வருகிற தேவையற்ற பிரச்சாரத்திற்கு செவிசாய்ப்பது மார்க்கப்பற்றோ அறிவுடமையோ அல்ல. இது இளைஞர்களின் முளையிலிருக்கிற அமைதியை கலைத்து கலகப் பேய்பிடிக்ச் செய்கிற நடவடிக்கையே தவிர வேறில்லை. லா ஹுக்ம இல்லா லில்லாஹ் ஆட்சியதிகாரம் அல்லாஹ்விற்கே உரியது என்ற தொன்மையான வரலாற்று வாசகத்தை சிலர் உரத்து ஒலித்த போதெல்லாம் அது அசத்தியத்தின் கூக்குரலாகத்தான் ஒலித்தது என்பதை இஸ்லாமிய வரலாற்றை ஆழ்ந்து படிக்கிற எவரும் விளங்கிக் கொள்ள முடியும். இந்த வாசகம், ஒரு வஞ்சக வலையை சமூகத்தில் வீசிய போது ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள் மிகச்சரியாக அதை கணடுபிடித்து சமுதயத்திறகு அடையாளப்படுத்தினார்கள். காரிஜிய்யா என்ற கலகப்படையினர் முதன் முதலாக இந்தக் கோஷத்தை எழுப்பிய போது ஹஜ்ரத் (அலி) அவர்கள் வார்ததை நல்ல வார்ததை தான். ஆனால் தீய நோக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது (கலிமது ஹக்கின் உரீத பிஹல் பாதில்) என்று சொன்னார்கள் என வரலாற்று எழுத்தாளர் முஹ்யித்தீன் ஹய்யாத் குறிப்பிட்டுள்ளார். அதே போன்றதோரு தவறானதொரு கருத்தோட்டத்தில் இப்போதும் இந்த வாசகம் பயன்படுத்தப்படுகிறது. முஸ்லிம்கள், குறிப்பாக இளைஞர்கள் எச்சரிக்கை அடைய வேண்டிய விசயம் இது. இந்தியா பல்வேறு பட்ட சமய மக்கள் தங்கள் சமய நம்பிக்கை களுடன் மகிழ்சிகரமாக வாழ்ந்த வருகிற தேசம். முன்னேறிய தேசங்களில் பார்க்க முடியாத அமைதியும் மகிழ்சியும் நமது நாட்டில் பாரம்பரியமாக கிடைத்து வருகிறது. இது போன்றதொரு தேசத்தில் தஃவா நடைமுறைதான் மக்களுக்கு மார்க்கத்தை கொண்டு சேர்க்க் கூடியது. தன்னுடைய சித்தாந்தத்தில் சரியான பிடிப்புள்ள எவரும் தஃவா வழியையே உண்மையான வெற்றிக்கான வழியாக காண்பார்கள. பெருமானார்(ஸல்) அவர்களுக்கும் அவருடைய தோழர்களுக்கும் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் வழியாக அல்லாஹ் இந்த வெற்றியின் வழியை கற்பித்தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டு;ம். முறையான தஃவாவுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடைக்கிற தேசத்தில் பொருத்தமற்ற சித்தாந்தங்களை செயல்படுத்தப் பார்ப்பது எதார்ததை விளங்கிக் கொள்ளாமல் மார்க்கத்திற்கும் மனித குலத்திற்கும் செய்கிற தீமையாகவே அமையும். பிரச்சினைகள் இல்லாத இடம் சொர்க்கம் மட்டுமே! பூமியில் அப்படி ஒரு இடம் கிடையாது. பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்கள் நம்முடைய நாட்டை பொறுத்தவரை பெரும்பாலும் அரசியில் வாதிகளே!திருட்டுக் குற்றத்திற்காக ஒரு ஆசாமியை சிறையில் அடைத்தார்கள். அங்கேயும் அவன் சும்மா இருக்கவில்லை. சிறைக்கூடத்தின் கம்பிகளையே திருடிவிட்டான். அவனை எந்த செல்லில் போடுவது ஜெயிலர் யோசித்தக் கொண்டிருந்த போது ஒரு அனுபவ சாலி சார் இவனை சட்டசபையில் போடுங்கள் என்று சொன்னாராம். இதைவிடவும் மோசமான வசவுகளுககு முழு இலக்கணமாக இருக்கிற இன்றைய அரசியல் வாதிகளில்; யார் குறைந்த அளவில் பிரச்சனைக் குறியவர்கள் என்பதை கண்டறிந்து அவர்களிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு மற்றெவர்களையும் விட அதிகம் முஸ்லிம்களுடையது. இரண்டு தீமைகளுக்கு இடையே எதையேனும் ஒன்றை தேர்வு செய்தாக வேண்டிய சந்தர்ப்பம் நேரிடும் போது குறைவான பாதிப்பை உடைய தீமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கற்றுத்தந்திருக்கிறது. அந்த வழிகாதட்டுதலை மனதில் நிறுத்தி முஸ்லிம்கள் நாட்டிற்காற்றும் கடமையினை நலமுடனே செய்து முடிக்க வேண்டும். கடந்த மழைக் காலத்தை எண்ணிப் பார்க்கிற சென்னை வாசிகளுக்கும் அதில் அரசயில் படகோட்டிய அரசியல் வாதிகளை எண்ணிப்பார்க்கிற தமிழக் மக்களுக்கும் இந்தப் பிராhத்தனை மிகவும் உதவிகரமானது. இறைவா! எங்களது பிழைகள் காரணமாக உனக்கு பயப்படாத, இரக்கம் காட்டாத ஆட்சியாளரை எங்கள் மீது ஏவிவிடாதே!
No comments:
Post a Comment