Saturday, December 1, 2007

இந்தியாடுடே வக்கிர வியாபாபரம்

குஷ்பு என்றால் பாரசீக மொழியில் நறுமணம் என்று பொருள்.இன்று அது தமிழில் பத்பூ (நாற்றமடிக்கும் பொருள்) ஆகிவிட்டது. ஆரோக்கியாவின் ஜாக்பாட்டில் வண்ணவண்ணமான வலை ஜாக்கெட்டுகளில் பெண்களை ஈர்த்த குஷ்பு இந்தியா டுடேவின் தந்திர வலையில் சிக்கி எப்போதும் போல உணாச்சி வசப்பட்டதில் சானி பக்கெட்டுகளால் அர்ச்சிக்கப்படும் நிலைக்கு ஆளாகிவிட்டார். ஆரோக்கியமற்ற அரசியலால் மீடியாக்களின் முன் கைகளைப் பொத்திப்பொத்தி கண்ணீர் விடும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஐயன் வள்ளுவன் வாயில் சர்க்கரை அள்ளிப்போட வேண்டும். நாகாக்க காவாக்கால் சோகாப்பர் என்பது அட்சரம் பிசகாமல் சத்தியமாகிவட்டது. ஒரு காலத்தில் குஷ்புவை கோயில் கட்டி கொண்டாடிய தமிழர்கள் இன்று அவருக்கு விளக்குமாறு அர்ச்சணை செய்ய தயாராகிவிட்டார்கள். தங்கர்பச்சானின் வாhத்தைககளை கேட்டு குஷ்பு உணர்ச்சி வசப் பட்டாரென்றால் குஷ்புவின் வார்தைகளில் தமிழகம் உணர்ச்சி வசப்பட்டு விட்டது. போலீஸ் புகழ் ஜெயலட்சுமி கூட கற்பு குறித்து குஷ்பு வெளியிட்ட கருத்துக்கள் மிகுந்த வேதனை அளித்ததாக ஜுனியர் விகடனிடம் தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணிடம் கற்பொழகக்கம் தவறிப்போனால் சமூகம் எவ்வளவு சீரழிந்து போகும் என்பதற்கு தானே ஒரு சாட்சி என்றும் அதில் அவர் கூறியுள்ளார். தமிழ் நடிகைகளில் குஷ்பு செலூலாய்ட் பொம்மையாக மட்டும் இல்லாமல் கருத்துப்பேசுமளவு அறிவுடையவர். பல பேட்டிகளிலும் அவரது கருத்துக்கள் தெளிவாகவும் நறுக்கென்றும் இருக்கும். மும்பையை பிறப்பிடமாக கொண்ட போதும் தமிழ் நாட்டிற்கு வந்தபின் தமிழோடும் தமிழக மக்களோடும் மிகவும் நெருக்கமாக ஒட்டிக் கொண்டவர். மேடைகளில் தைரியமாகவும் தெளிவாகவும் பிள்ளைத் தமிழ் பேசுவார். ஓரளவு வெளிப்படையானவரும் கூட. அவரது ஆரம்ப நாட்களில் சினிமா நடிகைகளுக்கான தடுமாற்றம் இருந்த போதும் திபை;பட இயக்குனர் சுந்தரை கைப்பிடித்த பிறகு தமிழகத்தின் மருமகளாக வடிவம் பெற்றார். அனந்த விகடனுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது போல அதன்பிறகு தன்னை ஒரு தாயாகவே அடையாளப் படுத்த மயற்சித்தார். அதற்காகவே விழாக்களில் கலந்து கொள்ளும் போது குழந்தைகளுடனேயே கலந்து கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்ததார். சின்னத்திரையிலலும் தனது திறமையை நிரூபித்து மக்களின் குறிப்பாக பெண்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தார். அரசியலில் அடியெடுத்து வைத்தால் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அடுத்த படியாக வெற்றி பெறும் தமிழ் நடிகையாக இருப்பார் என்று பேசப்பட்டது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அ தி மு க சார்பில் நிறுத்தப்படும் பிரதான வேட்பாளராக இருப்பார் என்றும் பேசப்ட்டு வந்தது. அத்தனையிலும் மொத்தமாக மண்ணை அள்ளிப்போட்டார் இந்திய டுடேயின் நிருபர். கற்பு குறித்தும் கற்பொழுக்கம் மீறிய நடவடிக்கைகள் குறித்தும் ஒரு ஆய்வு நடத்தியிருபபதாக சொல்லிக் கொண்டு இந்தியாடுடே தன்னை அனுகிய போதே அதன் எண்ண ஓட்டத்தை குஷ்பு அறிந்து கொண்டிருக்க வேண்டும். அவரை வம்பில் இழுத்து விடுவதும் அவரது கடந்த கால வரலாற்றை வாசகனின் எண்ணத்தில் நிழலாட விடுவதும் தான் அதனுடைய நோக்கம் என்பதை அவர் உணரத்தவறிவிட்டார்.செக்ஸ் பற்றிய கருத்துக் கணிப்பு நடத்தப்படுவது நல்லது தான் என்று ஆதிரிக்கிற பிரபல செக்ஸாலஜிஸ்ட் டாக்கடர் நாராயண ரெட்டி இது குறித்து கருத்து கேட்பதென்றால் செக்ஸாலஜி சம்பத்தப்பட்டவர்களிடமோ அல்லது ஒரு சமூகவியலாரிடமோ கேட்டிருக்க வேண்டும் என்றார். குஷ்புவிடம் கேட்டது பத்ரிகைக்கு கவர்சிசியை கூட்ட இந்தியா டுடே மேற்கொண்ட தந்திரமே. குஷ்பு அதை புரிந்து கொள்ளாமல் எப்போதும் போல சற்று அதிகம் அலட்டிக் கொள்ளும் அவரது இயல்புப் படியோ அல்லது அவர்பிறந்த இடமான மும்பையின் உயர்மட்டக் கலாச்சாரத்தை ஒட்டியோ ஆபத்தான கருத்துக்களை மிகச் சாதாரணமாக கூறிவிட்டார். பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுபட வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித்தனமையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான் என அவர் பேசிய கருத்துக்கள் ஒழுக்க வரையரைகளை பெரிதெனப் போற்றும் இந்தியக்கலாச்சாரத்தின் மீது அக்கறை உள்ள எவரும் ஜீரனிக்க்கூடியது அல்ல. இந்த வார்த்தைகளில் குஷ்புவின் தமிழகத்து மருமகள் இமேஜ் பலத்த அடிவாங்கிவிட்டது.கவனிக்கவும் . அதே இதழில்; மனநல மருத்துவர் டாக்கடர் ஷாலினி இதே விசயம் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் மிக நேர்த்தியாகவும் பக்குவமாககும் அமைந்திருந்தது. ஓரு நாள் காலை நேரத்தில் ரிமோட்டில் தொகை;காட்சியை நெருடிக் கொண்டிருந்த போது எதேச்சையாக ஜெயா டிவியின் காலை மலர் நிகழ்சியில் ஒரு இளவயது பெண் சாதாரணமாக ஒரு சட்டையும் பேண்டும் அணிந்து பேட்டியளித்த்துக் கொண்டிருந்ததை பார்க்க நேர்ந்தது. ஏதோ ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியாவுக்கு வந்து தனது செல்வாக்கின் புண்ணியத்தால் டி வி யில் முகம் காட்டுவதாக நினைத்தேன். ஆனால் அவரது தங்குதடையற்ற வெகு இயல்பான பேச்சும் அதில் தொனித்த அர்த்தமும் ஆழமும்; எவரையும் ஈர்க்கும் விதத்தில் இருந்தது. எனக்கு தெரிந்து நான் காலை நேரத்தில் பார்த்த முழமையான பேட்டி அது. அந்த ஒரு மணி நேரம் ரிமோட்டுக்கு விடுதலை தான். மக்களின் மனநலம் சார்ந்த பல விசயங்களை அவர் விவரித்தார். ஒரு பேச்சாளனாக எனக்கு அதில் நிறைய விசயங்கள் கிடைத்தன. இறுதியாக குடும்ப விவகாரங்கள் பலவற்றுக்கும் தீர்வாக அவர் ஒரு விசயம் சொன்னார். அது மிக முக்கியமானது. இன்றைய சமூக சூழலில் வயது வந்து விட்ட காரணத்திற்காக சிலர் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆசைக்காக சிலர் திருமணம் செய்து கொள்கிறார்கள் இவர்கள் யாருமே திருமணத்தின் நோக்கத்தை சரியாக புரிந்து கொள்வதில்லை. திருமணம் என்பது வயதிற்காகவோ ஆசைக்காகவோ செய்யப்படுவது அல்ல. மனித சமூகத்தின் அடுத்த தலைமுறையை பாதுகாப்பாக உருவாக்குவதற்காகவே செய்யப்பகிறது. இந்த உண்மையi இன்றைய இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் புரிய வைக்க வேண்டும் என்றார். இதை அவர்கள் புரிந்து கொண்டாலே பல பிரச்சினைகள் ஏற்டாது என்று தெரிவித்தார். அந்த கணத்தில் மனதில் எழுதி எடுத்துக் கொண்ட அந்த வாசகங்களை பல கூட்டங்களில் நான் பேசியது உண்டு. அந்த அறிமுகத்தோடு இந்தியாடுடேவின் விருந்தினர் பக்கத்தில் அவரும் எழுதியிருந்ததை பார்த்தபோது மிகுந்த ஆவலோடு பார்வைழய ஓடவிட்டேன். நம்பிக்கை வீண் போகவில்லை. அவரிடம் வாய் வழியாக பேட்டிகண்டவர் குண்டக்க மண்டக்க வேலை எதையும் செய்யவில்லை. டாக்டர் ஷாலினி அவரது பேட்டியில் திருமணத்திற்கு முன் செக்ஸில் ஆர்வம் காட்டாமல் இருப்பது ஒருவகையில் நல்ல விசயம்தான். எப்போதுமே தேவையில்லாத ரிஸ்க் எடுப்பது ஆபாத்தான் சங்கதி என்று கூறியிருந்தார்.ஒரு சமூக நல ஆர்வலரின் கண்ணோட்டம் ஒரு நடிகையின் கண்ணோட்டத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது என்தற்கு ஒரு சிறந்த உதாரணம் அது. டாக்டர் ஷாலினியின் கருத்து சமூக அக்கறை கொண்டது. இளைஞிகளுக்கு நல்வழிகாட்டக் கூடியது. குஷபுவின் கருத்தோ இளைஞிகiளுக்கு தவறான் வழிகாட்டுதலையுமு; துணிச்சலையும் தரக்கூடியது. ஓரு நண்பர் சொன்னார் : குஷ்புவுக்கு கிடைத்தது போல எல்லோருக்கும் பெருந்தன்மையான கணவர்கள் கிடைத்துவிடவார்களா என்ன? குஷ்பு யோசிக்க வேண்டிய விசயம் அது. இந்தியாடுடேவிடம் மருந்துக்காவது சமூக அக்கறை இரந்திருக்கும் எனில் 24 சதவீதம் பெண்கள் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் உறவு கொண்டிருந்தாக குறிப்பிடும் இந்தியா டுடே அத்தகைய பெண்களுக்கு அதனால் ஏதேனும் பிர்சசினை ஏற்பட்டதா என்பதையும், பிரச்சினை ஏற்பட்டிருந்தது எனில் அது எத்தகைய பிரச்சினை என்பதையும் கேட்டு அந்தப்பிரச்சினைகளுக்கு அவர்களால் தீர்வு காண முடிந்ததா என்பதையும், தொடர்ந்து எத்தகைய தொழில் ஈடுபட நேர்ந்தது என்ற விபரத்தையும்; வெளியிட்டிருக்க வேண்டும். குறைந்த பட்சம் அந்த இதழில் வெளிவந்த மனநல மரத்துவர் டாக்டர் ஷாலினியின் கருத்தையாவது ஹைலைட் செய்திருக்க வேண்டும்.ஆனால் இரண்டு கருத்துக்களிலிலும் இந்திய டுடேவிற்க்கு பிடித்தமானது குஷ்புவின் கருத்தே!ஏனெனில் அது தான் அவாகளது விற்பனைக்கு சவுகரியமானது.குஷ்புவின் கருத்து சர்ச்iயானவுடன் பத்ரிகைகள் தேடத் தொடங்கியது யாரைத் தெரியுமா? நடிகர் பிரபுவை. வெளிநாட்டிலிருந்து அப்பொது தான் வந்திறங்கிய அவரை தேடிப்பிடித்து குஷ்பு வின் கருத்து குறித்த விமர்ச்சனத்தை கேட்டார்கள். அவர் அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி விட்டார். அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னது தினசரிப்பத்திரிகைகளில் போட்டாவுடன் பிரசுரமாகியிருந்தது. எந்த திட்டத்தோடு குஷ்புவை இந்தியா டுடே அணுகிதோ அந்த திட்டம் வெற்றியடைந்துவிட்டது. இது விசயத்தில் அதிகம் அலட்டிக் கொள்ளாதவராக தன்னைக்காட்டிக்கொண்ட தங்கர் பச்சான் கூட அது அவரது சொந்த அனுபவமா இருக்கலாம் என்று கருத்து வெனளியிட்டார். பலரும் நினை;பபது போல இந்த வார்த்தைகளில் வெளிப்படுவது தங்கர் பச்hனின் வெற்றிச் சிரிப்பு அல்ல. வஞ்சக ரேகைகள் ஓடிய இந்தியா டுடேவின் வெற்றிமுகமே அதில் புன்னகை;கிறது. இந்தியா டுடே இதழ் வண்ணமயமான வழவழப்பான தாளில் நேர்த்தியான அச்சமைப்பில் தமிழில வெளிவந்த போது தமிழர்களுக்கு வாசிக்கக் கிடைக்காத விசயங்களை நேசிக்கும் எழுத்து நடையில் எடுத்துரைக்கும் என்ற கனவு எனக்கும் இருந்தது.பல பேராக இணைந்து தினமணி வாங்கிப்படித்த காலத்தில் நான் தனியாளாக இந்தியாடுடேவை காசு கொடுத்து வாங்கிப்படித்து வந்தேன். ஜெனரல் சுந்தர்ஜீயின் பரபரப்பான பேட்டியை வெளியிட்டதன் மூலமாக என்னை அது ஈர்ததிருந்தது. தேசத்தின் மீதும் சமூகத்தின் அக்கறை கொண்ட ஒரு பொறுப்பான பத்ரிகையை வாசிக்கிறோம் என்ற பெருமை எனக்கு இருந்தது. சினிமாக்களில் ஆபாசம் என்ற என்ற தலைப்பில் ஒரு சிறப்பிதழை அது வெளியிடும் வரை. அக்கட்டுரைக்கு சான்றாக அது வெளியிட்டிருந்த புகைப்படங்கள் எனது நம்பிக்iகையிலும் பெறுமையிலும் மண்ணை அள்ளிப் போட்டது. சரி இன்றை போட்டி உலகில் இப்படியெல்லாம் செய்தால் தான் பத்ரிகையை விற்க முடியும் ஒன்று ஒருவகையாக மனதை தேற்றிக் கொண்ட போது அதற்கடுத்த இதழில் முன்னதைவிட கடுமையான அதிர்சி காத்திருந்தது. வாசகர்கள் பலர் அதிர்ச்சியடைந்து எழுதிய கடிதங்களுக்கு பதிலளித்து அதன் அப்போதைய ஆசிரியர் எழுதிய தலையங்கம் படு அயோக்கியத்தனமானது. வாசகர்களில் சிலர் தங்களது அதிர்ச்சியை தெரிவித்துள்ளார்கள் ஆனாலும் பத்ரிகை முழவதுமாக விற்றுத்தீர்ந்து விட்டது என்று குறிப்பிட்டிருந்தார். எந்த பத்திரியாளரும் தர்மத்திற்காக பத்ரிகை நடத்த மாட்டார். விறபணையை அதிகரிக்க வேண்டும் என்பது பேனாவுக்கு மையைப் போல அவசியமான ஒன்று. அதற்காக விதவிதமான உத்திகளை கையாள வேண்டியுள்ளது என்பதும் உண்மைதான்.அனால் அதற்காக ஆபாசப்புகைப்படங்களை அச்சிலேற்றுவதும் அதன் மூலம் வாசகனை சூடேற்றி காசு பார்ப்பதும் மிக கீழ்த்தரமான மலிவான உத்தியல்லவா அத்தகைய கீழ்தரமான உத்தியை பயன்படத்திய பிறகு அதற்காக வருத்தப்படாமல் அதையே நமுட்டுச்சிரிப்போடு பெருமைப்பட்டுக் கொள்கிறதே அது கல்லெறி தண்டனை வழங்குமளவு கொடிய குற்றம் அல்லாவா? ஆனால் எந்தவித வெட்கமும் இன்றி ஆண்டுதோறும் இப்படி செக்ஸ் சிறப்பிதழ்களை வெளியிட்டு இந்தியாடுடே வின் அந்தராத்மா மகிழ்ச்சிக்கிளிப்போடு கொண்டாடியது.இந்த ஆண்டு தொடர்ந்து பல செக்ஸ் சிறப்பிதழ்களை வெளியிட்டது. அதில் பிரதானமானது செப்டம்பர் 28 தேதியிட்ட இதழ். அதன் அட்டைப்படமே நீலப்பட சீடிக்களின் அட்டைப்பட ரேஞ்சில் இருந்தது. தலைப்பு: மணமாகாத இளம்பெண்களின் செக்ஸ். ஊள்ளே மணமகாத இளம் பெண்களிடம் யாரும் எளிதில் கேட்டுவிட முடியாத கேள்விகளை சர்வசாதாரணமாக கேட்டு நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தது. பல கேள்விகள் ஆபாசப் புகைப்படங்களை விட அதிர்ச்சிகரமானவை.நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் சற்றேறக்குறை அதன் சரிபாதியை எட்டிப்பிடித்திருப்பவர்கள் பெண்கள். அப்படினால் சுமார் 50 கோடிப் பெண்கள் இந்தியாவில் இருக்கிறாhகள். இந்தியா டுடே மனமாகாத பெண்களின் செக்ஸ் குறித்து ஆய்வு நடத்தியது வெறும் 2035 பெண்களிடம் மட்டுமே. அதுவும் நகரப் பகுதிகளில் மட்டுமே. அதுவும் குஷ்பு போன்று அது தேர்ந்தெடுத்த பெண்களிடம் மட்டுமே. அப்படித் தேர்ந்தெடுத்து கருத்துச் சொன்னவர்களில் பெரும்பாலோர் இந்தியா டுடேவின் எண்ண ஓட்த்திற்கு எதிராகவே கருத்து தெரிவித்திருந்hர்கள். உதாரணமாக படித்த ஆண்கள் தாங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்கள் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார்கள் என்ற குஷ்புவின் கருத்தை வெளியிட்;ட அதே பக்கத்தில் 82 சதவீத ஆண்கள் திருமணமாகும் போது பெண்ணின் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்று கருத்துச் சொல்லியுள்ளனர். வேறு தொடர்பில் இருந்தவரை திருமணம் செய்வீர்களா என்ற கௌ;விக்கு 71 சதவீதம் மக்கள் மாட்டோம் என்று கருத்துத் தொரிவித்திருக்கிறார்கள். இது இந்தியா டுடே குழமத்தினரின் வாழ்வோட்த்திற்கும் சமுகத்தின் கருத்தோட்டத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை அப்பட்டமாக வெளிப்படுத்தி விட்டது. திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்தது உண்டா என்ற கேள்விக்கு 76 சதவீதம் பெண்கள் இல்லை என்றே பதிலளித்திருக்கிறார்கள். 24 சதவீதம் பேர் ஆம் என்று பதிலளித்திருக்கிறார்கள். அந்தரங்க மான இந்தக் கேள்விக்கு நான்கில் ஒருவர் செக்ஸ் உறவு கொண்டதாக ஒப்புக்கொண்டிருப்பது திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு சகஜமாகி வருகிறது என்பதை காட்டுதாக இந்தியா டுடே வாதிடுகிறது. ஆனால் ஒர விசயத்தை வசதியாக மறந்து விட்டார்கள் தெருவில் போவோர் வரவோர் எல்லோரிடமுமு; இத்தைகயை கேள்வியை கேட்கவில்லை. ஆட்களை தோந்தெடுத்து கோள்வி கேட்டதாக இந்தியாடுடே கூறுகிறது.திருமணம் ஆகாத பெண்களிடம் சென்று, வாய்வழியாக செக்ஸ் வைத்துக் கொள்வதை விரம்புவீர்களா என்று; கேள்வி கேட்டு அதற்கு விடை பெற வேண்டு மெனில் எத்தகைய பெண்களை அவர்கள் தேர்ந்தெடுத்து இந்த ஆய்வை நடத்தியிருக்க முடியும் என்பது மில்லியன் டாலர் பெருமானமுள்ள கேள்வியாகும். மரியாதையான பெண்களிடம் இத்தைகைய கேள்விகளை கேட்டிருந்தால் கேள்வி கேட்டவர் எதனால் அடிவாங்கியிருப்பார்? என்பது யூகிக்க முடியாத ஒரு விசயமல்ல. டாக்டர் நாராயண ரெட்டி சொல்கிறாh:ஒரு சர்வேயில் சொல்லப்படும் கருத்துக்கள் ஒட்டுமொத்த மக்களின் கருத்தோ உண்மையின் பிரதிபலிப்போ அல்ல. இரு நூறு பேரிடம் கேள்வி கேட்டு அதற்கு அத்தனை பேருமே ஆம் என்று பதில் சொல்லியிருந்தாலும் கூட அதை ஒட்டு மொத்த மக்களின் கருத்து என்று சொல்லிவிட முடியாது என்கிறார் ஆனால் இந்தியப் பெண்களில் நான்கில் ஒருவர் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்திருக்கிறார்கள் என்ற முதன்மையான பிரச்சாரம் அந்த இதழ் நெடுகிலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. உண்மையில் இது எதார்தத்தின் பிரதிபலிப்பது அல்ல. அவர்களது ஆசையின் வெளிப்பாடு. சமுதாயம் எப்படி மாறினால் சவுகரியமாக இருக்கும் என்று ஆசைப்படுகிறார்களோ அந்த ஆசையின் வெளிப்பாடு.அந்த இதழிலுள்ள எந்த ஒரு கட்டுரையும் முழுமையாக எவரும் புரிந்து கொள்ள முடியாத மர்ம பாஷையில் இரந்தது. ஓட்டுமொத்தத்தில் கட்டுரையாளர்களின் கருத்து பெண்கள் கட்டுப்பெட்டித்தனமாக இல்லை. சுதந்திரமான உறவுகளுக்கு தயாராகிவிட்டார்கள் என்று திரும்பத்திரும்ப கூறப்பட்டிருந்தது. கணக்கெடுப்புத் தகவல்களோ அல்லது அவர்கள் மேற்கோள் காட்டும் நபர்களோ அவர்களுக்கு சாதாகமாக இல்லாத போதும், புகைப்படங்கள் மற்றும் கனக்கெடுப்பில்; பயன்படத்தியதாக சொல்லும் வாசகங்களைப் போட்டு தமிழ்வாசகனின் நாவில் எச்சில் ஊற வைக்க முயறசித்திருக்கிறார்கள் என்பதே உண்மை. அந்தப்புத்தகம் பெண்கள் குறித்து பேசினாலும்; அது சபலிஸ்ட்டுகளான ஆண்வாசகர்களை குறிவைத்Nது தயாரிக்கப்பட்டிருந்து என்பது நூற்றுக்கு நூறு உண்மை. செக்ஸ் ஆய்வும் அதன் முடிவுகளும் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். அது கண்க்கில் எடுத்துக் கொள்த்தக்கக்க விசயமே அல்ல. உள்ளே இருந்த புகைப்படங்களோ மிக ஆபாசமனாவை. அது மரியாதையான எந்த வீட்டின் வரவேற்பரைக்கும் தகுதியானது அல்ல. அந்த புகைப்படங்கள் எதுவும் சமூகத்தில் ஏதோ ஒரு வகையில் எங்கோ ஒரு இடத்தில் நடந்தது அல்ல. இந்தியா டுடே கனவான்களின் கற்பனைக்கேற்ப விஷேச மாடல்களை கொண்டு அந்த இதழுக்காகவே பிரத்தியோகமாக படம்பிடிக்கப்பட்டவை. இது யோக்கியமான செயல் என்றால் இவ்வளவு அருமையாக(?) புகைப்படம் எடுத்தவர்களை பெரிய எழுத்துக்களில் பெருமைப்படுத்தியிருக்க வேண்டுமே? அப்படிச் செய்யவில்லை. கண்ணுக்கு சட்டென்று புலப்படாத ஒரு மூளையில் சிறு எழுத்துக்களில் இந்தச் செய்தி பிரசுரிக்கப் பட்டிருந்தது. ப்ரதீப் சிங் எடுத்த எல்லா புகைப்படங்களும் புரொஃபசனல் மாடல்களை கொண்டு எடுக்கப்பட்டது என்ற மிக்சிறிய எழத்துக்களில வஞ்சக ரேகை ஓடும் அதன் கோர முகம் புதைந்து கிடந்தது. அட்டகாசமான அந்தப் புகைப்படங்களால் இந்தியாவில் செக்ஸ் மலினப்பட்டுவிட்டதான ஒரு தோற்றத்தை அது ஏற்படத்தியிருந்தது. நாளைக்கே உங்கள் அருகே நிற்கும் பெண்ணை சாதாரணமாக நிங்கள் அழைக்கலாம் என்ற தோரணை அதிலிரந்தது.இத்தகைய புள்ளிவிபரங்களும் கணக்கெடுப்புகளும் பல சமயங்களில் வெறும் கண்ணாமூச்சி விளையாட்டுதான்என்று இந்திய அரசயல்வாதிகள் புரிந்து கொண்டுவிட்ட நிலையில் நடிகையான குஷ்பு அவசரப்பட்டு அள்ளிக் கொட்டி விட்டார். விசயம் பற்றிக் கொண்டு விட்டது.குஷ்புவிட்ம் இந்தியா டுடேயின் செய்தியாளர் பேட்டி கண்ட விதத்தில் அவரது அந்தரங்க வாழக்கையைப்பற்றி வாசகனுக்கு தேவைப்படாத பல தகவல்கள் உண்டு. எங்கள் உறவு பற்றிய நிச்சயம் இருந்ததால் திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தோம் என்று குஷ்பு தருகிற வாக்கு மூலம், குழந்தைகளும் எங்களுடன் உறங்குவதால் நாங்கள் எங்களுக்கென்று தனியான நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. இப்போதும் எங்களது தாம்பத்தியம் மகிழ்ச்சிhனதானக இருக்கிறது என்பன போன்ற தகவல்கள் பேட்டியாளரின் மலிவான கவர்ச்சி நோக்கத்தை அம்பலப்படுத்திவிடுகின்றன். குட்டை கலக்கி மீன் பிடிப்பபது என்றால் இது தானோ? தங்கர் பச்சான் விசயத்தில் குஷ்பு நடந்து கொண்ட அதிகப் பிரசங்கித்தனமான நடவடிக்கையால் கொதித்துப் போயிருந்த தமிழ்பாதுகாப்பு(?)க் குழவினருக்கு சரியான சந்தாப்ம் வாய்த்தது. குஷ்புவிற்கு எதிரான ஆர்ப்பாட்ம் கெபாடும் பாவி எரிப்பு ஆங்காங்கே வழக்கு பதிவு என புதிய தமிழ் கலாச்சாரத்தின் அத்தனை எதிர்ப்பு வடிவங்களையும் அரங்கேற்றினர். கழுதை கழுத்தில் குஷ்பு படம் மாட்டி ஊர்வலம் நடத்தினர். ஒருகாலத்தில் தமிழர்கள் கோயில் கட்டி கொண்டாடிய குஷ்பு தன் முதுகில் உட்கார்ந்திருக்கிறார் என்பது அந்த கழுதைககு; எங்கே தெரியப்போகிறது?ஆனால் வன்மமாகவும் விகாரமாகவும் குஷ்புவிற்கு எதிரான போராட்டங்களைத் தூண்டிவிட்ட திருமாவளவள் உள்ளிட்ட தமிழ் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள்; இந்தியா டுடே பற்றி எங்கும் வாய்திறக்கவில்லை. தொல் திருமாவளவன் இந்தியாடுடே குறித்து ஒரு சொல் திருவாய்மலர்தருள மாட்டாரா என தமிழகம் தவமாய் தவமிருந்து பாhத்தது. அவர் வாய் திநக்கவே இல்லை. அவரும் இந்தியா டுடேவின் விருந்தினர் அல்லவா? நடிகர் சங்கத்திடம் நியாயம் கேட்கிற திருமாவளவன் இந்தியா டுடே விடம் என்ன நியாயத்தை கேட்டுப் பெற்றார் என்பது அர்த்தமுள்ள கேள்விதான். ஓரு கழுதையின் முதுகிலாவது இந்தியாடுடே ஒரு இதழை மாட்டியிருக்க வேண்டாமா? பதில் தான் இதுவரை கிடைக்கவில்லை. குஷ்பு பிரச்சினை அரசியல் வாதிகளால் பெரிது படுத்தப்பட்ட போது அதை பெரியாரிசத்தின் பெயரால் எதிர்ர்த்த சமூக அக்கறை கொண்ட மார்க்ஸ் போன்ற எழத்தாளர்கள் கூட இந்தியாடுடே வின் இந்த வக்கிர வியாhபாரத்தை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது பெரும் வேதனைதான். குஷ்புவின் கருத்தை எதிர்த்தோரும் ஆதரித்தோரும் திட்டமிட்டு இந்தியா டுடேவின் மதிப்பை காப்பாற்றிட முயற்சி செய்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எதன் பொருட்டு இந்தியா டுடேவை அவர்கள் பாதுகாக்க முயற்சிக்கிறார்கள் அல்லது கண்டு கொள்ளாமல் விட்டார்கள் என்பது புரியாத புதிரே. இந்த சந்தர்ப்த்தில் வகுப்பு துவேசத்தை பரப்புவதற்கென்றே நடத்தப்படுகிற தினமலர் பத்ரிகை கொஞ்சமும் கூச்சநாச்மில்லாமல் ஒரு பொய்யை எழுதியது. குஷ்புவுக்கு காட்டப்படுகிற எதிர்ப்பை கண்டு திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் கொதிப்படைந்நதிருப்பதாக அப்பட்டமாக பொய்ச் செய்தி வெளியிட்டது. (காஞ்சிபுரத்துச்) சாமியார்களால அணுராதாரமணண்; பாதிக்கப்பட்ட செய்தி பரவிய போது மயிலாப்பூர் மாமிகள் வருத்தப்ட்டதை கண்டு கொள்ளாத தினமலர் முஸ்லிம் பெண்கள் மீது காட்டிய அக்கறை விஷமத்தனதானது. ஆதை த மு மு க வினர் கண்டித்து சென்னiயிலும் மதுரையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பலர் கைதாகி பின்னர் விடுதலையாயினர்.உடனடியாகச் செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் வரவேற்கப்பட வேண்டியதே! அதே நேரத்தில் இந்தியா டுடேயின் வக்கிர வியாபாரத்தையும் சேர்த்துக் கண்டித்திருந்தால் அது தமுமுக வின் விசாலப்பார்வைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருககும். முஸ்லிம் என்று வந்தால் தான் போராட வருவோம் என்றில்லாமல் சமூகத்தை பாதிக்கிற எந்த விசயத்தையும் நாங்கள் கண்டிக்கத் தயங்க மாட்டோம் என்று வெளிப்படுத்தவதாக அமைந்திருக்கும். இஸ்லாத்தின் கடமைகள் மட்டுமே முஸ்லிம்களுக்கு உரியவை. இஸ்லாம் தடை செய்துள்ள விசயங்கள் அனைத்தும் மனித சமுதயத்திற்கு ஒட்டுமொத்தமாக தீங்களிப்பவையே என்ற இலக்கணத்தை அது புரிய வைத்திருக்கும். கண்களுக்கு கடிவாளம் பூட்டியுள்ள பெண்ணியச் சார்பு பேச்சாளர்கள் கற்பு என்பதை ஆணாதிக்கக் கருத்தாக கருதி குஷ்புவிற்கு வக்காலத்து வாங்க முயன்றனர்.கற்பொழுக்கம் என்பது பெண்களில் மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆண்கள் உலகில் அது ஒரு அலட்சியமான சொல் என்ற வாதத்தை பரவலாக பேசினர். அது முற்றிலும் உண்மையல்ல. ஆண்களிலும் கற்பொழுக்கம் இல்லாதவர்கள் கள்வர்களாகவே கருதப்படுகிறார்கள். சினமா உலகம் உள்பட கற்பொழுக்கம் கெட்ட எந்த ஆணும் மரியாதையை பெற முடியாது. விடுதிகளில் மாட்டிக் கொள்ளுமு; சட்ட விரோத ஜோடிகளில் பெண்களை மட்டும் பிடித்து விட்டு ஆண்களை விடுதலை செய்து விடுவதுமில்லை. எனவே சட்டத்திலும் சமூகத்திலும் கற்பொழுக்கம் தவறும் பழக்கமுடையவர் ஆணாயினும் பெண்ணாயினும் மரியாதை அற்றவரே!ஆயினும் கற்பொழுக்கம் மிறீனால் பாதிக்கப்படுவது அதிகம் பெண்களே! அது ஏன் என்பது தனி ஆய்வுக்குரிய விசயம். ஆனால் ஒன்று நிச்சயம் அதன்காரணத்திற்காகவும் பெண்கள் அதிக எச்சரிக்கை அடைவது அவசியம். அது காண்டம் அணிகிற எச்சரிக்கை அல்ல. கற்பை பேணுகிற எச்சரிக்கை.ஏனெனில் பிரபு சாவ்லாவும் அவரது குழவினரும் வாழும் மேற்கத்திய இரவல் செசைட்டியில் கற்பு என்பது காலாவதியாகி விட்டிருக்கலாம். அது இந்தியக் கலாச்சாரத்தை பொறுத்தவரை பெரம்பாலான இந்திய மக்களைப் பொறுத்த வரை இன்னும் புனிதமானது. 82 சதவீதம் பேர் மணப்பெண் கன்னியாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தவறான வழிகாட்டுதலால் பெண்கள் தவறிப்போனால் இந்தியாடுடேக்கள் காசு சம்பாதிக்க அதுவும் வழியமைத்துக் கொடுக்கலாம் ஆனால் அவர்களுக்கு வாழ்க்ககையை அமைத்து தராது. கலாச்சார வீழ்ச்சியினால மேல் நாடுகளில் வாழ்கைகைய பற்றி மதிப்பீடுகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியும் விரக்கதி மனப்பான்மையும் பெருகியுள்ளது. எனவே இந்தியத் தத்துவங்களின் பாலும் கலாச்சாரத்தின்பாலும் அவர்களுக்கு ஆசையும் அக்கறையும் ஏற்பட்டுவருகிற காலகட்டத்தில் மேலைநாட்டின் கழிவுகளை இந்தியக்கலாச்சார புரட்சியாக சிததரிக்க முயல்கிறது இந்தியா டுN;ட. இது இன்று நேற்றல்ல. தொன்று தொட்டு அது செய்துவருகிற புண்ணியகாரிமாகும். குஷ்பு விவகாரத்தால் அது மக்கள் மன்றத்தில் தற்போது அம்பலப்பட்டுள்ளது. இத்தைகய ஒரு கண்ணக்காய்வை வெளியிடுவதற்கு முன், இந்தியா டுடே குழுமத்தினர் தங்களது மனைவியர் மகள்கள் சகோதிரிகளின் கருத்தையும் கேட்டுப் பெற்றிருந்தால் ஒரு வேளை இந்த விபரீதம் நடந்திருக்காது.குஷ்பு வை சிக்கவைத்த தங்களது தொழில் திறமைக்கு பிராயசித்தமாக அடுத்த இதழில் குஷ்புவின் அழகிய படத்தை அட்டைப்படத்தில் போட்டு விட்டு பிரபு சர்வலா எழுதுகிறார் :வழக்கம் போல சில வாசகர்கர்கள் எதிர்ப்பு; தெரிவித்திருந்தனர் ஆனாலும் அந்த இதழ் முழுமையாக விற்றுத் தீர்ந்தது. இக்கருத்தை நண்பர்களோடு பகிர்ந்து கொண்ட போது இன்னும் நிறைய சம்பாதிக்கனும் என்றால் வேறு சில வழிகள் இருக்கிறதே அது அவருக்கு தெரியாதோ என்று கேட்டனர். யாமறியோம் பராபரமே!

No comments: