அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாம் மாநாடு சென்னையில் கடந்த மே மாதம் 25,26,27 அகிய தேதிகளில் கலைவாணர் அரங்கம் புதுக்கல்ல}ரி ஆகிய இடங்களில் நடைபெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமான எஸ்.எம் இதாயதல்லாஹ், கேப்டன் அமீர் அலி அகியோர் மாநாட்டை நடத்தினர். கலைஞர் கரணாநிதி , பேராசிரியர் அன்பழகன், பாராளுமன்ற துணை சபாநாயகர் ரகுமான் கான், இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் மலேஷிய அமைச்சர் ------------------------------ பொன்னம்பல அடிகளார் உள்ளிட்ட பலர் சிற்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சுமார் 500 பேராளர்கள் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பங்கேற்ற இம்மாநாட்டில் கிட்டதட்ட தமிழகத்தின் அனைத்து இலக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டது சிறப்பு. வளைகுடா நாடுகிளிலிருந்து கலந்து கொண்டோர் எண்ணிக்கை குறைவாக இருந்த போதும் இலங்கையிலிருந்து சுமார் 150 பேர் கலந்து கொண்டிருந்தனர். சுமர் 30 லட்சலம் ரூபாய் செலவு பிடித்திருக்கக்கூடிய இம்மாநாட்டிற்கு புரவலர்கள் தாராளமான நிதி உதவி செய்துள்ளனர். எஞ்சியுள்ள தொகையில் இனிவரும் காலங்களில் தேவையான இலக்கிய பணிகள் ஆற்றப்படும் என்று கவிக்கோ அறிவித்திருக்கிறார்.ஒரு மாநாட்டை நடத்திப் பார்ப்பதில் உள்ள மிகுந்த பிரயாசைகளும் பொருட்செலவும் உழைப்பும் விமர்சகர்களின் கண்களுக்கு தெரியாது பாயாசத்தில் முந்திரி தட்டுப்படாததது மாத்திரம் தான் விமர்சகனின் பார்வைக்கு தட்டுப்படும். விமர்சகன் என்பவன் கனிகனை விடுத்து முட்களை மட்டுமே மேய்கிற ஒட்டகத்தை போன்றவன் என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் விமர்சன உலகின் மீது கறையாக படிந்துள்ளது என்ற போதும் இந்தக் கட்டுரை அந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி விடக்கூடாது எச்சரிக்கையோடு எழுதப்படுகிறது. அதே நேரத்தில் இலக்கியம் என்ற ஒரு அருமையான தளத்தின் மீது எதிர்கால முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு விரக்தியோ வொறுப்போ ஏற்பட்டுவிடமால் பாதுகாத்தாக வேண்டும் என்ற பொறுப்புணர்வும் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதே போல 27 ம் தேதியோடு மாநாடு நிறைவு பெற்று விட்டது என்றாலும் மழை விட்ட பிறகும் தூவானம் விடாத கதையாக தொடரும் மாநாட்டுச் சர்ச்சைகளளும் இந்த விமர்சனத்தின் வட்டத்திற்குள் கொண்டுவரப்படு கின்றன. ஓரு இளைஞனிடம் உள் வாழ்வின் லட்சியம் என்ன என்று கேட்கப்பட்டதற்கு ரொம்ப நேரம் யோசித்து விட்டு வாழும் வரை சுவாசித்துக் கொண்டிருப்பது என்றானாம். வாழ்ந்து முடித்துவிடுவதையே வெற்றிகரமான வாழ்விற்கான இலக்கணமாக எடுத்துக் கொள்பவராக இருந்தால் இந்த மாநாடு வெற்றி பெற்று விட்டது என்று நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.இலக்கிய மாநாடுகள் இனி தமிழகத்தில் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று என்னைப் போன்றவர்கள் கருதிக் கொண்டிருந்த நிலையில் அந்தப் பெயரில் ஒரு மாநாடு நடந்து முடிந்து விட்டது என்பதில் மகழ்ச்சிதான். மாநாட்டுக்கான முன்னேற்பாடுகளில் காணப்பட்ட லட்சணங்களை வைத்து இம்மாநாட்டில் குளறுபடிகள் மலிந்து கிடக்க வாய்ப்புண்டு என்ற ஒரு தயாரிப்பு மனோ நிலையில் சென்ற எனக்கு மார்க்க அறிஞர் அரங்கை ஏற்பாட்டாளர்கள் புறக்கணித்ததை தவிர்த்து மற்ற அரங்குகள் எப்டியோ நடதேறிவிட்டதில் குறிப்பாக கலைஞர் கலந்து கொண்ட நிகழ்வில் அரங்கு நிறைந்து காணப்பட்டதில் அப்பாடா ஒரு வழியாக இலக்கிய மாநாடு முடிந்துவிட்டது என்ற திருப்தி எனக்கும் ஏற்பட்டது தான்.ஆனால், மாநாடு நடைபெற்ற விதம் ஆற்றப்பட்ட பணிகள் மன நிறைவு என்ற அடிப்படைகளில் அல்லது ஒரு இலக்கிய மாநாட்டின் வரையரைகளுக்குள் சிக்காத நன்மைகள் என்று வேறு எந்த ஒரு அலகையாவது வைத்துக் கொண்டு அலசினால் என்றால் அனைத்துல இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாம் மாநாடு ஒரு தோல்விதான்.அத்திப் பூத்தார்ப் போல நடைபெறுகிற அனைத்துலக இலக்கிய மாநடுகள் இலக்கியச் செழுமையையும் இனிய நினைவுகளையும் மணம் வீசச் செய்ய வேண்டும் என்பது அறிஞர்;கள் மற்றும் சுவைஞர்களுடைய எதிர்பார்ப்பு.அந்த எதிர்பார்ப்பை மாத்திரமல்ல ஒரு அனைத்துலக மாநாட்டிற்கான இலக்கணத்தையும் சிதறடித்துவிட்ட மாநாடாக இம்மாநாடு அமைந்து விட்டது. மூன்று நாள் நிகழ்சிசியில் கலந்த கொண்ட ஒருவர் கூட தங்களது அதிப்தியை வெளியிடாமல் செல்லவில்லை என்பது ஏழாம் மாநாட்டின் பொதுப் பண்பு. எங்காவது ஒரு ஊரில் ஷரீஅத் மாநாடோ தப்லீக் இஜ்திமாவோ நடந்தால் இம்மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் அதை ஒரு முறை போய் பார்த்த விட்டு வரவேண்டும் என்று சிலர் பேசிய போது அதை மறுக்க முடியவில்லை. இந்த அனைத்துலக மாநாடு வெற்றி பெற்றதா? தோல்வியடைந்ததா? என்று அலச வேணடிய நேரத்தில் இதயங்கள் இணைப்பிற்கு இலக்கியம் என்ற முத்திரை வாசகம் இந்த மாநாட்டிற்கு பொருந்துமா என்றொரு பெரிய பட்டிமன்றம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது துரதிஷ்டவசமானது.அந்த வகையில் இம்மாநாடு தோல்வி மாநாடு மட்டுமல்லாமல் தொல்லை மாநாடாகவும் ஆகி பலருக்கும் வேதனை அளித்தது. ஒரு மாநாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்டுவதற்காக நடத்தப்படுவதாக ஜாம்பவான்களால் தம்பட்டம் அடிக்கப்பட்ட மாநாடு ஒரு மாநாடு எப்படி நடக்கக் கூடாது என்பதற்கான முன்னுதராணமாகிவிட்டது. அந்த முன்னுதாரணம் சென்னையில் நடைபெற்ற ஒரு அனைத்துலக மாநாட்டில் நடந்துவிட்டது என்பது தமிழக முஸ்லிம்களுக்கும் தமிழக இலக்கிய வாதிகளுக்கும் புரவலர்களுக்கும் ஏற்பட்ட தலைக்குணிவு.இதை புரிந்தும் உணர்ந்தும் கொள்ள வேண்டியது, இதன் தோல்விக்கான காரணிகளை ஆராய வேண்டியது இஸ்லாமிய தமிழ் இலக்கியம் வாழ வேண்டும் வளர வேண்டும் என்று நினைக்கிற இலக்கியவாதிகள் புரவலர்களுடைய கடமை. இனிவரும் மாநாடுகளில் அத்தகைய தவறுகள் நடைபெறாமல் கவனித்துக் கொள்ள அது உதவும். மாநாட்டின் தோல்விக்கு முதன்மையான காரணம், இலக்கிய ஆர்வத்ததைவிட மேலோங்கியிருந்த தனியாவார்தன மனப்போக்கும் சுயவிளம்பரச் சிந்தனையுமேயாகும். அலட்சிய மனப் போக்கும் பாரபட்ச உணர்வும் இதன் துணையாக சேர்ந்து கொள்ள மாநாடு ''களை ' கட்டிக்கொண்டு விட்டது. இஸ்லாம் என்ற சமய அடையாளம் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கிராத் ஓதியதற்கு அடுத்த படியாக பர்வீன் சுல்தானாவின் பர்தாவில் வெளிப்பட்டது. வெல்;டன்.மாநாட்டுத் தீர்மாணங்கள் வாசிக்கப்பட்ட விதமும் அதன் உள்ளடர்த்தியும் மாநாட்டின் தோல்விக்கு எடுத்தக் காட்டத் தகுந்த போதுமான ஒரே உதாரணமாகும்.ஒரு அனைத்துலக மாநாட்டின் தீர்மாணங்கள் வாசிக்கப்பட்ட போதும் புரியவில்லை அது பிரசுரமாகவும் தரப்பட வில்லை அடுத்த நாள் பத்ரிகைகளிலும் வரவில்லை. மாநாடு என்பது குறித்து பக்கம் பக்கமாக விளக்ககம் எழதிய எற்பாட்டாளர்கள் ஒர மாநாடு அதன் தீர்மாணங்களால் மதிப்படைகிறது ஆத்தீர்மாணங்கள் வெற்றி பெறுவதில் தான் அது உயரிர்வாழ்கிறது என்ற தத்துவத்தை எப்படி அறியாமல் போனார்கள்? வெத்து அறிக்கைகள் வெளியிடுவதற்கு அல்லது தன்னிலை விளக்கப் பேட்டிகளை அச்சேற்றுவதற்கும் முயற்சி எடுத்துவர்கள் மாநாடு முடிந்து ஒரு மாதமாகிவிட்ட சூழ்நிலையில் இன்று வரை அத்தீர்மாணங்களை மக்கள் மன்றத்திற்கு கொண்டு சேர்க்க வில்லை. அவர்களது அறிக்கைகளையும் தீர்மாணங்களையும் வெளியிட்ட பத்hகைகள் கூட அத்தீர்மாணங்களை வெளியிட வில்லை. ஒரு வேளை இந்த மாநாடு பேராளர்களுக்கு மட்டும்தான் என்று அறிவித்தது போல தீர்மாணமும் கலைஞருக்கு மட்டும்தான் என்று தீர்மாணித்துவிட்டார்களா என்பது தெரியவில்லை. ஆய்வரங்குகள் தான் இம்மாநாட்டின் சிறப்பு அம்சம் என்று பெரிதாக பேசப்பட்டது. நிறைய அரங்குகள் இருந்தது சரிதான் நிறைவாக இருந்தததா என்பது தான் கேள்வி. ஓரு பிடிவாதத்திற்hக இத்தகைய அரங்குகளை ஏற்படுத்திய அதே நேரத்தில் மாநாட்டு மைய அரங்கில் அருமiயான தலைப்பில் ஒரு கருத்தரங்கமோ விவாத மன்றமோ நடத்தியிருந்தால் பொதுமக்கள் பலர் பயன் பெற்றிருப்பார்கள். மார்க்க இலக்கிய அரங்கு மகளிர் அரங்கு உள்ளிட்ட சிற அரங்குகளில் கூட்டம் இருந்தது. அரங்குகளில் வாசிக்கபட்ட கட்டுரைகள் பல பிரசுரிக்கப்பட வில்லை என்று குறை கூறப்பட்டது. முஸ்லிம் அல்லாதோர் பலர் ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்தது இவ்வரங்குகளின் முக்கியமான ஒரு சிறப்பம்சமே!. திருவணந்தபுரத்திலிருந்து வந்திருந்த திருமலர் மீரான் அவர்கள் சொன்னது போல இலக்கியகர்த்தாக்கள் பலருக்கு அது மட்டுமே மாநாட்டின் திருப்திக்குரிய விசயமாக இருந்தது. ஆனால் பொதுப் பார்வையாளர்களைப் பொறுத்தவரை எங்கே செல்வது என்ற குழப்பத்தில் அங்கும் இங்குமாக அல்லாடிக்கொண்டிருந்தார்கள். பொதுவான பார்வையாளர்கள் பலருக்கும் சனிக்கிழமை சனி பிடித்த கிழமையாக இருந்தது அவர்களது அறிவுக்கோ ரசனைக்கோ இலக்கிய ஆர்வத்திற்கோ எந்த தீனியும் அன்று கிடைக்கவில்லை. ஒரு நுட்பமான அல்லது பல்கலைகழகங்கள் அளவில் மட்டுமேயான மாநாடு இப்படி ஆய்வரங்குகள் நிரம்பியதாக நடத்தப்படுவது பொருத்தமானதாக இருக்கலாம், மக்கள் மத்தியில் இலக்கிய தாகத்தை வளாத்தாக வேண்டிய காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஒரு மாநாடு இத்தகைய ஆய்வரங்குகளால் கணம் பெறத் தவறிவிட்டது என்பது உண்மை. பொதுமக்கள் பயன்பெற்ற விடக் கூடாது என்பதில் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் மிக எச்சரிககையாக நடந்து கொண்டிருப்பதை காட்டுகிறது என்று அங்குமிங்கும் அல்லாடிக் கொண்டிருந்த ஒருவர் சொன்னது காதில் விழுந்தது. சனிக்கிழமை மாலை என்ற பிரதான நேரத்திற்கு ஒதக்கீடு செய்யப்பட்டு தனியாக சுவரொட்டி விளபம்பரமும் செய்யப்பட்டிருந்த மார்க்க அறிஞர் அரங்கம் ரத்து செய்யப்பட்டது மாநாட்டின் முகத்தில் பூசப்பட்ட கரி. கரியை பூசியது ஏற்பாட்டாளர்களா ? அல்லது முந்தயை நிகழ்சியை நடத்தியவர்களா என்பது தான் ஆராயப்பட வேண்டிய கேள்வி. நிகழ்ச்சியல் பெயரிடப்பட்டிருந்த ஆலிம்களை குற்றம் சுமத்த முடியாது. அழைக்கபட்டிருந்த ஆலிம் பெருமக்கள் நால்வரில் ஒருவர் கூட நிகழ்சிக்கு வரவில்லை என்பது உண்மைதான் ஆனால் அவர்கள் வராமல் போனதற்கு காரணம் தகுந்த ஏற்பாடுகள் எதுவும் செ;யயப்படாததே!. குறைந்த பட்சம் அவர்களுக்கான டிக்கட் கூட ஏற்பாடு செய்யப்பட வில்லை.மார்ச் மாதத்தின் மத்தியில் அவர்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகு நிகழ்சி நடப்பதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக தொலை பேசியில் தொடர்பு கொண்டு அவர்களையே ஏதாவது எற்பாடு செய்து கொண்டு வரச் சொல்லங்கள் என்று ஏற்பாட்டாளர்களால் சொல்லப்பட்டுள்ளது. மே மாதத்தில் போக்கு வரத்து எப்படி இருக்கும் அனைவரக்கும் தெரிந்த விசயம். அதிலும் அழைக்கப்பட்ட அனைவரும் மிக மூத்த அலிம்கள். பொன்னம்பல அடிகளாருக்கும் அரது உதவியாளருக்கும் விமான டிக்கட் வழங்கிய அளவுpற்கு இல்லை என்றாலும் அதில் கால் வாசி முக்கியத்துவமாவது இந்த மூத்த ஆலிம்களுக்கு தரப்பட்டிருந்தால் கண்டிப்பாக அவர்கள் நிகழ்சியை தவிhத்திருக் மாட்டார்கள். கவிக்கோவை யாராவது மூன்று மாதங்களுக்கு முன் தொடர்பு கொண்டு நிகழ்சிக்கு ஒப்புதல் பெற்ற பிறகு வேறு எந்த தொடர்பும் கொள்ளாமல் இருந்து விட்டு நிகழ்சியன்று வந்துவிட்டீpர்களா என்று கேட்டால் கவிக்கோ என்ன செய்வார் என்று ஒ.எம் அப்துல் காதிர் பாகவி கேட்டதில் நியாயம் இல்லை என்று சொல்ல முடியுமா? சென்னையிலேயே இருக்கிற ஷப்பீர் அலி ஹஜ்ரத் அவர்களை அழைத்து வரவும் எந்த ஏற்பாடும் இல்லை. வெள்ளிக்கிழமை வரை தனக்கு அழைப்பிதழே வரவில்லை என்று ஹஜ்ரத் கூறியிருக்கிறார். முறையான அழைப்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்படாததால் தான் ஆலிம்கள் வரவில்லை எனவே நிகழ்சி ரத்தானதற்கு அவர்களை காரணம் சொல்வது பழிபோடுவதன்றி வேறில்லை. மார்க்க அறிஞர் அரங்கு ரத்தானதற்கு காரணம் வேறு. புதுக்கல்லஸரியின் புல்வெளி அரங்கில் சனிக்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்க வேண்டிய பாராட்டரங்க நிகழ்ச்சி இரவு 7.30 மணிக்குத் தொடங்கப்பட்டது. அது மார்க்க அறிஞர் நிகழ்க்காக ஓதக்கப்பட்ட நேரம். சுமார் இரண்டரை மணி நேர காலதாமதத்தை எற்பாட்டாளர்கள் கண்டு கொள்ளவே இல்லை. 5 மணியிலிருந்து மைதானத்தில் கூடியிருந்த மக்கள் ஏதாவது ஒரு சிறு அறிவிப்பாவது செய்யப்படுமா என்று காத்திருந்து ஏமாந்தனர். அந்நிகழச்pக்கு வந்திருந்த சென்னை எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழக துணை வேந்தர் கூட சலித்தப் போய் காத்திருந்தர். காலம் கடந்து தொடங்கப்பட்ட பாராட்டரங்கம் 10.00 மணிவரை நீண்டது. பின்னால் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது இந்நிகழச்pக்காக்த்தான் கூட்டம் காத்திரக்கிறது என்ற பிரக்ஞை ஏற்பாட்டாளர்களுக்கு சிறிதும் இருக்கவில்லை. முற்றிலுமாக மார்க்க அறிஞர் நிகழ்ச்சிக்கான நேரம் களவாடப்பட்டது. நிகழ்சிக்கு சொற்பொழிவாளர்களாக அழைக்பட்ட மூத்த அலிம்கள் வந்திருந்தால் இந்தப் புறக்கணிப்பை கண்டு எவ்வளவு மனம் நொந்திருப்பார்கள் நல்ல வேளை அவர்கள் யாரும் வரவில்லை என்று நான் என் மனதுக்குள் சொல்லிக் கொண்டிருந்த போது அந்த அதிர்ச்சியான அறிவிப்பு செய்யப்பட்டது. நிகழ்சிக்கு அழைக்கப்பட்ட ஆலிம்கள் யாரும் வராததால் நிகழ்ச்சி ரத்த செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது. நிகழ்சி ரத்தானதற்கு முதல் காரணம் அளவு கடந்து எற்பட்டு விட்ட கால தாமதம், இரண்டாவது காரணம் எற்பாட்டாளர்கள் சிலரின் காரணம் அற்ற வெறுப்புணர்வு போக்கு. ஏனெனில் அழைக்கப்ட்ட பேச்சாளர்கள் எவரும் வரக் கூடிய நிலையில் இல்லை என்பது காலையிலேயே தெரிந்துவிட்டது. அந்நிலையில் தேங்கை ஷர்புத்தீன் அவர்களின் கடும் முயற்சியின் விளைவாக மாநாட்டிற்கு பேராளர்களாக வந்திருந்த பேச்சாற்றல் மிக்க ஆலிம்கள் சிலர் திட்மிட்ட அதே தலைப்பில் அரங்கை வெற்றிகரமாக நடத்தி முடிக்கத் ஒப்புக்கொண்டனர். தேங்கையாருடன் சேர்ந்து கான் பாகவி ஹஜ்ரத் அவர்களும் நிலமையின் தீவிரம் உணர்நது அங்கும் இங்கும் ஒடியாடி ஆட்களை பிடித்ததை ஏற்பாட்டாளர்கள் எவரும் கவனித்திரக்கவே முடியாது. அவர்கள்தான் அரங்கத்திலேயே இல்லையே! கான் பாகவி ஹஜ்ரத்திடம் வந்த ஒருவர் இது அவங்க நிகழ்ச்சி. அவங்களே அலட்டிக்காம இருக்கும் போது நீங்க ஏன் ஹஜ்ரத் இப்படி முயற்சி பண்றீங்க என்று கேட்ட போது இல்லப்பா மக்கள் ஆலிம்கள் பேச்சிற்காக காத்திருக்கும் போது அது இல்லேன்னு சொல்லக் கூடாது என்று ஹஜ்ரத் சொல்லிக் கொண்டு பேப்பர் பேப்பராக கிழித்து நிகழ்சி நிரல் ஏற்பாடு செய்ததில் மக்களின் மீதான ஆலிம்களின் அக்கறை புலப்பட்டது.இந்த அரங்கை எதிர் பாhத்துத் தான் நிறைய மக்கள் அரங்கில் காத்திருந்தார்கள். சனிக்கிழமை மதியம் களோபரமாக நடந்தேறிய உணவு ஏற்பாடுகளுக்கிடையே இலங்கை பேராளர்களும் மலேஷி பேராளர்;களும் இன்றைக்கு மாலை மார்க்க அறிஞர் நிகழ்சிசதான் ஒரு உருப்படியான நிகழ்ச்சி என்று சொல்கிக் கொண்டிருந்ததை பலரும் கேட்டனர். பாவம் அவர்களது அந்த சாமாண்ய எதிர்பார்ப்பும் கூட பலிக்கவில்லை.மார்க்க அறிஞர் அரங்கை கூடிய மட்டும் தவிர்க்க முயற்சி செய்து விட்டு பல தரப்பிலும் வந்த நிர்பந்தங்கள் காரணமாக அதை ஏற்பாடு செய்தவர்கள் அதற்கான மதிப்பை உணர்நதே சனிக்கிழம மாலை நிகழ்ச்சியை முழுமையாக அதற்கு ஒதுக்கியிருந்தனர். எண்ணம் போல் வாழ்வு என்பது போல் நிகழ்ச்சி ரத்து செ;ய்யப்பட்டது.ஒரு சர்வதேச மாநாட்டில் மக்கள் எதிர்பார்த்த ஒரு முக்கிய அரங்கை ரத்து செய்ததற்காக - காரணம் யாராக இரந்தாலும் - மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். அதைவிடுத்து அழைத்தவர்கள் யாரும் வராத காரணத்தால் ரத்து செய்யப்படுகிறது என்று மட்டுமே அறிவித்த போது அது ஒரு வன்முறையாகவே கருதப்பட்டது. ஏற்பாட்டாளர்கள் சிலரின் காழ்ப்புணர்வின் வெளிப்பாடு என்றும், மக்களின் மீது சில இலக்கியப் பிதாமகன்களுக்கிருந்த பற்றின் வெளிப்பாடு அது என்றும் விமர்சிக்கப்படுவதற்கு அது காரணமானது. முதல் நாள் நிகழ்சியல் தொடக்கவிழாவில் ஏற்பட்ட பல மணி நேரத்த தாமதம். இரண்டாம் நாள் மாலை நிகழச்pயல் சில மணி நேரத் தாமதம் மூன்றாம் நாள் காலை நிகழ்ச்சி பல மணி நேரத் தாமதம் என கணக்கற்ற கால தாமதம் தமிழக பார்வையாளர்களையே சேர்வடையவும் வெறுப்படைவும் வைத்தது என்றால் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் என்ன மனோ நிலைக்கு ஆளாகி யிருப்பார்கள்?.எனவே சுதாரண பள்ளிக்கூட விழவை விட மோசமாக ஒரு மாநாட்டை நடத்தினார்கள் என்ற இலங்கை கவிஞர் ஜின்னாஹ் ஷர்புதீன் அவர்களின் விமர்சனம் பொருத்தமானதாவே படுகிறது. மாநாட்டு நிகழ்வுகளில் பெரும்பாலான வற்றில் - ஆய்வரங்குகள் தவிர - சபாஷ் என்ற பாராட்டுப் பெற்றவர்கள் இலங்கையை சார்ந்த பேச்சாளர்களே! முதல் நாள் நிகழ்ச்சியில் ரவூப் ஹக்கீம் இரண்டாம் நாள் நிகழச்pயில் அஸ்வர், மூன்றாம் நாள் கருத்தரங்கில் கௌரவ பஷீர் கவியரங்கில் அஸ்ரப் சிஹாபுதீன் அகியோரே சரியான பங்களிப்பை செய்தனர். மூன்றாம்; நாள் காலை இரண்டு மணி நேர தாமதத்திற்கு பிறகு தொடங்கிய கருத்தரங்கின் தலைப்பு இஸ்லாம் பயங்கரவாத மதமா? இந்த தாமதம்தான் பயங்கரவதம் என்று பின்னாலிருந்து ஒருவர் கிண்டலடித்தார். பலமுறை யோசித்துப் பார்த்தும் இத்தலைப்பு இலக்கியத்தோடு எப்படி சம்பந்தப்படுகிறது என்பது புரிபடவில்லை. அந்தக் கூட்டத்திலிருந்து இலக்கியத்தின் வாடையை நுகரச் செய்யும் ஒரு கவிதையோ அல்லது ஒரு சிறு மேற்கோளே எதுவம் நம் செவிகளில் விழவில்லை. கேள்விக்குறியாக தலைப்பை சூடியது சரியா என்று கவிக்கோவை கேள்வி கேட்டு சேம் செய்டு கோலடித்து, இந்த மாநாட்டின் காரியங்கள் எதுவம் எங்கள் எல்லேரையும் கலந்து கொண்டு செய்யப்பட்டதில்லை என்பதை புத்திசாலித்தனமாக வெளிப்படுத்திய திருச்சி ஜமால் முஹம்மது கல்ல}ரி பேராசியர் மன்சூர் அவர்கள் கூட இது இலக்கியம் சார்ந்தா தலைப்பா என்ற கேள்விக்குள் ஏன் செல்ல வில்லை என்பது எனக்கு இதுவரை புரியாத புதிர். அரசியல் அல்லது சமூக மாநாட்டிற்கான தலைப்பை இலக்கிய மாநாட்டிற்கு ஏன் தோந்தொடுத்தார்கள் என்று விவாதித்துக் கொண்டிருந்த போது ஒரு நண்பர்;, கனமான தலைப்பு வேணும் என்று தோந்தெடுத்திரப்பார்கள் என்று சொன்னார். அப்படியானால் இலக்கியத்தோடு தொடர்புடைய ஒரு கனமான தலைப்பு எதுவும் இல்லையா என்று மற்றொருவர் கேட்டார். அந்தக் கேள்வி என்ககுள் இப்பொதும் இருந்து கொண்டிருக்கிறது.இந்த சூடேற்று கிற தலைப்பை இலங்கை அமைச்ர் கவுரவ பஷீர்மட்டுமே கவனமாக கையாண்டார். அவரது பேச்சு ஆரம்பத்தில் சற்று மெதுவாக சென்ற போதும் அழுத்தமான கருத்துகளை சுமந்த அழமான வார்த்தைகளாக இருந்தது. இறுதியில் அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மரியாதையும் கண்ணியமும் தந்து அவர்களது பிரச்சினைகளை தீர்க்காத வரையில் இந்த பயங்கரவாம் நிற்கப் போவதில்லை. அது இஸ்லாமிய பயங்கர வாதமல்ல. அது சர்வதேச முதலாளித்துவத்துடைய பயங்கரவாதம். தங்களது சௌகரியங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக மேற்குலகின் பயங்கர வாதம் வளரப் போகிறது அந்தப் பயங்கரவாதத்தை எதிர்பதற்கு அனைவரும் கைகோர்த்துச் செல்வோம் என்று அவர் பேசி முடித்த போது அரங்கு உணர்ச்சி வசப்பட்டிருந்தது.பீட்டர் அல்போன்ஸ் வழக்கப்படி தனது சொல் சிலம்பத்தை காட்டிவிட்டு பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முஸ்லிம்கள் இஸ்லாமை கடைபிடிக்க வேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றார். இப்படித்தான் பல பேச்சாளர்களும் நாச10க்காக நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போய்விடுகிறார்கள். பயங்கவாதத்தின் காரணிகளை விளக்குவதில்லை அதன் கர்தாக்ககளை கண்டிப்பதுமில்லை. பேராசிரியர் காதர் மைதீன் இந்த தலைப்பை தொடுவதில்லை என்று சத்தியம் செய்த விட்டு வந்தது போலவே பேசிக் கொண்டிருந்தார். பசி எடுக்க ஆரம்பித்ததால் பலரும் எழுந்து போய்விட்டார்கள்.தொடர்ந்து நடந்த மற்றொரு கருத்தரங்கம் இலக்கியத்தில் மனித நேயம் என்ற தலைப்பில் நடைந்து கொண்டிருந்த போது பெரும்பாலும் வெளிநாட்டுப் பேராளர்களே அரங்கில் இருந்தனர். நாங்கள் பலரும் உணவருந்திக் கொண்டிருந்தோம்.ஆந்நிகழ்ச்சி முடிந்த போதே முதல்வர் வருகைக்கான கெடுபிடிகள் தொடங்கிவிட்டிருந்தன. ஆடுத்து திட்மிடப்பட்டிருக்கிற கவியரங்கம் எங்கே நடக்காமல் போய்விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்தேன். நல்ல வேளை கவியரங்கு நடந்து. அது முடிந்த பிறகு தான் எதற்கு இப்படி ஒரு கவியரங்கம் நடந்தது என்று என்ற கேள்வி பிறந்தது. கவியரங்கத் தலைப்பு உவமையிலா உத்தம நபி.கவியரங்கத் தலைவர் மு.மேத்தா பெருமானாரை பற்றி கவிதை படித்தது தினமலர் கவிதைகளை லிட சுமாராக இருந்தது. ஒருக்கால் கவிக்கோ அந்தக் கவியரங்கிஙற்னு தலைமை ஏற்றிருந்தால் அது ஏழாம் மாநாட்டிற்கும் அதில் பங்கேற்றவர்களுக்கும் கவிக்கோ செய்த ஒரே பெருங் கொடையாக அமைந்திருக்கும். கவியரங்கில் பாடப்பட்ட அஷ்ரப் சிஹாபுதீனின் கவிதையை தவிர மற்ற கவிதைகளும் அனைத்தும் பெருமானர பாடுவதில் இவர்களை இப்படி சிரமப்பட வைப்பது எது என்று யோசிக்கத் தூண்டியது. மேத்தா போன்றோர் கலந்த கொண்ட கவியரங்கிற்கு சமூகத்தை பிரதிபலிக்கிற வேறு ஏதேனும் தலைப்பு தரப்பட்டிருந்தால் அந்த அரங்கில் குழமியிருந்தோர் கவிதைகளை ரசித்திருக்கக் கூடும். சில கவிதைகள் கேட்ட போது பக்கத்திலிருந்த நண்பர் சொன்னர். எனக்கென்ன பயம்னா போலீஸ்காரர்கள் ஒடிவிடுவர்களோன்னு பயமாயிருக்கு என்று சொன்னார். நிகழ்சி முடிந்து திரும்பும் போது சிலர் அஷ்ரப் சிஹாபதீனின் முஹம்மது என்று எழுதிவிட்டு என் விரலை முகர்ந்த பார்த்தேன் என் கலிமா விரலிலும் கஸ்தூரி வாசம் என்ற கவிதையை உச்சரித்துக் கொண்டு போனது அந்தக் வரிகளின் வெகுஜன ஈர்ப்பை வெளிப்படுத்தியது. உற்சாகம் ததும்பும் நூற்றுக்கணக்கான கவியரங்குகளின் கர்தர்க்காளக இருந்தவர்கள் அனைத்துல மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த கவியரங்கம் சற்று ஏமாற்றத்தையே அளித்தது. அதை தொடர்நது பிரதானமான நிறைவு நிகழச்சி தொடங்கியது. தமிழ் முஸ்லிம்களின் பெருதனக்காரர்கள் மாநாட்டின் புரவலர்கள் பெரும்பாலோர் மொத்தமாக அமர்நதிருந்து அழகு சேர்த்தனர். கிராஅத் என்ற அறிவிப்பை தொடாந்து இரண்டு பெயர்கள் அறிவிக்கப்பட்ட பொது இரண்டு பேரும் அங்கு இல்லை. முதல்வர் உட்டபட பலரும் புரவம் சுருக்கினர். இது ஒரு அனைத்துலக மாநாடு? என்ற முனுமனுப்பு ஒவ்வெருவாமிருந்தும் வந்தது.வரவேற்புரைக்கு பெயர் போடப்பட்டிருந்த மாநாட்டின் பொருளாளர் ஏ.வி.எம் ஜாபர்தீன் மாநாட்டு மேடையிலேயே இல்லை. முறையான திட்டங்கள் எற்படுகள் குறித்து தன்னுடைய கருத்தக்கள் அலட்சியப்படுத்தப்பட்டதாலும் தொடர்நது கைகொள்ளப்பட்ட சர்வதிகாரப் பொக்கினாலும் மனம் வெறுத்து அவர் அரங்கின் ஒர மூளையில் உட்கார்ந்திரந்தது எனக்குத் தெரியும் என்பதால் அதில் ஆச்சரியம் எதுவும் எழவில்i. ஆனால் அவரை பலரும் அந்த இடத்தில் பார்த்து அதிந்ந்ததை நான் உணர்ந்தேன். வரவேற்புரை நிகழ்த்திய இதாயதுல்லாஹ் கலைஞருக்கு முன்னிலையில் பேசுவதாலோ அல்லது பல நாட்கள் பாடுபட்ட நிகழ்ச்சியின் நிறைவு என்ற நெகிழசியினாலோ என்னவொ தடுமாறினார். ஆவர் எழுதி வைத்துப் பேசி இருக்கலாம். உணர்ச்சி வேகத்தில் இடஒதுக்கீட்டை பிச்சையாகவாவது தரும்படி கேட்டார். சில இயக்கங்களையும் அரசியல் கட்சிகளையும் வாழ வைத்துக் கொண்டிருந்த இட ஒதுக்கீடு கோஷம் இந்த முறை இலக்கிய கழகத்தையும் வாழ வைத்திருக்கிறது. இலக்கிய மாநாடு நடத்தினிர்களே என்ன சாதித்தீர்கள்? என்ன தீர்மாணம் நிறைவேற்றினீர்கள் என்று கேட்டால் இடஒதுக்கீடு பிச்சை கேட்டோமே அதுவும் முஸ்லிம்களுக்கு எந்த நன்மையும் தனியாக செய்து விடக் கூடாது அழுத்தமான பிடிவாதததில் இருக்கிற கiiலைஞரிடம் கேட்டோமே என்பதைத்தான் சொல்வார்கள். பிறை கூட ஒரு பிச்சை பாத்திரம் போலத்தான் இருக்கிறது என்று கவிக்கோ சொன்ன போது அதன் இலக்கிய தரத்தை மக்கள் ரசித்தாலும் அதன் எதாhதத்தை அவர்கள் ரசிக்கவில்லை.இடஒதுக்கீடு கோஷத்தை இயக்கங்கள் தங்கள் லாபத்தற்காக காப்பாற்றி வைத்துக் கொண்டிருக்கின்றன. இடஒதுக்கீடு மட்டுமே முஸ்லிம் சமதாயத்திற்கு தேவைப்படகிற பிரதான விசயம். ஆந்த ஒரு மாத்திரையில் சமுதயத்தை பீடித்தள்ள அனைத்து வியதிகளுக்கும் திர்வு கிடைத்துவிடும் என்று நடைபாதையில் கடைவிரித்திருக்கும் மருந்து வியாபாரியை போல் அவை குரல் எழப்பிக் கொண்டிருக்கின்றன. நீண்ட காலத்திற்கு யாராலும் நிறைவேற்றப்பட முடியாத ஒரு கோரிக்கையை கையில் எடுத்தக் கொண்டால் போராடுவதற்கு நீண்ட காலத்திற்கு வேறு தலைப்பை தேட வேண்டிய அவசியிம் இருக்காது என்ற காரணத்திற்காகவே இயக்கங்கள் அந்த கோஷத்தை உடும்புப்படியாக பிடித்திருக்கின. தங்களது இருப்பை ஊர்ஜிதம் செய்த கொள்வதற்காக இடஒதுக்கீடு கோஷத்தோடு கும்பகோணத்தை குலுங்க வைத்தவர்கள் இப்பொது அதே கோஷத்தோடு சிறைகளை நிரப்புவதற்கு தயாராவதை பாருங்கள். அடலேறுகளாய் சமுதாயத்திற்காக உழகை;க தயாராக இருந்த துடிப்பு மிக்க இளைஞர் கூட்டத்திற்கு தவறான வழியை காட்டி மாநிலத்திலள்ள அத்துனை சிறைகளிலம் அவர்களை முடக்கியவர்கள், அண்டப்புளுகு அகாசப்புளுகு என்பார்களே அதைவிட கேவலமான தகவல்களால் தூய இஸ்லாத்தை கொச்சைப்படுத்திய கயவர்கள இப்போது இடஒதக்கீட்டிற்காக 15 லட்சம் மக்களை சிறைகளில் நிரப்பப் போகிறார்களாம். இயக்கங்களின் இத்தகைய போக்கினால் ஒரு வகையான மூளைச் சலவைக்கு அளாக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமுதாயம், தண்ணிர் தேவை சாக்கடை தேவை சுகாதார மையங்கள் தேவை பிரசவ விடுதிகள் தேவை பள்ளிக் கூடங்கள் தேவை பள்ளிவால்கள் கட்ட அனுமதி தேவை போன்ற தேவைகளையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு இடஒத்ககீடு என்ற ஓரே கோஷத்தில் மயங்கிக் கிடக்கிறது என்பதாலோ என்னவே இலக்கிய மாநாட்டின் அறிவு ஜீவிகளும் அதையும் இலக்கிய வட்டத்திற்குள் சேர்த்துவிட்டார்கள். சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவருக்கு இலக்கிய விருது வழங்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு சுதந்திரமும் இலக்கியம் தான் ஏற்பாட்டாளர்களது பதிலை நான் இந்த இடத்தில் நினைவு கூர்ந்து கொண்டேன்.சமுதாயம் அந்தக் கோஷத்தை தாண்டி நடக்கத் தொடங்கிவிட்டது என்பதை அந்த நிகழ்ச்சியிலேயே மக்கள் உணர்த்தினார்கள். 12 ம்வகுப்புத் தேர்வில் நான்கு பாடப்பரிவுகளில் 200 க்கு 200 மதிப்பென் பெற்ற மாணவிக்கு விருது வழங்கப்பட்ட போது மொத்த அரங்கும் ஒன்று சேர கரவொலி எழுப்பியது. சாதாரணமாக தனது உரையில் அதிகமாக கைதட்டல் பெறுகிற கலைஞருக்கு கூட அந்த கைதட்டல் கிடைக்க வில்லை. எந்த அரசியில் வாதியின் தயவை நம்பியும் நாங்கள் இல்லை என்று உரத்து கூறுவதாக அந்தக் கைத்தட்டல் அமைந்தது.கவக்கோவின் உரையின் போக்கு சிலருக்கு புரிய வில்லை என்றாலும் அதில் தஃவாவன் ஒரு நொடி இருந்தது. இலக்கிய மாநாட்டின் நிறைவு நகிழ்ச்சிக்கு பொருத்தமாகவே இருந்தது. கவிக்கோவின் உரையின் இரண்டாம் பகுதி அவரது கவித்துவ மேதமையை எடுத்துக்காhட்டியது.மூன்றாம் நாள் அரங்கில் பெரிதும் பாரபாட்டப்பட்டது பாராளுமன்ற துணை சபாநாயகர் ரகுமான் கான் அவர்களின் உரை. இந்திய முஸ்லிம்கள் இரண்டு வகையான சூழ்நிலையில் இருக்கிறார்கள். மதஅடிப்படையில் அவர்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் என்ற அடிப்படையில் அவர்கள் யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை. அவர்களை கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். குர்னும் நபிவழியும் அவர்களை கொடுப்பவர்களாக இருக்கவே சொல்கிறது. சமுக ரீதியில் அவர்கள் பிற்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட வர்கைளi கைதூக்கிவிடுவதற்கு அரசாங்கம் பல முயற்சிகளை செய்கிறது. அந்த நன்மைகள் முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை. கலைஞர் போன்ற இன்றைய அரசாங்கத்தில் சொல்வாக்குள்ள தலைவர்கள் அதற்காக முயற்சித்தால் அது கிடைக்கும் என்று அவர் பேசியது மரியாதையான பேச்சாக இருந்தது. நிறைவுரை ஆற்ற வந்த கலைஞர் இடஒதுக்கீட்டு கோரிக்கையால், அதுவும் பிச்சை என்று கேட்டு விட்டதால் ஒருவகை தர்மசங்கடத்திலும் எரிச்சலிலம் இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். என்னய்யா உங்களோட இதே ரோதனையாப் போச்சு இட ஒதுக்கீடு தருகிற நிலையில் நான் இல்லை. அதை புரிஞ்சுக்காம பிச்சை கிச்சை என்றல்லாம் பேசி என்னை பேச வைக்கிறீங்களே என்ற கடுப்பில் தான் அது காந்hடாக வில் இருக்கும் என்றால் நாளைக்கே நான் உத்தரவிடத்தயார் என்றார். ஆந்திரா என்பதற்கு பதில் கர்நாடகா என்ற வார்தை தவறாக வந்து விட்டது. இதை புரிந்த கொள்ளாமல் இதோ நாளைக்கே உத்தரவிடப்போகிறார் என்று நினைத்துக் கொண்டு சிலர் கைதட்டியது முஸ்லிம் சிலரின் பேதமைய காட்டியது. தினமணி பத்ரிகை கூட முஸ்லிம்களுக்கு இட ஓதக்கீட்டுக் அவசர சட்டம் என்று செய்தி வெளியிட்டது ஆச்சரியமாக இருந்தது. மானுக்குப் பிணைநின்ற பழைய கதை ஒன்று மட்டுமே கலைஞர் உரையிலிருந்த இஸ்லாமிய இலக்கிய தொடர்பு. மாநாட்டு நிறைவு நாள் பேச்சுக்கள் இலக்கிய மாநாட்டை வாழ்வுரிமை மாநாடாக மாற்றிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கலைஞர் மிகப் பெருந்தன்மையோடு உமருப்புலவருக்கு தபால் தலை வெளியிட ஆவண செய்வதாக அறிவித்தார்.ஓரு தபால் தலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமே ஒரு சர்வதேச மாநாட்டின் பிரதான தீர்மாணமாகிவிட முடியும் என்றால் ஆட்சியாளர்கள் வெகு சீக்கிரத்தில் அதை நம் முகத்தின் மீது குத்தி நமக்கு நல்லது செய்த விடமாமாட்டார்களா என்ன?இஸ்லாமியத் தமிழ் இலக்கிய உலகின் நட்சத்திரங்களுக்கும், மாநாட்டின் விஷேச பிரமுகர்களும் எந்த ஒரு தனி மரியாதையும் தரப்படவில்லை. கலைஞர்; கரத்தால் விருது பெறும் இரண்டு சாகித்ய அகாதமியாளர்கள் பார்வையானர்கள் பகுதியிலிருந்து மேடையேறி வந்ததும் காவலர்கள் அவர்களை மேடை ஏற விடாமல் தடுத்து விசாரித்ததும் இலக்கியததிறந்கு நிகழ்ந்த அவமதிப்புகள். மாநாட்டில் ஆய்வாளர்கள் பலரும் பாரட்டப்பட்டது சிறப்பு. ஆனால் படைப்பிலக்கிய வாதிகள் இதில் கண்டு கொள்ளப்படவில்லை. அவர்களது படைப்புக்களை வைத்து ஆய்வு செய்து எம் பில், பிஎச்டி படட்டம் பெற்றவர்கள் பாராட்டப்பட்டார்கள். படைப்பாளிகள் ஓரங்கட்டப்பட்டார்கள். சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த ஹிமானா செய்யத் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து நிகழ்சிகளை பார்த்துக் கொண்டிருந்தார் அவ்வளவே! நிறைவு நாள் நிகழ்சியில் விருதுகளுக்கு தேர்வு செய்ய்பட்டவர்கள் குறித்து பலத்த ஆட்சேபம் எழுந்தது. மாநாட்டின் துணைச் செயலாளர் என்று அறிவிக்கப்படடிருந்த திருமலர் மீரான், இவ்விருதுகள் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பது தங்களிடம் எந்தக் கருத்தம் கேட்கப்படவில்லை என்றார். இது தவிர, உணவு தரமாகவும் போதுமானதாகவும் இருந்தபோதும் உபசரிப்பு இல்லாதததால் அது ருசிக்கப்பட்ட போதும் பாரட்டை பெறவில்லை. பேராளர்களுக்கு உணவு உறையுள் ஏற்பாடு செய்வதில் காணப்பட்ட அலட்சியம் கைகொள்ளப்பட்ட மெத்தனம் ஏதோ ஏற்பாடு பண்ணியிருக்கோம்ல எப்படியோ தங்கிகிக்க போ! எப்படியோ சப்ட்டுக்க போ! நீ கொடுக்கிற இருநூத்தம்பதுக்கு இதுவே ரொம்ப அதிகம் என்ற மனோபாவத்தை வெளிப்படுத்தியதாக பலரும் குறை கூறினர்.நவீனம் புதமை குறித்து வாய்கிழிய் பேசுவோர் சமுதயாத்தின் மிகப் பெரிய தொகை செலவழித்து நடத்திய மாநாடு பழைய பஞ்சாங்கமாக இருந்தது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். புதிய காற்றின் ஆசிரியர் ஹாமீம் முஸ்தபா சொன்னது போல 1980 களில் இப்படி ஒரு மாநாடு நடந்திருந்தால் அதை சரி பரவாயில்லை என்று சொல்லலாம் 2007 க்கு இந்த மாநாடு பொருத்தமானல்ல. நவீனத்துவத்தின் ஒரு சிறு அடையாளம் கூட மாநாட்டில் இல்லை. பத்ரிகை, தொலைக்காட்சி, இணைய வழி இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கூறுகள் எதவும் கண்டு கொள்ளப்படவில்லை.ஒரு வழியாக இலக்கியம் என்பது என்ன என்பதை புரிந்து கொள்ளவோ கலந்து கொண்டீடாரிடம் ஒரு இலக்கிய மலர்ச்சியை ஏற்படுத்தவோ தவறிய நிலையிலும் இனி இலக்கிய மாநாடு என்ற சொல்லிக் கொண்டு எவனாவது வந்தால் என்று பலர் பல்லைக் கடிக்கிற அளவிலம் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.இத்தனை குறைகள் இருந்தாலும் இலக்கியவாதிகள் அனைவரையும் ஓரிடத்தில் சந்திக்கிற வாய்புக்கிடைத்ததில் அனைவரும் மகிழ்ந்தனர். அதை சிரமப்பட்டு ஏற்பாடு செய்தவர்ககளை பாரட்டவே செய்தனர். நிகழ்சிகள் பெருந் தாமதமான போது கூட அமைதி காத்தனர். நூல்கள் வழங்கும் பணியில் தொண்டூழிர்களிடமோ அல்லது பேராசியர்களிடமோ ஒப்படைக்காமல் ஒரு பதிப்பகத்திடம் ஒப்பபடைத்தது ஏன் என்று கடுமையாக பேசிக் கொண்ட போதும் அது பற்றியோ வேறு அசௌகரியங்களைப் பற்றியோ எவருடைய நெஞ்சுச் சட்டையை பிடித்து யாரும் கேள்வி கேட்ட வில்லை. தங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களை தங்களது மனங்களுக்குள் வைத்துப் பூட்டியவாட்களாக அக்கம் பக்கத்தில் இருந்தோரிடம் புலம்பியவர்களாகவே அனைவரும் திரும்பிச் சென்றனர்.ஆனால் பத்ரிகைகளில் இது குறித்து விமர்சனங்கள் வருகிற போது பொறுப்போடும் பொறுமையோடும் பதலளிக்க வேண்டியது ஏற்பாட்டாளர்களின் கடமை. ஓரு நிழ்ச்சி பொதுமக்களை பொறுத்தவரை நன்றியுரையோடு முடிந்து பொய்விடும். ஏற்பாட்டாளர்களைப் பொறுத்தவரை அதற்குப்பின்னரும் பொறுப்பாக நடந்த கொள்ள கடமைப்படடிருக்கிறார்கள். இம்மாநாட்டை பொறுத்தவரை மாநாடு முடிந்த பிறகும் சர்சசைகள் தொடர்வது வேதனையானது. இலங்கை பதரிகைகளில் வந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கையில் இலங்கை குழவினர் இரண்டு குழவினரா வந்திருந்தனர். அதிலம் பலர் தங்களது குழந்ததைகள் குட்டிகளுடன் சுற்றுலாவுக்கு வருவது போல் வந்தனர். அவர்களுக்குள்ளும் சண்டை இருந்தது அமைசசர்களுக்குள்ளும் கூட மோதல் இருந்தது என்று மநாட்டு ஏற்பாட்டாளர்கள் விமர்ச்சித்திருப்பது கேடுகெட்ட விமர்ச்சனமாகும். தமிழக அரசியலின் கீPழ்த்தமான அரசியல் பாணி அது. அவர்கள் எப்படி வந்திருந்தாலும் மாநாட்டின் அரங்குகள் அத்தனையிலும் அவர்கள் தான் முழுமையாக உட்காந்து மாநாட்டில் கூட்த்தை காட்டினர் - ஒரு பார்வையாளர் சொன்னது போல வெளிநாட்டு பேராளர்கள் மட்டும் இல்லை என்றால் அரங்குகள் பலவற்றிலும் 50 க்கும் குறைவான இருக்கைகளே நிறைந்திருக்கும். இந்நிலையில் அவர்கள் தங்களது அதிருப்தியை இங்கிதமற்றோ கோபமாகவே வெளிப்படத்தியிருந்தாலும் கூட ஆரோக்கியமற்ற பதில்கள் பேசப்படுவது மாநாட்டின் பொருமையை மேலும் மங்கவைத்துவிடும்.அடுத்த மாநாடு மலேஷியாவில் நடக்கலாம் என்று கூறப்படகிறது. அந்த மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து செல்லும் இலக்கியப் பிரதிநிதிகள் எல்லோரும் ஒரே ஒரு குழவாக சொன்று வருவார்கள், அவர்களுக்கிடையே சண்டையே இருக்காது, அவர்களில் யாரும் சுற்றிப் பார்ப்பதற்காக போக மாட்டர்கள் என்று தமிழக இலக்கிய வாதிகள் யரேனும் உத்தரவாதம் தருவர்களா என்ன? ஜின்னாஹ் ஷர்புத்தீன் சொல்வது போல ஒரு சர்வதேச மாநாட்டை திட்டமிடத் தெரியமல் நடத்திவிட்டு வாயாடுவது நமது முதுகை மேலும் புண்ணாக்கி விடும். கசப்புணர்வை கலைந்து அடுத்த இலக்கிய மாநாட்டிற்குள் ஒரு நல்ல சூழலை ஏற்படுத்த இலக்கிய ஆர்வலர்கள் முயற்சிக்க வேண்டும். மண்டல அளவில் இலக்கியப் பேரவைகள் அமைக்கப்பட்டு அதற்கு ஒரு மைய அமைப்பும் ஏற்படுத்தப்பட்டு அதன் வழியாக இலக்கிய மாநாடுகள் நடக்க தொய்வின்றி தொட வழிசெய்யப்பட வேண்டும். அல்லாஹ் அருளட்டும்.மாநாட்டு நிகழ்சிகளை எல்லாம் வரிவிடாமல் கேட்டுக் கொண்டிருந்து விட்டு என் நண்பர் ஒருவர் சொன்னார்:அப்படியானால் இது மாநாடு அல்ல. கவிக்கோ ராஜாவாகவும் இதயதுல்லாஹ் இளவரசராகவும் அமிர்; அலி மந்திரியாகவும் இருந்து நடத்திய தர்பார் என்று சொல்லலாமா என்று கேட்டார்.என்ன பதில் சொல்வதென்று யோசித்தக் கொண்டிருக்கிறேன்! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்
No comments:
Post a Comment