Wednesday, August 4, 2010

கைவிடப்பட்ட காஸா

சொந்த பந்தங்களால் கைவிடப் பட்ட அநாதை போல, சுற்றி இருந்த அரபுநாடுகளாலும், உதவிக்கு வந்து ஊரை அடித்துத் தின்கிற ஐரோப்பிய நாடுகளாலும் ஏன் தன் சொந்த தேசத்தின் அதிபரால் கூட கைவிடப் பட்ட பரிதாபத்திற்குரிய காஸா நகரம் வரலாற்றில் மற்றுமொரு கருப்பு அத்தியாயாயத்தை சந்தித்தது. 2008 டிஸம்பர் 26 ம் தேதி முதல் 2009 ஜனவரி 17 வரை Operation Cast Lead என்று பெயரிட்டு இஸ்ரேல் நடத்திய பேயாட்டத்தால் நிலை குலைந்து போனது. கதறி அழ மட்டுமே காப்புரிமை பெற்ற சமுதாயம் மீண்டும் ஒருமுறை அழுது தீர்த்தது.
எந்த சோகத்திலும் தம் சுதந்திர வேட்கையை விட்டுக் கொடுக்காத காஸா நகரத்து மக்கள் உலகத்தின் ஒப்பாரியை ஒரு கக்கத்தில் இடுக்கிக் கொண்டு மறு கரத்தில் ராக்கெட் லாஞ்சர்களை ஏந்தி நின்றனர். யுத்தம் கொடுரமாகத் தொடர்ந்தது. நிலம், நீர், ஆகாயமென தன் சக்திக்கு உட்பட்ட அத்தனை திசைகளிலிர்ந்தும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்ததது. உலகமெங்கிருந்தும் கண்டனக் கனைகள் பறந்தன. கண்டன ஊர்வலங்களாலும் ஆர்ப்பாட்டங்களாலும் நாடுகள் குலுங்கின. புதிய அதிபரை பார்த்த மயக்கத்தில் அமேரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை மறந்திருந்த ஒரு பொன்னான சந்தர்ப்பத்தில் ஐநா சபை ஒரு தீர்மாணம் நிறைவேற்றிக் கூட போரைத் தடுக்கப் பார்த்தது. வழக்கப் படி "மசுறு" என்று அதை ஊதித் தள்ளி நிராகரித்த இஸ்ரேலிய அரசு மேலும் வேகமாக தாக்கத் தொடங்கியது. சமாதான முயற்சிகள் எகிப்து துருக்கி உள்ளிட்ட பல மட்டத்திலும் நடந்து கொண்டிருந்தன. எதுவும் உடனடி தீர்வுக்கு வழி செய்யவில்லை. . பலியானோர் எண்ணிக்கை நூறுகைளை தாண்டி ஆயிரத்தை தொட்டது.
திடீரென்று இஸ்ரேல் போரை நிறுத்தி விட்டது! அதுவும் ஒரு தரப்பாக!. இஸ்ரேலோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த ஹமாஸ் கூட சற்றே அதிர்ச்சியடைந்திருக்கக் கூடும். எதனால் இந்த திடீர் மாற்றம்?
ஹமாஸ் அமைப்பின் ஏவுகனை ஏவு தளங்களை அத்தனையும் அழிந்துவிட்டதா ? அல்லது நமது பெருமைக்குரிய பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற மஹானுபவர்கள் இஸ்ரேல் என்று பெயர் குறிப்பிட அஞ்சி பொத்தம் பொதுவாக அமைதிக்காக குரல் கொடுத்தார்களே அதனாலா? அல்லது அப்பாவிகளை கொல்வது அநியாயம் என்று இஸ்ரேலுக்கு யாரவது புதிதாக ஞானதீட்சை வழங்கினார்களா? அதில் இஸ்ரேல் திருந்திவிட்டதா? இதில் எதுவும் இல்லை.
பிறகு எதனால் இந்த அக்கிரமப் போர் அவசரமாக முடிவுக்கு வந்தது ?
அமெரிக்க அதிபராக புதிதாக பொறுப்பேற்க இருக்கிற ஒபாமா ஜனநாயகக் கட்சிக்காரர். அவர் இஸ்ரேலை சற்று நிதானப் படுத்தக் கூடும். அதற்கு முன்னதாக அரபகத்தில் உள்ள தனது எதிர்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கவே இஸ்ரேல் இந்தப் போரை தொடங்கியது. இன்னும் ஒரு பத்து வருடத்திற்கு ஞாககத்தில் வைத்திருக்கத் தக்க அழிவுகளை ஏற்படுத்தி விட்டதால் இது போதும். புதிய அதிபர் பொறுப் பேற்கிற போது அவருக்கு அதிக சிரமம் தரக்கூடாது என்பதற்காகவே அமெரிக்காவின் புதிய அதிபர் பொறுப்பேற்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக இஸ்ரேல் இந்த யுத்ததை நிறுத்தி விட்டது.
இது ஒரு யூகம்.
கடந்த ஆண்டு லெபனானுடன் சண்டையிட்டதில் மத்தியக் கிழக்கின் சூப்பர் பவர் என்ற இஸ்ரேலின் பெருமை அடிவாங்கியது. அதை மீட்கவே இந்த கொடூரத்தாக்குதல் நடத்தப் பட்டது. இதன் மூலம் இஸ்ரேலின் ஆளும் கட்சி ராணுவத்தின் ஆளுமையை காப்பாற்ற முயன்றது. ஆனால் இப்போது இவ்வளவு கடும் தாக்குதலுக்குப் பின்னரும் மக்களை தொல்லைப் படுத்த முடிந்ததே தவிர ஹமாஸின் ராணுவ வலிமை ஒழிக்க முடியவில்லை. ஹமாஸின் தொலைக்காட்சி ஒளிபரப்பில் கடந்த ஜனவரி 18 ம் தேதி ஞாயிரன்று பேசிய ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா "காஸா முனை மீதான இஸ்ரேலின் மூன்று வாரத் தாக்குதல் தோல்வியடந்து விட்டது. எதிரிகள் தங்களது நோக்கத்தில் தோற்றுவிட்டனர் என்று கூறியுள்ளார். எனவே மக்களை அழித்ததில் ஓரளவு திருப்தி கொண்டு இஸ்ரேல் பின்வாங்கி விட்டது.
இப்படியும் ஒரு யூகம்.
இப்படியாகத் தொடர்கிற யூகங்களில் சில உண்மை இருந்தாலும் இருக்கலாம். ஆனால் இது இதைக் தாண்டி இஸ்ரேலின் தீடீர் தாக்குதலிலும் திடீர் சண்டை நிறுத்தத்திலும் அடிப்படையான ஒரு அம்சம் இருக்கிறது. சர்வதேச சமுதாயம் கவனிக்க வேண்டிய விசயம் அது. அதுவே இஸ்ரேலின் இன வெறி.
அப்பாவிக் முஸ்லிம் குழந்தைகளையும் நிராயுதபாணி முஸ்லிம் பொதுமக்களையும் கொல்வதை இஸ்ரேல் பாவம் என்று கருதுவதில்லை. தவறு என்றே கூட நினைப்பதில்லை. அதனால்தான் காஸாவில் ஏற்பட்ட மிகமோசமான மனிதக் படுகொலைகள் பற்றிய எந்தக் கோரக் காட்சியும் அதன் இதயத்தை தொட வில்லை. தொடாது. திருக்குரான் கூறுகிறது. (யூதர்களே! பிறகு உங்களது இதயங்கள் இருகிவிட்டன. அது பாறை போன்றதாக ஆகிவிட்டது. இல்லை. பாறயைவிட அது இன்னும் கடினப் பட்டுவிட்டது. பாறைகளில் கூட சில நேரங்களில் நீர் கசியும் (உங்கள் இதயங்களில் அதுவும் இல்லை)
15 நூற்றாண்டுகளுக்கு முந்தைய திருக்குரானின் இந்த விமர்சனம் இன்றளவும் யூதர்களுக்குப் பொருந்தும்.
இரண்டாம் உலக யுத்தத்திற்கு சற்று முன்னதாக ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் ஒரு யூதனை பிடித்த ராணுவ வீரன் அவனை கொல்ல முயன்றான். அப்போது அந்த யூதன் அலறினான், "என்னை எதற்காகா கொல்கிறாய்? நான் என்ன தவறு செய்தேன்? என்று கேட்டான்.
நீ யூதன். அதனால் தான் உன்னை கொல்கிறேன் என்று அந்த ஜெர்மனிய வீரன் சொன்னானாம்.
இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் நடைபெற்ற இந்த உரையாடல் அநீதியானதாக மனிதாபிமானமற்றதாக தோன்றினாலும் இருபத்த்தி ஒன்றாம் நூற்றாண்டு இதில் சில தர்ம நியங்கள் புதைந்து கிடப்பதை உணர்ந்து கொள்ளும் போல தெரிகிறது.
காஸா முனை மீதான் இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதல் அந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. இஸ்ரேலியர்களின் மிருகத்தனம் அல்லது இஸ்ரேலிய மிருகங்களின் குணம் மீண்டும் ஒரு முறை அவர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை உலகிற்கு புரிய வைத்துள்ளது.
மூன்று வாரங்களாக காஸாமீது பொழியப் பட்ட குண்டு மழை எந்த காரண்த்தை கொண்டும் நியாயப் படுத்த இயலாது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உள்ளிட்ட அமெரிக்க பத்ரிகைகளே கூட ஒத்துக் கொண்டன. இஸ்ரேலின் உரிமையை நிலைநிறுத்துவது அல்லது இஸ்ரேலின் நலனை பாதுகாப்பது அல்லது ஹமாஸை ஒழிப்பது என்ற தேவையை விட இந்த தாக்குதல்கள் மிக அதிகம் என அவை நாசூக்காக கூறின. சில பத்ரிகைகள் துணிந்து இஸ்ரேல் போர்க்குற்றம் புரிந்து வருவதாக கூறின.
ஜெரூஸலம் போஸ்ட் பத்ரிகை தரும் தகவலின் படி டிஸம்பர் 26 ம் தேதி இஸ்ரேல், 100 பைட்டர் ஜெட் விமானங்களையும் குண்டு வீசும் ஹெலிகாப்டர் களையும் அனுப்பி காஸாமுனையின் மீது 200 குண்டுகளுக்கும் மேலாக வீசியது. 170 இலக்குகளை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப் பட்டது என்று இஸ்ரேல் கூறீய அந்த இலக்குகளில் பள்ளிவாசல்கள் பள்ளிக் கூடங்கள் மருத்துவ மனைகள் காவல் நிலையங்கள் அரசு கட்டிடங்கள் பொதுமக்கள் வாழ்விடங்கள் அனைத்தும் அடங்கும். முதல் நாள் தாக்குதலில் மட்டும் சுமார் 240 பேர் கொல்லப் பட்டார்கள். முதல் வாரத்தில் மட்டும் 12 பள்ளிவாசல் தரை மட்டமாக்கப் பட்டிருந்த தாக ராபிதததுல் ஆலமில் இஸ்லாமியா எனும் இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு கூறியது.
ஒருபெரும் பூகம்பத் தாக்குதலுக்குள்ளான நகர் போல் காஸா காட்சியளிக்கிறது என பி.பி.சி கூறுகிறது. போர்நிறுத்ததிற்குப் பிறகு காஸாவை நேரில் பார்த்த ஒருவர், காஸாவில் ஏங்கு நோக்கினும் உடைந்த மரச்சாமான்களும் உருக்குலைந்த இரும்புச் சட்டங்களும் சிதறிக்கிடக்கின்றன, அவை மட்டுமே அங்கே இருக்கின்றன என்று பி.பி.சிக்கு எழுதுகிறார்..

ஒன்றின் மேல் ஒன்றாக சிதைந்து விழுந்துள்ள கட்டிட இடுபாடுகள் காரணமாக மீட்புப் பணியில் தாமதம் ஏற்படுவதாக கூறிய பி.பி.சி இடிபாடுகளுக்கு இடையே இருந்து இன்னும் சடலங்கள் எடுக்கப் படுவதாக கூறியுள்ளது.

இதுவரை 50800 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக கூறுகிற ஐநாவின் அறிக்கை ஒன்று 40,000 பேர் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி அவதியுறுகின்றனர் என்கிறது

இஸ்ரேலின் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதங்களைகண்க்கிடும் பணி இஸ்ரேலின் முற்றுகை அகன்ற பிறகுதான் ஆரம்பித்துள்ளது என்பதனால் இத்தாக்குதலில் காஸாவுக்கு ஏற்பட்ட சேத விவரம் இன்னும் முழுமையாக தெரிய வில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி இஸ்ரேலின் வெறியாட்டத்தில் ஏற்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகளுக்கான சீரழிவிலிருந்து காஸாவை காப்பாற்ற இனி ஒரு தலைமுறை பிடிக்கும்.

இத்தனைக்கும் பிறகு தொடர்ந்து இஸ்ரேல் நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தேவையான நிவாரண உதவிகள் காஸாவுக்குள் அனுப்பப் பட்டுள்ளதாக இஸ்ரேலின் ராணுவப் பேச்சாளர் மார்க் ராக்யோ கூறுவதாக சொல்கிற பி.பி.சி ஆனால் இப்பொருட்கள் பாதிக்கப் பட்டமக்களை சென்றடைந்ததா என்பதை தம்மால் உறுதிப் படுத்திக் கொள்ள முடியவிலை என்று கூறுகிறது.

தாக்குதல் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 13 இஸ்ரேலியர்கள் கொல்லப் பட்டுள்ளார்கள். அதேநேரத்தில் பாலஸ்தீனின் மருத்துவ வட்டாரங்களின் தகவலின் படி இதுவரை காஸாவில் 1300 பாலஸ்தீனர்கள் கொல்லப் பட்டிருக்கிறாகள். 5500 காயமடைந்திருக்கிறார்கள். கொல்லப் பட்டவர்களில் 300 க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். அழகிய பிஞ்சுக் குழந்தைகள் அழுகிய காய்கறிகள் போல கொத்துக் கொத்தாக கொட்டப் பட்டுக்கிடந்த காட்சியை கண்ட உலகம் குலுங்கியது. இஸ்ரேலியர்கள் மனிதர்கள் தானா என்று மக்கள் குமுறினர். ஆனால் இஸ்ரேல் எதெற்கும் அலட்டிக் கொல்லவில்லை. குறைந்த பட்சம் குழந்தைகள் கொல்லப் பட்டதற்கு, குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் ஒரு பாலர் பள்ளிக் கூடத்தின் மீது குண்டு விழுந்து அதிலிருந்த அத்தனை குழந்தைகள் மாண்டுபோனதற்கும் - ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. தெரிவிக்காது. ஏனேனில் இவை எதுவும் எதோச்சையாக நடந்தது அல்ல.
இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவின் பென்குரியனிடம் David Ben-Gurion இஸ்ரேல் படைகளின் தளபதி ஈகல் அலன் Yigal Allon அரபுகளை நாம் என்ன செய்வது "What shall we do with the Arabs?" என்று கேட்டபோது அவர் என்ன பதில் சொன்னார் என்பதை இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் ஒருவர் விவரிக்கிறார். கைககளை அலட்சிய்மாக உதறியபடி பென் கூரியன் சொன்னார் 'Expel them'". அவர்களை வெளியே தள்ளிவிடுங்கள்
இன்றுவரை இஸ்ரேலிய இராணுவத்திற்கும் அரசியல் வாதிகளுக்கும் அந்த வார்த்தைகளே இலட்சிய எல்லைகளாக இருக்கின்றன. கூடுமானவரை வாய்ப்புக்களைஉரூவாக்கி பாலஸ்தீனர்களை கொல்லுவது. முடிந்தவரை அவர்களது நிலங்களை திருடுவது என்பது மாத்திரமே இஸ்ரேலின் தாரக மந்திரம்.
Peacemaker அமைதியை உருவாக்கியவர் என்று மீடியாக்களால் விளம்பரப் படுத்தப்பட்டு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்ட இட்சாக் ரபீன் Yitzhak Rabin யாசிர் அரபாத்துடனான அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது கூட இந்த திட்டத்தின் ஒரு பகுதிதான்.
பாலஸ்தீன பிரச்சினைக்கு தனது வாழ்நாளுக்குள் தீர்வுகண்டு விட வேண்டும் என்று துடித்த யாசிர் அரபாத் ஓஸ்லோ உடன்படிக்கை என்ற அந்த மாசு நிறைந்த ஒப்பந்தத்தில் கயெழுத்திட்டார். யுத்த அபாயங்களை பற்றி கவலை எதுவுமின்றி பல தலைமுறைகளாக கவுரமாக வாழ்ந்த ஒரு சமுதாயம், வாழ்கையின் சகல விதமான சிரம்க்களை யும் கடந்த இரண்டு தலைமுறையாக அனுபவித்து வருவதை மேலும் சகிக்கப் பொருக்காமல், இந்த ஒப்பந்தத்தில் யாசிர் அரபாத் கையெழுத்திட்டிருக்கலாம். ஆனால் அது 'Expel them' என்ற பென்கூரியனின் வார்த்தைக்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை பெற்றுத்தரும் ஒரு நடவ்டிக்கை என்பதை அவர் ஆரம்பத்தில் உணர்ந்தாரில்லை. பின்னால் உணர்கிற ஒர் சந்தர்ப்பம் வந்த போது அவர் வீட்டுக்காவலில் இருந்தார்.
இந்த அபாக்கிய நிலையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறா? பாலஸ்தீனின் அதிபரான யாசிர் அரபாத் அவரது சொந்த தேசமான பாலஸ்தீனிற்குள்ளேயே வீட்டுக்காவலில் இருந்தார். பக்கத்து நாட்டின் ரானுவம் அவரது உதவியாளர்களை கொன்றொழித்து அவரது வீட்டுச் சுவர்களை கூட புல்டோஸரால் உடைத்துக் கொண்டிருந்தது என்றால் அது என்ன தேசம்? இப்படி ஒரு நாடா என்ற கேள்வி உங்கள் மனதில் உலாவருகிறதல்லவா?
இஸ்ரேலுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இப்படிப் ப்ட்ட ஒரு பரிதாபகரமான நிலைமைக்குத் தான் பாலஸ்தீனர்கள் ஆளானார்கள். ஆனால் இஸ்ரேலோ இந்த ஒப்பந்தத்தின் மூலம் பல்வேறு வழிகளில் மிக ஏராளமான அனுகூலங்களை அடைந்தது. அதில் முக்கியமானது. இஸ்ரேலை தீண்டத்தகாத நாடாக ஒதுக்கிவைத்திருந்த சவதேச நாடுககள் பலவும் இஸ்ரேலுடன் கைகுலுக்கத்தொடங்கின. அது பாலஸ்தீனர்களின் பரிதாப நிலையை மேலும் சிக்கலாக்கியது. அனுதாபத்திற்கு கூட அருகதை அற்றவர்களாக அவர்கள் ஆகிப் போனார்கள்.
இந்தியாவையே எடுத்துக் கொள்ளுங்களேன். முன்னர் பாலஸ்தீனர்கள் துன்பப் படுகிற சந்தர்பத்திலெல்லாம் இந்தியா அவர்கள்து இதயங்களுக்கு அருகே இருந்து ஆறுதல் சொன்னது. உதவிகளை வாரி வழங்கியது. சர்வதேச அரங்குகளில் அவர்களுக்காக பரிந்து பேசியது. திருமதி இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக இருந்த காலத்தில் நடைபெற்ற அணிசேர நாடுகளின் மாநாட்டிற்கு யாசிர் அரபாத் அழைக்கப் பட்டார். அப்போது அவருக்கு சொந்தமாக ஓரடி நிலம் கூட இருக்கவில்லை. ஆனால் ஒரு தேசத் தலைவருக்குரிய மரியாதை அவருக்கு வழங்கப் பட்டது. இந்திர அம்மையாரோடு சேர்ந்து இந்திய தேசமே அவரை வரவேற்று ஆர்ப்பரித்தது. அத்தோடு இந்தியா இஸ்ரேலிடமிருந்து வெகு தூரம் விலகி இருந்தது. இந்தியாவின் கடவுச் சீட்டுக்களில் இஸ்ரேலுக்கு பயணம் செய்யமுடியாது என்ற முத்திரை இருந்தது. விளையாட்டு வீரர்கள் இஸ்ரேலுக்குச் சென்றால் இந்தியாவுக்கு வர முடியாது என்ற நிலை இருந்தது. 1988 ல் இஸ்ரேல் பாலஸ்தீன் உடன்பாடு, இல்லை இட்சாக் ரபீன் யாசிர் அரபாத் உடன் பாடு ஏற்பட்ட பிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. 1992 ல் இந்தியா இஸ்ரேலுடன் தூதரக உறைவை வைத்துக் கொண்டது. அந்த உறவை இஸ்ரேல் வேகமாக வளர்த்துக் கொண்டது. இப்போது இந்தியாவும் இஸ்ரேலும் சுமார் 6200 கோடிக்கு ஆயுத வியாபாரத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளன. முன்னர் ரஷ்யாவுக்கு கொடுத்திருந்த இடத்தில் இப்போது இந்தியா இஸ்ரேலை இருத்தி இருக்கிறது. (அமெரிக்காவுக்கு தன்னையே தாரை வார்த்துவிட்டது என்பது வேறு விசயம்.) காஸாவில் குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப் படுகிறார்கள் ஊரே தரைமட்டமாக்கப் படுகிறது. இந்தியாவும் அதை கண்டிக்கிறது. ஆனால் அதன் குரலில் ஜீவன் இல்லை. சென்னையில் நடைபெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் காஸாவின் மீதான தாக்குதலை கண்டித்த பாரதப் பிரதமர் திருமிகு மன்மோகன் சிங் அவர்களின் உரையை நான் ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருந்தேன் அவரது திருவாய் ஒரு தடவை கூட "இஸ்ரேல்" என்று சொல்லவே இல்லை.
இந்த மந்திர மாற்றத்திற்கான முக்கியக் காரணம் இஸ்ரேலும் பாலஸ்தீனும் செய்து கொண்ட உடன்படிக்கைதான். பாலஸ்தீனே இஸ்ரேலோடு கைகோர்த்து விட்ட பிறகு நாம் ஏன் விலகி நிற்க வேண்டும் என்ற எண்ணமே இந்திய ராஜ தந்திரிகளை இஸ்ரேலோடு கைகோர்க்க வைத்தது. அது முஸ்லிம்கள் விசயத்தில் ஈவுஇரக்கத்திற்கி இடம் விடாதவாறு இறுகியும் விட்டது.
உலக மகா அயோக்கிய சிகாமணிகளான அமெரிக்காவும் இஸ்ரேலும், உலகத்தை ஏமாற்ற போட்ட திட்டம் தான் பாலஸ்தீனின் சுயயாட்சி என்பது. அது பாலஸ்தீன மக்களை அடக்கியாளும் அதிகாரத்தை இஸ்ரேல் சட்ட பூர்வமாக பெறுவதற்கு வழி வகுத்ததே தவிர பாலஸ்தீன மக்களின் கண்ணீரைத்துடைக்க கைக்குட்டையை கூட நீட்டவில்லை.
இன்றைய சுழ்நிலைக்கு உலகின்மிகப் பெரிய பொய் எது தெரியுமா? பாலஸ்தீன் என்று ஒரு நாடு இருப்பதாக கருதுவதுதான். இன்றைய சுழ்நிலைக்கு உலகின்மிகப் பெரிய வேடிக்கை எது தெரியுமா? உலகின் 117 நாடுகளில் பாலஸ்தீன நாட்டிற்கு தூதரக உறவு இருப்பது தான்.
இப்படி ஒரு விசயத்தை உலகம் நம்பியதால் அதற்கு பெரிய பாதிப்புக்கள் எதுவும் ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் இதையே உலக முஸ்லிகளும் நம்பிவிட்டதில் தார்மீகமாவும் செயல்ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் அவர்கள் மிகவும் பின் தங்கிவிட்டார்கள்.ஏமாந்து போய்விட்டனர். இன்னொரு வார்த்தையில் சொவதானால் ஈஸா சிலுவையில் அறையப் பட்டார் என்று நம்புகிற கிருத்துவர்களை போலவே இதுவிசயத்தில் முஸ்லிம்கள் சரியான பாதையிலிருந்து சருகிவிட்டார்கள்.
பாலஸ்தீன் எனபது இன்றைய நிலையில் இஸ்ரேல் நாட்டிலிருக்கிற ஒரு முன்சிபாலிட்டிக்கு பெயர். அதுவும் கிழக்கில் ஒரு துண்டு மேற்கில் ஒரு துண்டு என பிரிந்து கிடக்கிற நிலத்தை இணைத்து உருவாக்கப் பட்ட ஒரு முனிசிபாலிட்டி. விலக்குமாறுக்கு பட்டுக் குஞ்சம் என்பது போல அதன் மேயர் அதிபர் என்று அழைக்கப் படுகிறார். ஆணையாளர் பிரதமர் என்றும் கவுன்சிலர்கள் அமைச்சர்கள் என்றும் அழைக்கப் படுகிறார்கள். இதற்கு மேல் எதுவும் இல்லை.
அந்த முனிசிபாலிட்டிக்கு உள்ளும் பிரச்சினை. நம் ஊரில் பஞ்சாயத்து தலைவரும் கவுன்சிலர்களும் மோதிக் கொள்வார்கள் இல்லையா? அது போல அங்கும் ஒரு மோதல் அந்த மோதலை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலின் எண்ணப் படி ஊதிப் பெரிதாக்கின அதன் விளைவாக பாலஸ்தீன நகராட்சியின் ஒரு பகுதியின் மீதான தாக்குதல் அதன் மேயரின் ஒப்புதலுடன் நடக்கிறது. புரிகிற வார்த்தையில் சொல்வதானால் பாலஸ்தீன் ஒரு பகுதியிலிருக்கிற முஸ்லிம்கள் மீதான தாக்குதலை மற்றொரு பகுதியிருக்கிற முஸ்லிம் அரசியல் வாதிகள் ஆதரிக்கிறார்கள்.
மளையாள தொலக்காட்சியான கைரளியில் ஓளிபரப்பான கிராஸ்பையர் நிகழ்சியில் ஒரு இளைஞன் கேட்ட கேள்வி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த என்னை மட்டுமல்ல நிகழ்சியை நடத்திக் கொண்டிருந்த பிரணாய் அதிர்ச்சிக் குள்ளாக்கிவிட்டது. இந்தியாவில் இஸ்ரேலுக்கு இவ்வளவு ஆதர்வு இருக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று அவர் ஆச்சரியத்தோடு கூறினார். அந்த இளைஞனின் கேள்வி இது தான். பாலஸ்தீனி ஒரு பகுதியான மேற்கு கரையில் இருக்கிற முஸ்லிம்களே காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை ஆதரிக்கிறார்கள் நீங்கள் எதற்கு இங்கிருந்து கொண்டு இஸ்ரேலை எதிர்த்துக் குதிக்கிறீர்கள்? இந்தக் கேள்வியை காது கொடுத்து கேட்டதற்கே மிகவும் வலித்தது. என்றால் அந்த வலியை நேரிட்டு அனுபவிக்கிற மக்களின் வேதனை எத்தகையதாக இருக்கும்.?
தங்களது தேசம் திருடப் பட்டதை எதிர்த்தும் தங்கலது மக்களின் சுத்தந்திரத்திற்காகவும் சில தலைமுறைகளாக தீரமாக போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு அற்பமான ஒரு மகிழ்சியை கொடுத்து பிறகு அவர்களை வைத்தே அவர்களது கண்களை குத்த்வைக்கிற ஏற்பாட்டை எவ்வளவு கச்சிதமாக இஸ்ராலும் அதன் கள்ளக் கூட்டாளிகளும் செய்துவிட்டார்கள்? அந்த திருட்டு ஏற்பாட்டை நிலை நிறுத்தி விடுவதற்காக எத்தகைய கொடூரங்களை அரங்கேற்றுகிறார்கள்?
காஸாவின் வரலாற்றை சற்றே அகழ்ந்து பார்த்துவிட்டு வந்தால்தான் இதிலுள்ள எதார்த்தமும் வேதனையும் புரியும். பாலஸ்தீன் விசய்த்தில் எத்தகைய நிலைப் பாட்டை மேற்கொள்வது என்ற தெளிவும் கிடைக்கும்.
காஸா உலகின் புராதான நகரங்களில் ஒன்று. அரபியில் ஃகஸ்ஸா என்று அழைக்கப்டும் நகரே ஆங்கில வழக்கிலும் அதன் வழியாக தமிழ் உருமாற்றத்திலும் காஸா என்றழைக்கப் படுகிறது. மஸ்ஜிதுல் அக்ஸா எனும் இஸ்லாமின் மூன்றாவது புனித பள்ளிவாசலையும் இதையும் சேர்த்து சிலர் குழப்பிக் கொள்வதுண்டு. அது வேறு.இது வேறு. ஃகஸ்ஸா என்ற வார்த்தைக்கு மரியாதை என்று பொருள். கஸ்ஸாவில் தன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பாட்டனார் ஹாஷிமின் கல்லறை உள்ளது. இதன் காராணமாகவே அது "கஸ்ஸத்து ஹாஷிம்" ஹாஷிமின் கல்லறை உள்ள மரியாதைக்குரிய இடம் என்று அழைக்கப் பட்டதாக விக்கிபீடியா கலைக்களஞ்சியம் கூறுகிறது. இஸ்லாத்தின் நான்கு சட்டப் பிரிவுகளில் ஒன்றான ஷாபி பிரிவின் முன்னோடியான இமாம் ஷாபி இங்கு பிறந்தவர்தான்.
இவற்றை எல்லாம் விட மத்தியத்தரைக்கடலின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்நகரம் அதன் கேந்திர முக்கியத்துவத்தின் காரணமாக அது பல்வேறு வடிவங்களைப் பெற்று பிரபலமடைந்து வந்தது. பழங்காலத்தில் அது சுறுசுறுப்பான வியாபார மையாகவும் எகிப்துக்கும் சிரியாவுக்கும் இடையே பயணம் செய்யும் வியாபாரக் கூட்டங்கள் தங்கிச் செல்லும் இடமாகவும் இருந்தது.
காஸாநகரத்தை உள்ளடக்கிய மத்தியத்தரைக்கடலை ஒட்டிய கடற்கரை பிரதேசம் காஸாமுனை என்று சொல்லப் படுகிறது. அது இப்போது எகிப்தின் தென்மேற்கு எல்லையாகவும், இஸ்ரேலின் வடகிழக்கு எல்லையாகவும் இருக்கிறது. அது 41 கிலோமீட்டர் நீளமும் 6 முதல் 12 கிலோமீட்டர் வரை அகலமும் கொண்டது.
காஸா, உமர் ரலி அவர்கள் ஆட்சிக் காலத்தில் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்களால் கி.பி.637 ல் கைப் பற்றப் பட்டது. அன்றிலிருந்து இடையில் ஏற்பட்ட சில சிலுவைப் போர் விபத்துக் களை தவிர்த்து சுமார் ஆயிரத்து முன்னூறு வருடங்கள் அது முஸ்லிம்களின் கட்டுப் பாட்டிலேயே இருந்தது. முதலாம் உலகப் போருக்குப் பின் துருக்கிய கிலாபத் வீழ்ந்த போது 1917 ல் பிரிட்டிஷ்காரர்கள் துருக்கியிடமிருந்து காஸாவை கைப்பற்றினார்கள். தொடர்ந்து பிரிட்டிஷாரால் நிர்வகிக்கப் பட்ட பாலஸ்தீனின் ஒரு அங்கமாக காஸா இருந்தது. பிறகு சர்வதேச நாடுகள் சபையின் பொறுப்பில் அது விடப்பட்டது.
இரண்டாம் உலக யுத்தம் ந்டை பெற்ற காலகட்டத்தில் யூதர்கள் பிரிட்டிஷிற்கும் அமெரிக்காவிற்கும் பெருமளவில் உதவினார்கள். அற்கு பதிலாக ஜெருசலத்தை தலிமையிடமாக கொண்டு தங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்று தொடர்ந்து பிரிட்டனையும் அமெரிக்காவையும் அவர்கள் கோரி வந்தனர். அதன் விளைவாக பாலஸ்தீன அரபுகளிடமிருந்து நிலத்தை திருடி பாலஸ்தீனிற்குள் இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்க வல்லரசுகள் திட்டமிட்டன. தங்களது நாட்டில் குடியேறியிருக்கிற ஆபத்தான சக்திகளான யூதர்களை தங்களது நாடுகளிலிருந்து வெளியே இனுப்ப இது தான் நல்ல தருணமென்று நினைத்த ரஷ்யா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் அதை ஆதரித்தன. இஸ்ரேலியர்களுக்கு ஒரு நாட்டை உருவாக்கும் பல்போர் தீர்மாணம் உருப்பெற்றது.
ஜோர்டான் நதியிலிருந்து மத்தியத்தைர்க்கடல் வரை பரவியிருந்த பாலஸ்தீனிற்குள்1948 ம் ஆண்டு திருட்டத்தனமாக இஸ்ரேல் நாட்டை உருவாக்கியது மட்டுமல்லாது அதை பாலஸ்தீனின் நடு மார்பில் அமைத்தனர்.பைத்துல் முகத்தஸ் புனிதப் பள்ளிவாசல் அமைந்துள்ள ஜெருஸலத்தை யூதர்கள்சொந்தம் கொண்டாடுவதற்கு வசதியாக இந்த ஏற்பாடு நடைபெற்றது. இதனால் ஜோர்டான் நதிக்கரைய ஒட்டிய பாலஸ்தீனின் பகுதிகளும் அதன் இன்னொரு எல்லையான மத்தியத் தரைக்கடலை ஒட்டிய காஸாபகுதியும் தனித்தனி துண்டுகளாக பிரிந்தன. இரண்டு தனித்தனி துண்டுகளை சேர்த்துத்தான் இப்போது பாலஸ்தீன் என்று அழைக்கப் படுகிறது. இரண்டுக்கும் இடையே இரும்புத்திரையாக இஸ்ரேலின் ராஜாங்கம் நடக்கிறது. அரபுகள் ஒன்று திரண்டு விட முடியாத படி செய்யப்பட்ட சதி அது.
இஸ்ரேல் அமைக்க்ப பட்ட போதே பாலஸ்தீனமும் அமைக் கப்பட்டது. ஆனால் அரபுகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இஸ்ரேலின் வலிமை அதன் பின்னணி பற்றி அறிந்து கொள்ளாத அரபு நாடுகள் இஸ்ரேல் பிறந்த அன்றே அதன் மீது அவசரமாக யுத்தம் தொடுத்தன. யுத்தத்தில் அரபு நாடுகள் மோசமாக தொற்ற போது பாலஸ்தீனம் சிதைந்து போனது. 1948 ல் 369 பாலஸ்தீன ஊர்களை இஸ்ரேல் அழித்தது. யுத்தத்தில் ஈடுபட்ட அரபு நாடுகள் தம் பங்கிற்கு பாலஸ்தீனை மேலும் சிதைத்தன. பாலஸ்தீனின் பகுதிகளாக அறிவிக்கப் பட்டிருந்த காஸாவை எகிப்து கைப்பற்றி கொண்டது. மேற்கு கரையை ஜோர்டான் கைப் பற்றிக் கொண்டது. காஸாவை 1948 லிருந்து காஸா எகிப்திடமிருந்தது. 1967 ல் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மற்றொரு போர் நடந்தது அதில் அரபு நாடுகள் மிக மோசமாக தோற்றன. எகிப்திடமிருந்து காஸா ஜோர்டானிடமிருந்து மேற்கு கரை ஆகிய வற்றை மட்டுமல்லாது அதுவரை அனைத்து இனத்தவருக்கும் சொந்தமானதாக ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டில் இருந்த பைத்துல் முகத்தஸ் புனிதப் பள்ளிவாசல் அடங்கியிருக்கிற ஜெரூசலம் நகரத்தையும் சேர்த்தே கைப்பற்றியது. தங்களது கள்ள்க் குழந்தை அரபு நாடுகளை கப்ளீகரம் செய்வதை அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கை கட்டி வேடிக்கை பார்த்தன.
1948 லிலிருந்து பாலஸ்தீன்னின் விடுதலைக்காக பாலஸ்தீன மக்கள் பல்வேறு குழுக்களாக போராடினர். அதில் பிரதானமானது யாசிர் அரபாத்தின் அல்பதாஹ் இயக்கம். வேறு பல குழுக்களும் இருந்தன.1963 ம் ஆண்டு விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த அந்த குழுக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து பி.எல்.ஒ என்ற அமைப்பு தொடங்கப் பட்டது. அந்த அமைப்புக்கு ஐக்கிய நாடுகள் சபையில் பார்வையாளர் அந்தஸ்து தரப் பட்டது. தான் உருவாக்கிய ஒரு ரவுடி தேசத்தினால் பாரம்பரையமான ஒரு நாடு காணாமல் போனதற்காக ஐக்கிய நாடுகள் சபை வெளிப்படுத்திய அதிகபட்ச நல்லெண்ணம் இது. இதைதான் வடிகட்டிய அயோக்கியத்தனம் என்பார்கள். இந்த நடவடிக்கையின் அல்லது இந்தப் புதிய அந்தஸ்தின் காரணமாக அல்லது மயக்கத்தினால் பி.எல்.ஓ அமைப்பு போராட்ட வழி தவிர்த்து வேறு வழியான அரசியல் தீர்வுகளையும் தேடியது. எப்படியாவது ஒரு சமாதானம் ஏற்பட்டாக வேண்டும் என்று அவர்கள் யோசிக்க வேண்டிய நிர்பந்ததத்தை இஸ்ரேல் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வந்தது. பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு மிக மோசமான கொடுமைகளை இஸ்ரேலிய அரசு இழைத்தது.
இப்போதைய தாக்குதலுக்கு ஹமாஸின் ராக்கெட் தாக்குதலை காரணமாகச் சொல்வது போல ஏதாவது ஒரு சப்பையான காரணத்தை சொல்லிக் கொண்டு அரபுகளை சூரையாடியது. அவர்களது வீடுகளை கணக்கின்றி இடித்துதள்ளியது. அரபுகளின் வீடுகளை இடித்துத் தள்ளுவதற்கென்றே விஷேசமாக வடிவமைக்கப் பட்ட புல்டோஸர்களை உருவாக்கியது.
Caterpillar Tractor என்ற கம்பெனி பாலஸ்தீனர்களின் வீட்களை இடிப்பதற்கென்றே விஷேசமாக வடிவமைக்கப் பட்ட புல்டோஸர்களை இஸ்ரேலுக்காக தயார் செய்து கொடுத்தது. மனித உரிமை ஆர்வலரான Rachel Corrie என்பவர் அந்த புல்டோஸர்களில் ஒன்றின் முன் அதை அறவழியில் தடுத்து நிறுத்த போராடினார். இஸ்ரேலியர்கள் அவரை கைது செய்திருக்கலாம். அல்லது அப்புறப்படுத்தி இருக்கலாம். ஆனால் சர்வசாதரணமாக அவர் மீது புல்டோஸை ஏற்றி சிதைத்தார்கள். இதுதான் இஸ்ரேலின் அணுகுமுறை.
இத்தகைய அணுகுமுறையில் இஸ்ரேலின் கொடூரம் உச்ச கட்டத்தை எட்டிக் கொண்டிருந்த சூழலில் பாலஸ்தீன போராளிகளும் தங்களது போராட்டத்தை தீவிரப் படுத்தினார்கள். வரலாற்று ச்சிறப்பு வாய்ந்த முதலாவது இன்திபாதா போராட்டம் நடந்தது. பல லட்சக்கணக்கான மக்கள இஸ்ரேலின் சர்வ வல்லமை படைத்த ராணுவத்தை எதிர்த்து வெறும் கற்களை ஏந்திக் கொண்டு போராட்டத்தில் குதித்தனர்.
இந்தச் சூழலில் தான் இஸ்ரேலிய அரசு அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் மூலமாக பாலஸ்தீனர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வந்தது. அதுதான் பாலஸ்தீனிற்கு தன்னாட்சி வழங்கும் திட்டம். நார்வேயின் தலைகர் ஒஸ்லே வில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் யாசிர் அரபாத்தின் பிரதிநிதியும் அரபாத்தின் பிரதிநிதியும் கையெழுத்திட்டனர். பிறகு அதே ஒப்பந்தததை அமெரிக்காவின் கேம்ப் டேவிட்டில் யாசிர் அரபாத்தும் இட்சாக் ரபீனும் ஒப்பமிட்டனர்.
நடுவே இஸ்ரேல் கொலுவிருக்க ஒரு பக்கம் காஸாவும் மறுபக்கம் மேற்குகரையும் கொண்ட ஒரு பகுதியை பாலஸ்தீனின் தன்னாட்சிப் பகுதியாக வரையறுத்தார்கள். நிலம் பாலஸ்தீனர்களிடம் இருக்கும் ஆனால் அதன் வானம் இஸ்ரேலுக்குச் சொந்தம். காஸாவும் அதன் கடற்கரையும் பாலஸ்தீனிடமிருக்கும் ஆனால் கடல்வழி இஸ்ரேலுக்குச் சொந்தம். ஒரு ஊசிமுனையளவு பொருளாக இருந்தாலும் அது இஸ்ரேலின் கஸ்டம்ஸை கடந்து தான் உள்ளே வரவேண்டும். ஏற்றுமதி இறக்குமதி அதிகாரம் பாதுகாப்பு ராணுவம் அனைத்தும் இஸ்ரேலிடம் இருக்கும். இஸ்ரேலிடம் அனுமதி பெற்ற யாரும் பாலஸ்தீனிலிருந்து வெளியேறவோ உள்ளே செல்லவோ முடியும். பாலஸ்தீனர்கள் இஸ்ரேலுக்கு வரியும் செலுத்த வேண்டும். பாலஸ்தீனில் விழுகிற குப்பைகளை அள்ளவும் மருத்துவ மனைகளை பராமரிக்கவும் பாலஸ்தீன நகரங்களை பராமரிக்கவும் மட்டுமே பாலஸ்தீன தன்னாட்சி அமைப்புக்கு அதிகாரம் இருக்கும். அது வரை ஒரு தீரமிக்க போராளியாக இருந்த அப்படி ஒரு ஒப்பந்தத்தை ஏற்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அரபாத் ஏற்றுக் கொண்டார். தனது மக்களின் மிக மோசமான வாழ்வில் அது கொஞ்சமாவது நிம்மதியை உண்டு பண்ணும் என்று அவர் நம்பினார். தற்காலிக தீர்வுகள் மூலமாக நிரந்தர தீர்வை நோக்கி நகர முடியும் என்று அவர் நம்பிதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால் யூதர்களின் ஒப்பபந்தங்கள், வாக்குறுதிகள், நம்பிக்கை குறித்து எந்த அளவு எச்சரிக்கையும் விழிப்புணர்வும் அவசியம் என்று திருக்குரான் கூறுகிற வழிகாட்டுதல்களை அவர் கவனத்தில் கொண்டாரில்லை.
இந்த ஒப்பந்தத்தினால பாலஸ்தீனர்களுக்கு கிடைத்த ஒரே பலன் மேற்குக் கரையிலும் காஸா முனைப் பகுதியிலும் இஸ்ரேல் அமைத்திருந்த யூத குடியேற்றங்களை காலி செய்தது தான். இஸ்ரேல் இதைச் செய்ததேகூட பாலஸ்தீனர்களின் நன்மைக்காக அல்ல. பாலஸ்தீன பகுதியில் குடியிருக்கிற யூதர்களை பராமறிப்பதற்கு ஆகிற ராணுவச் செலவு எல்லை கடந்து செல்கிறது என்பதற்காகத் தான் என மேற்கத்திய உடகங்கள் கண்சிமிட்டி பேசிக் கொள்கின்றன.
அரபாத் இஸ்ரேலுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அப்போதே பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக காஸா முனைப் பகுதியில் வலுவாக செயல்பட்டு வந்த ஒரு மாபெரும் அர்பனீப்பு இயக்கமாக கருதப் பட்ட ஹமாஸ் அதை ஒத்துக் கொள்ளவே இல்லை.
ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீனின் காஸா பகுதியில் இஸ்ரேலினால் பாதிக்கப் படும் மக்களுக்கு தொண்டு செய்வதற்காகவும் அவர்களது ஒவ்வொரு பிரச்சினையிலும் உதவுவதற்காக மார்க்க அறிஞர்கள் பட்டதாரிகளால உருவாக்கப் பட்ட ஒரு அமைப்பு. ஹர்கத் அல்முகாவமுதுல் இஸ்லாமியா என்ற முழு பெரை சுருக்கமாக ஹமாஸ் ( தற்காப்பு அல்லது தடுப்புப் படை) என்று அழைத்துக் கொண்டனர். இஸ்ரேலினால் ஆக்ரமிக்கப் பட்டு நிராதவராக எந்த வித கவனிப்பும் அற்றிருந்த பகுதிக்குள் ஒரு அரசு நிர்வாகம் போல் செயலாற்றியது. அரசியல் ரீதியாக பிரபலமடைவதை மார்ர்க ரீதியாக பிரச்சினையை கையாள்வதில் ஹமாஸ் அக்கறை செலுத்தியது. உலமாக்கள் எனப்படும் மார்க்க அறிஞ்ர்களே அதன் தலைமை பொறுப்பிற்கு வர முடியும். இப்போதைய தலைவரான இஸ்மாயில் ஹனியாவும் ஒரு மார்க்க அறிஞ்ர்தான். யூதர்கள் விசயத்தில் மார்க்கம் கற்றுத்தரும் எச்சரிக்கைகளை அவர்கள் மறக்கவில்லை. அதனால் ஒரு போதும் இஸ்ரேலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர்கள் உறுதிபடக் கூறினார்கள். அதனல். அரபாத்தின் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை அமைப்பிற்குள் (பி.எல்.ஓ) அவர்கள் இணைய வில்லை. தொடர்ந்து தனி அணியாகவே செயல்பட்டு இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர். அயினும் யாசிர் அரபாத்தின் முயற்சிக்கு அவர்கள் தொல்லை எதுவும் தரவில்லை. பாலஸ்தீன தன்னாட்சி அமைப்பு ஏற்படுத்தப் பட்டு யாசிர் அரபாத் அதன் தலைவராக இன்னொரு வார்த்தையில் பாலஸ்தீனின் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தாலும் அவரது முழு அதிகாரம் பாலஸ்தீனின் மேற்கு கரை பகுதியில் மட்டுமே இருந்தது. காஸாவை அதிகாரப் பூர்வமாக பி.எல்.ஓ ஆட்சி செய்தாலும் உண்மையான அதிகாரம் ஹமாஸிடமே இருந்தது. ஒரு அரசியல் தீர்வை தேடும் முயற்சியில் பி.எல்.ஓ மேற்குலகத்தின் நாடகத்திற்கு அரபாத் மயங்கிவிட்டார் என்று கருதிய பாலஸ்தீனர்கள் ஹமாஸ் பி,எல்.ஒ வோடு சேர்ந்து விடக்கூடாது என்றே விரும்பினார்கள் என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இஸ்ரேல் தனது எந்த ஒரு முயற்சியின் வழியாகவும் தனது வக்கிரமான எண்ணங்களையே நிறைவேற்றிக் கொள்ளவிரும்புகிறது. அதன் பாரம்பரிய விஷ(ம)த்தனம் கடுகளவும் குறைய வில்லை. அதே நேரத்தில் ஒரு ஒப்பந்தம் செய்து முனிசிபாலிட்டு தன்னை தலைவராக்கி விட்டதன் மூலம் இஸ்ரேல் ஏரளமான புதிய நட்பை சேர்த்துக் கொண்டு பாலஸ்தீனர்களை மேலும் அபகதிக்குள் உள்ளாக்கிவிட்டதை சற்று தாமதமாகவே அரபாத் புரிந்து கொண்டார். ஆயினும் கிடைத்திருக்கிற வாய்ப்பை பயன்படுத்தி ஏதாவது சில நல்ல காரியங்களை செய்ய முடியுமா என்று முயற்சித்தார். அதற்குள்ளாக தனது இருப்பை சர்வதேச அளவில் உறுதிப் படுத்திக் கொள்ள ராஜாங்க ரீதியான முயற்சியை இஸ்ரேல் தீவிரப் படுத்தியது. அமெரிக்காவும் பெருமளவில் அதற்கு உதவியது.
இறுதியாக அதே அரபாத்தை பயன்படுத்தி இன்னும் சர்ச்சைக்குள்ளான பகுதியாக இருக்கிற ஜெரூஸலத்திற்கும் இந்த முறையிலான ஒரு தீர்வை அடைந்துவிட அது துடிததது. அமெரிக்க அதிபராக இருந்த கிளின்டன் மூலம் பாலஸ்தீனிற்கு மடிப்பிச்சை இடுகிற பல திட்டங்களை அது முன் வைத்தது. அதற்கு விலையாக மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலை கேட்டது. பைத்துல் முகத்தஸ் வளாகத்தில் பாரம்பரியம் மிக்க முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலும் பின்னாட்களில் கட்டப்பட்ட மஸ்ஜிது உமர் பள்ளிவாசலும் இருக்கினறன. மஸ்ஜிது உமர் முஸ்லிம்களுக்கு என்றும் மஸ்ஜிதுல் அகஸா யூதர்களுக்கு என்றும் பிரித்துக் கொள்ள அந்த ஒப்பந்தம் ரகசியாமாக வழி வகுத்தது. அந்த இடத்தில் பிரம்மாண்டமான ஒரு யூதக் கோயிலைக் கட்ட இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. வரலாறு ஒரு போதும் மன்னிக்காத அபகீர்த்திக்கு தான் ஆளாகிவட்க் கூடாது என உணர்ந்த அரபாத் புதிய திட்டத்தை உறுதியாக மறுத்துத் திரும்பிவிட்டார். அது முதல் இஸ்ரேலின் பெரும் எதிரியாக அரபாத் மாறினார்.
பைத்துல் முகத்தஸ் விசயத்த்தில் இஸ்ரேலின் திட்டத்தை தெரிந்து பாலஸ்தீனர்கள் இரண்டாவது இன்திபாதா போராட்டத்தை தொடக்கினார்கள். இஸ்ரேல் ரானுவம் பாலஸ்தீனிற்குள் நுழைந்டத்து. பாலஸ்தீனம் ரணகளமாகியது. போதுமான அழிவை ஏற்படுத்திய பிறகு சர்வதேச நிர்பந்தங்களுக்குப் பணிந்து இஸ்ரேல் வெளியேறியது. பின்னரும் காஸாவில் கலவரத்தை தூண்டினார் அதற்காக ஆயுதங்களை வாங்க முயற்சி செய்தார் என்று அரபாத்தின் மீது குற்றம் சாட்டி அவரை வீட்டுச் சிறையில் வைத்தது இஸ்ரேல். ஒருக்கால் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை பாலஸ்தீன தன்னாட்சி என்ற மாய்மால ஒப்பந்தம் நடப்பதற்கு முன்னதாக நடந்திருந்தால் விசயம் வேறுமாதிரி சென்றிருக்கும். இந்த ஒப்பந்தம் சில விசயங்களில் பாலஸ்தீனர்களை மூச்சுவிட வைத்து பல் விசயங்களில் மூச்சடக்க வைத்து விட்டது. இஸ்ரேலும் அமரிக்காவும் இனி அரபாத்துடன் பேசமுடியாது என்று மறுத்தன. சர்வதேச அரங்கில் அவரது மரியாதையை சிதைக்க பெருமளவில் முயற்சி செய்தன. அவர்களின் நிர்பந்தத்தினால அவர்களது விருப்பப் படி மஹ்மூது அப்பாஸ் பிரதமராக நியமிக்கப் பட்டார். அரபாத் இறந்த பிறகு அவரே பாலஸ்தீன அதிபராகவும் ஆனார்.
இதற்கிடையே பாலஸ்தீனில் முதன் முதலாக தேர்தல் நடந்தது. பல்வேறு பட்ட தரப்பிலிருந்தும் வந்த வேண்டுகோளை அடுத்து இஸ்ரேலுடனான போராட்ட வழியில் இருந்த ஹமாஸ் தேர்தலில் போட்டியிட ஒப்புக்கொண்டு தேர்தலில் போட்ட்யிட்டது. மக்கள் குறிப்பாக காஸா நகரத்து மக்கள் பெருவாரியாக ஹமாஸை தேர்ந்தெடுத்தனர்.
2006 ஜனவரி 25 நடந்த தேர்தலில் ஹமாஸ் வென்றது. 42.9 சதவீத வாக்குகளுடன் மொத்தமுள்ள 132 இடங்களில் 74 கை கைப்பற்றியது. இஸ்ரேலும் அதன் நேச நாடுகளும் ஹமாஸின் தேர்வை ஏற்க மறுத்தன.
ஹமாஸ் பாலஸ்தீனின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் இஸ்ரேலை அங்கீகரிக்க மறுத்து விட்டது. அத்தோடு தங்கள் மீதான சர்வதேச நிர்பந்தங்களைய்ம் ஏற்க மறுத்தது. அதற்கான நியாயத்தை உலகிற்கு ஹமாஸின் சார்பில் பேசவல்ல அமெரிக்க பாலஸ்தீனரான கலீல் தெளிவுபடுத்தினார். பாலஸ்தீனில் நிலவும் எதார்த்த சூழ்நிலையை, பாலஸ்தீன அமைப்புக்கு வழங்கப் பட்ட தன்னாட்சி அதிகாரத்தின் லட்சணத்தை அவர் அம்பலப்படுத்தினார்; கலீல் கூறினார். "Israel still controls every person, every good, literally every drop of water to enter or leave the Gaza Strip. Its troops may not be there … but it still restricts the ability for the Palestinian authority to exercise control.”
இஸ்ரேல் இப்போதும் ஒவ்வொரு மனிதனையும், ஒவ்வொரு பொருளையும் கட்டுப்படுத்துகிறது. காஸாவுக்குள் நுழைகிற அல்லது வெளியேறுகிற ஒவ்வொரு துளி தண்ணீரையும் சோதிக்கிறது. பாலஸ்தீன தன்னாட்சி அமைப்பு தனது பொறுப்பை ஏற்றுக் கொள்ள அது இன்று வரை தடையாக இருக்கிறது.
மற்ற உலக நாடுகளில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தனக்கு வேண்டாதவர்கள் என்றால் அதை ஏற்க மறுப்பதும் அவர்களை எப்பாடுபட்டவது துரத்த முயற்சிப்பதும் அதுவும் முடியாவிட்டால் அத்தகைய ஆட்சித் தலைமையை தேர்ந்தெடுத்த மக்களை வதை செயவ்தும் தானே அமெரிக்க ஜனநாயகம். அமெரிக்கா பாலஸ்தீனிற்கு செய்து வந்த நேரடி உதவியை காஸாவிற்கு நிறுத்தியது. அதன் ஆதிக்க கூட்டாளிகளும் தங்களது உதவியை நிறுத்தினர்.
ஹமாஸ் பாலஸ்தீன அரசை தேசிய சுயாட்சி அரசாக அறிவித்தது. அதிபர் மஹ்மூது அப்பாஸ் அதை ஏற்கவில்லை. அவசர நிலையை அறிவித்துவிட்டு ஹமாஸ் இல்லாத ஒரு அரசை அமைப்பதாக கூறிவிட்டு அவர் பாலஸ்தீனின் இன்னொரு பகுதியான மேற்குக் க்ரை பகுதியில் இருந்து விட்டார். அவரது ஆட்கள் மேற்கு கரையில் ஹமாஸின் சில தலைவர்களை கைது செய்தார்கள்
பாலஸ்தீன் முனிசிபாலிட்டி இரண்டாக பிளவுண்டது. மேற்குக் கரை இப்போது அதிபர் மஹ்மூது அப்பாஸ் வசம் இருக்கிறது. காஸா இப்போது பிரதமர் இஸ்மாயீல் ஹனியாவிடம் இருக்கிறது. அப்பாஸின் அரசை அமெரிக்காவின் பொம்மையான சவூதியும், இஸ்ரேலுடன் தூதரக உறவு கொண்ட இரண்டே இரண்டு அரபு தேசங்களான எகிக்தும் ஜோர்டானும் ஆதரிக்கின்றன. ஹமாஸை சிரியாவும் ஈரானும் ஆதரிக்கின்றன. இந்தியா எந்தப் பக்கம் நிற்கும் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்.
காஸாவிற்குள் அத்தியாவசியப் பொருட்களும் எரிபொருட்களும் செல்வதையும் போக்குவரத்தையும் இஸ்ரேல் தடுத்தது. 2007 செப்டம்பரில் காஸாவை யுத்த பகுதியாக அறிவித்தது.
காஸாவில் பொருளாதார பிரச்சினை தலை தூக்கியது. இன்றைய காஸா என்பதே இஸ்ரேலின் வெறியாட்டங்களால் உருவான ஒரு பெரிய அகதி முகாம் தான். அகதிகளுக்காக ஐநாவின் நிவாரணத்திட்டத்தின் கீழ் கிடைத்துவருகிற அத்தியாவசியப் பொருட்கள்தான் அங்குள்ள மக்களுக்கு பிராணவாயு. அதையும் நிறுத்தி விட்டால்? உணவு, மருந்துப் பொருட்கள், மின்சாரம், தண்ணீர் என அனைத்துப் அத்தியாவசியப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஹமாஸை பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக 15 லட்சம் மக்களை பட்டினிச் சாவை நோக்க்கி இஸ்ரேல் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தது. கேட்பார் யாரும் இருக்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில் தான் ஹமாஸ் இஸ்ரேலின் சில பகுதிகள் மீது கஸம் ஏவுகனைகளை வீசியது. இஸ்ரேலின் ஆயுத வன்முறையோடு ஒப்பிடுகையில் உள்ளூர் தயாரிப்பான கஸம் ஒரு பொருட்டே அல்ல. 697 ராக்கெட்டுகளும் 822 பாம்களும் வீசப்பட்டதாக இஸ்ரேல் கணக்கு காட்டுகிறது. இதன் மொத்த பாதிப்பும் இஸ்ரேலின் ஒற்றை குண்டுக்கு நிகராகாது. இந்த ராக்கெட்டுகளை காரணம் காட்டித்தான் இஸ்ரேல் காஸாவின் மீது மிருகவெறித் தாக்குதல் நடத்தியது.
உண்மையில் காஸா இஸ்ரேலிய நாட்டுக்குள் இருக்கிற ஒரு நகரம். அதை பாதுகாக்க பீரங்கிப் படைகளோ எல்லைப் பாதுகாப்பு வீரர்களோ ஒருவரும் இல்லை. காஸாவை மீண்டும் ஆக்ரமிப்பது என்று இஸ்ரேல் முடிவு செய்தால் கூட எந்த ஆயுதங்களையும் வீசாமல் அதிகபட்சமாக இரண்டு நாட்களில் பிடித்து விட முடியம். மிக முக்கியமான விசயம். வான்வெளித்தாக்குதல் எனப்து அறவே தேவையற்றது. பிறகு ஏன் இந்த மாபெரும் கொலைவறித் தாக்குதல்? அது தான் இஸ்ரேலின் குணம்.
இஸ்ரேல் இந்த தாக்குதலின் மூலம் பாலஸ்தீனர்களுக்கு சொல்ல விரும்புவதை மீண்டும் தெளிவாக சொல்லிவிட்டது. எங்களது விருப்பத்திற்கு உடன்படுவதானால் மட்டுமே இந்தப் பிராந்தியத்தில் நீங்கள் உயிர்வாழ முடியும். போர் நிறுத்தத்தை அறிவித்த இஸ்ரேலின் ரானுவப் பேச்சாளர் அதைத்தான் இப்படிக் கூறினார். "எங்களது நோக்கம் நிறைவேறிவிட்டது".
இஸ்ரேலின் விருப்பம் தான் என்ன என்று கேட்கிறீர்களா? வேறொன்றும் இல்லை.இப்போதைக்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஜெரூஸலம் நகரை ஆள வேண்டும். பைத்துல் முகத்தஸ் வளாகத்தில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலை இடித்து விட்டு அங்கு மாபெரும் சினகாஹ் யூதக் கோயில் ஒன்றை கட்ட வேண்டும்.
இது பாலஸ்தீனில் அரபிகள் இருக்கிற வரை நடக்காது. அதனால் தான் தன் எண்ணத்திற்கு தடையாக இருப்பவர்களுக்கு தன்னுடைய வலிமை என்ன என்பதை இஸ்ரேல் காட்டிக் கொண்டே இருக்கிறது. தன் விருப்பப் படி நடக்கதவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு தண்டனை கொடுக்க நினைத்தது. கொடுத்து விட்டது. பிறகு வெளியேறியும் விட்டது.
இப்போதைக்கு இந்தத் தாக்குதல் ஒரு முடிவில்லாமல் முடிந்துவிட்டது. ஆனால் இதுவே முடிவான முடிவல்ல. எல்லோருக்கும் இது தெரியும். நாளைக்கே இன்னொரு காரணத்தை சொல்லிக் கொண்டு இஸ்ரேல் மேற்குக் கரை மீது இன்னொரு மிருகத் தாக்குதலை தொடங்கலாம். காரணங்களுக்கு அங்கே பஞ்சமே இல்லை. பாலஸ்தீனில் முஸ்லிம்கள் இன்னும் உயிர் வாழ்கிறார்கள் என்ற ஒற்றைக் காரணம் போதாதா? அறுபது வருடங்களாக தொடர்ந்து இதுதானே நடந்து கொண்டிருக்கிறது. இதை நிறுத்துகிற வழியை காணோம்.
இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஒரே வழி தான் இருக்கிறது. பாலஸ்தீனப் பிரச்சினையை அங்குள்ள அரபிகளின் அரசியல் விவகாரமாக மட்டும் பார்க்கப் படக் கூடாது. உலக முஸ்லிம்களின் தன்மானத்தோடும் பக்தியோடும் தொடர்புடைய உயிர் அம்சமாக பார்க்கப் படவேண்டும். அதனடிப்படையில் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் ஒரு பாதிக்குள் இஸ்ரேல் விவகாரத்திற்கு ஒருமித்த ஒரு முடிவு கட்டப் படவேண்டும். பாலஸ்தீனிற்குள் ஒரு முனிசிபாலிட்டியாக இஸ்ரேல் இருக்க மட்டுமே முஸ்லிம்கள் சம்மதிக்க வேண்டும். மற்றெந்த மற்றெந்த குறுக்கீடுகளையும் உடன்பாடுகளையும் திரும்பியும் பார்க்கக் கூடாது. ஒரு சமுதாயம் இலட்சியத்தில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிற வரை மட்டுமே அந்த சமுதாயத்திற்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்.
உலக முஸ்லிம் சமுதாயம் தன்னுடைய உறுதியை தெளிவையும் மறு பரிசீலனை செய்து கொள்வதற்கு வசதியாக இஸ்ரேலின் முதல் பிரதமர் பென் கூரியன் செய்த ஒரு பிரகடணத்தை மட்டும் நினைவூட்டுகிறேன்.
1967 ம் ஆண்டு ஜெரூஸலத்தை கைப் பற்றிய பிறகு பைத்துல் முகத்தஸ் வளாகத்திற்கருகே நின்று கொண்டு தன்னுடை வீரர்களிடமும் மக்களிடம் உரையாற்றிய பென் கூரியன் இறுதியாக இப்படி முடித்தார். "கதிஸ்தவல்லைனா அலல் குதுஸ். வ நஹ்னு பீ தரீகதீனா இலா யத்ரிப்."
"நாம் பைத்துல் முகத்தஸை வென்றுவிட்டோம். இனி நமது பயணம் யத்ரிபை நோக்கி."
உங்களுக்கு நான் நினைவு படுத்த வேண்டியிருக்காது என்று நம்புகிறேன். யத்ரிப் என்பது "மதீனா" வின் புராதானப் பெயர்.

No comments: